ஜாஃபர்நானாவின் (கோழிக்)குஞ்சும் ஜாஃபரிக்காவும்

’ஒங்கடதான் புடிக்க அம்சமா , சாரி, படிக்க அம்சமா இக்கிதாம். எளுத சொல்றாஹா நெறய பேரு’ என்றதுமே எடுத்துவிட்டார் – நானா கீபோர்டை! ’ஜில்லிப்பு’ என்று ஒரே ஆபாசக்குப்பை…!  நமக்கு ஏன் வீண் பொல்லாப்பு?  போட்டுடலாம்; ‘ஆன்மீக வாரம்’ முடிவுக்கு வந்தால் சரிதான். ஆனாலும் முந்தாநாள் இடவேண்டியதை இன்று பதிவிடுவதற்கும் ஆன்மீகம் வந்துவிடுகிறதே.. நினைத்ததையெல்லாம் செய்ய முடிகிறதா நாம் ?  ஜஃபருல்லநானாவின் ஒரு கவிதை இருக்கு. ’தவிர ’ என்பது தலைப்பு. அது இது :

’என் விஷயத்தில்
நினைத்ததெல்லாம்
நடந்துவிடுகிறது..!
நான் –
நினைப்பதைத் தவிர…!’

எப்படி? நமது மதிப்பிற்குரிய ’சிராஜூல் மில்லத்’ அவர்களுக்கு பிடித்த கவிதை இது. எல்லா கூட்டங்களிலும் சொல்வார்களாம். நன்றி ஜபருல்லாநானா. இந்த ஜாஃபர்நானாவின் அநியாய வீரியம் குறையவும் அப்படியே மருந்து சொல்லுங்களேன். ஒரேயடியா ஆட்டம் போடுறார் மனுசன். அதுவும் செம்ம ’மனாரா’ ஃபோட்டோ அனுப்பியிருக்காரு பாருங்க, எங்கேர்ந்துதான் எடுத்தாரோ மனுசன், பயங்கரமா சிரிச்சேன்.

இன்னும் பெருசாக்கலாம்டு பாத்தா ’தொப்பி’ கழண்டுடுது!

ஒரே ஒரு குறை. ’ஜில்லிப்பு’ என்கிறார் –  குளிர்ச்சிக்கு. நாகூரில் ’ஜில்லாப்பு’ என்றுதான் சொல்வார்கள். வெளியூர் போகும்போது ’கொஞ்சம் ஜில்லாப்பு தண்ணி தாங்க’ என்று நான் கேட்கும்போது நண்பர்களின் முகம் போகும் போக்கைப் பார்க்க தமாஷாக இருக்கும்.

கடைசியாக ஒன்று. ஜாஃபர்நானாவுடையது சிலசமயங்களில் சின்னதாகவும் இருக்கும் என்பதால் பெரிதாக்க ஜாஃபரிக்காவை இணைத்திருக்கிறேன். அது அவர் சில மாதங்களுக்கு முன்பு காட்டியது. இரண்டையும் நன்றாகப் பார்த்துவிட்டு திட்டுங்கள் : முகவரி : manjaijaffer@gmail.com

நன்றி.

ஆபிதீன்

***

ஜில்லிப்புஹமீது ஜாஃபர்

நாலு நாளைக்கு முன்னால ’கல்ஃப் நியூஸ்’ஐ தொறந்தவுடன் முதல் பக்கத்துலெ சின்னதா இந்தச் செய்தி போடப்பட்டிருந்தது. Better times lie ahead.  Leaders say  there’s no future for Libya with Gaddafi and insist he must go –  By Barack Obama, David Cameron and Nicolas Sarkozy. 

தெரியாமத்தான் நான் கேக்கிறேன், கடாஃபி இவங்களுக்கு என்ன பங்காளி பாகத்தாளியா இல்லை கொண்டான் கொடுப்புனை உறவு முறையா இல்லெ கூடபொறந்த அண்ணதம்பி உறவா? கடாஃபி வேணுமா வாணாமான்னு அந்த நாட்டு மக்கள் தீர்மாணிக்கணும் நீ என்ன இடையிலெ பூந்துக்கிட்டு.

இந்த பிராந்து இருக்கே; பருந்துக்கு பிராந்துன்னு எங்க பக்கம் சொல்லுவோம், மலையாளத்துலெ பைத்தியத்துக்கு சொல்லுவாங்க. அது ரெக்கையெ விரிச்சிக்கிட்டு மேலே சுத்திக்கிட்டே இருக்கும். எங்கேயாவது கோழி குஞ்சு இருக்கா இல்லை ஆடு மாடு சாவுற மாதிரி இருக்கான்னு டெலஸ்கோப்பிக் கண்ணாலெ பார்த்துக்கிட்டிருக்கும். எதாவது தென்பட்டா உடனே லபக் போட வந்துடும். அப்புறம் நாய் நரி எல்லாம் வரும். அதேமாதிரித்தான் இந்த அமெரிக்காவும். அதனாலத்தான் கழுகை தேசிய சின்னமா வச்சிருக்காங்க போலிருக்கு. கழுகுடைய குணம் எல்லாம் இருக்கு.

நாங்கதான் உண்மையன முஸ்லிம்னு சொல்லிக்கிட்டிருக்கிறவங்க கண்டுக்காம இருக்கிறாங்க. அப்படித்தான் இருக்கணும் இல்லேன்னா தொப்பிக்கு ஆபத்து வந்துடுமே? என்ன செய்யிறது?

