பிக்காசோவின் ஓவியமும் ஓஷோவின் ஹாஷ்யமும்

‘…everybody is loving – the father is loving, the mother is loving, the husband is loving, the wife is loving, the children are loving, the teachers are loving. Everybody is loving and the total result is always a world war.’ என்று கிண்டல் செய்யும்  ஓஷோவை யாருக்குத்தான் பிடிக்காது? ஓஷோ கிழிக்கும் ஓராயிரம் விஷயங்களில் ஒரு ஓவியரும் உண்டாம். அது பிக்காசோ. போலித்தனங்களை ஓஷோ கிழிப்பாரேயொழிய நவீன ஓவியங்களை வெறுப்பவர் என்று சொல்ல முடியாது. வழிவழியாய் வந்த வணக்கமுறைகளை உடைக்கும் ஓஷோ , பழைய ஓவிய மரபுகளை மாற்றுபவர்களுக்கு எதிராக எப்படி இருக்க இயலும்? ‘Creativity is the greatest rebellion in existence’ என்று முழங்கும் (இதுவும் கிண்டலோ?) ஓஷோ முட்டாளா என்ன? சரி, ’ஜோக்’ என்ற அளவில் தாஜ் அனுப்பிய ஓஷோவின் கிண்டல்களை  இங்கே பதிவிடுகிறேன். 

நவீனஓவியம் புரியவில்லை என்று சொல்பவர்களைப் பார்த்து நகைக்கவே தோன்றும் எனக்கு – அது எவராக இருந்தாலும்.  மற்ற எல்லாமும் புரிந்து விட்டதோ உங்களுக்கு? புரியவில்லையென்றால் தொடர்ந்து பாருங்களேன் ஐயா. கருத்துமுத்துக்களை உதிர்ப்பதில் அப்படியென்ன அவசரம்? வான்’கோவுக்கும் வான்கோழிக்கும் வித்யாஸம் தெரியாதா? போலிகள் நிறைய உண்டுதான் – எல்லா துறைகளிலும் இருப்பதைப் போல.  தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டால் வேறுபாடு தெரிந்துபோய்விடும் சுலபமாக .  உதாரணமாக, தாஜ்ஐயா கவிதைகளை தொடர்ந்து வாசியுங்கள்;  நல்ல கவிதை எது என்பது தெரிந்துவிடும். ஆபிதீன் கதைகளைப் படியுங்கள்; நல்ல கதை எது என்பது தெரிந்து விடும்!  –  நாகூர்ரூமி. எல்லாம் பயிற்சிதான். கவிதையோ கதையோ எழுத முடியாவிட்டால் பிரச்சினை இல்லை. விமர்சகனாகி விடலாம்!

’பிக்காஸோ சிரிப்பு’களுக்கு முன்பாக – ‘Laughter is my message’ புத்தகத்திலுள்ள ஏழாயிரம் ஜோக்குகளில் ஒரு ’எடுபட்டபய’ ஜோக்கைச் சொல்கிறேன். மிருகங்கள் உறவுகொள்வதைப் பார்ப்பதில் சிறுவன் ஓஷோவுக்கு அலாதி பிரியம் (அப்படியே நாகூர் புள்ளைங்க!). உறவுகொள்ளும் மிருகங்களின் கண்களில் சந்தோசத்திற்கு பதிலாக ஒருவித அவஸ்தையே தென்படுவது ஏன் என்ற சந்தேகம்தான் காரணம். they feel the bilogical slavery என்கிறார். அதை அப்புறம் பார்க்கலாம். நாய்கள் ‘வேலை’ செய்வதைப் பார்ப்பதற்கு அதன்பின்னேயே மைல்கணக்காகப் போகும் இந்த ஓஷோவைப் பார்த்து தந்தைக்கு ரொம்ப அவமானமாக இருக்கிறது. ’வினோதமான பையனாக இருக்கிறாயே. ஜனங்கள் கேலி செய்கிறார்கள், தெரியுமா?.’ என்கிறார் தந்தை.

