தேர்தல் முடிவு குறித்த அலப்பறை – தாஜ்

***

மே-13/ 2011

-தாஜ்

என்ன….
நம்ம தலைவர்கள் எல்லாம்
ஏலம் கேட்பது மாதிரி தெரிகிறதா?
இல்லீங்க.
வெளிவரப்போற
தேர்தல் முடிவு குறித்து
தங்களது
முன் அனுமானத்தை
சொல்றாங்க.

அத்தனை அத்தனை MLA ஸீட்டுகள்
தங்கள் தங்களுக்கு
கிடைக்கும்னு நம்புறாங்க.
 
என் நெருங்கிய நண்பன் சொன்னான்
அவுங்க சொல்வது
அனுமானத்தையல்ல…
அவுங்கவுங்க
ஆசையைன்னு சொல்றான்.
முட்டாப்பையங்க அவன்.
வெளிப்படையா…
இப்படியா சொல்றது?
அசல் லூசுங்க அவன்.
அரசியல்வாதின்னா
ஏன்தான்….
இவன மாதிரியான ஆளுங்க
இப்படி
அநியாயத்துக்கு கரிச்சி கொட்டுறாங்களோ?
எல்லாத்துக்கும்….
ஒரு அளவு இருக்கு, ஆமாம்.

நாளைக்கி அவுங்க மேலவந்து
நாற்காலிலெ குந்திக்கிட்டு
நம்ம ‘இதுல’
குச்சியவிட்டு
கொடைஞ்சாங்கன்னு வைய்யி…
அப்பத்தெரியும்
குண்டி நாறிப்போறது!
 
பொதுவான நீங்களே சொல்லுங்க…
நமக்கு சேவைச் செய்யத்தானே
அவுங்களெல்லாம்
ஊரூரா அலைஞ்சி
மேக்கப்பெல்லாம் கலைஞ்சி
முகம் சிவக்க சிவக்க
ஓய்வு ஒளிச்சல் இல்லாமல்
பேச்சோ பேச்சென்று பேசி
கோடிகோடியா
சாக்குப் பையில
அள்ளிக்கிட்டுப் போயி செலவு செஞ்சி
ராதூக்கமில்லாம
பகலிலும் தூங்க முடியாம
அல்லோலோப் பட்டு
தேர்தலை சந்திக்கிறாங்க
என்பத யாரும் மறந்திடக் கூடாது.
 
அவுங்க எல்லாரும் ஜேச்சா..
நமக்குத்தானே லாபம்!
கலைஞர் சொன்னதும் கிடைக்கும்
அம்மா சொன்னதும் கிடைக்கும்.
ஊட்டுக்கு ரெண்டு ரெண்டு
மிக்ஸி,  கிரைண்டர், லேப்டாப்பெல்லாம்
வந்து குவியுமே!
அதான் சொல்றேன்
எல்லாருமே ஜெய்க்கட்டும்
அம்மா வட தமிழ்நாட்டுக்கு
முதல் அமைச்சராகவும்
கலைஞர் தென் தமிழ்நாட்டுக்கு
முதல் அமைச்சராவும் ஆகட்டும்,
அவுங்கக்குள்ளே சமரசம் செஞ்சிக்கிட்டா
நமக்கெல்லாம்…
தொல்ல இல்லாம போயிடும்..
எல்லோரும் ஒத்துமையா
இருக்கிறது நல்லதுதாங்களே.
அப்பத்தானே தமிழ்நாடு
சட்டுன்னு பேர் சொல்லும்.
 
எல்லோரும்
அவுங்க அவுங்க
குலதெய்வத்தையோ
பெரிய தெய்வத்தையோ
வேண்டிக்கங்க.
ஏசுகாரங்களும்
அல்லாகாரங்களும்
கட்டாயம் வேண்டிக்கிங்க.
நானும் பெரியாரை வேண்டிக்கிறேன்
13-ம் தேதி நல்லதே நடக்கணும்!
14=ம் தேதி
தமிழ்நாடு தமிழ்நாடா இருக்கணும்!
அன்னைக்கி வேறு ஒரு ரிசல்ட் வருது!

***

நன்றி : தாஜ்  [ E-Mail :  satajdeen@gmail.com ]  &  நக்கீரன்

7 பின்னூட்டங்கள்

 1. maleek said,

  11/05/2011 இல் 20:01

  பரதேசி நாய்களையெல்லாம் தாண்டவக்கோனே
  அரசியல் அதிபதியா ஆக்குமடா தாண்டவக்கோனே!

  • தாஜ் said,

   11/05/2011 இல் 22:24

   எத்தனை
   கருத்தானப் பாடலப்பா தாண்டவகோனே!
   -தாஜ்

 2. மஜீத் said,

  11/05/2011 இல் 22:05

  தாஜ் யோசனை சரியா வராது;
  ஏன்னா ரெண்டு பேரும் ‘அரை’ ஆயிருவாங்க.
  அவங்க ‘முழுசா’வே இருக்கட்டும்.

