கோடுகள் – இஜட். ஜபருல்லா

இறைவன் நேர்க்கோடு என்றான் ஒருவன்.
இல்லை, வளைகோடு என்றான் இன்னொருவன்.
தவறு, வளைகோடுதான் என்றான் மற்றவன்.
வட்டம்’ என்று
வானத்தில் இருந்து
ஒரு சத்தம் வந்தது.

***

நாகூரிலிருந்து சத்தமிட்ட நானாவுக்கு நன்றி. நீங்களும் அவரை சத்தமிடலாம் : Cell : 0091 9842394119 . நிற்க. சத்தியமாக , அடுத்த பதிவின் தலைப்பு ‘மாடுகள்’ அல்ல!

8 பின்னூட்டங்கள்

 1. தாஜ் said,

  08/05/2011 இல் 18:01

  நாநாவின்
  இந்தக் கவிதை வரிகளுக்கு
  இன்னும்
  நண்பர்கள் யாரும்
  கருத்து செய்யாததில்
  வியப்பில்லை!

  மேலே
  ஒன்றுமில்லையென
  நாநாவுக்கு
  வானில் இருந்து
  ‘வஹி’ வந்திருப்பதில்
  இப்பொழுது
  நிறைந்த மகிழ்வு கொள்பவன்
  நானாகத்தான்
  இருக்கமுடியும்.

  சந்தோஸம்
  நாநா.
  -தாஜ்

 2. 08/05/2011 இல் 21:49

  suuper…

 3. மஜீத் said,

  08/05/2011 இல் 23:13

  அருமை, அழகு.
  சூப்பர் நானா.

 4. 09/05/2011 இல் 13:02

  அன்பு தாஜ்,

  முடிவு ஆரம்பத்திடம் சேரும் ஜீவித வட்டம் ஓர் ஆன்மீக குறியீடு!.
  ஜபருல்லா நானா அதை குறிப்பிட்டிருக்கலாம்.

  “உங்களில் அவன் அத்தாட்சியை பார்க்க மாட்டீர்களா?” என குர் ஆன் அழைக்கிறது. நம் உணர்விலேயே அதன் மூலவூற்றை தேடும் ஜீவித வட்டம்.

  ஜீரோ வட்டமாக இருக்கலாம்.
  வட்டம் என்றால் ஜீரோ அல்லவே!
  அப்புறம் வட்ட நிலவு, வட்ட தோசை, வட்ட தட்டு எல்லாம் ஜீரோ – இல்லை என ஆகிவிடுமே!

  அன்புடன்,
  அமீன்

  • தாஜ் said,

   09/05/2011 இல் 18:03

   அன்பு
   நூருல் அமீன்…

   ஆன்மீகவாதிகள்
   கொஞ்சம்
   ரசிக்கவும்,
   சிரிக்கவும் செய்வது நலம்.

   எல்லாமதத்திலும் உள்ள
   ஆன்மீகவாதிகள் பேசும்
   லோக /பரலோக
   தத்துவார்த்தங்களை
   எனக்கு எட்டியவரை
   படித்திருக்கிறேன்.
   படித்துக் கொண்டும் இருக்கிறேன்.
   சமீபத்தில்தான்
   உங்களது
   அகப்பார்வையைப் படித்தேன்..
   இப்போதுகூட
   தாவோ பற்றி
   ஓஷோ வின் கருத்தை
   சுவைத்துக் கொண்டிருக்கிறேன்.

   தவிர…
   மேலே
   நான் சொன்னது மாதிரி
   ஒன்றுமில்லை என்றால்….
   வானத்தில் இருந்து சத்தம்
   எப்படி வந்திருக்கமுடியும்?
   தெரிந்தேதான் கலாய்த்தேன்.

   ஜபுருல்லா நாநா
   எனக்கு இஸ்டமானவர்
   அவருடைய
   ஏகத்துக்கும் வித்தியாசப்பட்ட
   ஆன்மீகம் முழுமையும்
   நான் அறிவேன்.
   விடிய விடிய பல இரவுகள்
   கதையாடி இருக்கிறோம்.

