உமா மகேஸ்வரிக்கு விருது

சகோதரி உமா மகேஸ்வரிக்கு மேலும் பல விருதுகள் குவிய வாழ்த்துகிறேன்.

**

உமா மகேஸ்வரி

உமா மகேஸ்வரிக்கு நஞ்சன்கூடு திருமலாம்பாள் விருது
பழனி கிருஷ்ணசுவாமி

தமிழ் எழுத்தாளர் உமாமகேஸ்வரிக்கு பெங்களூரைச் சேர்ந்த என். எம். கே. ஆர். வி. பெண்கள் கல்லூரியின் பிரிவாகிய ஷஸ்வதி பெண்ணியல் ஆய்வு மையம் வழங்கும் இந்திய மொழிகளில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான நஞ்சன்கூடு திருமலாம்பாள் விருது வழங்கப்பட்டுள்ளது.

1986ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இவ்விருது இதுவரை இந்திய மொழிகளில் எழுதும் பல்வேறு பெண் எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு தமிழில் இவ்விருதைப் பெற்றவர் ராஜம் கிருஷ்ணன். நாற்பதாயிரம் ரூபாய் ரொக்கமும் காமதேனுச் சிற்பமும் கொண்டது இவ்விருது. வெங்கட் சாமிநாதன், பழனி கிருஷ்ண சுவாமி, கே. வி. ஷைலஜா ஆகியோர் தேர்வுக்குழு நடுவர்களாகப் பணியாற்றினார்கள்.

தமிழ்ச் சமூகம் தனது மத்தியதரக் குடும்பப் பெண்களுக்காக விதித்திருக்கும் வரம்புகளைத் தாண்டாமல் நான்கு சுவர்களுக்குள்ளேயே தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட பெண்ணின் வாழ்பனுபவங்களைக் கவிதை, சிறுகதை, நாவல் எனப் பல வடிவங்களிலும் உமா வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு மகளாக, சகோதரியாக, மனைவியாக, மருமகளாக, தாயாகத் தனக்குத் தெரிந்த, அனுபவப்பட்ட வாழ்வைச் செறிவான மொழிநடையில் இவர் வெளிப்படுத்தும் விதம் நேர்மையானது. அதேசமயம் காத்திரமானது. உமாவின் எழுத்துக்களில் விரியும் பெண்ணுலகம் காலங்காலமாக அடக்குமுறையிலும் தாழ்ந்து பணிதலிலும் வாழப் பழக்கப்படுத்தப்பட்டது. தனக்கென்று எந்த அடையாளமுமில்லாதது. உமாவின் எழுத்துக்களில் வெளிப்படும் உள்ளார்ந்த குரல் பெண்ணுரிமையைப் பலப்படுத்தும் நோக்கம் கொண்டது என்றாலும் அதைத் தம்பட்டமடிப்பதில்லை. சித்தாந்த முகமூடிகள் எதையும் அவர் அணிந்துகொள்வதில்லை.

உமாவின் எழுத்துக்களிலும் இடம்பெறும் கேட்கும் உரையாடல்களின் பின்புலமாக அவர் அமைத்துக்காட்டும் உலகம் ஆணாதிக்கச் சமூகத்தில் வாழ நேர்ந்த பெண்ணின் ஆவேசம், ஆதங்கம் ஆகியவற்றை எடுத்துக்காட்டும் உலகமாக நம்முன் விரிகிறது. இறப்பு, நோய், நிலையாமை ஆகியவற்றுக்கிடையில் வாழநேரும் மனிதனுக்கு அன்பு என்னும் அச்சாணி இல்லாமல் போய்விட்டால் வாழ்வு எவ்வாறு பொருளற்றுப்போய்விடும் என்பதையும் இவரது எழுத்துக்களில் பார்க்கிறோம்.

‘எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நலனே’ என்னும் கூற்றின் பொருத்தப்பாட்டை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு சோதித்துப் பார்ப்பதற்கு உமாவின் எழுத்துக்கள் உதவக்கூடும்.

