இது ஹராம்..? – ஹமீது ஜாஃபர் , ’இஜட்’ கவிதையோடு

உலகம் அழிகிற வரைக்கும்  ஹராம் ஹலாலை பேசிக்கொண்டிருப்பார்கள் முஸ்லீம்கள் என்பதற்கு உதாரணமாக இன்னொரு கட்டுரை!  யா அல்லாஹ், என்னத்த சொல்றது? ஏற்கனவே ‘ஆபிதீன் பக்கங்கள்’ ஒரே இஸ்லாமிய மயமாகி விட்டது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.  இதுக்கு நடுவுல நம்ம நானா வேறு பூந்துக்குறாரு.  நடுவுலே பூறுறதே  நானாவுக்கு வேலையாப் போச்சு.   பாருங்க, இப்பதான் ஊருக்கு பொய்ட்டு வந்திருக்காரு. ‘ஒண்ண்ணுமே… சரியா பாக்கலேங்க..’ என்ற பெருமூச்சு. இப்படிலாம் பேசாதீங்க நானா, ஹராம்! – ஆபிதீன்

***

இது ஹராம்..? – ஹமீது ஜாஃபர்

ஹமீது ஜாஃபர்ஆலிம்சாக்கள் புரிஞ்சு வச்சிருக்காங்களோ இல்லையோ எமிரேட்ஸ் ஏர்லைன் நல்லா புரிஞ்சு வச்சிருக்கு. என்னத்தென்னு கேக்கிறீங்களா..? ஹராம், ஹலாலைத்தான்.

நான் சென்ற 19 தேதி ஊருக்கு எமிரேட்ஸ் அதிகாலை ஃப்ளைட்லெ போனேன். புறப்பட்ட கொஞ்ச நேரத்துலெ ப்ரேக்ஃபாஸ்ட் மெனு கொடுத்தாங்க, மொதல்லெ இங்லிஷ் அப்புறம் தமிழ் கடைசியில் அரபி; இல்லையில்லெ வலமிருந்து அரபி எழுதப்படுவதாலெ மொதல்லெ அரபி, நடுவுலெ தமிழ், கடைசியா இங்லிபீஸ். இலங்கை தமிழ் இல்லாமெ அழகிய நம்ம தமிழ் நாட்டுத் தமிழிலே எழுதியிருந்தாங்க.

தமிழ் எப்படி இருந்ததோ அதேபோல காலை உணவும் ரொம்ப சுவையா இருந்ததை நன்றியோடு சொல்லனும், இல்லையா..?

மெனுவோட கடைசி பக்கத்துலெ “எமிரேட்ஸ், விருதுகளைப் பெற்ற பல உணவுவகைகளை வைன்கள், ஸ்ப்ரிட்கள், பீர்கள், மதுபானங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச் சிறந்த பானங்களுடன் இணைந்து சுவைத்து மகிழ உங்களை வரவேற்கிறது.” என்று எழுதியிருந்தது.

அதன் கீழே, ‘ஷாம்பெயினைத் தவிர (8 USD) வழங்கப்படும் அனைத்துப் பானங்களும் இலவசமானவையே. இந்த விமானத்தில் வழங்கப்படும் உணவுவகைகள் ஹலால் செய்யப்பட்டது. உங்கள் உணவு சிலசமயம் கிடைக்காமல் போகும் பட்சத்தில் மனம் வருந்துகிறோம்.’  என்று இருந்தது.

இதை படித்தவுடன் என் குறுக்கு புத்தி இப்படி சொன்னது, “ஆஹா..! அல்லாஹ் சொன்னதை எப்படி அருமையா சொல்லிருக்காங்க! மதுவகைகளை ஹராம்னு குர்ஆன்லெ எங்கேயுமே சொல்லலை, மாறாக,  பாவமும் இருக்கு பயனும் இருக்கு; பயனைவிட பாவம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு” (பார்க்க 2:219) அப்டீன்னு அல்லாஹ் சொல்றான்.

ஆனால் உணவைப் பத்தி சொல்லும்போது வரையறுத்துடுறான். தானாக செத்தது, இரத்தம், பன்றி மாமிசம், அல்லாஹ் பேர் சொல்லாம அறுக்கப்பட்ட மாமிசம்  (2:173 -16:115) இதையெல்லாம் ஹராமாக்கிட்டான்.

அதனாலெத்தான் நாங்க கொடுக்கும் உணவு ஹலாலானது, பயப்படாமெ சாப்பிடலாம். ஆனால் மது… அது உங்க இஷ்டம்னு நம்ம சாய்ஸுக்கு விட்டுட்டாங்க. 