மழைவிட்டாலும் துவாணம் விடாதுன்னு சொல்லுவாங்க, அதுபோல மேஜர் வேலை முடிஞ்சிட்டாலும் சில்லரை வேலை இருந்துக்கிட்டுத்தான் இருக்குது. இடையிலெ இடையிலெ நான் ஆரம்பிச்ச ’இண்டர்நேஷனல் தலைகீளே சமாத்’தை எப்படி கொண்டுபோறதுன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தேன். ஏன்னா அதை சீக்கிரம் முழு வடிவுலெ கொண்டுவந்துடணும். ஏக்கனவே இருக்கிற ’தலகீது சமாத்’துடைய அல்-சாட்டியம் தாங்கமுடியலெ. இவண்ட காலை எப்படி வாரலாம்னு அவனும் அவண்ட காலை எப்படி வாரலாம்னு இவனும் போட்டிப்போட்டுக்கிட்டு இருக்கானுவ. இகதான் இஸ்லாத்துலெ ஒத்துமையெ நிலை நாட்டப் போறாகலாம். இகள்ட்டதான் உண்மையான இஸ்லாம் இருக்கிதாம். இப்போதைக்கு எக்கேடுகெட்டும் தொலையட்டும். இப்ப விசயத்துக்கு வாரேன்.

எடுத்த வேலை சக்சஸ் என்றாலும் ஒரு சந்தேகம். வேலையில் அல்ல, சிஸ்டத்தில். கேட்க புறப்பட்டபோது நம்ம பார்ட்னர், ’வேலை முடிஞ்சிடுச்சு, கப்பலும் போயிடுச்சு, அப்புறம் என்ன சந்தேகம்னு சொல்லிட்டு என்னை முஸிபத்துலெ மாட்டுறே’ அப்டீன்னான். காரணம் நான் கேட்கப்போனது அவன் அப்பன்கிட்டே. க்ளியர் பண்ணிட்டு வந்தவுடன், ’என்ன தீர்ந்துடுச்சா?’ அப்டீன்னு ஒரு மாதிரியான சிரிப்போடு கேட்டான்.

’இந்த பாரு சந்தேகம் ரெண்டு பேருக்கு வராது. ஒன்னு நல்லா தெரிஞ்சவனுக்கு இன்னோன்னு ஒன்னுமே தெரியாதவனுக்கு. நீ முதல் ரகம், இந்த அக்கவுண்டண்ட் ரெண்டாவது ரகம், நான் இடையிலெ இருக்கேன் அதனாலெ எனக்குத்தான் சந்தேகம்’ அப்டீன்னேன்.

’நீ ஷைத்தான் வேலைதான் அதிகமா செய்வே’ என்றான்.

’ஆமாம், எனக்கு அல்லாவோட இருக்கப் பிடிக்காது, ஷைத்தான்கூட இருக்கத்தான் பிடிக்கும் ஏன்னா எல்லா நாலெட்ஜும் அங்கேதான் கிடைக்கும் அல்லாவுட்டே கிடைக்காது’ அப்டீன்னு சொல்லிபுட்டு ஆபிதீனை காண்டாக்ட் பண்ண போனை எடுத்தேன்.

விசயம் இருக்கோ இல்லையோ தினம் ஆபிதீனுக்கு ஒரு போன் போட்டுடுவேன். எப்போதுமே நம்ம கால் கன்னியா (மிஸ்ஸா) தான் இருக்கும். உடனே பதில் வரலைன்னா அவர் பாஷையிலெ தேவர்+அடியார்+மகன்=அரபாப் வந்துட்டான்னு அர்த்தம். அந்தமாதிரிதான் இன்னைக்கும் ரெண்டுமணிநேரம் கழிச்சு பதில் வந்துச்சு. எடுத்தவுடனே ’நானா, உங்களை எழுத சொல்லி போன் வருது நானா, எதாவது எழுதுங்க’ன்னார்.

மேலையும் கீலேயும் ஐஸ் பையை வச்சு உட்காரவச்சா எப்படி இருக்குமோ அப்படி ஜில்ல்ல்ல்…….லுன்னு ஏறுனுச்சு. ஒடம்பு பூரா ஜில்லிப்பு தட்டினுச்சு. உடனே, தம்பி ரொம்ப மகுண்டுடாதீங்க அடக்கி வாசிங்க அப்டீன்னு உள்ளே இருந்த ஹமீது ஜாபர் வார்னிங்க் கொடுத்துட்டார். யாருக்காக இல்லாவிட்டாலும் ஆபிதீனுக்கு வேண்டியாவது எழுதுறேண்டு சொல்லிபுட்டுதான் தொடங்குறேன்.

போன வாரம் ஒரு கனவு. ரயில்வே லைன்ல ஆட்கள் வேலை செஞ்சிக்கிட்டிருக்காங்க. இந்த பக்கம் எங்க தெருவும் வயலும், அந்த பக்கம் வயல். சிலதுலெ நாத்து செழிப்பா வளர்ந்திருக்கு, செலதுலெ ஏர் உழுதுக்கிட்டிருக்காங்க ஒரு பக்கம் நடவு நடந்துக்கிட்டிருக்கு. தூரமா உப்பனாறு மாதிரி நதி அதுலெ ஒரு தோணி போய்கிட்டிருக்கு, மழை பேஞ்சிக்கிட்டிருக்கு. எனக்கோ முட்டிக்கிட்டிருக்கு உட்கார முடியலெ அந்த பக்கம் நடவாளுக இந்த பக்கம் ரயில்வே ஆட்கள். என்னடா செய்யிறதுன்னு யோசிச்சிக்கிட்டிருக்கும்போது தூக்கம் கலைஞ்சு விழிச்சிட்டேன்.