   இது
   நாநாவை
   கொஞ்சம் சீண்டிப்பார்த்த விசயம்.
   அவ்வளவுதான்..

   ஆன்மீகத்தோடு
   நீங்கள் சிறக்க வாழுங்கள்.
   மகிழ்ச்சி என்பது
   எங்கே கிடைத்தால் என்ன?

   ஏழாவது வானத்தைப் பற்றி
   பிறகு ஒருதரம்
   நான் எழுதும் போது
   சுடச்சுட வாதத்தைவையுங்கள்.

   அன்புடனேயே
   -தாஜ்

 5. 10/05/2011 இல் 08:58

  அன்பு தாஜ்,

  நீங்கள் ஏழாம் வானத்தைப் பற்றி எழுது முன்னர்
  “இடங்களின் தேவை இறைவனுக்கில்லை” என்ற என் இடுகையையும் முடிந்தால் சற்று பொருமையோடு வாசிக்க கோருகின்றேன்.

  http://onameen.blogspot.com/2010/06/blog-post.html

  • தாஜ் said,

   10/05/2011 இல் 13:41

   அன்பு
   நூருல்

   நீங்கள் குறிப்பிட்டமாதிரி
   பொறுமையோடே வாசித்தேன்.
   பொறுமை இல்லாது போனால்
   அதை வாசிப்பதென்பதும் கஷ்டம்.

   தவிர,
   அந்தக் கட்டுரையை
   ஏற்கனவே
   உங்களது புத்தகத்திலோ
   வலைத்தளப் பக்கத்திலோ
   வாசித்தும் இருக்கிறேன்.

   ஆன்மீகத்திற்காக
   நீங்கள்
   அநியாயத்திற்குப்
   பிரயாசைப் படுகிறீர்கள்.

   உங்களுக்கு தெரியுமா?
   நூற்றுக்கு 90 சதவீதம்
   ஆன்மீகவாதிகளாகத்தான் இருக்கிறார்கள்!
   இத்தனை மெஜாரிட்டியுடன்
   இருக்கும் நீங்கள்…
   அதற்காக கொள்ளும் பிரயாசை
   என்னை ரொம்பவும் யோசிக்க வைக்கிறது.

   அந்தக் கட்டுரையைப் பற்றி
   நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
   பொறுமைக் கொள்கிறேன்.

   ஒத்தக் கருத்து இல்லாதுப் போனாலும்
   இப்போது
   ஒரு சகோதரக்கட்டிலாவது இருக்கிறோம்.
   நான் ஏதேனும் எழுதப் போய்
   அதற்கும் குந்தகம் நேர்ந்தால்
   நான் நொந்துப் போகக் கூடும்.

   உங்களுக்குத் தெரியுமா
   நூருல்…
   என் வீட்டில்/குடும்பத்தில்/உற்றார் உறவினர்களில்
   எல்லோருமே ஆன்மீகவாதிகள்தான்.
   என்ன செய்ய?

   ‘பையனை’
   சம்பாதிக்க ‘சௌதிக்கு’ அனுப்பினால்…
   ‘உம்ரா’ செய்துவிட்டு வருகிறான்.
   போதததற்கு முசுமுசுன்னு ‘டாடி’ வேறு!

   இன்னும் கல்யாணம் கூட ஆகலை!
   அதற்குள் உம்ரா!
   இப்ப நீங்கள் எல்லாம்
   ஆன்மீகம் பேசிக் கொண்டு
   உம்ராவையெல்லாம் மறந்தமாதிரி இல்லை?

   எதற்கு சொல்கிறேன் என்றால்…
   நான்
   அவர்களிடமும் ஒன்றும் சொல்வதில்லை
   உங்களுக்கு சொன்ன அதே பொறுமையைத்தான்
   என் சொந்தங்களிடமும்
   கடைப் பிடிக்கிறேன்.

   இன்னொருப் பக்கம்
   நீங்கள் என்னை
   சகித்துக் கொள்ளவில்லையா என்ன?
   -தாஜ்

 6. shahul said,

  10/05/2011 இல் 20:06

  அன்பு நானா,

  இறைவன் மட்டும் வட்டமா! அல்லது அனைத்துமா?

  With Love,

  Shahul.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s