நாகூர் ரூமி அழைக்கிறார்

ஆறே நாட்களில் மனிதர்களை ’மேலே’ போகவைக்கும் ஆல்ஃபா தியானப் பயிற்சிக்கா அல்லது பற்றி எரியும் நாகூர் நிலக்கரி போராட்டத்தில் பங்குகொள்ளவா அல்லது மதவெறியற்ற இலக்கியம் பேசி  மனதை பண்படுத்தவா (இயலுமா!) ?  எதுவுமல்ல. அவரது அன்பு மகள் ஃபஜீலாவுக்கு நாளை  –  மார்ச், 6-ம் தேதி – சென்னையில் (at No. 7, Rajeswari Street, Mehta Nagar, Chennai-29)  திருமணம். அதற்காகவே உங்களை அழைக்கிறார். கலந்துகொண்டு வாழ்த்துமாறு வேண்டுகிறேன். ‘தம்’ பிரியாணி விபரங்கள் பெற தவறாது பதிவின் அடியில் பார்க்கவும். நம்ம ஜபருல்லாநானா கண்டிப்பாக நிக்காஹ் மஜ்லீஸில் இருப்பார். கவிதைகளும் சொல்வார். இருந்தாலும் பயப்படாமல் செல்லவும்!

ஒரு வாரத்திற்கு முன் அழைப்பிதல் அனுப்பியிருந்தார் இந்த நாகூர்ரூமி. பதில் போடவில்லை. ஃபோனில் பேசலாம் என்று சும்மா இருந்து விட்டேன். முந்தாநாள் மறு மெயில் : ‘ஓய்… இன்விடேசன் கெடைச்சிச்சா இல்லையா?’. அதற்கும் பதில் போடவில்லை. இரவு பேசினேன்.

‘ஆல்ஃபா மெயில்ல அனுப்பியிக்கிறியும். கெடைக்காம எப்படிங்கனி இக்கிம்?’ என்றேன்.

‘அதனாலதான் டவுட்டு!’

‘ஹாஹா… சரி, பொண்ணுட்ட கொடும், பேசணும்’

முனகாமல் கொடுத்தார் முனைவர். ‘மாமா, அஸ்லாமலைக்கும்! நல்லா இக்கிறீங்களா? ஊர்லெ மாமிலாம் சவுக்யமா?’ என்றாள்.

‘ஒன் மாமிக்கென்னா, சூப்பரா இக்கிறா. நான் ஊர்லெ இல்லேன்னாதான் குஷிலெ சிரிப்பு தாங்க முடியாதே!’

‘சே, என்னா மாமா அப்படி சொல்றீங்க? அஸ்மாமாமி எவ்வளவு நல்லஹ’

‘நொல்லஹ! கூட இருந்தா ஒரே நொய்நொய்ண்டுகிட்டு அத செஞ்சியா இத செஞ்சியான்னு கேள்வி கேட்டுக்கிட்டு  சீரியல் எதுவும் பாக்கவுடாம தொந்தரவு பண்ணிக்கிட்டு கடுப்பை கெளப்பிக்கிட்டே இருப்பேன்ல. எங்கேயாவது தொலைஞ்சிபோனா நிம்மதிதானே? வேணும்னா –  ஒன் வாப்பா பத்தி –  உம்மாட்டயே கேட்டுப்பாரேன், உண்மையா இல்லையாண்டு’

‘ஏற்கனெவே கேட்டிக்கிறேன் உம்மாவ’ என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ‘அதாபு (தொல்லை) தாங்க முடியலேண்டு நானாட்ட சொல்லு’ என்று உரக்க ஒரு குரல் கேட்டது.

நாகூர் ரூமியை எச்சரிக்கிறேன்!

’பாத்திமுத்து ஜொஹராவின் பரம்பரையில் வந்துதித்த’ ஃபஜீலாவை வாழ்த்துகிறேன். அடுத்த வருடத்திற்குள் என் செல்லமகள் அனீகாவுக்கு கல்யாணம் நடத்த வேண்டுமே… ’பெரும்பேச்சு’ தவிர என்னிடம் வேறொன்றும் இல்லையே என வெறும்பயலாக நடுங்குகிறேன்…

இறைவா, எல்லா ’குமர்’ காரியங்களையும் எளிதாக்கி சிறப்பாகுவாயாக, ஆமீன்!

ஆபிதீன்

***

நண்பன் நாகூர் ரூமியின் மின்னஞ்சல் : ruminagore@gmail.com

9 பின்னூட்டங்கள்

 1. 05/03/2011 இல் 14:03

  மணமக்கள் எல்லாச்சிறப்புகளுடனும் பல்லாண்டு காலம் மகிழ்வோடு வாழ வாழ்த்துகிறேன்!

 2. 05/03/2011 இல் 16:11

  என் அன்பு மகள் FAZILA YASMIN அல்லாஹ்வின் நல்லருளால் எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ இறைவனைப் பிரார்த்தித்து இதயத்தால் வாழ்த்துகிறேன். வாழ்த்தி மகிழும்: தீன் சின்னாப்பா மற்றும் குடும்பத்தினர்கள் – சிங்கப்பூர்

 3. தாஜ் said,

  05/03/2011 இல் 17:54

  மணமக்களுக்கு
  என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
  எல்லா நலமும் பெற்று
  பல்லாண்டு பல்லாண்டு வாழவேண்டும் நீங்கள்.

