‘வேறொன்றும் அறிகிலனே..!’ – ஜபருல்லா

மின்னல்      இடிமழையாய்
     மீறிவரும்   மனஅதிர்வில்
கண்ணீரின்    கரிப்பில்
     கால்சுமக்கும்   கடமைகளில்
முன்னும்   பின்னும் அழுத்தும்
    முதுகொடியும்   பிரச்சனையில்
என்னைப்   புடம்போட்டு
    இறுதியிலே   களிப்பூட்டும்
உன்னைப்   புகழ்வதன்றி
    வேறொன்றும்   அறிகிலனே…!
கருணையின்   பேரூற்றே…!
    கண்ணே   ரஹ்மானே…!

***

27-10-1997ல் எழுதியது

***

நன்றி : இஜட். ஜபருல்லா |  Cell : 0091 9842394119

4 பின்னூட்டங்கள்

 1. 04/06/2011 இல் 16:05

  Very Nice!!

 2. 04/06/2011 இல் 18:09

  நன்னாயிட்டிருக்கு..

  நானா, நண்பர் ஒருவர் நாகூர் நாயகம் அவர்கள் பற்றிய வரலாற்றை ஆங்கிலத்தில்(தமிழர் அல்ல) படிக்க வேண்டுகிறார். ஏதேனும் லிங்க் உள்ளதா?

  • 05/06/2011 இல் 09:53

   துரை, சுருக்கமான வரலாறு என்றால் இப்போதைக்கு ஜனாப். இக்பால் எழுதிய ’Nagore Meeran Sahib’ என்ற குறிப்புதான். சுட்டி : http://www.milligazette.com/Archives/15062001/04.htm

   அங்கொன்றும் இங்கொன்றுமாக வேறு சிலரின் ஆங்கிலக் கட்டுரைகள் இருந்தாலும் – ஜபருல்லாநானா உதவியுடன் – கே.எம். ஜான்பிரிட்டோ தமிழில் எழுதிய சிறுநூல்தான் சிறந்தது. இதை நீங்களே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம்.

   • 05/06/2011 இல் 11:25

    ரொம்ப ரொம்ப நன்றி.. எஜமாண்ட துவா பரக்கத்து உங்களுக்கு எப்போதும் உண்டு.. ஆமீன்..

    உங்களுக்கு தமிழ் மேலேயோ இல்லைன்னா இங்கிலீஸ் மேலேயோ கோவம் இருக்க காரணம் இல்லை… என் மேலே தான் ஏதோ கோவம் இருக்கணுங்கறது இதன் மூலமா மூளைக்கு தெரிய வருது..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s