‘சரியான வேலைமெனக்கட்டவர்கள்… நான் ’ஸ்டடி’ பண்ணிக்கொண்டிருக்கிறேன் அப்பா.’

‘மை காட்! வேறு எதையாவது ஸ்டடி பண்ணக்கூடாதா?’

ஒஷோவின் பதில் : ‘This is the most essential thing!.’

ஓஷோ ஜோக்குகளுக்காகவே ஒரு தளம் இருக்கிறது! ’ Why do you tell jokes?’  Osho: First, Religion is a complicated joke. If you don’t laugh at all you have missed the point; if you only laugh you have missed the point again. It is a very complicated joke. And the whole of life is a great cosmic joke. It is not a serious phenomenon — take it seriously and you will go on missing it. It is understood only through laughter.’

எவ்வளவு சீரியஸான ஆள் நம்ம ஓஷோ!

ஆபிதீன்

***

தாவித்தாவி ’தாவோ’ படிக்கும் தாஜ் குறிப்புகள் :

சமீபத்தில் நான் ரசித்த
ஓஷோவின் பேச்சை (எழுத்தில்)
வாசகர்களின் பார்வையில் வைக்க நினைத்தேன்.
காலம் கைக்கூடவில்லை.
என்றாலும்…
தீர முயல்வேன்.
இப்போது..
பிக்காசோ குறித்த அவரது
நகைச்சுவை மட்டும்.

*

பிக்காசோவின் ஓவியமும்,
ஓஷோவின் பேச்சும்
எனக்கு
ஒரே தரவரிசையிலான
ரசனையைத் தருவது.

பிக்காசோவின் ஓவியங்களை (நகல்)
சௌதி,
‘ARAMCO’ என்னும் ‘அமெரிக்கன்
அரேபியன் ஆயில் கம்பெனி’யின்
பணம் பெருத்தச் சுவர்களை
வியந்துகொண்டு போன காலத்தில்
சில இடங்களில் கண்டு
மணிக்கணக்கில் நகர மறந்திருக்கிறேன்.
பின் காலத்தில்…
மலேசியாவில் காணக்கிடைத்த
ஆர்ட் கேலரியில்
அவரது சித்திரங்கள்
சிலவற்றை பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
தவிர
’நெட்’டில்,
காணக்கிடைக்காத
அவரது சித்திரங்கள் சிலவற்றையும்
கண்டிருக்கிறேன்.
அந்தக் காணுதல் பெரிய அனுபவம்.

ஓஷோவின் புத்தகங்கள்
பலவற்றைப் படித்திருக்கிறேன்.
அவரது ‘ஸ்பெஷல்’ ஆன்மீகத்தை நாடி
அவரைத் தேடி
அவரிடம் வந்து குவிந்த சீடர்களிடம்
அவர் பேசிய பேச்சுகள்தான்
அவரது புத்தகங்களாக வெளிவந்திருக்கிறது.
இத்தனை அழகாகப் பேசும்
இன்னொருவரை
இந்தியா நிச்சயம் கண்டிருக்க முடியாது!

*

தற்போது…
நான் வாசித்துக் கொண்டிருக்கும்
ஓஷோவின் புத்தகமான
தாவோ ஒரு தங்கக்கதவு‘ நூலில்
தனது சீடர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு
ஓஷோ பதில் அளிக்கிறார்.

ஒரு சீடர்…
ஓஷோவிடம்,
பெர்டோல்ட் ப்ரெட் (Bertolt Brecht) போன்று
மதத்தையும் ஆன்மீகத்தையும்
வெறுத்து ஒதுக்கியவர்கள் பற்றி
கேள்வியொன்றை கேட்கிறார்.
அந்தக் கேள்விக்கு பதில் சொல்லும் போக்கில்
அவரது பேச்சில்
பிக்காசோ வந்து போகிறார்.
பிக்காசோவின் நவீன ஓவியம் குறித்து
ஓஷோவிடம்
விமர்சனம் இருக்கும் போல் தெரிகிறது.
தவிர,
நவீன கவிதைகள் மீதும்
நவீன இசையின் மீதும் கூட
தனது விமர்சனத்தை வைத்திருக்கிறார்.