வேறே ஒன்னுமில்லே மூத்திரம் முட்டிக்கிட்டு இருந்துச்சு. பாத் ரூம் போயிட்டுவந்து கனவை நெனச்சுக்கிட்டே படுத்துட்டேன். சாதாரணமா மழை பெய்கிற மாதிரி கனவு கண்டால் ’சார்’னு ஒரு விரலை தூக்குவோம்ல, எலிமண்டி ச்சூல்லெ படிக்கும்போது. அதாங்க ‘சிஞ்சாக்கு’ வருதுன்னு அர்த்தம். நான் அஞ்சாறு வயசா இருக்கும்போது ’சிஞ்சாக்கு பேஞ்சிட்டு வந்து படு”ம்பாக எங்க அப்பா (பாட்டனார்). ஜாமாங்கூடு, சிஞ்சாக்கு, ஜாமானுக்கு இதெல்லாம் எங்க பக்கத்து பாஷை.

இப்பதானெங்க பாத்-ரூமு பாக்காத ரூமுன்னு… அந்த காலத்துலெ ஆஹா, சின்ன வயசா இருக்குறச்சே அந்த ரயில்வே டிச்சுக்குப் போயி காத்தோட்டமா வெளிக்கி இருந்துட்டு வாய்க்கால்லெ ஓடுற தண்ணியிலெ கழுவிட்டு வர்ற சுகம் வருமா இப்பொ? அப்டியே உட்காந்திருந்தா கெண்டை குஞ்சு முசு முசுன்னு மேயும், ’தம்பி’ மெய்மறந்துடுவாரு. அது தனி…. சுகங்க. ரயில் போகும்போது எந்திரிச்சு நிக்கிறதும், சில நேரங்கள்லெ அப்டியே உட்காந்துக்கிறதும், குட்ஸ் வண்டி போனா எத்தனை போகி இருக்குன்னு ஒன்னு வுடாமெ எண்ணுறதும்…., அடடா….! ச்சு, ச்சு..!! இந்த எஃபக்ட்தான் கனவா வந்துச்சு.

இப்பக்கூட ஆசையாத்தானிருக்கு ஆனா வாய்க்கா தூந்துப்போச்சு. பள்ளி குளத்துலெ குளிக்கணும்னு ஆசையாசையா இருக்கு, ஆனா நாம போற நேரத்துக்கு தண்ணி இருக்காது. இந்த மாதிரி சில்லரை ஆசை நிறைய இருக்கு.

அதுலெ ஒண்ணு நம்ம மாட்டு வண்டி ஓட்டணும், குதிரை வண்டி ஓட்டணும்கிற ஆசை. மாட்டு வண்டிலெ ட்ராவல் பண்ணுறது அது ஒரு ஜாலி. ஒரு தடவை 15 மைல் மாட்டு வண்டியிலேயே வந்திருக்கேன். அதான் நமக்கு லாங்கஸ்ட் ட்ராவல். அப்பொ பதினஞ்சு பதினாறு வயசு, திருப்பூண்டிங்கிற ஊர்லெ கல்யாணம், மாப்புள்ளை நம்ம ஊர். மாப்பிள்ளை தோழனா போயிருக்கேன். கல்யாணம் முடிஞ்சு மறுநாள் பொண்ணு மாப்பிள்ளையெ அழைச்சிக்கிட்டு வாரோம். பொண்ணு வூட்டுக்காரங்க  மாட்டு வண்டி ஏற்பாடு பண்ணிருந்தாங்க; வில்லு வண்டி. பொண்ணு மாப்புளை, பொண்ணோட தோழி, தோழிக்குப் பக்கத்துலெ நான்.

சாதாரணமா கல்யாணம் முடிஞ்ச புதுசுலெ முதல் ரெண்டு அழைப்புக்கு மணமகளுக்குத் தோழியா மத்திய வயசு அல்லது கொஞ்சம் வயசானவங்களை அனுப்புவாங்க. காரணம் புது இடம், புது மனிதர்கள், யாரிடமும் எதையும் கேட்க வெட்கப்படும் என்பதால். இந்த பழக்கம் இப்போதுகூட இருக்கிறது.

அந்த வகையில் வந்த தோழிதான் இதுவும்,  லேசான முத்தல், நடுத்தரம்னு வச்சுக்கலாம். மத்தியானம் சாப்பிட்டுட்டு புறப்படும்போது மூணு மணியாயிடுச்சு. ஊர் சேர எப்படியும் ராத்திரியாயிடும்னு எனக்குத் தெரியும். முன்னாலெ மாப்பிள்ளை, பக்கத்துலெ பொண்ணு, அதுக்கு பக்கத்துலெ தோழி, பின் பக்கம் நான். எதிரும் புதிருமா உட்கார்ந்திருந்தோம் அப்பத்தான் பாரம் சரியா இருக்கும். லாங் ட்ராவல் யாருக்கும் போரடிக்காம பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பாயிடுச்சு.  இப்பகூட…. நெனச்சா இனிப்பாதான் இருக்கு. உருப்படாத நெனப்பு போமாட்டேங்குதே.

