காரைக்குடி மஜீதின் கலாட்டாக்கள்

ஸாஃப்டான ஆட்கள் ‘தேரா திக்ர்’ கேட்டுவிட்டுப் போய்விடுங்கள். சரியா?

‘கல்ஃப் கலீஜா ‘ பிஸ்கட்களை காலையில் சாப்பிட்டுவிட்டு அலுவலகம் புறப்படுவது வழக்கம். மெட்ரோவில் என்னை விடுவதற்கு – சாதாரண அர்த்தம்தான் – வரும் சூபர்வைசர் ஷாஜு  போனவாரம் சொன்ன ஜோக்கால் எந்த பிஸ்கட்டும் சாப்பிடப் பிடிக்கவில்லை. அந்த கண்றாவி ஜோக் இதுதான்:

பெரிய கீற்றுத் தடுப்பிலுள்ள ஒரு துளையை  உபயோகித்து அந்த கிராமத்துக் காதலர்கள்  முத்தமிட்டுக் கொள்வது வழக்கம் –  முகத்தைப் பார்க்காமலேயே. ச்ச்…ம்ம்ம் ச்ச்ச்…!  இந்தப் பக்கத்திலுள்ள காதலன் தன் உதட்டை (கீற்று) துவாரத்தில் வைத்துக்கொண்டிருந்ததை ஒருநாள்  பார்த்த பெண்ணின் தகப்பன் கடுப்பாகி, கக்கூஸ் போய்விட்டு அப்படியே கழுவாமல் , அந்தப் பக்கத்தில் தன் பின்பக்கத்தை வைத்திருக்கிறார், குனிந்தபடி. காதலன் சொன்னானாம் : ‘அன்பே, பிஸ்கட் சாப்பிட்டுட்டு வாய கழுவாம அப்டியே வந்துட்டியே!’

பழைய ஜோக்கோ? எனக்கென்ன தெரியும், நானா முகர்ந்தவன்?! லிபியா பற்றி இங்கிருந்து எழுத இயலாததால் லிப்ஸ்-டு-லிப்ஸ் சொன்னேன். சரி, இப்போ ’ஹாரிபிள் ஹஜ்ரத் ஜோக்’ சொல்லி அனைவரையும் அதிரவைத்த (கடுமையாக திட்டி மெயில் அனுப்பிய ஒரு ஆலிம்ஷா கடைசிவரியாக ‘இதுபோல் அடிக்கடி பதியவும்’ என்று சிரிப்புடன் குறிப்பிட்டதை சொல்ல விரும்புகிறேன்) மஜீதுக்கு வருவோம். இவரது கலாட்டா தாங்க இயலவில்லை. 2 TB எக்ஸ்டெர்னல் ஹார்ட்டிஸ்க் இருநூறு திர்ஹம் (சிலர் டிராம் வண்டியோட்டுவது போல ’திராம்’ அல்ல) குறைவாக பர்துபாய் பஜாரில் இருப்பதாக முந்தாநாள் – அங்கிருந்தே – ஃபோன் செய்தார். சைஸ் என்ன என்று கேட்டால் ‘துஆ’ சைஸ்லெ பாதி இருக்கும் நானா’ என்கிறார்! அப்புறம்.. உலகத்திலேயே தன் வீட்டு நாய்க்கு செல்லப்பெயராக ‘நாயி’ என்று வைத்தவர் இவராகத்தான் இருக்கும். பூனைக்கு? பூனய்.. ! இந்த ’ஷார்ஜா ஷேக்’ எது சொன்னாலும் ’ஷாக்’!

நேற்று இவர் அனுப்பியதைப் படித்தபிறகு விக்ஸ் தடவி சிகரெட் குடிக்கவே அருவருப்பாக இருக்கிறது, பார்த்துக்கொள்ளுங்கள். நாளையிலிருந்து சுருட்டுதான்!