”நவீன கலை அசிங்கமாக இருப்பதன் காரணம்
அதில் ஆன்மீக சாரம் இல்லை.
இந்தக் காலத்துக்
கவிதையும் அசிங்கமாகத்தான் இருக்கிறது.
இந்தக் காலத்து இசை அதைவிட மோசம்.
அதில் சங்கீதம் இல்லை,
வெறும் சப்தம்தான் இருக்கிறது” என்கிறார்!

இந்த விமர்சனம்
அவரது பேச்சினூடே வெளிப்படுகிறது.
அந்த வெளிப்பாடு
சிறு நகைச்சுவைக் கதைகளாக
நாம் ரசிக்கத் தக்கவைகளாகவும் இருக்கிறது.

மற்றபடி
பிக்காசோ குறித்த
ஓஷோவின் விமர்சனத்தை
நான் ரசிக்கிறேன் என்பதால்…
அவரது விமர்சனத்திற்கு
நான் கை உயர்த்திவிட்டதாக ஆகாது!

தாஜ்

***

ஓர் அமெரிக்கக் கோடீஸ்வரன் பிக்காசோவைத் தேடி வந்தான்.

“எனக்கு உடனடியாக உங்களுடைய ஓவியங்கள் இரண்டு வேண்டும். என்ன விலை கேட்டாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்” என்று அவரிடம் சொன்னான்.

பிக்காசோவுக்கு குழப்பம். அவரிடம் ஒரே ஓர் ஓவியம்தான் தயாராக இருந்தது. இன்னொரு ஓவியத்தை வரைய பல நாட்கள், மாதங்கள் கூட ஆகலாம். அதனால் ஓர் உத்தி செய்தார் பிக்காசோ. இரண்டு ஓவியங்களுக்கும் மிக அதிகமான விலையைச் சொன்னார். அதிக விலையைக் கேட்ட செல்வந்தன் பயந்து போய், ‘எனக்கு ஓர் ஓவியமே போதும்.’ என்று சொல்வான் என்று அவர் எதிர்பார்த்தார்.

ஆனால் கோடீஸ்வரன் அசரவில்லை. அவர் கேட்ட விலையை உடனே கொடுத்துவிட்டான்.

“எங்கே என் இரண்டு ஓவியங்கள்?” என்று கேட்டான்.

பிக்காசோ வீட்டிற்குள்ளே போனார். தான் வரைந்து வைத்த ஓவியத்தை இரண்டாகக் கிழித்தார்.

“இந்தா நீ கேட்ட இரண்டு ஓவியங்கள்” என்று செல்வந்தனிடம் கொடுத்துவிட்டார்.

அவரது ஓவியங்களை நான்காகக் கூட கிழிக்கலாம். யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

***

ஒரு பணக்காரப் பெண்மணி பிக்காசோவிடம் பணத்தைக் கொட்டிக் கொடுத்து தனது படத்தை வரையச் சொன்னாள். பிக்காசோவும் ஓவியத்தை வரைந்தார். அதைப் பார்க்க வந்த அந்தப் பெண்மணி சொன்னாள்,

“எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது, ஆனால் என்னுடைய மூக்குதான் சரியாக வரவில்லை. பெரிதாகத் தோன்றுகிறது. அதை மட்டும் கொஞ்சம் திருத்திக் கொடுங்கள்.”

“அது முடியாத காரியம் அம்மணி.” என்றார் ஓவிய மேதை.

“ஏன் முடியாது? நீங்கள் என் படத்தை வரைந்திருக்கிறீர்கள். அதற்காக நீங்கள் கேட்ட தொகையை நான் தந்துவிட்டேன். நீங்கள் வரைந்த என் மூக்கு பிடிக்கவில்லை என்று சொல்கிறேன். திருத்தித் தருவது உங்கள் கடமை.”