***

நன்றி : காலச்சுவடு , பழனி கிருஷ்ணசுவாமி

6 பின்னூட்டங்கள்

 1. 14/03/2011 இல் 10:16

  மகிழ்ச்சியான செய்தி.
  இந்த அங்கீகாரம் உமா மகேஸ்வரி அவர்களுக்கு நிச்சயம் பெரும் ஊக்கமளிக்கும்.
  அவருக்கு இன்னும் பெரிய விருதுகளும் கைகூட வாழ்த்துக்கள்!

 2. 14/03/2011 இல் 10:18

  மகிழ்ச்சியான செய்தி.. உமா மகேஸ்வரிக்கு வாழ்த்துகள். பகிர்ந்த தங்களுக்கு நன்றிகள்.

 3. நாகூர் ரூமி said,

  14/03/2011 இல் 23:58

  ரொம்ப சந்தோஷம். சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

 4. தாஜ் said,

  15/03/2011 இல் 17:15

  அக்டோபர்-9/2001
  ஆபிதீன் பக்கத்தில்…
  உமா மகேஸ்வரியின்
  எழுத்தைக் குறித்து பேசிய போது
  இப்படி குறிப்பிட்டு இருந்தேன்….
  //ஆணாதிக்கத்தைச் சாடும் மொழியில்
  கவிஞர் உமா மகேஸ்வரி
  எழுதிய கவிதைகள் குறைவு.
  என் பார்வையில் அதுவோர் குறையாகவே படுகிறது,
  அதட்டிப் பேசாத
  கவிதைகளையே எழுதப்பழகிய அவருக்கு
  இப்படியான கவிதைகள் எழுதுவதில்
  தேக்கம் ஏற்பட்டுப் போனதை
  புரிந்துகொள்ள முடிகிறது.

  ஆனால்…
  சமூக/ கலாச்சார சார்ந்த
  மீறல் கவிதைகளை
  அவர் நிரம்பவே எழுதியிருக்கிறார்.
  இங்கே உங்களது பார்வைக்கு வைத்திருக்கும்
  இந்த எட்டுக் கவிதைகளும்
  அதற்கு சான்று.

  தமிழ் சாகித்தியத்துக்கான
  இந்த வருடத்து
  சாகித்திய அகாடமி விருது
  கவிஞர் உமா மகேஸ்வரிக்கு…
  கிடைக்கலாம் என்றெரு தகவல்
  இலக்கிய வட்டத்தில் உலா வருகிறது.
  தகுதியானவர்தான்.
  சந்தோஷம்!
  அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

  இவண்.
  – கநாசு.தாஜ்//
  ( கட்டுரையை முழுதும் காண…
  https://abedheen.wordpress.com/2010/10/09/uma-taj-9oct10/ )

  உமா மகேஸ்வரிக்கு
  இவ்வாண்டு
  சாகித்திய அகெடமி விருது
  கிடைக்கத் தவறினாலும்
  சிறப்பு மிக்க
  இந்த நஞ்சன்கூடு திருமலாம்பாள் விருது
  கிடைத்திருப்பதில்
  மிகுந்த சந்தோசம் உண்டு.
  அவரது எழுத்து
  அந்த அளவில் மகத்துவம் கொண்டது.
  அவருக்கு மேலும் மேலும்…
  பல சிறப்புகள் வந்து சேர வாழ்த்துக்கள்.
  -தாஜ்

 5. எஸ்.எல.;எம். காக்கா said,

  17/03/2011 இல் 05:23

  ஆபிதீன், தங்கச்சி உமா மகேஸ்வரிக்கு விருதாடா தம்பி? ரொம்ப மகிழ்ச்சி. அவளுடைய மரப்பாச்சியை மடியில் போட்டு குதூகலிக்கும் குழந்தையின் மகிழ்வில் நான் திளைத்துப் போகிறேன். ஒரு நாள் ஆண்டிப் பட்டியோடு அலைபேசியில் தொடர்பு கொண்ட போது உமா மகேஸ்வரியின் குரலை காதுப் பெட்டகத்தில் பூட்டிக் கொண்டேன். உமா மகேஸ்வரிக்கு எனது வாழ்த்துக்கள்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s