இதை பத்தி நம்ம கவிஞர் நானாகிட்டே சொன்னேன்.  ஆமா, கரக்ட்தான் என்று சொல்லிபுட்டு இப்பொ சாராயம் குடிக்கிறது ஹராம்னா இருமல் சளி மருந்து இருக்கே அதுலே 33% ஆல்கஹால் கலந்திருக்கான் அதை சாப்பிடலாமா? அப்புறம் ஆப்பரேஷன் பண்ணுறதுக்கு அனஸ்தியா கொடுக்குறாங்க நீங்க டோட்டலா மயங்கிடுறீங்க, உங்களை இழந்துடுறீங்க அதை எதுலெ சேர்க்கிறது..? அதனாலெ சாராயம் குடிக்கிறது ஹராமில்லெ அதன் intention ஐ பார்க்கணும். இன்னொரு உதாரணம் சொல்றேன், கொலை செய்யிறது குற்றம், ஹராம் அதுக்கு தூக்கு தண்டனை உண்டு. அதே மாதிரி கொலை செய்ய தூண்டுறதும் குற்றம். இப்பொ யுத்தத்துலெ எதிரியை கொல்றான், அது கொலை ஆகாது, பத்து பேரை கொன்றால் விருது கிடைக்கும். என்கவுண்டர்லெ போலிஸ் சுட்டுக் கொல்லுது, அது கொலை ஆகாது; ஜட்ஜ் தூக்கு தண்டனை கொடுக்கிறார், அதை ஜெயில் அதிகாரி முன்னிலையிலெ தூக்கிலடப்படுகிறான். அந்த தண்டனையெ நிறைவேத்துறவனுக்கு அரசாங்கம் சம்பளம் கொடுக்குது. இதை எல்லாத்தையும் ஒரே categoryயிலெ சேர்க்கமுடியாது. நோக்கம் எதுன்னு பார்க்கணும். கொல்வதற்காக கொலை செஞ்சா அது குற்றம் அதே மாதிரி போதைக்காக சாராயம் குடிச்சா அது ஹராம். போதைக்காக சாராயம் மட்டுமல்ல நல்ல மஸ்தான ஃபிர்ணி குடிச்சு பாருங்க ஒரு மாதிரியான மயக்கம் வரும் அதுவும் ஹராம்தான்’ அப்டீன்னு விளக்கம் சொன்னார்.

இப்படியெல்லாம் நம்ம ஆலிம்சாகள் விளக்கம் சொல்ல மாட்டேன்கிறாங்க ஒட்டுமொத்தமா ஹராம்னு முத்திரை குத்திட்டாங்க. இது இப்ப மட்டுமல்ல அந்த காலத்திலேந்தே அப்படிதான். நான் சின்னபிள்ளையா இருக்கும்போது ஒரு ஆலிம்சா (பேர் வாணாம்) நாலு மாசத்துக்கு ஒரு தடவை இல்லேன்னா ஆறு மாசத்துக்கு ஒருதடவை வருவாரு. அவர் பயான் பண்ணினார்னா ஒரே சிரிப்பா இருக்கும், சின்னதுலேந்து பெரிசு வரை எல்லாமே சிரிக்கும்; சிரிக்காதவங்க யாருமே இருக்கமுடியாது. இப்பமாதிரி யாரையும் புண்படுத்தியெல்லாம் பேசமாட்டாரு. அவரு வந்தா என் கூட்டாளி வீட்டுலெதான் பெரும்பாலும் சாப்பிடுவார், படுக்கைக்கூட அங்கேதான்.

என் கூட்டாளியோட வாப்பா பெரிய மிராசு, அவர் வூட்டுலெ புறா நெறைய வளர்த்தாங்க, இவருக்கு புறா கறி திங்கணும்னு ஆசை வந்துடுச்சு, என்ன செஞ்சாரு தெரியுமா..? “புறா வளர்க்கிறது ஹராம்”னு ஒரு போடு போட்டார். புறா ஒத்தை கால்லெ நிக்கும். ஒத்தக்கால்லெ நின்னா வூட்டுக்கு தரித்திரம் வரும், வூட்டுக்கு வந்தா வூட்டுலெ உள்ளவங்களுக்கும் முஸீபத்து அதனாலெ புறா வூட்டுலெ வளர்க்காதீங்கன்னு சொல்லி ரெண்டு ஷிஃப்டுலெ (இரண்டுமுறை வந்து) எல்லா புறாவையும் காலி பண்ணிட்டார்.

இந்த டெக்னிக் இப்பவுள்ள ஆலிம்சாக்கள்டெ இல்லை. ஆனால் சில ஆலிம்சாக்கள் டிவியிலே ஃபத்வா கொடுக்குறாங்க.  எங்க நானாவின் ஒரு கவிதை இருக்கிறது. படியுங்கள் :

 

தீர்ப்பு

’இறைவா…
இறைநேசர்களை
சிறப்பு செய்வது இணைவைத்தல் –
என்கிறார்கள் மார்க்க அறிஞர்கள்..!
இல்லை இல்லை , மாடர்ன் அறிஞர்கள்..!
ஆனால் –
அவர் காபிர்/ இவர் குபிர்
அந்த அவர் நரகம்போவார்..
இந்த இவர் சொர்க்கம் போவார் என்கிறார்களே..!
இங்கேயே இவர்களுக்கு  நீ…
மறுமை தீர்ப்பை சொல்லும்
உரிமையைக் கொடுத்துவிட்டாயா…?’