“அதைச் சொல்லவில்லை அம்மணி, இந்த ஓவியத்தில் உங்கள் மூக்கு எங்கே இருக்கிறது என்று தேடுவது முடியாத காரியம் என்று சொன்னேன்”. என்றாராம் பிக்காசோ.

*

ஒரு மனிதன் திருமணம் செய்து கொள்ள நல்ல அழகான பெண்ணைத் தேடிக் கொண்டிருந்தான்.

அவனை அணுகிய ஒரு தரகன், “ஒரு பணக்கார விதவை இருக்கிறாள். மிகவும் அழகானவள். உன்னைவிட ஒன்றிரண்டு வயது பெரியவளாக இருப்பாள். ஆனால் பார்த்தால் அப்படித் தெரியாது. அவளுடைய அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. என்னுடன் வா, அவளைக் காட்டுகிறேன்.” என்று சொன்னான்.

தரகனுடன் போய் பெண்ணைப் பார்த்தான் அவன். அவனால் அவனது கண்களையே நம்பமுடியவில்லை. அவன் வாழ்க்கையில் அதுவரை அவ்வளவு அசிங்கமான பெண்ணைப் பார்த்ததில்லை.

ஒரு கண் ஒரு பக்கம் பார்க்கும் போது, மறுகண் அடுத்த பக்கம் பார்த்து கொண்டிருந்தது. மூக்கு கோணலாக இருந்தது. பற்கள் வெளியில் தெத்திக் கொண்டிருந்தன. அவள் தலையில் இருந்து போலி முடி என்று அப்பட்டமாகத் தெரிந்தது. அவளுடைய ஒரு கால் மற்றொரு காலை விட குட்டையாக இருந்தது. குமட்டிக் கொண்டு வந்தது அவனுக்கு.

தரகனின் சட்டையைப் இழுத்துப் பிடித்து அவன் காதருகில் கிசுகிசுத்தான்…

“இவளையா அழகு என்று சொன்னாய்?”

“நீ சத்தமாகவே பேசலாம். அவள் முழுச் செவிடு. உனக்குக் கலா ரசனையில்லாவிட்டால் நான் என்ன செய்ய முடியும்? உனக்கு பிக்காசோவின் கலை பிடிக்கும் என்று நினைத்தேன். நீ இப்படி ரசனை கெட்டவனாக இருப்பாய் என்று யாருக்குத் தெரியும்?”

***

நன்றி:  கவிதா பதிப்பகம், தாஜ்

***

அவசியம் பார்க்கவும் : A 3D Exploration of Picasso’s Guernica

11 பின்னூட்டங்கள்

 1. 31/05/2011 இல் 15:13

  ஜோக்கெல்லாம் நல்லாதான் இருக்கு.
  (படிச்சப்புறம் சிரிப்புவந்தா – நமக்குதான்- புரிஞ்சது மாதிரிதானே?)

  பிக்காசோ-?
  //புரியவில்லையென்றால் தொடர்ந்து பாருங்களேன்//
  விளைவு: கழுத்து பின்னாலும் பிடரி முன்னாலும் மாறியது மிச்சம்.
  ஆனாலும் விட்றமாதிரி இல்லை.
  3D பார்த்தப்புறம்தான் கொஞ்சூண்டு வெளங்குது!

  இதுக்கொரு கோனார் உரைநூல் யாராவது போட்டாங்கன்னா, நல்லாருக்கும்!!

  • 31/05/2011 இல் 16:00

   ஐயம்பெருமாள் கோனார் உரையும் புரியலேன்னு சொன்னா அப்புறம் என்னா பண்றதுய்யா?

 2. maleek said,

  31/05/2011 இல் 20:16

  பிக்காசோ கொஞ்சம் சீரியஸ் என்றால் ,பின்னவர் நையாண்டி
  தர்பாருக்குத் தலைவர் -இவரின் இன்னொரு முகம் அதிர்ச்சித்
  தரும்.தவிர இரண்டு பேரையும் கொண்டாடுபவர்கள் உண்டு.
  பிக்காசோ புரியவில்லை என்பது தான் என்றும் நிலையான
  விமர்சனம்.இது போன்ற கடல் தாண்டிய பதிவுகளைத் தந்ததற்கு
  நாகூருக்கும் சீர்காழிக்கும் ஒரு ” ஓ “.