ஒரு விஷயம்… நான் கேட்காமலேயே சில ’நண்பர்கள்’ – தன் வலைப் பக்கத்தில்கூட  பதிவிடாமல் –  ஏடாகூடமாக எதையாவது எழுதி – எனக்கு அனுப்பி விடுகிறார்கள். ’ஆபிதீன் பக்கங்கள்’ பிரபலமாக இருக்கிறாம். அப்படியா,  அகிலத்திலுள்ள ஆறுபேர்கள் அன்றாடம் ’தூக்கி’ப் பார்ப்பதாலா?  ஆனால் அநியாயத்திற்கு அடிவாங்குபவன் நானாக அல்லவா இருக்கிறேன்?   யா அல்லாஹ், என்னை மட்டும் காப்பாற்று!

ஆபிதீன்

***

நவீன கழுவேற்றம் – மஜீத்

புகைபிடிக்கும் வழக்கமுள்ள ஒரு நண்பரைச் சந்திக்க சமீபத்தில் சென்றேன். ‘உர்-உர்’ என்று இழுத்துக் கொண்டிருந்தார், புகையை அல்ல அவரது மூக்கை, இருமிக்கொண்டே. அக்கறையோடு கேட்டேன்: இப்ப உங்களுக்கு சிகரெட் ஞாபகம் அவ்வளவா வராதே? (இப்படி ஒரு சூழ்நிலையில்தான் நான் சிகரெட்டை விட்டேன்.) ஆனால் அவர் ரொம்பத் தெளிவு – என்னை மாதிரி இல்லை. ஒரு strepsils மாத்திரையை சப்பிக்கிட்டே, ஒரு கப் தேநீரும் குடித்தால் சிகரெட் பிடிக்கும் ‘மூட்’ தானாக வருமென்று சொல்லிக்கொண்டே, இன்னொரு ‘ஐடியா’வும் செய்தார். “விக்ஸ்” மருந்தை விரலில் எடுத்து அதை ஒரு சிகரெட்டில் சுற்றிலும் தடவி, அப்படியே மூக்கருகே வைத்து முன்னும் பின்னும் நகர்த்தி ஆழ்ந்து நுகர்ந்தார். ஆஹா, இதெல்லாம் நமக்குத் தோனலயே, அநியாயமா விட்டுத் தொலச்சுட்டமேன்னு நொந்தபோது, பழைய கதை ஒண்ணும் ஞாபகம் வந்தது.

சொல்லாட்டி நமக்கு தூக்கமும் வராது.

நண்பரின்  வீட்டுக்கு  மாதம் ஓரிரு முறை சென்று, அவருடன் பல சங்கதிகளையும் அளவலாவி மகிழும் ஒரு அப்பாவியின் பரிதாப கதை இது. என்னதான் அவர் மகிழ்ந்தாலும் அந்த சந்திப்புகளில் அவருக்கு ஒரு சங்கடமும் இருந்தது. நண்பர் அடிக்கடி சுருட்டு பிடிப்பவர். இவருக்கோ அந்த வாடையே பிடிக்காது. இருந்தாலும் சகித்துக்கொண்டே சென்று வருவார்.

அன்று நண்பரின் வீட்டை அடைந்தவுடன் வரவேற்ற நண்பர் இவரை உட்காரவைத்துவிட்டு இதோ சிலநிமிடங்களில் வந்துவிடுகிறேன் என்று வெளியே சென்றார். இவர் அமர்ந்திருக்கும்போது முன்னால் இருந்த மேசையில் 4 சுருட்டுகள்  இருந்ததைப் பார்த்ததும் பொங்கிவிட்டார். இன்று நண்பரைப் பழிவாங்க முடிவெடுத்ததும் ஒரு விபரீத யோசனை தோன்றியது.

சரேலென்று எழுந்து அறைக்கதவை சாத்தியவர், நான்கு சுருட்டுகளையும் எடுத்து, அவற்றின்மீது, ஒன்றன்பின் ஒன்றாகக் ’கழுவேறினார்

குரூர திருப்தியுடன் அவற்றை இருந்த இடத்தில் வைத்துவிட்டு, கதவையும் திறந்து வைத்துவிட்டு ஒன்றுமறியாதவர்போல் வந்து அமர்ந்துகொண்டார்.