நெறைய கல்யாணத்துலெ மாப்புள்ளை தோழனா போயிருக்கேன். ஏன்னா ஸ்பெஷல் சாப்பாடு ரெண்டு மூணு வேளை வெட்டலாம், எல்லாம் டபுள் அயிட்டம் கூடவே முட்டையிலெ வெரைட்டி, ஸ்பேர் பார்ட்ஸ் (ஈரல் கிட்னி) வெரைட்டி, மனசு இப்பவும் வாழ்த்துதல்ல. அப்ப சாப்புட்ட சாப்பாடுதான் இப்பவரை தாங்கி நிக்கிது. ஆனா இப்பவுள்ள பசங்க எங்களை மாதிரி சாப்பிடுறதில்லை. பந்தியிலெ மெடிக்கல் (வெஜ் சாப்பாடு) இருக்கான்னுதான் கேட்கிறானுவ. ஏண்டான்னா, ’நானா… ப்ரஷர், சுகர் வந்துடும்’ அப்டீன்கிறானுவ. சீக்கு வருதோ இல்லையோ வேகம் இல்லை. இங்கே உள்ள அரபி பசங்க மாதிரி இருவத்தி நாலு இருவத்தஞ்சு வயசுலெ ’மனாரா’ சஜ்தா செய்யிது, நிமுத்த முடியலெ!

தூக்கி நிறுத்தறதுக்காக வயக்கரை (viagra) பக்கம் போற நெலமை ஆயிக்கிட்டிருக்கு. எங்க வயசுக்கு வந்தா…?

’கண்ணுறங்கு கண்ணுறங்கு
கண் மணியே கண்ணுறங்கு….!’
அப்டீன்னு நீலாம்பரி ராகத்துலெ தாலாட்டு பாடவேண்டிய அவசியமில்லாம போயிடும்.

ஒரு வாரம் கழிச்சு மாப்பிள்ளைக்காரன் வந்து, “என் பொண்டாட்டி உளுந்து உளுந்து சிரிக்கிறா, என்னாடின்னு கேட்டா சொல்ல மாட்டேங்கிறா,  உங்க கூட்டாளி சரியான ஆளு, சமயம் பாத்து அமுக்கிட்டார்னு தோழி சொன்னாளாம்.” அப்டீன்னான்.

’அது ஒன்னுமில்லே மாப்ளே, வண்டிலெ வரும்போது கிரீச், கிரீச்சுன்னு சத்தம் கேட்டுச்சா? என்னாண்டு தடவிப் பார்த்தேன். கோழி குஞ்சு வைக்கல்லெ ஒளிஞ்சிக்கிட்டிருந்திருக்கு. கை பட்டவுடன் சத்தமில்லாம இருந்துடுச்சு பசி, வேறே ஒண்ணுமில்லே’ என்றேன்.

“எனக்கு தெரியலையே, அப்படி சத்தம் கேட்கலையே…, ஆனா அவ நெளிஞ்சா.!”

’அதெப்படி கேட்கும் ? பக்கத்திலெ புத்தம் புதுசு, துன்யாவை மறந்துட்டீங்க, இதெல்லாம் எப்படி தெரியும்?’

நான் சொன்னது அவனுக்குப் புரியலை. தலையெ சொரிஞ்சிக்கிட்டே போயிட்டான்.  

நேத்து உண்ட சோத்துக்கு கறி என்னா? வண்ணாங்கிட்டெ எத்தனை சட்டைப் போட்டோம்? இதெல்லாம் ஞபகத்துக்கு வரமாட்டேங்குது. நடந்து முடிஞ்சு மூணரை மாமாங்கத்துக்கு மேலே ஆவுது, இது மட்டும் மறக்காமெ ஃப்ரேம் பை ஃப்ரேமா அப்படியே இருக்கே எப்படி ஆபிதீன்? மஜீதுசார் , உங்களுக்குத்தான் நிறைய அனுபவம் இருக்கே.. கொஞ்சம் சொல்லுங்களேன்…..!

நினைவு தொடரும்…….!

**

ஜாஃபரிக்கா………

மொதல்லேயே சொல்லிக்கிறேன், என்னை ஜாஃபரிக்காண்டு கூப்பிடுற ஒரே ஆளு என்கூட வேலை செய்யிற அரபி சாலிம் அப்துல்லா சாலிம் மஜ்ரூயி. ஆனால்  இந்த ஜாஃபரிக்கா நானல்ல, எனக்கு இந்த சுத்துமுத்து, ஹிக்குமத்து வேலையெல்லாம் தெரியாது, சுத்த சூஃபி, வெள்ளையா இருப்பேன்.

