மாடி வீடுகளும் மழை ஒழுகும் கூரைகளும்

“இறைவா   நான்….”

 இஜட். ஜபருல்லா

இறைவா…!
உன் கருணையில் நான்
கரைந்து கொண்டு இருக்கிறேன்…!

அஞ்சாறு வண்டிகளில்
நெல்வந்து இறங்கும் மிராசுகள் மத்தியில்
அன்றாடம் அரிசி வாங்கும் நான்…!
என்றாலும் –
நீ ஹலால் ஆக்கிய அனைத்தையும் உண்ண
எனக்கு மருத்துவத் தடையில்லை…!

இறைவா…
கார்களில் பயணம் செய்வோர் மத்தியில்
பழைய ஓட்டை சைக்கிளில் நான்…!
என்றாலும் –
என் சைக்கிளில்மேல் வட்டிக்கடன் இல்லை…!

இறைவா…
மாடிவீட்டுக்காரர்கள் நடுவில்
மழை ஒழுகும் – 
சின்ன ஓட்டு வீட்டில் நான்…!
என்றாலும் –
என் வீட்டுப் பத்திரம், பத்திரமாக
என்னிடத்திலேயே இருக்கிறது…!
எந்த –
லேவாதேவிக்காரர் இடமும் இல்லை…!

அறுசுவை விருந்துகள் எனக்கு
அதிக தூரம்..
என்றாலும் –
பட்டினியால் நான் படுத்ததே இல்லை…!

இறைவா…
இப்படி நிம்மதியால்
என்னை நிறைப்பவன் நீ…!
எனக்கும் ஒரு ஆசை…!
நான் ஹஜ்ஜு செய்யவேண்டும்..!
அது –
சாமான்கள் வாங்கி நிறைக்க அல்ல..
ஈமானில் சிறக்க…!
வணிகத்தைப் பெருக்க அல்ல..
புனிதத்தில் நிலைக்க…!

***

நன்றி : இஜட். ஜபருல்லா |  Cell : 0091 9842394119

தொடர்ந்து ஜபருல்லாநானா கவிதைகளை அனுப்பும் ஜாஃபர்நானாவுக்கு ஒரு ஜே!

9 பின்னூட்டங்கள்

 1. Basheer said,

  07/06/2011 இல் 17:50

  Alhamthulillah. கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டார் கவிஞர். ஒவ் வொரு மனிதனையும் தன்னைப் பற்றி சிந்திக்க வைத்துவிட்டார்

 2. J. Daniel said,

  07/06/2011 இல் 17:58

  இக்கால சூழளுக்கு தேவையான, வாழ்வியல் கவிதை.

  நன்றி தோழரே.

 3. தாஜ் said,

  07/06/2011 இல் 23:15

  மனதைத்
  தொட்டன
  கவிஞரின் வரிகள்.
  விட்டதா….
  யோசிக்கவுமல்லவா
  வைத்துவிட்டது.

  -நா நாவுடன் பேசினால்
  குறையுமா பாரம்?
  -தாஜ்

 4. 07/06/2011 இல் 23:43

  ஆஹா!

  இதைவிட என்னதான் சொல்லப்போகிறார்கள்-
  உலகமகா தத்துவ வாதிகள்?
  அதுவும் போகிறபோக்கில்!!

  இவ்வளவு எளிமையாய்
  இத்தனை செறிவுடன்
  சூப்பர் நானா!

 5. 08/06/2011 இல் 05:14

  பெருமானார் (ஸல்) அவர்களின் துவா ஒன்று நினைவிற்கு வருகிறது. ஏழையாக என்னை மரணிக்க விடு.. ஏழைகள் கூட்டத்தாரிடையே என்னை மறுமையில் எழுப்பு என்று இறைவனிடம் வேண்டிய துவா தான் அது.

  நானாவிற்கும் அவர்கள் அளவிற்கு அதிகமாக நேசிக்கும் பெருமானார் (ஸல்) அவர்களுடனே இருக்க, அந்த பாக்கியம் கிட்ட பிரார்த்தனைகள்.

 6. 08/06/2011 இல் 20:01

  இப்போது அந்த ஓட்டை சைக்கிளும் இல்லை. அடுத்த மழைக்கு வீடு…..? நிச்சயமாக வீட்டு எண் 14 இருக்கும்.

  நான் கேட்டேன், எல்லா பொருட்களளயும் உரிய இடத்தில் பத்திரமாக பாதுகாப்பாக வைக்கிறீர்கள் ஆனால் முக்கியமான ஒன்றை மறந்துவிட்டீர்களே என்று.

  “என்ன…?” என்றார்.

  “உங்கள் வீடு” என்றேன். அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா?

  “இது என் வீடல்ல அல்லாவுடையது, அவன் கட்டுவான்” என்றார்.
  கவலைகளை கடந்து நிற்கும் ஞானி

 7. 09/06/2011 இல் 12:53

  நானா கவலைப் படாதீர்கள் உங்கள் எண்ணமே எல்லோரையும் விட உயர்த்தி காட்டுகிறது. எண்ணங்கள் விரைவில் ஈடேறும் இன்ஷா அல்லாஹ்!!

 8. siddique said,

  10/06/2011 இல் 19:56

  Wooooh…!

  What a man? a contented human even i have seen him everyday with a smiling face always. Really IF everybody feels the same there would not be a need to go for foreign life.

  Really i feel ashamed of my foreign life when i have an example of such SUPER hero in my birth place itself..

  SUPERB…CONGRATS ON YOUR FIRM BELIEF….


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s