இப்படிலாம் எழுதாதீங்க நானா!

எச்சம்

நான் –
கரைய நினைக்கிறேன்

சுகங்களிலும்
சோகங்களிலும்

நிதர்சனங்களிலும்
நிராசைகளிலும்

நினைவுகளிலும்
கனவுகளிலும்

கற்பனைகளிலும்
காட்சிகளிலும்

இப்படி –
இவைகளில் மட்டுமல்ல.
எல்லாவற்றிலும்…!

ஆயினும் என்ன செய்ய…?
எல்லாமே –
கரைந்து விடுகின்றன.
இறுதியில் –
நான் மட்டுமே
மறுபடி –
எச்சமாய்…!

***

’இப்படிலாம் எழுதாதீங்க நானா. கவிக்கோ கோச்சுக்குவாரு!’ – தாஜ்

***

மீண்டும் ஜபருல்லா :

இருக்கும் இடம்

பிரிவின்
வலியில்தான்
பிரியத்தின்
பலம் இருக்கிறது.

உண்மையின்
புனிதம்
பொய்யில்தான்
புதைந்து கிடக்கிறது.

நினைவின் இன்பம்
மறதியில்தான்
பிறக்கிறது.

***

நன்றி : இஜட். ஜபருல்லா |  Cell : 0091 9842394119

பார்க்க: வைரமுத்துவும் இஜட். ஜபருல்லாவும் – அப்துல் கய்யூம்

2 பின்னூட்டங்கள்

 1. 02/05/2011 இல் 19:38

  இது, இது, இதுதான் Z நானா!
  படிப்பவனை வெண்ணையாய் உருக்குகிறார்

  கய்யூம் ஸாப் செய்த ஒப்பீடு
  ஒரு கருத்துக்களஞ்சியம்
  மிக நல்ல பணி

  ரூமிசார்தான்
  அய்யா சலீம் அவர்களை
  உச்சமேற்றவும்
  Z நானாவை
  வெளிக்கொணரவும்
  முடியும் – செய்வார் –
  நிச்சயமாய்!

 2. Sountharya said,

  20/06/2018 இல் 18:47

  Dic5hizbkpb


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s