ஆபிஸ் வேலையெ முடிச்சிட்டு லேட்டா ருமூக்குத் திரும்பிக்கிட்டிருந்தேன். ட்ராஃபிக் அவ்வளவா இல்லை எதுக்கு வேகமா போவனும் ரூமுக்குப் போய் கிளிக்கவா போறோம்னு மெதுவா வந்துக்கிட்டிருந்தேன். யோசனை டைவர்ட் ஆயிக்கிட்டிருந்தது, ரேடியோவை ஆன் பண்ணினேன் 96.7 எஃப் எம் மலயாள ரேடியோவில் எனக்கு ரொம்ப  பிடிச்சப் பாட்டு 1974 ம் வருஷம் வெளிவந்த ‘நெல்லு’ மலையாளப் படத்திலே சலில் சவுத்திரி இசையில் P. சுசிலா அம்மா பாடிய ’கல்யாணப் ப்ராயத்தில் பெண்ணுங்ஙள் ச்சூடுன்ன..’ என்ற பாட்டை ஒலி பரப்பினார்கள். அதிலேயே லயித்துக்கொண்டிருந்த எனக்கு அடுத்த நிகழ்ச்சி ”சிந்து ஞான் ஜாஃபரிக்காட கதெ பரையான் போவ” ன்னு சொன்னவுடன் எனக்கு தூக்கிவாரிப் போட்டுச்சு. நான் எங்கே அங்கே வந்தேண்டு காதை தீட்டினேன், கதை ஆரம்பமானது..

”எடா ஜாஃபர் நீ எவட போயி, இன்னு தரா இப்பத்தரான்னு பரஞ்ஞுசு (இனி தமிழுக்குப் போவோம்) எத்தனை நாளாச்சு ஒருவாராமா இழுத்தடிச்சிக்கிட்டிருக்கியே..!”

”அண்ணே வருத்தப்பட்டுக்காதீங்க, ஒங்க காரு எல்லாத்தையும் சரி பார்க்கனுமல்லவா, அப்புறம் நீங்க எதுவும் சொல்லக்கூடாது, அதனாலத்தான்..”

“சரி.. சரி, பில் எங்கே?”

“சார், நான் அதெ ஆபிஸிலெ கொடுத்துட்டேன். நீங்க போய் கையெழுத்து போட்டா போதும். டிஸ்கவுண்ட் தனியா.. அது வந்துடும். இந்தாங்க சாவி.” என்று கார் சாவியை கொடுத்துவிட்டு பறந்துட்டான் ஜாஃபர்.

சாவியை பெற்றுக்கொண்ட கிருஷ்ணதாஸ் தன் மனைவியை கூப்பிட்டு “காயத்ரி,  வண்டி வந்துடுச்சு  புதுசா திறந்த  ஹைப்பர் மார்க்கட்டுக்குப் போலாம், சீக்கிரமா ட்ரஸ் பண்ணு.”

சற்று நேரத்தில் புறப்பட்டார்கள். அங்கு சென்றபோது அருகில் கார் நிறுத்த இடமில்லாததால் தன் மனைவியிடம் கீழே இறங்க சொல்லிவிட்டு தூரத்தில் நிறுத்த காரை நகர்த்தினான்.

காயத்ரி இறங்கியபோது அருகில் நின்ற இளம் பெண்,  “என்ன நீங்க என் ஜாஃபரிக்கா வண்டியிலெ வந்து எறங்குறிய, உங்களுக்கு எப்படி கெடச்சது இந்த வண்டி?” அப்டீன்னாள்.

“இந்தா நீ யாரு? இது என் ஹஸ்பண்டோட வண்டி, உனக்கு என்ன எதாவுதும் ஆயிடுச்சா?”

“அய்யோ, இது என் ஜாஃபரிக்கா வண்டி, ஒரு வாரமா இந்த கார்லதான் நாங்க சுத்திக்கிட்டிருந்தோம், இப்ப நான் ஜாஃபரிக்காவை கூப்பிடுறேன்” என்று சொல்லிட்டு தன் மொபைலை எடுத்து ஃபோன் செய்தாள். அப்போது காரை நிறுத்திவிட்டு வந்துக்கொண்டிருந்த தன் கணவரைக் கூப்பிட்டாள் காயத்ரி..

“இந்தாங்க, இங்கே வாங்க. இந்த பொண்ணு நம்ம காரை ஜாஃபரிக்கா கார்ன்னு சொல்லிக்கிட்டிருக்கா,  என்னான்னு கேளுங்க.”

கிருஷ்ணதாஸ் விசாரிக்க ஆரம்பித்தான். “இந்தா நீ யாரு? உன் பேரு என்ன?”

“என் பேரு சுபைதா, ஜாஃபரிக்காட லவ்வர், இன்னு ஒரு மாசத்துலே அவரை நான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்.”

“சரி, இந்த வண்டி யாருடையதுன்னு சொல்றே?”

“சார், இது என் ஜாஃபரிக்காட வண்டின்னு அவர்தான் சொன்னாரு; அவருக்கு ரெண்டுமூனு கம்பெனி இருக்கு; நல்ல உழைப்பாளி; இந்த கார்லெ வச்சு என்னை எங்கெல்லாம் கூட்டிக்கிட்டு போனார் தெரியுமா; நிச்சயமா இது அவரோட கார்தான்.”

“அப்டியா சுபைதா, அப்டீன்னா உன் மொபைலை எடுத்து ஜாஃபரிக்காவுக்கு ஃபோன் பண்ணி ஸ்பீக்கரை ஆன் பண்ணு.”

ஃபோனின் மறு முனையில் ஜாஃபரிக்கா, “ஹலோ டார்லிங், நீ இப்ப எங்கே இருக்கே? சொல்லு இன்னு அஞ்சு நிமிஷத்துலே வந்துடுறேன்.”

“நீங்க வற்ரது இருக்கட்டும். இங்கே உங்க காரை தன் காருன்னு ஒருத்தர் சொல்லிக்கிட்டிருக்காரு.”

“நீ எந்த காரை சொல்றே?”

“அதாங்க கருப்பு மிட்சுபிஷி பிஜோரோ, ஒரு வாரமா சுத்திக்கிட்டிருந்தோமே, அதை தாங்க.”

