தாவணி போடா லாவணி

’லாவணி’யைத் தேடியபோது ராஜகுமாரனின் பேட்டி கிடைத்தது. வாசியுங்கள். அப்படியே ’சக்ரவர்த்தி திருமகள்’ படத்தில் எம்.ஜி.ஆரும் கலைவாணரும் இணைந்து  கலக்கும் (இசை : ஜி. ராமனாதன்) இந்தப் போட்டிப் பாடலை பார்த்துக்கொண்டிருங்கள் –   ஜெயண்ட்மோகனுடன் நண்பர் தாஜ் போடும் இலக்கியச் சண்டையை நாளை பதிவிடும்வரை. எல்லாம் சோற்றுக்கணக்குதான்…!

4 பின்னூட்டங்கள்

 1. 19/02/2012 இல் 02:01

  பதிவுக்கு நன்றி.ஆபிதின் பக்கங்களின் இடுகைகள் சுவையாக உள்ளன.நண்பர் தாஜின் எழுத்துக்களை வெகுகாலத்துக்குப் பின் வாசிப்பது சுகம்.தொடர்க உங்கள் கலை-இலக்கிய ஆக்கங்கள்.வாழ்த்துக்கள்….~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ நேசமிகு ராஜகுமாரன்

  • abedheen said,

   19/02/2012 இல் 09:39

   ’பழையவீட்டிற்கு’ வருகை தந்ததற்கு நன்றி ராஜகுமாரன். புதுவீடு இங்கே : http://abedheen.blogspot.com/

  • தாஜ் said,

   14/06/2012 இல் 07:53

   நன்றி ராஜகுமாரன்.
   ஆபிதீனின்
   சீக்கிரம் தேசிய நீரோட்டத்திற்கு
   ஆவணம் புரியுங்கள்.
   மீண்டும் நன்றி.
   -தாஜ்

 2. abedheen said,

  10/09/2012 இல் 13:23

  நண்பர் வசுமித்ரவின் ஃபேஸ்புக்கை இன்று பார்த்தபோது, இந்தப் பாடலை எழுதியது கிளவ்ன் சுந்தரம் என்று அறிய முடிந்தது. நன்றி.

  ***

  சீர் மேவு குரு பாதம்
  சிந்தையோடு வாக்கினும்
  சிரம் மீது வைத்து போற்றி ஜகமெல்லாம் மெச்ச
  ஜெயக்கொடி பறக்க விடும்வீரப் பிரதாபன் நானே

  சரி
  சங்கத்துப் புலவர் பாட தங்கத் தொழில் போர்ப் படர்க்கும்
  வங்கத்து பொன்னாடை பரிசளித்தார்
  எனக்கு இங்கில்லை ஈடென்ன சொல்லிக் களித்தார்
  இந்த சிங்கத்துக்கு முன்னே ஓடி பங்கப்பட்டதாரே
  சீரெடுத்து பாடி வாரேன் தானே
  அதற்கு ஓரெழுத்து பதில் சொல்லி பாரேன்

  யானையை பிடித்து யானையை பிடித்து
  ஒரு பானைக்குள் அடைத்து வைக்க
  ஆத்திரப் படுபவர் போல் அல்லவே
  உம் தாரம்பக் கவி சொல்லுதே புலவா
  வீட்டின் பூனைக் குட்டி காட்டில் ஓடி
  புலியைப் பிடித்து தின்ன
  புறப்பட்டக் கதை போல் அல்லவா
  தற்புகழ்ச்சி பாடுகிறாயே புலவா

  பூதானம் கன்னிகாதானம் சொர்ணதானம் அன்னதானம்
  கோதானம் உண்டு பற்பல தானங்கள்
  இதற்கு மேலான தானம் இருந்தால் சொல்லுங்கள்
  கேள்விக்கு பதிலை கொண்டா

  உடைச்சி ஏறிவென் ரெண்டா
  உன்னை ஜெயிச்சி கட்டுவேன் முண்டா
  அப்புறம் பறக்க விடுவேன் செண்டா
  ஜெயக்கொடி ஜெயக்கொடி பறக்குது ஜெயக்கொடி

  சொல்றேன்
  எத்தனை தானம் தந்தாலும்
  எந்த லோகம் புகழ்ந்தாலும்
  தானத்தில் சிறந்தது நிதானந்தான்
  நிதானந்தனை இழந்தவர்க்கு ஈனந்தான்

  சொல்லிட்டான்
  கோவிலைக் கட்டி வைப்பது
  எதனாலே சிற்ப வேலைக்கு பெருமை உண்டு அதனாலே
  பாத்துக்கடா சரிதான்

  அன்ன சத்திரம் இருப்பது எதனாலே
  பல திண்ணை தூங்கி பசங்கள் இருப்பதாலே
  எப்படி

  பரதேசியாய் திரிவது எதனாலே
  ம்ம்ம்….அவன் பத்து வீட்டு
  சரி ….. வேணாம்
  அவன் பத்து வீட்டு சோத்து ருசி கண்டதாலே
  தம்பி இங்க கவனி
  காரிருள் சூழுவது எவ்விடத்திலே- தம்பி
  காரிருள் சூழுவது எவ்விடத்திலே
  கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகத்திலே
  சொல்லிப்பிட்டியெ

  புகையும் நெருப்பிலாமல் எரிவதெது
  புகையும் நெருப்பில்லாம அதெப்படி எரியும்
  நான் சொல்லட்டுமா
  சொல்லு
  பசித்து வாடும் மக்கள் வயிறு அது
  சரிதான் சரிதான் சரிதான்

  உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது
  கத்தி
  இல்ல
  கோடாரி
  இல்ல
  ஈட்டி
  ம்ஹூம்
  கடப்பாரை
  இல்லை
  அதுவுமில்லையா

  அப்புறம் பயங்கரமான ஆயுதம் ஆறறிவாகுமோ
  அது ஆயுதம் இல்லையே
  அட தெரிய மாட்டேங்குதே
  நீயே சொல்லப்பா

  உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது
  நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின்
  நாக்கு தான் அது
  ஆஹா ஆஹா
  நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s