  பக்கத்துல இருக்குற பாண்டில ஒரு ‘குட்டி முதல்வர்’ இருக்குறதயே பொறுக்காம அதை தமிழ்நாட்டோட இணைக்கணும்னு சொன்னாங்களே, ஞாபகம் இருக்குல்ல?

  • தாஜ் said,

   11/05/2011 இல் 22:42

   அன்பு
   மஜீத்….

   நீர் சொல்வதும் சரி.
   அவர்களுக்கு விட்டுக் குடுக்க
   மனம் இடம்தராதுதான்.
   என்ன செய்யலாம்?

   நீ வேனுனா
   ஆந்திரா சீப்மினிஸ்டரிடம் பேசிப் பார்.
   நான் கர்நாடக முதல்வரோடு பேசிப்பார்க்கிறேன்
   அதில்.
   எதுவொன்னு கிடைத்தாலும்
   அம்மாவையோ
   அய்யாவையோ
   அங்கே முதல்வராக அமர்த்திவிடலாம்.
   யாராவது சமாதானம் செய்யலைன்னா
   அவுங்ககுள்ள
   பிரச்சனை பெரிசா வரும் மாதிரி தெரியுதே!

   ஜே… தேர்தலையொட்டி
   பேசப் புறப்பட்ட முதல் கூட்டத்திலேயே
   தான் ஜெயித்துவிட்டதாக நம்பினார்..
   அதையே
   தன் ரத்தத்தின் ரத்தங்களிடமும் பேசினார்!

   அது மாதிரியே….
   அய்யா….
   ஆறாவது முறையாக தானே
   முதல்வர்ன்னு
   தீர்மானமா இருக்கிறார்.
   போதாதற்கு
   வடிவேலு வேற
   சூடாக்கிவிட்டுட்டுப் போய்விட்டார்.

   ஆக
   இருவருக்கும்
   முதல்வர் பதவியை
   வலிய நாம் தருதுதான் முறை.
   இல்லையென்றால்
   ஏங்கிப் போய்விடுவார்கள்!

   சரி போகட்டும்.
   மஜீத்…
   வெற்றியாருக்குன்னு
   அங்கே பட்ஷி என்ன சொல்றது?
   -தாஜ்

   • மஜீத் said,

    12/05/2011 இல் 13:17

    ‘கிளி’ சொன்னதையேதான் திருப்பித் திருப்பிச் சொல்கிறது!

    ‘அய்யா’ ஆளான நம்ம ஹீரோவும் புள்ளிவிவர சகிதம்(!) (கான்கிரீட் வீடு டோக்கன், டி‌வி டோக்கன், கடன் தள்ளுபடி [இதுல பயனாளிகள் பெரும்பாலும் அம்மா ஆளுகளாக இருந்தாலுங்கூட] ஆறாவது தடவை அவர் வருவது உறுதின்னு அருதியிட்டு சொல்லிட்டுப் போயிருக்கிறார்.

    நம்மதான் ஸ்பெக்ட்ரம், அலைவரிசைன்னு சர். சி.வி. ராமன் ரேஞ்சுக்குப் பேசிக்கிட்ருக்கோம்.

    எனக்கும் சுனா சாமி ரேஞ்சுக்கு ஒரு ஜோசியம் சொல்ல ஆசை: அம்மாக்களின் கூட்டணி அரசு வரலாம்!!

 3. தாஜ் said,

  11/05/2011 இல் 22:53

  தோழமையுடன்…
  மேற்கண்ட
  இந்த நையாண்டி செய்தி குறித்து
  நையாண்டியாக
  உங்களது அபிப்ராயத்தை
  தாராளமாக
  தட்டாது
  எழுதுங்கள்.

  விஜயகாந்தான்
  அடுத்த முதலமைச்சர்
  என்று கூட
  உங்களது அபிப்ராயம் இருக்கலாம்.
  பரவாயில்லை எழுதுங்கள்.
  பொழுது போனால் சரி.

  அல்லது
  தேர்தல் தலைவலி
  தொலைந்தால் சரி.
  -தாஜ்

 4. ஹமீது said,

  13/05/2011 இல் 21:44

  வாழ்த்துக்கள் அம்மா ஜெயலலிதா அவர்களுக்கு,
  நீர் அருவியில் குளித்ததில் திருப்திபடாத நாகூர் வேட்பாளர் சேக் தாவுத் அரசியல் சாக்கடையில் குதித்து தான் சேர்த்ததில் சில கோடிகளை இழந்திருக்கிறார். பதவி மோகம் யாரை விட்டது.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s