நாளக்கி ’ஓஷோ’ இன்னக்கி ’Z’ ஷோ…!

ஒற்றுமைக் கயிறு

இஜட். ஜபருல்லா

இறைவா…
நீ  வருமானம்  தருகிறாய்
நாங்கள் –
வட்டி வாங்கிப்  பெருக்குகிறோம்.

நீ –
திருமணம் செய்து
வைக்கச்  சொன்னாய்
நாங்கள் –
கைக்கூலிக்  கடை  திறந்தோம்.

நீ –
உலகம்  இருக்கும்  வரை
‘ஜக்காத்’ என்ற  ஏழைவரியை
கொடுக்கச்  சொன்னாய்.
நாங்கள் –
ஒருமுறை  கொடுத்தால்  போதும்  என்று
வரம்பு  கட்டினோம்.

நீ –
தொழுகையை
எங்கள் ‘இபாதத்’  ஆக்கினாய்.
நாங்கள் –
தொழுகையை தொழிலாய்  ஆக்கினோம்.
சங்கைமிகுந்த   இமாமை
ஜமாத்தின்  ஊழியராக  ஆக்கி
ஊதியம்  கொடுக்கிறோம்.

இறைவா… நீ –  திருமறைக்
– குர்ஆனை  வெகுமானமாய் தந்தாய்.
நாங்கள் –
விலைவைத்து
விற்றுக்கொண்டு  இருக்கிறோம்.

நீ –
ஒற்றுமைக்  கயிற்றைப்  பற்றி
பிடிக்கச்  சொன்னாய்.
நாங்கள் – பேச்சு  சண்டைகளோடு
தனித்  தனி  கட்சிகளாய்
பிரிந்து  இருக்கிறோம்..
அதுவும் –
உன்  வார்த்தையை
உண்மையாக்கத்தான்.
ஆமாம் –
பிரிந்தால்தானே
நீ   சொன்னபடி
ஒற்றுமைக் கயிற்றை
பற்றிப் பிடிக்கமுடியும்…?

**

நன்றி : இஜட். ஜபருல்லா (Cell : 0091 9842394119 )

2 பின்னூட்டங்கள்

  1. 31/05/2011 இல் 02:33

    Z – Shows are wonderful.. beyond the words…

  2. Basheer said,

    31/05/2011 இல் 08:47

    Wonderfull senences. Samuthaayaththai eppadi vazhikku konduvaruvathu?…..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s