இறை நேசர்கள் (வலிமார்கள்)…
இவர்கள் –
‘ஆலிம்’ பட்டம் பெற்றவர்கள் அல்ல
ஆழ்மனத்தின் தூசிகளை
தூர் எடுப்பவர்கள்.
‘இறைமை மருந்து’
இறைத் தூதர் வழியில்
இவர்கள் கைகளில்தான்
இன்னும் இருக்கிறது…
மூளை உலகில் மட்டும்
வாழ்ந்திருக்கும்
அறிவு ஜீவிகளுக்கு
இதுவரை இது கைப்படவில்லை.
மனம் சார்ந்த பாமரர்களுக்கு
தினந்தினம் அது
ஊற்றாய் பொழிகிறது …
’ஸனது’ பெற்ற
மூளை அடிமைகள்
இறைவனை –
நாக்கில் மட்டுமே…
வைத்திருக்கிறார்கள்.
இறைவனோ –
பாமர மனங்களில்
வசிக்கிறான்..
இந்த –
தர்க்கவாசிகள் –
இறைவசனங்களை
’வஹி’யின் –
ஆழம் தெரியாததால் – அவைகளை
வாய்க்கோலமாய் ஆக்கிவிட்டார்கள்.
அறிவு –
இஸ்லாத்தைக் குலைக்கிறது..!
மனமோ –
இஸ்லாத்தை
மலரவைக்கிறது..!
***
(12-4-2010-ல் எழுதியது)
***
நன்றி : இஜட். ஜபருல்லா (Cell : 0091 9842394119 )
malik said,
29/05/2011 இல் 18:38
நன்கு சொல்லியுள்ளீர்கள்.
இந்த ஸனது ஆராய்ச்சியாளர்களை “அறிவு” உள்ளவர்கள் என்று சொல்லவே முடியாது. அறிவு இல்லாதவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஹதீஸ் என்று நமக்குக் கூறப்படுபவைகளை மெச்சவோ அல்லது ஹதீஸாக இருக்க முடியாதென்று புறக்கணிக்கவோ முடியாமல் அறிவு இல்லாதவர்களே ஸனது ஞானிகள் எனும் பித்’அத் வாதிகள்
A.Mohamed Ismail said,
30/05/2011 இல் 10:19
master piece