நன்றி : ஜபருல்லாநானா

நமக்கு சொர்க்கமா நரகமான்னு இங்கேயே ஜட்ஜ்மெண்ட் வாங்கிக்கலாம்னு நான் நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க……?

***

நன்றி : ஹமீது ஜாஃபர் | manjaijaffer@gmail.com

8 பின்னூட்டங்கள்

 1. 15/06/2011 இல் 16:44

  //நமக்கு சொர்க்கமா நரகமான்னு இங்கேயே ஜட்ஜ்மெண்ட் வாங்கிக்கலாம்னு நான் நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க……? //

  குழப்புறீங்களே நானா!
  ‘நாம’ எல்லாரும்தான் ஜட்ஜ்மெண்டு ஏற்கனவே வாங்கிட்டமே? மறுபடி எதுக்கு?

 2. 15/06/2011 இல் 18:41

  அப்பீல் கோர்ட்டுன்னு ஒன்னு இருக்கே அதுலெ தலைமை நீதிபதி நம்ம மாடல் ச்சே மாடர்ன் ஆலிம்சாக்கள்தானே…! அதனாலெத்தான்.

 3. 15/06/2011 இல் 21:38

  //நமக்கு சொர்க்கமா நரகமான்னு இங்கேயே ஜட்ஜ்மெண்ட் வாங்கிக்கலாம்னு நான் நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க……?//

  ஃபாத்வாவ ஆபிதீன் கிட்டவே வாங்கிக்குங்களேன் நானா. நல்ல தீர்ப்பா தருவார் உங்களுக்கு? இப்ப தான் நல்ல ஆலிம்சாவா மாறிக்கிட்டிருக்காரே!! (ஆபிதீன்!! கொடுத்த… ஃபாத்வாவையே கொடுத்துக் கொண்டிருக்க வேணாம். புதுசாவே கொடும்!)

 4. 16/06/2011 இல் 05:21

  ஸலாமலைக்கும்..

  நானாக்களிடம் ஒரு சந்தேகம்.. ஹராம் என்ற அரபி வார்த்தைக்கு உண்மையிலேயே ஆகுமானதல்ல என்பது தான் அர்த்தமா.. ஏனெனில், இப்போ நாம கஃபதுல்லாஹ்வை மஸ்ஜிதுல் ஹரம் என்கிறோம். ஹராம் என்றால் புனிதம் என்று ஒரு அர்த்தம் உண்டோ.

  இல்லே இது ஹரம்.. அது ஹராம்.
  இரண்டுக்கும் வித்தியாசம் உண்டா?

  இது பத்தி நம்ம ஹஜ்ரத் அவங்க கூட பேசியிருக்காங்கன்னு நினைக்கிறேன். ஹமீது ஜாஃபர் நானா தான் சொல்லணும்..

 5. 16/06/2011 இல் 17:30

  அரபி படிக்க ஆரம்பிச்ச புதுசுல இந்த சந்தேகம் வந்துச்சு எனக்கு. ஸ்பெல்லிங் கூட மாற்றமில்லயேன்னு.

  அப்புறம், விக்கி(wiki) பாத்தேன்.
  அதுவும் ரெண்டு அர்த்தமும் இருக்குன்னு சொன்னுச்சு.
  விட்டுட்டேன்

  Haraam (Arabic: حَرَام‎) (often haram) is an Arabic term meaning “forbidden”, or “sacred”. In Islam it is used to refer to anything that is prohibited by the faith. Its antonym is halal.

 6. 16/06/2011 இல் 19:39

  ஹராம் என்ற வார்த்தைக்குப் மஜீது காக்கா சரியாகவே பொருள் கொடுத்துள்ளார். பார்க்கவும்.

  விலக்கப்பட்டவை அங்கு தடுக்கப்பட்டுள்ளதால் அப்பெயர் வந்துள்ளதென்று சிலர் விளக்கம் அளிக்கிறார்கள். எப்படி இருந்தாலும் சூரா பனி இஸ்ராயிலில் முதல் வசனம் ‘மஸ்ஜிதில் ஹராம்’ – சிறப்புற்ற பள்ளி என்று வருகிறது.

  என்றாலும் ஹராம் என்ற வார்த்தைக்கு ’விலக்கப் பட்டது’ என்றே பெரும்பாலும் பொருள் கொள்ளப்படுகிறது.

  • 17/06/2011 இல் 10:02

   நானா, நம்ம ஹஜ்ரத் அவங்க மிஹ்ராஜ் பற்றிய சொற்பொழிவில் வேறு விதமாக விளக்கம் கொடுத்திருப்பார்கள். அது அற்புதமாக இருக்குமே..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s