‘அடுத்தவர்கள் நலனுக்காகச் செய்யும் ஒவ்வொரு செயலும் பிரார்த்தனைதான்! ஒவ்வொரு நிகழ்வையும் விழிப்பு உணர்வுடன் அணுகினால் வாழ்க்கையே வழிபாடுதான்!’ – இறையன்பு
மேலும் வாசிக்க : http://faithfullindian.blogspot.com/2007/07/blog-post.html
**
இறையன்பு I.A.S-ன் வலைப்பதிவிற்கான சுட்டி அனுப்பியவர் சகோதரர் ராமகிருஷ்ணன். ராம், அங்கே ஒரு ஒரு பதிவுதான் இருக்கிறது. நான்கு வருடங்களுக்கு முன்பு அதைப் பதிவிட்டது இறையன்புதானா? சொல்லுங்கள். எப்படியிருந்தாலும் நல்ல செய்திகள். நன்றி உங்களுக்கு. ‘சுயநலம் குறித்து சிந்திக்காமல் பணியாற்றத் தொடங்குகிறபோதே ஜெயிக்க ஆரம்பித்து விடுகிறோம். வெற்றி என்பது நம்மீது எறிந்த கற்களால் எழுப்புகிற கோபுரம்!’ என்று சொல்கிறார் இறையன்பு. ஐ.பி.எஸ்.,ஆக ஆசைப்படும் என் மகன் நதீமிடம் சொல்ல வேண்டும். வாப்பா என்றாலே கல்லை எடுக்கிறான்!
மஜீத் said,
20/04/2011 இல் 12:00
பையன்கள் மாங்காயை பாத்தாதான் கல்லெடுப்பார்கள்னுதான் ரொம்ப நாளா நினச்சிருந்தேன்.ரொம்ப லேட்டத்தான் (மகன்கள் வளர்ந்ததும்) தெரியும், வாப்பாவ பாத்தாலும் கல்லெடுப்பார்கள்னு. (ரெண்டும் ஒண்ணுதாம்பார் நம்ம மாலிக்)
நாம கேட்டோம்னா, நீ ஏன் பயப்படுறே? நான் கோபுரம் கட்டல்ல கல்லெடுத்தேன்னு சொல்வார்கள்.
எதுக்கும், குனியும் அந்த ‘க்ஷண’ நேரத்துல எஸ்கேப் ஆக பழகிக்கிறதுதான் வாப்பாவுக்கு அழகு!
தாஜ் said,
20/04/2011 இல் 12:47
ஆபிதீன் பக்கங்களில்
ஆ….ன்மீக வாரம்
தொடர்கிறது போலும்!
‘இறையன்புவின் இறைநம்பிக்கை’
மெச்சத் தகுந்தப் பதிவு!
IRAIANBU I.A.S.,
அவர்களது எழுத்தை
நிறையப் படித்திருக்கிறேன்.
பாராட்டத் தகுந்த சிந்தனையாளர்,
முழுமையை தரிசிக்க
தினம் தினம் முயற்சிப்பவர்
அவர் தேடிப் எழுதியிக்கிற உண்மைகள்
வருங்கால சந்ததியினருக்கு
பெரிதும் உதவும்.
*
“இறை நம்பிக்கை:
அடுத்தவர்கள் நலனுக்காகச் செய்யும்
ஒவ்வொரு செயலும் பிரார்த்தனைதான்!
ஒவ்வொரு நிகழ்வையும்
விழிப்பு உணர்வுடன் அணுகினால்
வாழ்க்கையே வழிபாடுதான்!”
*
“ஜெயித்தது எப்படி?:
சுயநலம் குறித்து சிந்திக்காமல்
பணியாற்றத் தொடங்குகிறபோதே
ஜெயிக்க ஆரம்பித்து விடுகிறோம்.
வெற்றி என்பது
நம்மீது எறிந்த கற்களால்
எழுப்புகிற கோபுரம்!”
*
“இளைஞர்களுக்குச்
சொல்ல விரும்புவது:
தேடுதலை நிறுத்திவிடாதீர்கள்.
குறுக்குவழிகள் எல்லாம்
நேர்வழிகளைக் காட்டிலும் நீளமானவை!”
*
ஒரே கனவு (அல்லது)
அழகிய சிந்தனை:
“அழகான தோட்டம்,
அடர்ந்த தோப்புகள்,
கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து
மெல்லிய இசையைக்
கண்மூடி ரசிக்கும் தனிமை…
இயற்கையோடு நெருங்கிய சூழலில்
அத்தனை அடையாளங்களையும்
உதிர்த்துவிட்டு
மறுபடியும் குழந்தையைப் போல
மாறும் பக்குவம்…
எல்லா சத்தங்களிலிருந்தும் விடுதலை…
அமைதியான இனிமை…
நெருடல் இல்லாத வாழ்வு…
வலியில்லாத மரணம்….”
மேலே உள்ள வரிகள்
இறையன்பு உடையது.
வாசிக்கும் போதே சிலிர்க்கிறது.
-தாஜ்
2:14 PM 4/20/2011
maleek said,
20/04/2011 இல் 20:54
” காய்த்த மரம் அது கல்லடி படும்
கன்மவினை கொண்ட காயம் தண்டனை பெறும்
வாய்த்த தவம் உடையவர் வாழ்பவர் என்றே
வஸ்துத்திருவடி தொழுது ஆடாய் பாம்பே”
மஜீத் said,
20/04/2011 இல் 22:25
ஆஹா!
abedheen said,
21/04/2011 இல் 09:36
என்ன ஆஹா? மாலிக்மாமா சொல்லிட்டாஹாண்டு இன்னொரு கல்லை எடுக்கிறான்!