“அது நம்ம கார்தான், என் ஃப்ரண்டு கேட்டாரு கொடுத்திருக்கேன், வேறொன்னுமில்லே.”

கிருஷ்ணதாஸ் சுபைதாவிடமிருந்த ஃபோனை வாங்கி, “ஜாஃபர், நான் கிருஷ்ணதாஸ், நீ உன் ஃப்ரண்டுகிட்டே காரை கொடுத்திருக்கே இல்லையா?” அப்டீன்னதும் ஜாஃபருக்குத் தடுமாறியது வார்த்தை மட்டுமல்ல குரலும் கூட..

“சார் அது….. அது…. நா…நா….”

“நாளைக்கு ஆபிஸ் வருவில்ல காசு வாங்க அப்ப கவனிச்சுக்கிறேன்..” என்று கிருஷ்ணதாஸ்  சொல்லிவிட்டு, “இந்தா சுபைதா கல்யாணத்துக்கு முந்தி நல்லா யோசனைப் பண்ணிக்க, உன்னையும் ஏமாத்திடப் போறான்” என்றபடி தன் மனைவியை அழைத்துக்கொண்டு ஹைப்பர் மார்க்கட்டிற்குள் சென்றான்.

**

நன்றி : ஹமீது ஜாஃபர் | manjaijaffer@gmail.com

6 பின்னூட்டங்கள்

 1. 21/04/2011 இல் 13:17

  //நேத்து உண்ட சோத்துக்கு கறி என்னா? வண்ணாங்கிட்டெ எத்தனை சட்டைப் போட்டோம்? இதெல்லாம் ஞபகத்துக்கு வரமாட்டேங்குது. நடந்து முடிஞ்சு மூணரை மாமாங்கத்துக்கு மேலே ஆவுது, இது மட்டும் மறக்காமெ ஃப்ரேம் பை ஃப்ரேமா அப்படியே இருக்கே எப்படி ஆபிதீன்? மஜீதுசார் , உங்களுக்குத்தான் நிறைய அனுபவம் இருக்கே.. கொஞ்சம் சொல்லுங்களேன்…..!//

  இந்த உணர்வும், பக்கத்து வீட்டுப் +2 பொண்ணு திடீர்னு ஒருநாள் “அங்கிள்”னு கூப்பிடும்போது வருமே, அந்த உணர்வும் ஒரே நேரத்தில்தான் வரும்.

  (திருவிளையாடல் சிவாஜி:
  ஹா, புரியவில்லை?
  உங்களுக்கு வயதாகிவிட்டதென்று அர்த்தம்)

 2. தாஜ் said,

  21/04/2011 இல் 18:53

  முதல் பகுதி
  அட்டகாசமான ‘கிளாசிக்’
  இரண்டாம் பகுதி…..
  சொல்ல எதுவும் இல்லை.

  மாப்பிள்ளைத் தோழனின்
  இன்னொரு
  அருமையான பகுதியை எழுதாது
  விட்டுட்டிங்களே நாநா?

  கோழிக் குஞ்சை அமுத்தினதைப்பற்றி
  எழுதுற அவசரத்திலே
  விட்டுட்டீங்களோ என்னவோ?

  பெண் வீட்டில்…
  அவர்களது உறவுகளும்/தோழிகளும்
  சிலேடையாக…
  பச்சைப்பச்சையாக பேசும்
  அல்லது கேட்கும்
  சம்பாசனைகளுக்கு
  மாப்பிள்ளைத் தேழன்
  அதே ரேஞ்சில் பதிலுரைக்கும்
  கலாச்சார முக்கியத்துவமான சம்பவத்தை
  எழுதாது ஏமாத்திட்டீங்களே!!

  சந்தோஷம் தருவதெல்லாம்
  ஆன்மீக காரியம் என்கிற
  அர்த்தத்தில் பார்க்கிறபோது
  ஊரில் அப்பவே
  வளமான ஆன்மீகவாதியாக
  வளம் வந்திருப்பதாக அறிகிறேன்.

  நானும் ஆபிதீனும்
  வாழ்ந்து மடிந்த
  சௌதி நாட்களில்
  ஒருமுறை அவர் என்னிடம் சொன்ன
  ஒரு பஞ்டயலாக்கை
  மறக்கவே முடியாது.

  ‘கக்கூசை தாண்டிய
  சொர்க்கம் லோகத்தில் உண்டா என்ன?
  இங்கத்திய என் வாழ்வில்
  நான் கண்ட ஒரே சுகம் அதுதான்!’

  அது மாதிரி
  உங்களது வளமான
  இந்த சந்தோஷமான ஆன்மீகம்
  அப்போதே உங்களுக்கு சமைந்திருக்கிறது.
  அதிஸ்டசாலிதான் நீங்கள்!

  ஒரு ஹஜ்பெருநாளைக்கு
  வைத்திஸ்வரன் கோவில்
  வடக்குத் தெரு
  எட்டாம் நம்பர் வீட்டு சாந்தி
  என்
  மகிழ்வின் வாசலை பீறிட திறந்து வைத்தாள்!
  இன்னும் அவளது
  ஃபான்ஸ் வாசனை கமகமக்கிறது!

  என்னமோ போங்கள்….
  அந்த வசீகர பொழுதெல்லாம்
  வடிந்துவிட்டது.
  சுத்திரதசையும்
  முடிந்துவிட்டது.

