‘இஸ்லாம் வளர்த்த இசைத்தமிழ்’ பதிவுக்கு (ஐயோ, மீண்டும் இஸ்லாம்! – தாஜ்) மறுமொழியிட்ட பல நண்பர்கள் குணங்குடி மஸ்தான் பாடல்களின் ஆடியோ வடிவத்தைக் கேட்டிருந்தார்கள். சகோதரர் சுல்தான் நிர்வகிக்கும் நாஞ்சில்நாடன் தளத்தில் அதற்கான சுட்டியை இப்போதுதான் பார்த்தேன். ’குணங்குடியார் பாடல்கள் சென்னை கானா பாடல்களோடு கலந்த மரபாகியிருக்கின்றன. அந்த பாடல்களை மயிலை வேணு என்ற பாடகரிடமிருந்து சேகரித்து ஒலி நாடாவாக வெளியிட்டதன் சுட்டியை கீழே இணைத்துள்ளேன்’ என்ற தகவலோடு எழுத்தாள நண்பர் எம்.டி.முத்துக்குமாரசாமி உதவியிருக்கிறார். ஜனாப் சுல்தானுக்கும் திரு. ’எம்.டி.எம்’முக்கும், பதிவேற்றிய NFSC-க்கும் நன்றிகள்.
’கீறறு’ தளத்தில் இருந்த நா. மம்மதுவின் கட்டுரை ( ’சூஃபி ஞானி குனங்குடி மஸ்த்தான் -சூஃபித் தத்துவமும் இசையும்’ ) இப்போது எங்கே போனதென்று தெரியவில்லை. கீழேயுள்ள நாஞ்சில் நாடன் கட்டுரையை படித்துவிட்டு நிதானமாக பாடல்களைக் கேளுங்கள் – ‘சமயம்’ இருந்தால். உலகைக் ’காப்பாற்றும்’ ஒபாமா ஒன்னர மணி நேரம் ஒதுக்குவாராக, ஆமீன்!
குணங்குடியார் பாடற்கோவை – நாஞ்சில் நாடன்
***
***
updated 18th Aug’2011 :
சூஃபி ஞானி குனங்குடி மஸ்த்தான் -சூஃபித் தத்துவமும் இசையும் -நா. மம்மது
abedheen said,
17/02/2013 இல் 13:20
நண்பர் எம்.டி.எம். இணைத்த யுடியூப் சுட்டி வேலை செய்யவில்லை. தேடிப் பார்த்து பிறகு இணைக்கிறேன். அதுவரை இதைக் கேளுங்கள்.
அனாமதேய said,
18/02/2013 இல் 10:58
alot of thanks to u..
ஆபிதீன் said,
23/04/2013 இல் 21:51
http://wiki.indianfolklore.org/index.php?title=Folk_Music_Album_1%3B_Songs_of_Gunankudi_Masthan_Sahib_from_the_streets_of_Chennai
ஆபிதீன் said,
25/08/2013 இல் 15:47
குணங்குடியாரின் பாடல்களில் காகமாய் பறந்த அலைக்கழிப்பின் துயரம்
ஹெச்.ஜி.ரசூல்
குணங்குடியாரின் பாடல்களில் அலைக்கழிப்பான் துயரம் தொடர்ந்து துரத்திக் கொண்டே வருகிறது. இறைத்தேடலை இதற்கான உபாயமாக காணவும் இது விருப்புறுகிறது. கீர்த்தனை பாடலொன்று நாயனைத்தேடி நாயனே நாயனே நாயனே என்றும், மாயனே மாயனே மாயனே என்றும், தூயனே தூயனே தூயனே என்றும், நேயனே நேயனே நேயனே என்றும் கத்திக் கத்தி தொண்டை கட்டிச் செத்தேனே என தொண்டைகட்டி செத்த வரலாற்றை தவிப்பைச் சொல்கிறது.
அகத்தீசன் சதகத்தில் காகமாய் நின்று கதறிக்கதறி அழுமெனக் கையணைத்து அருள்புரியச் கோரும்குரல் றகுமான் கண்ணியில் இன்னொரு விதமாக ஒலிக்கிறது. ஏகப்பெருவெளியில் இருள்சூழ்ந்த நிலையில் உட்கார கம்பம்தேடும் பறந்து பறந்து தளர்ந்து போன காகம் இதுவாயென தன்னை திசையறியா இருளில் தளர்ந்து பறக்கும் காகமாக குறிப்பீட்டாக்கம் செய்கிறார்.
