இறைவன் சிரிப்பான் – இஜட். ஜபருல்லா

’இந்தக் கவிதை எழுதுறவங்களையெல்லாம் நாடு கடத்தனும்னு சொன்னா எவ்வளவு நல்லா இருக்கும் 🙂 ’ என்று சகோதரர் ஜெயக்குமார் சொன்னார். சேச்சே, ரொம்ப தப்பு, ‘இருப்பதற்கென்றுதான் வருகிறோம் / இல்லாமல் போகிறோம்’ என்ற அபாரமான வரிகளை கவிஞர்கள்தானே எழுதுகிறார்கள். நகுலன் மாதிரியே விக்ரமாதித்யன் அண்ணாச்சி எழுதிய அருமையான வரிகளை நண்பர் விமலாதித்த மாமல்லன் தளத்தில் நேற்று பார்த்தேன்.

’கொஞ்ச நேரம்
இருப்பதற்காக
ரொம்ப நேரம்
நடக்க வேண்டியிருக்கிறது…’

பிரமாதம்! நம்ம ஜபருல்லா நானா அனுப்பும் ஆன்மீகக் கவிதைகள் அந்தமாதிரி ரகமல்ல. நேற்று அவர் அனுப்பிய SMS-ஐ பாருங்கள். நானா வீட்டில் நேற்று ’கரண்ட் கட் ’ போல!

*

மனசை சுத்தமாக்கு
கண்ணை மூடு
இருட்டுள் உள் ஒளிப் பயணம் செய்
வெளிச்சம் முகம் காட்டும்
மௌனத்தின் செய்தி
காதுகளில் அல்ல
மனசில் செதுக்கும்
இறைவன் சிரிப்பான்.

*

நன்றி : இஜட். ஜபருல்லா |  0091 9842394119

3 பின்னூட்டங்கள்

 1. Jeyakumar said,

  03/03/2011 இல் 11:10

  //இந்தக் கவிதை எழுதுறவங்களையெல்லாம் நாடு கடத்தனும்னு சொன்னா எவ்வளவு நல்லா இருக்கும் 🙂 ’ என்று சகோதரர் ஜெயக்குமார் சொன்னார். //

  தமிழ் பேப்பரில் வந்த கவிதை, கிவிதை படிச்சீங்கன்னா, இந்த கவிதை எழுதுற ஆளுங்க எவ்வளவு ஏமாத்துறாங்கன்னு புரியும்..

  🙂 எனக்கும் கவிதை எழுதுற ஆட்கள் தான் அதிகம் நண்பர்கள்

  • 03/03/2011 இல் 12:17

   //இந்தக் கவிதை எழுதுறவங்களையெல்லாம் நாடு கடத்தனும்னு சொன்னா எவ்வளவு நல்லா இருக்கும்//

   சமீபத்தில் மிகவும் ரசித்த timing joke. ஆமா, இதைத் தமிழ்ல எப்டி சொல்றது?

 2. 05/03/2011 இல் 11:53

  விக்ரமாதித்யன் அவர்களின் கவிதைபோல ‘தேரா-துபை பேச்சிலர் ரூம்’களில் கேட்கும் சலிப்பு:

  “ஐந்து நிமிட சாப்பாட்டுக்கு
  ஒரு மணிநேர சமையல்”


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s