 3. SHAHUL said,

  31/05/2011 இல் 20:19

  1)Beloved Osho,
  Do you think your teachings will
  outlive you?
  “WHO CARES ?”
  :SOCRATES POISONED AGAIN
  AFTER 25 CENTURIES
  2)Beloved Osho,
  Are you God the creator?
  “Do you think, I am mad”
  : DHAMMAPADA-VOL10#2
  3)Beloved Osho,
  How old are you?
  “I am ancient.”
  :THE LAST TESTAMENT-VOL-1(P-465)
  4) Beloved Osho,
  Are you the world teacher?
  “I am not even a primary school teacher,
  and You are asking about being a world
  teacher.”
  :FROM UNCONSCIOUS TO
  CONSCIOUS#20
  5) Beloved Osho,
  Can I doubt you?
  “Yes! absolutely. Yes.
  including this statement”
  FROM BONDAGE TO FREEDOM
  (P-492)
  6)Beloved Osho,
  How did you know that you
  were the blessed One?
  ”How do I know when I have head ache?
  I know it.”
  :THE LAST TESTAMENT-VOL-1(P-7)
  7) Beloved Osho,
  What is your message in short?
  “Take it easy”
  :TAKE IT EASY-VOL-II
  8) Beloved Osho,
  Do you consider yourself a prophet?
  “No, I am not so stupid. I don’t
  consider myself in anyway special,
  extraordinary, a messenger of God, a
  prophet, a messiah. No, I am just an
  ordinary human being like you and
  everybody else.”
  :THE LAST TESTAMENT-VOL-1
  (P-584)
  9) Beloved Osho
  Is there any reason that you tell us
  the same things day after day?
  “You are the reason!”
  :FROM BONDAGE TO FREEDOM
  (P-269)
  10) Beloved Osho,
  Are you a Yogi or a Buddha or a Gyani
  or a Tantrika?
  “ Nothing of the nonsense. Don’t try to
  label me; Don’t try to categorize. Look
  at me without any words.”
  THE PATH OF YOGA-VOL-7(P-40)

  ஓஷோவின் பேச்சுக்களும் புத்தகங்களும் எவ்வளவு பேரை அவர் அடைந்த (கண்டுபிடித்த ) நிலைக்கு உயர்த்தியுள்ளது என்பது பெரிய கேள்வி குறி அப்படியே நிகழ்ந்து இருந்தாலும் லட்சத்தில் ஒன்று கோடியில் ஒன்று என்பது நிதர்சனமான உண்மை, ஓஷோ ,ஜேகே, ரமணர் போன்றவர்கள் எங்கே தவற விட்டார்கள்?

  • 31/05/2011 இல் 23:06

   Exceptional quotes ஷாகுல்!
   (whatever of Osho might sound so, anyway)

   //ஓஷோவின் பேச்சுக்களும் புத்தகங்களும் எவ்வளவு பேரை அவர் அடைந்த (கண்டுபிடித்த ) நிலைக்கு உயர்த்தியுள்ளது….//

   அது அவசியமல்லவே?
   அவர்கள் எதையும் தவறவிடவில்லை.
   ஒஷோவோ, ஜேகேயோ இல்லை ரமணரோ கூட லட்சக்கணக்கில்-கோடிக்கணக்கில் மக்கள் அந்த நிலையை அடைவார்கள் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

   ஆனால், அவர்களது பேச்சு, எழுத்து மற்றும் போதனையின்றி, தானாக அந்த நிலையடைந்தவர்கள் ஏராளம். அவர்கள் அதை வெளியே சொல்லுவதில்லை.

   • 01/06/2011 இல் 10:40

    //அவர்கள் அதை வெளியே சொல்லுவதில்லை.// இருந்தாலும் உங்களுக்கு தன்னடக்கம் ரொம்ப அதிகம்!