நண்பரும் வந்தார். சிறிது நேரத்தில் முதல் சுருட்டைப் பற்றவைத்தார். ஏதோ துர்நாற்றம் வரவே, சீக்கிரமே எறிந்துவிட்டார். நம்மவருக்கு சிறிது சந்தோஷம். கொஞ்சநேரத்தில் இரண்டாவதைப் பற்றவைக்க, அதே நாற்றம் வர, அதையும் உடனே எறிந்துவிட்டார். நம்மாளுக்கோ கொஞ்சம் அதிக சந்தோஷம். சிறிது நேரம்கழித்து இன்னொரு சுருட்டை எடுத்த நண்பர், பழைய பழக்கதோஷத்தில் அந்த சுருட்டை மூக்கருகே வைத்து ஆனந்தமாக உறிஞ்ச முயற்சித்தார். (பிடித்தமான பிராண்ட் விஸ்கி பாட்டிலை உடைத்ததும், கிளாசில் ஊற்றும் முன்பு முழுமூச்சாய் ஒரு மோப்பம் எடுப்பதைப் போல).

முகம் அஷ்டகோணலாக மாறி, அந்த சுருட்டையும் மீதமிருந்த இன்னொன்றையும் சேர்த்து வெளியே வீசியெறிந்தார். மறுபடி சுருட்டை அவர் நாடவே இல்லை. நம்மாளுக்கோ ஏகசந்தோஷம்!! அரட்டையும் தொடர்ந்தது. மேலும் சிறிது நேரத்தில் நண்பர்கள் இருவரும் பிரிந்தனர்.

அடுத்தமுறை இவர் நண்பரைத் தேடிப்போகும்போது, நண்பர் வெகு உற்சாகமாக இருந்தார். ஆனால் இவரோ நேரெதிராக ஏதோ சோகமாகவே தெரிந்தார். உள்ளே சென்றமர்ந்ததும் நண்பர் சந்தோசமாகச் சொன்னார்: “போனதடவை நீங்க வந்துட்டுப் போனதிலிருந்து, நான் சுருட்டு குடிக்கிறதை விட்டுட்டேன்”

நம்மவர் சோகமாக பதிலளித்தார்: “நான் ஆரம்பிச்சுட்டேன்”

***

நன்றி : மஜீத்amjeed6167@yahoo.com

10 பின்னூட்டங்கள்

 1. 10/03/2011 இல் 19:48

  மஜீது பாய், அவர் கழுவேத்தலை “புடம்” போட்டிருக்கார். டெம்பர் ஏறின சுருட்டல்ல நாக்கை அறுத்திருக்கும் வேறொன்னுமில்லெ

 2. soman said,

  11/03/2011 இல் 00:44

  அட , கக்கருமம் புடிச்சவைங்களா, என்று ‘பசங்க’ படத்தில் ஷோபிக்கண்ணு மாதிரி வைய்யணும்……வெளங்காத பயலுவ, தூத்தூ, இதப்போயி படிக்க சொல்லிட்டானே அப்படின்னு நம்மாளுன்னு திட்டினாலும், நல்லா தான்யா இருக்கு….
  சே…. கெரகம்.

  • 11/03/2011 இல் 21:25

   ‘ஷோபிக்கண்ணு’ – நல்லாத்தான் இருக்கு.

   எங்க செட்டிநாட்டுல, சிகப்பிக்கண்ணு தான் அது.

   சிகப்பி ஆச்சியை “ச்சோப்பியாச்சி” ன்னும்
   சிகப்பியை “ஸோப்பி/சோப்பி”ன்னும் கூப்டுறது வெகுசாதாரணம்.

 3. maleek said,

  11/03/2011 இல் 06:22

  ஆகா ..ஒரு குரூப்பாத்தான்யா அலைறாங்க!