  பெருமகிழ்ச்சியோடு
  தாய்மாமன்…
  – தாஜ்

 4. 05/03/2011 இல் 19:35

  எல்லோரும் வாழ்த்தும்போது நான் மட்டும் சும்மா இருந்தால்…..? ஹஜ்ரத்தை ‘மாமா, மாமா’ என்று சுற்றிச் சுற்றி வந்து ஞானத்தைப் பெற்றவர். அவர் மகளுக்கு திருமணம்; ஹஜ்ரத் இருந்தால் எப்படி வாழ்த்துவார்களோ அந்நிலையில் இல்லாவிட்டாலும் அவர்களை மனதில் நிறுத்தி மணமக்களை நெஞ்சார பிரார்த்தனையுடன் வாழ்த்துகிறேன்.

 5. 05/03/2011 இல் 20:12

  “FAZILA YASMIN” வாழ்வில் எல்லா வளமுடன் சகலமும் பெற்று சந்தோஷமாய் வாழ வாழ்த்தியனாக…..!!!

 6. maleek said,

  06/03/2011 இல் 03:09

  மணமக்கள் எல்லா வளமும் பெற்று மாண்புற வாழ
  அருள்புரிவாய் ரஹ்மானே!

 7. நாகூர் ரூமி said,

  06/03/2011 இல் 22:13

  ஒரு தவறான திருமணத்தின் மூலம் கஷ்டப்பட்டு மீண்ட என் மூத்த மகளுக்கு இப்போது மறுவாழ்வு. வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு என் நன்றிகள். ஊரில் இருந்த ரொம்ப நெருங்கிய சில நண்பர்களைக்கூட அழைக்க முடியாமல் போய்விட்டது. (வேண்டுமென்றேதானே? — ஆபிதீன்). என் அவசரம் அப்படி. என்றாலும் அனைவருக்கும் என் சார்பாகவும், என் குடும்பத்தின் சார்பாகவும் நன்றிகள் சொல்வது என் கடமை. திருமணம் ரொம்ப சிம்பிளாகவும் (ஒரு சில லட்சங்கள்தான் செலவு) முடிந்தது நிம்மதி தரும் வகையிலும் முடிந்தது. ஜஃபருல்லா நானா வந்தார்கள். கவிதை எதுவும் வாசிக்கும் வாய்ப்பு இல்லை. அந்த நிலையிலும் அவர்கள் இல்லை. ஆனாலும் கடுமையாக பசி என்னைப் பிடுங்கிக் கொண்டிருந்தபோது கவிதை சொல்வதாக நினைத்துக் கொண்டு என்னிடம் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ’சுகர்’ பிரச்சனை அதிகம் என்பதால், பிரியாணி சாப்பிடவில்லை. ஆம்பூரிலிருந்து கொண்டு சென்ற ஸ்பெஷல் லட்டுக்கள் இரண்டை மட்டும்தான் ருசி பார்த்தார்கள்! (”நூர் முஹம்மதைப் பார்த்தால், நூர் மட்டும்தான் தெரிகிறது” என்பது தன் நோய் பற்றி அவர்கள் சொன்ன ஒரு மறக்க முடியாத வாக்கியம்!).

  ஜகார்த்தாவில் இருந்து என் தங்கையும், சிங்கப்பூரிலிருந்து தம்பி நிஜாமும் வந்திருந்தது ஆச்சரியமல்ல. ஆனால் சமீபத்தில்தான் இரட்டை ஆபரேஷன்கள் செய்து கொண்டிருந்த என் தகப்பனார் நேரில் வந்து ரொம்ப நேரம் அமர்ந்திருந்தது மட்டுமின்றி, அவர்களே சாட்சிக் கையெழுத்தும் போட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

  நண்பர்கள், உறவினர்கள் தவிர, கவிஞர் யுகபாரதி, எழுத்தாளர் சோம வள்ளியப்பன், சன் டிவி வீரபாண்டியன் ஆகியோரும் வந்திருந்து சிறப்பு செய்தார்கள்.

  அனைவருக்கும் மறுபடியும் நன்றிகள்.
  அன்புடன்
  ரூமி

 8. 07/03/2011 இல் 15:27

  ஸல்லல்லாஹு அலா முஹம்மது. ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்.

  மணமக்கள் இதயத்தில் ஒருவர் மேல் ஒருவருக்கு நேசத்தை பொழிந்து, இரண்டு குடும்பத்தினரும் ஒற்றுமையுடன் நல வாழ்வு வாழச் செய்ய இறைவனை இறைஞ்சுகின்றேன். ஆமீன்.

 9. MOHAMED said,

  15/05/2011 இல் 22:40

  Marriage for his daughter. Congratulation for the couple & wish them all the best for the couple.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s