  வெரும் பொழுதுகளில்
  வாழ்வதில் உள்ள சிரமம்
  சொல்லி மாளாது!

  வாழ்க…
  அந்தக் காலங்கள்!
  -தாஜ்

 3. 22/04/2011 இல் 18:38

  ஒய்யாரக் குத்து

  ஹஜ்ஜுப் பெருநாளுக்கு தியாகத்திருநாள் என்று ஒரு பெயர் உண்டு. அதில் குர்பானி மிக முக்கியமான சடங்கு. அதில் ஆடு, மாடு, ஒட்டகம்தான் குர்பானி கொடுப்பார்கள். ஆனால் தாஜ் தன்னையே வைதீஸ்வரன் கோயிலில் குர்பானி கொடுத்து தனிப் பெரும் இடத்தை பிடித்துவிட்டார். தாஜ் உண்மையிலேயே நீங்கள் GREAT. வீட்டு நம்பர் வரை ஞாபகம் வைத்திருக்கிறீர்களே. சாந்தி மச்சி இப்பவும் சாந்தமா இருப்பாகண்டு நினைக்கிறேன்.

  நாங்கள்லாம் பெருநாளை சினிமா கொட்டாயிலெதான் முடிப்போம். அந்த வயசிலெ மொதநாளே வாடகை சைக்கிள் புக் பண்ணி
  தொழுகை முடிஞ்சதோடு எடுத்துக்கிட்டு வந்துடுவோம். சில நேரங்கள்லெ கடைகாரர் பிகு பண்ணுவார் அதனாலெ பெருநா ராத்திரியே எடுத்துக்கிட்டு வந்து தொடச்சுக்கிடச்சு ரெடியா வச்சிருப்போம். மத்தியானம் சாப்டுட்டு சரியா மூணு மணிக்கு புறப்பட்டோம்னு சொன்னா வதக்கு வதக்குண்ணு மிதிச்சு அஞ்சு மணிக்கெல்லாம் திருவாரூர் தியேட்டர் வாசல்லெ இருப்போம்.

  எங்க ஊருக்கும் திருவாரூருக்கும் 22 கி.மீ. கொறஞ்சது பத்து பேராவது போவோம். அடிமுடிச்சு டிக்கட் வாங்கி ஃபர்ஸ்ட் ஷோ
  பார்த்துட்டு அதே வேகத்துலெ அடுத்த கொட்டாயிலெ சகண்டு ஷோ. இதுக்கு இடையிலே பசிக்கு கொஞ்சம் உள்ளே தள்ளிக்குவோம்.

  படம் என்னா டப்பாவா இருந்தாலும் சரி ரெண்டு படம் பார்த்துடறது எங்க ஃபர்ளு. அப்படிதான் ஒரு பெருநாள் திருவாரூர்லெ படம் பார்த்துட்டு வரும்போது கீவளூர் கிட்டெ மழை புடிச்சிகிடுச்சு, சரியான மழை. கொஞ்சம் நனைஞ்சதோடு ஒரு வீட்டு வாசல்லெ ஒதுங்கினோம். ஆலவடி மாதிரி சின்ன திண்ணை. அதுலெ எல்லோரும் ஒதுங்கி நிண்டோம். திண்ணை செவத்தோடு ஒட்டி சின்னதா ஒரு ஜன்னல் கதவு லேசா திறந்து இருந்துச்சு. அறையிலேந்து லேசான சத்தம் வந்துக்கிட்டிருந்துச்சு. உள்ளே…. உஹூம் சொல்ல வாணாம்.

  எங்ககூட இருந்த சீ(ரசீது)மரைக்கான், “ஸ்ஸ்……..சத்தம் போடாம இருங்கடா, உள்ளே……” அப்டீன்னு மெதுவா இழுத்தான். நம்ம ஆளுவ கேட்பானுவலா..? பக்கத்துலெ இருந்த தவுடு(பட்டப் பெயர்), ஜன்ன கதவை லேசா தொறந்து, “ஓய்.., மெதுவா குத்துங்கனி பூணு
  கலண்டுக்கப்போவுது” அப்டீன்னு சத்தம் கொடுத்தான். அவ்வளவுதான் மழையாவது மயிராவது ஊட்டுக்காரன் கதவை தொறந்துக்கிட்டு வர்றதுக்கு முந்தி பறந்துட்டோம்.
  .
  இப்பவும் அந்த வீடு இருக்கு, கிரில் வச்சு யாரும் ஒண்டமுடியாம இருக்கு. திருவாரூர் பக்கம் பஸ்ஸிலோ, பைக்கிலோ போனா அந்த
  இடம் வந்தவுடனேயே பூணு ஞாபகத்துக்கு வந்துடுது.