   • தாஜ் said,

    01/06/2011 இல் 13:32

    அன்புடன் மஜீத்

    ஓஷோ…
    ஓர் அலாதியான மனிதர்!
    தீர்மானமாகச் சொல்ல முடியும்.

    ரசனையாக/
    மனித துருவை சுரண்டி
    பேசவல்லவர் ஓஷோ!

    வாழ்வில்…
    ஜெயிக்கிற மனிதர்களில்
    எத்தனையோ ஆயிரம் பேர்
    அறிவின் தளத்தில்
    சப்பையாகவும்
    பழமையில் இருந்து மீள
    வழியற்றவர்களாகவும்
    இருப்பவர்களை நிறம் கண்டே
    அவரது பேச்சு
    அமர்க்களப்பட்டிருப்பதாக உணர்கிறேன்.

    குறிவைத்தவர்களை
    நிமிரவைக்க கங்கணம்கட்டி
    அவர் திறமாகவே போதித்திருக்கிறார்.

    அதற்கு மேலான/ அடுத்த நிலை
    செயல்பாடுகள் என்பது
    உள்வாங்கிய மனிதர்களின்
    சுய உந்துதலாக மட்டும் இருக்கும்.

    மறத்துப் போன பழமையில் இருந்து
    உலகம் தழுவி
    மனிதர்களை இந்த அளவிற்கு
    உந்தி தள்ளியது
    நம் காலத்தில்
    இவர் ஒருவராகத்தான் இருக்கும்.

    எந்த மதத்துக்காரர்களின்
    கோபப் பார்வையிலும் சிக்காமல்
    எல்லா மதத்தின்
    அணிவேர்களையும்
    பேச்சால்
    களைந்தெரிந்த
    ஓஷோவின் சமத்து
    பிற எவருக்கும் வராது.

    ஏசு மாதிரி
    நபிகள் மாதிரி
    காந்தி மாதிரி
    பெரியார் மாதிரி…
    இன்னொருவர் எப்படி வரமுடியாதோ
    அப்படியே
    ஓஷோ மாதிரியும் வரமுடியாது.

    வேண்டுமானால்..
    அவரது பேச்சைக் கேட்டவர்கள்
    அவரைவிட
    சிறப்புகளோடு வரலாமே தவிர
    அவரை மாதிரி என்பது இயலாது.

    இது அத்தனையும்
    மஜீத் நன்கு அறிந்தவர்
    என்பதை நான் அறிவேன்.
    என்றாலும் நான் இப்போது
    ஓர் அண்ணன் ஸ்தானத்தில்
    பேசவேண்டியதாகிவிட்டது.
    *
    இன்னொரு கருத்தையும்
    மஜீத் சொல்லி இருக்கிறார்.
    ஓஷோவின் போதனை இன்றியே
    அவர் நிலை அடைந்தவர்கள்
    ஏராளமென சொல்லி இருப்பது சரி.

    எல்லா இடத்திலும்
    எல்லா காலத்திலும்
    வெளியே தெரிந்த
    புத்திமான்களைவிட
    வெளியே தெரியாத
    வெளியுலத்தில் அறிமுகமே ஆகாத
    அதே நிலையில் வாழ்ந்து, மடியவும் மடியும்
    தீர்க்கமான புத்திமான்கள் ஒருபாடு எப்பவும் உண்டு!

    – தாஜ்

   • 01/06/2011 இல் 18:14

    //இருந்தாலும் உங்களுக்கு தன்னடக்கம் ரொம்ப அதிகம்!// 🙂 🙂

   • 01/06/2011 இல் 18:16

    அண்ணன் சொல்வது அத்தனையும் உண்மை.
    உண்மையைத்தவிர வேறொன்றும் இல்லை.