காட்டிற்குள் வேட்டைக்குச் செல்லும்போது வேட்டைநாய் இல்லாமல் வேட்டைக்காரனையே கடித்துக்குதறும் வெறிநாயை கைப்பிடித்து போகலாமாவென அப்பாடல் வரிகள் கேட்கின்றன.
குணங்குடியார் தன் குறைகளையும் ஓர்மைகளையும் ஒன்றுதிரட்டி அழும்குரல் என்பது வாழ்வு இருப்பின் மீதான அதிருப்தியின் வடிவமாகவே வெளிப்பட்டுக் கொள்கிறது. தந்தைதாய் முதலான பந்தங்கள் என்றனைச் சதி செய்ததற்காக ,சீ நாயே என்று அடித்து துரத்தியதற்காகவா நாயினும் கடை கெட்ட நாயைபோல அலைந்து திரிவதற்கா எதற்காக அழுவவேன் எனக் கேட்கிறார்.
தந்தை தாய் முதலான பந்தங்கள் சூழ்ந்த குடும்ப அமைப்பிலிருந்து வெளித்தள்ளப்பட்ட நிலையை மேற்சொல்லப்பட்ட முகியத்தீன் சதக குறை இரக்கப்பகுதியில் குறிப்பிடுவதைப்போல பிறிதொரு இறைஞ்சலில் புதல்வர்களெனும் முதலைகள் பிடித்துக் கடித்துப் புசிக்க கொடுத்து உழல்வேனோ என கேட்கிறார். கதகதவென்று எரியும் பணத்தீயை மிதித்தெனது கால் கொப்பளங்களால் துயருறுவேனோ எனவும் கலக்கமுற்று திக்கித்திணறி சுக்கல் நூறாகி சிதைந்து கிடக்கும் தான் எதுவாக ஆவேனோ என தனது தேடல்களைக் கொண்டு வாழ்வை நிரப்புகிறார்.
கரைகாண முடியாத கப்பலாக கலங்கிடுவேனோ அல்லது கரையேறி நின்றிடுவேனோ, ஆளும் அரசரின் கையிலிருக்கும் செங்கோலாவேனோ, அல்லது பார்வையற்றவர் ஊன்றி நடக்கும் கைக்கோலாவேனோ என வாழ்வின் இருவேறு நிலைப்பட்ட இருப்பினை வெளிப்படுத்தி தொடர்ந்து பாதிப்புகளிலிருந்து விடுதலைபெற அருள்புரிய இறையிடம் வேண்டுவதின் வழியாக பாதிக்கப்பட்டவைகளின் விலக்கப்பட்டவைகளின் சார்பினராக குணங்குடியார் தன்னை முன்நிறுத்துகிறார்.
கண்ணேரஹ்மானே எனும் குணங்குடி மஸ்தான்சாகிபின் பாடல்கள் ஒலிப்பேழையிலிருந்து அல்லாஹு என்னுங்கள் எனும்பாடல்.தக்கலைஹலிமா தயாரிப்பில் குமரிஅபூபக்கர் பாடுகிறார்..
ஆபிதீன் said,
11/11/2013 இல் 12:09
இசையும் இறைவனும் – யுகபாரதி
http://yugabharathi.wordpress.com/2011/11/07/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/
ஆபிதீன் said,
17/12/2013 இல் 15:35
தக்கலை ஹலீமாவின் ஃபேஸ்புக்கில் குணங்குடியப்பா : https://www.facebook.com/photo.php?v=122475127916137&set=vb.100004609500046&type=3&permPage=1
ஆபிதீன் said,
30/11/2014 இல் 10:55
குணங்குடி மஸ்தான் சாஹிபின் ’அல்லாஹூ என்னுங்கள் சதா காலம்..’ – குமரி அபூபக்கர் குரலில்
அனாமதேய said,
11/08/2016 இல் 10:42
I want the panigal of him