கூண்டு அணி – இஜட். ஜபருல்லா

ஆடுகளும் புலிகளும்
ஐக்கியமாகி
ஒரே பட்டியில்…!

சிங்கங்கள் –
பிடரிமயிரை சிரைத்துக் கொண்டு
பெருச்சாளிகளோடு
ஒரே பொந்துக்குள்…!

குள்ளநரிகளோடு
வெள்ளைக் குதிரைகள்
ஒரே சேணத்தில்…!

பருந்துகளும்
புறாக்களும்
ஒரே கிளையில்…!

காகங்களோடு
குயில்கள் –
கானம் இசைத்துக் கொண்டு
ஒரே சுதியில்…!

பச்சோந்தி மட்டும்
எப்போதும் போல
அவ்வப்போது
நிறத்தை மாற்றிக் கொண்டு…!

என்ன நடக்கிறது?
காட்டிலும்
தேர்தலாம்…!

***

நன்றி : இஜட். ஜபருல்லாஹ் | Cell : 0091 9842394119

கவிதையை ஸ்கேன் செய்து அனுப்பிய தம்பி ஷாஹாவுக்கும் நன்றி.

***

போனஸ் :  மந்திரியான காக்கை அண்ணாச்சி (சிறுவர் கதை)

8 பின்னூட்டங்கள்

 1. 04/04/2011 இல் 16:07

  பின்னீட்டீங்க நானா. அருமையான கவிதை.
  உவமானங்கள் காட்டுக்கும் நாட்டுக்கும் சரியா பொருந்துது.

  என்னதான் எளிமையா சொன்னாலும் குழப்பமாதான் இருக்கு!

  அட அது நீங்க நினைக்கிற குழப்பம் இல்ல;
  படிச்சிட்டு சிரிக்கிறதா இல்ல வருத்தப்படுறதான்னு!

  • 04/04/2011 இல் 16:15

   ஆபிதீன் நானா, என்னவோ போங்க!

   ”மந்திரியான காக்கை அண்ணாச்சி” சிறுவர் கதை மாதிரி இல்லை. ஏதோ டபுள் மீனிங்க் ல (இது வேற) படிக்கிற மாதிரியே இருந்துச்சு.

 2. 04/04/2011 இல் 19:01

  ஆரம்பிச்சிட்டாரையா ஆரம்பிச்சுட்டார்; மஜீது ஆரம்பிச்சுட்டார்.

 3. 04/04/2011 இல் 19:05

  super… Z. naanaa Z naanaa thaan..

  Wonderful..!

  Beyond words..!

  • 06/04/2011 இல் 11:30

   கவிதையின் ஹைலைட்:
   //பச்சோந்தி மட்டும்
   எப்போதும் போல
   அவ்வப்போது
   நிறத்தை மாற்றிக் கொண்டு//

   மாறக்கூடாதது – மாறுது
   மாறுவது – மாறவில்லை (மாறிக்கொண்டே இருக்காம்!!)

   ஆமா இஸ்மாயில், Z நானா Z நானாதான்…..

 4. maleek said,

  05/04/2011 இல் 04:40

  சபாஷ்.எங்களின் அரசியல் உங்களுக்கும் விளங்கிவிட்டதா விலங்குகளே?.

 5. தாஜ் said,

  05/04/2011 இல் 15:54

  எங்க ஜபுருல்லா நாநா
  வியப்பதும்/ சஞ்சலம் கொள்வதும் அதிகம்.
  அதற்குப் பெயர்தானே ‘அரசியல்’!
  -தாஜ்

 6. Jeyakumar said,

  10/04/2011 இல் 12:36

  நல்ல கவிதை. உள்ளது உள்ளபடிக்கு..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s