   • SHAHUL said,

    01/06/2011 இல் 19:01

    அந்த நிலை என்பது மனமற்ற எண்ணமற்ற நிலையா ? அல்லது அப்படி ஒரு நிலையே கிடையாதா ? நம்மை விடுவிக்க வந்த தத்துவங்களே கால போக்கில் நம்மை அடிமைபடுத்தும் வறட்டு கோட்பாடுகள் ஆகி விட்டன, இதற்கு ஓஷோ விதிவிலக்கல்ல ,ஓஷோ படிப்பவர்கள் தெளிவாக குழம்பாமல் இருக்க முடியாது இதை ஓஷோ அவர்களே ஒப்புக்கொண்டுள்ளார்.ஓஷோவின் தத்துவங்களை இங்கே இப்பொழுதே வாழ்வதுதான் சிறப்பு, அறிவாக ஆகி விட்டால்…..

    ANY HOW I LIKE OSHO VERY VERY மச்.

    11) Beloved Osho,
    Do Enlightened Masters lie out
    of Compassion?
    “I don’t know about other Enlightened
    people, but I certainly lie!”
    :FROM FALSE TO THE TRUTH.(P-375)
    12) Beloved Osho,
    What is beyond Rebellion,
    beyond aloneness,
    beyond Meditation?
    “You!”
    :FROM FALSE TO THE TRUTH
    .(P-113)
    13) Beloved Osho,
    Are you from Outer space?
    “Of course!”
    :FROM DEATH TO DEATHLESSNESS
    (P-346)
    14) Beloved Osho,
    What is a blessing?
    “I am!”
    FROM DEATH TO DEATHLESSNESS
    15) Beloved Osho,
    Who are you without your disciples?
    “I am. I am whether disciples are there
    or not, That is irrelevant. I am not
    dependent on you. And my whole effort
    here is that you can also become
    independent of me.”
    :TANTRIC TRANSFORMATION
    (P-43)
    16) Beloved Osho,
    A saintly man would never say
    ‘Fuck ‘ or ‘shit’.
    “Then after me you will have to change
    the definition of the saintly man.”
    :PHILOSOPHIA ULTIMA(P-76)
    17) Beloved Osho,
    What is the Goal of meditation?
    “ There is ‘NO GOAL’ of meditation.
    Meditation is the dropping of all goals.
    Goals exist in the future; Meditation is to
    be in the present. There is no meeting
    ground between the present and the
    future.”
    :WALKING IN ZEN,SITTING IN ZEN(P-230)
    18) Beloved Osho,
    Do you have a master/disciple
    relationship with the people here?
    “No, They are all my friends.”
    :THE LAST TESTAMENT-07-OCT-2003
    19) Beloved Osho,
    What is the basic reason for the
    Maroon robes, for the mala the
    locket? What is the rationale?
    “There is none. It is just absurd.”
    But if it is absurd, then Why do you impose it?”
    “Precisely, That is why”
    :TANTRIC TRANSFORMATION
    .(P-135)
    20) Beloved Osho
    Why are you so much against
    knowledge?
    “Knowledge is destructive ofsomething.
    Immensely valuable in you. It destroys
    your wonder. And it is through wonder
    that one becomes aware of Godliness
    not through knowledge.”
    :WALKING IN ZEN,SITTING IN ZEN

 4. தாஜ் said,

  31/05/2011 இல் 21:48

  ஓஷோவின் புகைப்படமும்
  பிக்காசோவின் வரைப்படமும்
  கலைஞர் ஆபிதீனின்….
  //போலித்தனங்களை ஓஷோ
  கிழிப்பாரேயொழிய
  நவீன ஓவியங்களை
  வெறுப்பவர் என்று சொல்ல முடியாது.
  வழிவழியாய் வந்த
  வணக்கமுறைகளை உடைக்கும் ஓஷோ ,
  பழைய ஓவிய மரபுகளை
  மாற்றுபவர்களுக்கு எதிராக
  எப்படி இருக்க இயலும்?
  ஓஷோ முட்டாளா என்ன? //
  இந்த துல்லிய விளக்கமும்
  இன்றையப் பக்கத்தை
  அழகுக்கு அழகு செய்பவை.
  -தாஜ்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s