முளைத்தெழும் கவிதை – ஃபாயிஸா அலி

‘குடும்பம் ,வீட்டுவேலை,பாடசாலை,பத்திரிகைப்பணி எனப் பரபரப்பாக இயங்குகிற என்போன்ற இல்லத்தரசிகளுக்கெல்லாம் கவிதையென்பது ஒரு பகற்கனவாகவோ இல்லை திணறடிக்கும் பாரச்சுமையாகவோதான் அமைந்து விடுகிறது.ஆனாலுங்கூட வாசிப்பும் தேடலும் சார்ந்த ஒரு தளத்திலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்தும் வருவதனால்தானோ என்னவோ ஓய்வெனக் கிடைக்கும் சொற்ப நேரத்தையும் எழுத்து சார்ந்தே இயங்கிடத் தோணுகிறது.’ என்று சொல்லும் சகோதரிஃபாயிஸா அலியின் புதிய கவிதையைப் பதிவிடுகிறேன். அவருடைய மற்ற ஆக்கங்களைப் பார்க்க ’முத்துச் சிப்பி’ தளத்திற்குச் செல்லவும்.

அன்பின் ஃபாயிஸா, உங்கள் தொகுப்பு ஒன்றை சீக்கிரம் அனுப்புங்கள்.  கவிஞர் தாஜைப் பிடித்து விமர்சனம் எழுதவைத்து விடுகிறேன். என்ன ஒரு சிக்கல், அவர் கவிதையொன்றை இங்கே பதிவிடவேண்டி வரும்! பரவாயில்லையா?

***

முளைத்தெழும் கவிதை

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

பேரழகைச் சுமந்தபடி
சூரியனை நோக்கிச் சீறுது பச்சையம்பு.
நலம் விசாரிக்க வரும் காற்றோடு
கைகுலுக்கியவாறே
குளிர் விருந்தளித்து மகிழும் தளிரிலைகள்.
மஞ்சள் பூவிதழின் மருங்குகளில் வந்தமரும்
வண்டுகளின் ரீங்காரங்களுக்குள்
கண்விழிக்கும் அரும்புகளில்தான்
எத்தனை பரவசம்.
பசிய மென்கொடிக்கயிறுகளில்
தளம்பாது இறங்கி வருகிற வித்தைக்கார அணிலுக்காய்
அடிமரத்தில் வாய்பிளக்கும் சாம்பல்பூனை.
அட, முதல்மரத்தோடுதான் முளைத்திருக்கும்
கவிதையும்.

***

நன்றி : கிண்ணியா எஸ். பாயிஸா அலி | sfmali@kinniyans.net

5 பின்னூட்டங்கள்

 1. 19/06/2011 இல் 18:29

  ஃபாயிஸா அலியின் கவிதைகளும் தனித்தே நிற்கின்றன, அழகோடு.

  இஸ்லாத்துக்கும், ஆன்மீகத்துக்கும், சிலுவைக்கும் நடுவில் நசுங்கினாலும் முளைத்தெழுந்து நிற்பது – கவிதையின் பலம்தான்!

  இவரது “வசீகர மொழிகாவி…’ கவிதையின் அழகு நடை, கவிதையின் வீரியத்தையோ கருத்தையோ அல்லது கவிஞரின் துணிச்சலையோ, உரிமையையோ கோபத்தையோ எந்த வகையிலும் குறைக்கவில்லை

  முலைத்தெழுந்து யோனிபுகும் கவிதைகளோடு அதட்டும்
  நவீன கவிதாயினிகள் கவனிக்கலாம்.

  (தாஜ் விமர்சனம் வருமா? ………..ஒரு கவிதையோடுதான்!)

 2. s.faiza Ali said,

  21/06/2011 இல் 12:15

  சகோதரர் மஜீத் ,சகோதரர் ஹமீது ஜாஃபர். சகோதரர் ஆபிதீன் அனைவருக்கும் எனது நிறைவான நன்றிகளும் பிரார்த்தனைகளும்.

  எஸ்.பாயிஸா அலி

  • 27/11/2012 இல் 16:32

   விருது தொடர்பான தகவலையும் இணைத்துக் கொண்ட சகோதரர் ஆபிதினுக்கு என் அன்பான நன்றிகள்.
   உங்களின் உயிர்த்தலம் தொகுதியை ஹனிபா ஸேர் மூலம் வாசிக்கக்கூடியதாக இருந்தது.
   மிகவும்வித்தியாசமான கதைகள் அவை.
   நிறைய இடங்களில் நகைச்சுவைகள் கதைகளைத் தொடரமுடியாது தடுக்கிறது.
   வாழ்த்துக்கள்.
   எஸ். ஃபாயிஸா அலி

   • abedheen said,

    28/11/2012 இல் 11:46

    //நகைச்சுவைகள் கதைகளைத் தொடரமுடியாது தடுக்கிறது.// ’உயிர்த்தலம்’ தொகுதியில் ஒரு கதையும் இல்லை என்று நண்பர்கள் சொல்வார்கள் பாயிஸா!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s