 4. அறபாத் said,

  11/03/2011 இல் 20:15

  மஜீத் பின் முத்தம் படித்த பிறகு
  எனக்கும் ஒரு கதை நினைவு வருகிறது.எங்கள் ஊரில் ஒரு புலவர் இருக்கின்றார்.அவரை வைத்து ஏகப்பட்ட நல்லதும் கெட்டதும் கதைகள் உண்டு. அதில் மெய்யும் உண்டு, பொய்யும் உண்டு.
  தலைப்பிறையைப்பார்த்ததும் பெண்கள் விருப்பமான ராசியானவர்களின் முகத்தில்தான் முதலில் விழிக்க விரும்புவர்.புலவரின் மச்சி முறையான ஒருத்தி தலைப்பிறை பார்த்ததும் புலவரை விழித்து மச்சான் ஓடிவாங்க புரைய கண்டுட்டன் நீங்க கொஞ்சம் முன்னனாடி வந்து நில்லுங்க என்று அழைத்தாள்.கைகலிரண்டும் கண்களை மூடியிருக்க,மச்சானின் திருமுகத்தில் விழிக்க ஆசை.புலவரே பொல்லாத போக்கிரி, சரி புள்ள நீ ஆசப்படுறா,இப்ப கண்ணத்திற என்றிருக்கின்றார். மச்சியும் ஆசையுடன் கண்களை திறந்துபார்த்தா, குணிந்திருந்த மச்சானின் பின்பக்கத்தில் அமாவாசை இருட்டுடன் இரு பிறைகள் பிளந்திருந்து தெரிந்தது.மச்சிக்கு அன்றையப்பொழுது பரக்கத்தாக இருந்திருக்கும்

  • 11/03/2011 இல் 21:11

   அந்த பின் முத்தம் என்னோடது இல்ல, என்னோடது இல்ல……..

   அது ஆபிதீன் நானாவோடதாக்கும்!

 5. soman said,

  11/03/2011 இல் 23:31

  http://azhiyasudargal.blogspot.com/2011/01/blog-post_09.html

  thamizhil, type pannittu irukka neram illai, abedheen, intha link poi
  padichittu vaanga. thirumba thirumba padinga….

  romba miss pannreyn…! anbudan soman

  • 12/03/2011 இல் 01:02

   நான் படிச்சேன் ஸ்வாமி.
   என்ன சொல்ல?
   தங்கம் எப்போதும் தங்கம்தான்.
   //“என்ன தோன்றிற்று என்று கேட்கிறாரா? மிஸ்டர் ஐயர், மிஸ்டர் பிள்ளை! உலகம் முழுவதும் பிணக் காடாகக் கிடக்கிறது. ஒரே இரைச்சல், ஒரே கூட்டல், ஒரே அடிதடி. புயல் வீசி மரங்களை முறிக்கிறது. அலை உயர உயர எழுந்து குடிசைகளை முழுக அடிக்கிறது. இடி விழுந்து சாலையின் மரங்கள் பட்டுப்போகின்றன. கட்டிடம் இடிந்துவிழுகிறது. எங்கே பார்த்தாலும் ஒரே இரைச்சல்… இந்தப் போர்க்களத்தில், இந்த இரைச்சலில், நான் மட்டும் அமைதி காண்கிறேன். மெதுவாக இந்த இரைச்சல் தேய்ந்து, இந்தப் பிரளயக் கூச்சலும் இரைச்சலும் மெதுவாக அடங்கித் தேய்கிறது//

   ‘சாந்தமுலேகா’

 6. soman said,

  11/03/2011 இல் 23:38

  theejaa sollra ellaam umakku arththam aahiradhaa, ?

  skip pannaama think panni panni avar solla varum anubavaththai
  porukkikondu enakku ezhudhum, …..jalli adikkaadheerum,
  ellam aachunnu.

  kuzhandhaiyum, kadaiyum ezhuthiya kaiyaaa idhunnu aaththu aatthu pohudhu, manasu. engalukku kichu kichu moottavaa neer irukkeer,?
  ummai enna panninaa thagum.? pongappaaa!

 7. ஷாஜஹான் said,

  01/10/2016 இல் 18:15

  மஜீத்… கொழுப்புய்யா உங்களுக்கு.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s