அவளுக்கு இவள் பெயர் , அவனுக்கும் அவர் பெயர் : இப்னு ஹம்துன் கவிதைகள்

’கடல் கடந்தவனின் மனைவி’ என்று தலைப்பு வைத்தால் இன்னும் கவர்ச்சியாக இருந்திருக்கும். எப்படியெல்லாம் இழுக்க வேண்டியிருக்கிறது உங்களை!  ’பொதி சுமப்பவர்களை’த் தொடர்ந்து இந்தப் பக்கங்களுக்காக இப்னு ஹம்துன் எழுதிய கவிதைகளைப் பதிவிடுகிறேன். ‘எளிய கவிதைகள்’ என்று அவர் குறிப்பிட்டதால் எளிமையாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். ’பிடித்திருந்தால் வெளியிடுங்கள்’ என்று ஏன் சொன்னார் என்றுதான் தெரியவில்லை.  ‘பரங்கிப்பட்ட’ பஃக்ருத்தீன் எழுதினால் பார்க்காமல் இருப்போமா?!

***

ஏக்கம்

அழைப்பு மணி
அலறும் போதெல்லாம்
கடங்காரனாயிருக்குமோவென்று
கவலைப்பட்டு அமர்ந்திருப்பவனின்
கண்ணில் படுகின்றன
கூரையின் வழியே
உள்நுழைந்த
சூரிய ஒளியின்
சிதறல் துளிகள்அள்ள முடியாத வெள்ளிக்காசுகளாய்.

***
நினைவுகள்

விவாகரத்து செய்தபின்னர்
எதிர்பாராமல் ஒருநாள்
வீதியில் எதிர்பட்ட
முன்னாள் கணவனை விட்டும்
வேகமாகப்பார்வையைத் திருப்புகிறாள் மனைவி.
பார்க்கிறாளா வெனபாராமல் பார்த்துக்கொண்டேயிருக்கிறான் அவன்
இருவரின் உலகத்திலும்
இப்போதைக்கு யாரும் இல்லை.

***

நேசம்

வெளிநாட்டில் வசிக்கும் முறைப்பையன்
வாங்கியனுப்பிய பரிசை
நெஞ்சோடு
பத்திரப்படுத்தும் பேத்தியை
பாசம்பொங்க முத்தமிடுகிறாள் பாட்டி
அவளுக்கு இவள் பெயர்
அவனுக்கும் அவர் பெயர்.

***

வெட்கம்

மக்கள்தொகை கணக்கெடுக்கும் பெண்ணிடம்
மயிலிறகைப் போல
கடிதத்தின்
அனுப்புநர் முகவரியில்
பெயர் காட்டுகிறாள்
கடல்கடந்தவனின் மனைவி.

***

நட்பு

பழைய நண்பனை
பார்த்த பரவசத்தில்
நினைவில் தோன்றின
மறந்திருந்த
எங்கள்
பட்டப் பெயர்கள்

***

நன்றி : இப்னு ஹம்துன் | fakhrudeen.h@gmail.com

7 பின்னூட்டங்கள்

 1. masila said,

  17/05/2011 இல் 01:35

  arumai
  arumai

  new yorkin ethanayo avasarathin idaye odikkonde padithalum
  inikkum negilavaikkum kavitahigal

 2. 17/05/2011 இல் 11:18

  உண்மையிலேயே அருமையான அனுபவத்தில் பூத்த கவிதைகள். வாழ்த்துக்கள் இப்னு ஹம்துன்

 3. ஷாஜஹான், ரியாத் said,

  17/05/2011 இல் 11:20

  சின்ன சின்னத் தலைப்பில் தந்திருக்கும் ஒவ்வொரு கவிதையிலும் ஒளிந்திருக்கின்றன நூற்றுக்கணக்கான சிறுகதைகளுக்குரிய நுட்பொருள்கள்.

  நினைவுகளும் நேசமும் இதமான கவிதைகள். அதிலும் நினைவுகள் கவிதை படிக்கும்போதே ஒரு வலியைத் தருவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

  முன்னோர்கள் பெயர் வைப்பதென்பது காலம் காலமாக எல்லா
  வீட்டிலும் இயல்பானதொன்றாகி விடுகிறது. பாட்டன் பூட்டன் கொள்ளுப் பாட்டன் என்ற எச்சங்களை எப்படியேனும் பெற்றுவிடுகிறோம் ஏதோவொரு உடல் அடையாளத்தில்.. அட்லீஸ்ட்
  பெயரிலாவது.. இந்த தொன்மம் தொட்டு தொடர்தல் தான் இந்திய குடும்ப உறவுகளின் வலிமை. நேசம் கவிதை அதைத்தான் பிரதிபலிக்கிறது..

  ஆபிதீன் ஐயா சொன்னது போல் கடல் கடந்தவனின் மனைவி என்றே தலைப்பு வைத்திருக்கலாம் வெட்கம் கவிதைக்கு. இப்பல்லாம் யாரப்பு அப்படி வெக்குறாங்க..? :-))))

  மரபுக்கவிதைகளையே எளிமைப்படுத்தும் மந்திரம் கற்ற நண்பருக்கு புதுக்கவிதை புனனய சொல்லியாத் தரவேண்டும். அடிச்சி ஆடுங்க அப்பு..

 4. தாஜ் said,

  17/05/2011 இல் 16:38

  நினைவுகள் ரொம்ப அழகு!
  வளரும் கவிஞருக்கு
  வாழ்த்துக்கள்.

  புதிய கவிஞரை
  அறிமுகப்படுத்தியிருக்கும்
  ஆபிதீன் ‘ஐயா’வுக்கு
  நன்றி!.
  -தாஜ்

 5. ரமீஜா said,

  18/05/2011 இல் 14:11

  பக்குவப்பட்ட கவிதையாகவே இருக்கு ‘பரங்கிப்பட்ட’ பஃக்ருத்தீன் கவிதைகள்

 6. Emily said,

  10/01/2013 இல் 10:33

  rompa alaha yocikiriga superb


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s