உறவினர் மரணம்

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவுன்…..  எங்கள் குடும்பத்தின் பேரழகராக இருந்த யாகூப்நானா (கவுஸ்சேட் மாமாவின் இளைய மகனார்) மவுத்தான செய்தியை இன்று அதிகாலையில் சொன்னாள் துணைவி. ஆறு மாதங்களுக்கு முன் கேன்சர் என்று ‘கண்டுபிடித்திருந்தார்கள்’. மருத்துவத்தால் புண்ணாகிப்போன உடல் போய்விட்டது. இன்று மாலை ஐந்து மணிக்கு (நாகூரில்) நல்லடக்கம். அன்னாரின் சிறப்பான மறுமைவாழ்வுக்கு இறைவனை இறைஞ்சுகிறேன். நண்பர்களும் துஆ செய்யலாம்.  தம்பி ’சிங்கை’ இஸ்மாயிலிடம் இப்போதுதான் பேசினேன். அவர் திடமாகத்தான் பேசினார். எனக்குதான் மனசு கலங்கிப் போயிருக்கிறது சாதாரணமாக நான் கேலி செய்யும் ஈ.எம். ஹனிபாவின் ’மௌத்தையை நீ மறந்து’ பாடலின் (பொரவாச்சேரி ‘மதிதாசன்’ எழுதியது) சரணங்களின் முடிவில் வரும் ’ பூதலத்தில் இந்த நிலை புரிந்திடாமல் பேசுகிறாய்’, ‘இந்த நிலை உணர்ந்திடாமல் என்னென்னமோ பேசுகிறாய்’ , ‘அந்நாளை உணர்ந்திடாமல் ஆணவத்தால் பேசுகிறாய்’ போன்ற வரிகளைக் கேட்டு பொங்கிப் பொங்கி அழுகை வருகிறது. இலக்கியமாவது  மண்ணாவது, இறப்பை முன்வைத்தாவது இசை கேளுங்கள் :

8 பின்னூட்டங்கள்

 1. 26/02/2011 இல் 19:52

  இந்த காட்சியை பாருங்கள்: http://ismailnagore.blogspot.com/2008/06/hindi-movie-anand-climax-scene.html

  Babu Moshaaye… Babu Moshaaye..

  Zindagi aur maut upar wale ke haath mein hai..

  Isse na to aap rok sakte hain na hi main …

  hum sab to rang manch ki kathputaliyan hain jinki dor upar wale ke ungaliyon mein bandhi hui hai..

  Kab kaun kahan aur kaise utega …

  isse koi nahi bata sakta hai……….

  ha ha ha….

 2. 26/02/2011 இல் 19:56

  வாப்பாக்கு டெலிபோன் போட்டு நீங்க துபாய்லேந்து பேசுனதா சொல்லிட்டேன்.. ரொம்ப கஷ்டப்பட்டுட்டாஹா நானா… இப்போது தான் கவுஸ் சேட் மாமாவின் கடைசி மகளாரை எனது சிறிய தாயாரை பறிகொடுத்தோம் இதே பாழாய்ப் போன கேன்சருக்கு… இப்பொழுது இன்னொரு உயிரையும் கொடுத்தனுப்பி விட்டு நிற்கிறோம்.. இறைவனிடமே வந்தோம் இறைவனிடமே மீண்டும் செல்வோம்… இந்த நேரத்தில் பொறுமையாக இல்லை என்றால் வேறு ஒரு நாயனை பார்த்துக் கொள்ளும் படி கோவமாக அல்லாஹ் சொல்வதாக பாக்கர் ஆலிம் சாபு எங்கள் குடும்பத்தாருக்கு ஹதீஸ் சொல்லி தந்திருக்கிறார்கள்.

 3. 26/02/2011 இல் 19:58

  நீங்கள் டெலிபோன் போட்ட போது அவர்களுக்காக தான் யாசீன் ஓதிக் கொண்டிருந்தேன். துவா செய்யவும். வெளிநாட்டு வாழ்க்கையில் மவுத்துக்கு கூட பக்கத்தில் நிற்க முடியவில்லை.. கோவம் கோவமா வருது நானா..

 4. நாகூர் ரூமி said,

  26/02/2011 இல் 21:23

  அன்புச் சகோதரர்களுக்கு, மௌத்தானது யாராக இருந்தாலும் அவரது மறுமை வாழ்வுக்காக அல்லாஹ்விடம் கையேந்துகிறேன். நிற்க, இது சுல்தான் மெய்தீனின் மச்சானா?

 5. 27/02/2011 இல் 06:53

  ஆமாம்.. நானா .. சுல்தான் மெய்தீன் அவர்களின் பெரிய லாத்தாவுடைய மாப்பிள்ளை. அலியா மரைக்காயர் அவர்களின் சம்மந்தியும் கூட.

 6. 27/02/2011 இல் 10:13

  யாகூப் நானா அவர்களின் மறுமை வாழ்வை நிம்மதியாக்கித் தரவும், அவர்களின் பிரிவால் வாடும் உறவினர்களுக்கு மன அமைதியையும் அவர்களின் மூலம் தந்த அரவணைப்பை விட அதிகமான அரவணைப்பையும் நல்கவும் இறைவனை இறைஞ்சுகின்றேன்! ஆமீன்!

 7. ரியாஸ் said,

  27/02/2011 இல் 18:24

  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவுன்.
  எங்கள் வீட்டு சம்மந்தி யாகூப் மாமா அவர்களின் மறுமை வாழ்வை நிம்மதியாக்கித்தர அல்லாஹ்விடத்தில் துஆ செய்கிறேன்.

 8. 01/03/2011 இல் 09:30

  ஆறுதல் கூறிய சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s