  மாப்பிள்ளை தோழனா போயி பலமாதிரியான அனுபவம், அதெல்லாம் எழுதுனா தாங்காது தாஜு. இலைமறைவு காய்மறைவாதான் இருக்கணும். குர்ஆன்லெ பாருங்க(20:118-121) எவ்வளவு இலக்கிய நயத்தோடு இருக்கு. ஆழ்ந்து நோக்கினால்தான் புரியும். உங்களுக்காக ஒரே ஒரு சாம்பிள். நம்ம ஆள் கல்யாணத்து ராத்திரி மேய ஆரம்பிச்சுட்டான். பகையன்(செல்லமா சொல்ற மலையாள வார்த்தை) இவரு முழுசா ஆனது அல்லாமல் அகளையும் முழுசா ஆக்கிட்டான். விடிலைட் விடியாத லைட்டா வெளிச்சமா இருந்திருக்கு. பொண்ணை உள்ளே தள்ளிவிட்டுட்டு மாப்புள்ளை என்ன செய்றாகன்னு சந்துலெ உள்ள ஏணி ஜன்னல் மூலமா தோழிமார் பார்த்துட்டு ஒன்னும் தெரியாத மாதிரி இருந்துடுச்சுவ

  மறு நாள் காலையிலெ……..நாங்கெல்லாம் பசியாறா காத்திக்கிட்டிருக்கோம், பசியாற வரசொல்லி உபசரனை ஏக தடபுடலா இருந்துச்சு. தடபுடலைப் பார்க்கும்போது எனக்கு ஒரு சந்தேகம், மரப்புக்குப் பின்னாலெ தோழிமார்களின் குசு, குசுப்பும் சின்ன சிரிப்பொலியும், எங்களுக்கு சந்தேகம் தட்டுச்சு. சாதாரணமா மறுநாள் காலையிலெ நையாண்டி ஜாஸ்தியாவே இருக்கும். வழக்கம்போல உப்பு தண்ணியும் அடுப்பு கரி வச்ச மூடுன மரவையும் இருக்கும். கூட்டாளிமார் தொறந்து ஏமாறுவதிலெ அவங்களுக்கு ஒரு சந்தோஷம். ஆனால் இதில் ஈரத்துணி போட்டு மூடுன கோழியெ வச்சு துத்திப்பு போட்டு மூடி இருந்தாங்க. மரவையில் கையெ வச்சவுடனேயே ஒரு குலவை, சிரிப்பு.
  தொறந்துப் பாத்துட்டு “என்ன முழுக்கோழியெ அமுக்கி வச்சிருக்கீங்க” அப்டீன்னு நாங்க தொடங்கினோம். எங்க மச்சான் அமுக்குனாக பாருங்க ராத்திரின்னு தொடங்கி “என்ன மச்சான் லைட்டை போட்டுக்கக்கூடாது ஒரே கருப்பு சரியாவே பாக்கமுடியலெ, இருந்தாலும் கோடை இடி மாதிரி இருந்துச்சு, எங்க தங்கச்சி பூ மாதிரி சாக்கிரதை மச்சன்.” அப்டீன்னாள்க.

  மாப்பிள்ளை நெளிய நாங்கள் நமட்டு சிரிப்பு சிரிக்க ‘கொள்”லென்னு அவளுவ சிரிக்க, பின்னால் நிண்ட பொண்டுவ குலவை விட….

  மறக்கமுடியவில்லை. அதுலேந்து யாரு மாப்பிள்ளையாப் போனாலும் நாங்க சொல்ற அட்வைஸ் இதாங்க “காஞ்ச மாடு மாதிரி உளுந்துடாங்கிடா, பாத்து பதவுசா இருங்க.”

  • தாஜ் said,

   22/04/2011 இல் 21:35

   நான் ஆய்வு செய்யணுன்னு நினைச்ச
   இஸ்லாமிய கலாச்சாரம் இது.
   அந்தக் காலத்துல
   இந்தச் சம்பவத்தைப் பார்க்க
   ஆர்வம் பிச்சுக்கும்.
   நீலப்படம்
   பார்க்கக் கிடைக்காத காலத்து
   நீலக்கூத்து அது!

   இந்தக் கூத்து
   இந்துக்களிடமும் இருக்கான்னுத் தெரியலை.

   கொஞ்சம் மெச்சூரான நிலையில்
   அதிலும்
   அர்த்தம் இருப்பதாகப் படவே….
   ஆய்வு எண்ணத்தை அழித்து விட்டேன்!

   எழுதுங்கள் நாநா
   உங்கள் எழுத்தில்
   இலக்கியம் நயம்
   தெறிக்க வேண்டியதென்னுதான் பாக்கி!
   சீக்கிரம் வந்துவிடும்.
   வாழ்த்துக்கள்!
   -தாஜ்

 4. Ahmed Mohideen said,

  23/04/2011 இல் 11:39

  நல்ல அருமையான‌ சேமியா பாயாசத்தை அனுபவித்து ருசித்து குடித்துக்கொண்டிருக்கும் போது ஒரு முந்திரியோ அல்லது பாதாமோ இடையில் வந்து பாயசத்தின் சுவையை மேலும் கூட்டும், அது போல தங்களின் “ஜில்லிப்பு” கட்டுரையை வாசித்து கொன்டிருக்கும்போது கீழ்க்கண்ட வரிகள் மேலும் சுவை ஊட்டின.

  ’//இந்த பாரு சந்தேகம் ரெண்டு பேருக்கு வராது. ஒன்னு நல்லா தெரிஞ்சவனுக்கு இன்னோன்னு ஒன்னுமே தெரியாதவனுக்கு//”

  மொத்தத்தில் தாங்கள் பிடித்த “குஞ்சு” நன்றாக இருந்தது.

  அன்பன் அஹ்மத் மொய்தீன்

 5. 23/04/2011 இல் 23:18

  எல்லாரும் என்னென்னவோ பேசிக்கிறாங்க, ஒண்ணுமே புரியல. ஏதோ ‘பெரிய மனுஷங்க’ சமாச்சாரம் போல!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s