பொதி சுமப்பவர்கள் – இப்னு ஹம்துன்

இடிந்த தேசத்திலிருந்து ஓர் இடிமுழக்கம்‘ என்ற அருமையான கட்டுரை எழுதிய சகோதரர் இப்னு ஹம்துனின் கவிதை – பொதி சுமப்பவர்களுக்காக.   குறிப்பு : பொதி என்றால் பொண்டாட்டி அல்ல!
***

பொதி சுமப்பவர்கள்இப்னு ஹம்துன்

விதியெல்லாம் தன்வசமே   வைத்திருத்தல் போலத்தான்
   விதவிதமாய் பெரும்பேச்சு; விளக்கங்கள் அப்பப்பா!
கதிமோட்சம் தன்வழிதான்! – கருத்துரைப்பு செய்வதுவும்
   கடவுளவன் உரிமையிலே கைவைத்தல் ஆகாதா?
மதிகூறும் படியெல்லாம் மதவிளக்கம் தந்துவிடல்
   மனிதரெல்லாம் தன்பின்னே மடைதிரளும் ஆசைதான்!
அதிகாரம் கொள்வதற்கே அலைகின்றார்  பெருங்குழப்பம் 
   ஆனமட்டும் செய்கின்றார்  அவனியிலே பேச்சாலே !

புதிதாக ஒன்றுசொல்லிப் புகைந்தெரியச் செய்துவிட்டு
   பலபேரை பின்சேர்த்து பாதகங்கள்  புரிந்துவிட்டு
சதியாலே பேர்பெற்று சட்டதிட்டம் வகுத்துவிட்டு
    சங்கடங்கள் ஏதுமின்றி சுயநலனே சிந்தித்து
எதிர்வாதம் புரிவோரை இழித்துரைத்துப்  புறந்தள்ளி
   என்வாதம் மட்டுந்தான் இறைஏற்கும்  என்பாரும்
நிதிவேண்டி வருவதல்லால் நிலைமையிலே மாற்றமுண்டா?
   நெருப்பெடுப்பார் பீடிக்கு, நம்குடிசை எரிகையிலே!

அதிகாலை இறைதொழவும் ஆலயமும் சென்றுவிடார்
    அரசியலில் செல்வாக்கை ஆலயத்தால் அடைகின்றார்.
அதற்காக வம்புகளும் அடிதடியும் வழக்குகளும்
   அடுத்துள்ளோர் மானத்தின் மீதேறிச் செல்லுதலும்
மிதிக்கின்றார் மாண்பினையும்  மானுடத்தின் நேயத்தையும்
    மதிக்காமல் இழிவாக்கி மலிவான சொல்வீசி
பதிக்கின்றார் பெருங்கேட்டை பாராரும் உமிழ்வதற்கே
   பாவத்தைச் செய்யுமிவர் புனிதத்தை அறியாரே!

துதிசெய்யும்  ஒருகூட்டம்; துப்பறியும் மறுகூட்டம்
   தூயமனம் இல்லாரை தொடர்ந்திடுதே பெருங்கூட்டம்
சுதிசேர்க்கும் சிறுமனங்கள் சுயமறியா  ஆரணங்கள்
   சூழ்ச்சியிலே சிக்கிவிடும் சின்னஞ்சிறு  பூமனங்கள்
பொதிசுமப்பர் போலத்தான் பொருளறியார் தன்சுமப்பை
   பொல்லாங்காய் புறம்பேசி பொய்யுரைக்கும் இவர்பற்றி
விதிவசத்தை தன்னிடமே வைத்திருக்கும் இறையிடமே
   ஒப்படைப்போம் முறையீடாய்!  ஒழுங்கமையச் செய்வானே!

***

நன்றி : இப்னு ஹம்துன் (பஃக்ருத்தீன்) | fakhrudeen.h@gmail.com

8 பின்னூட்டங்கள்

 1. ஜெய்லானி said,

  21/02/2011 இல் 19:35

  மிக அருமையாக , எளிய சொற்களால் கவி படைத்தது பாராட்ட வேண்டிய ஒன்றுதான் . மாஷா அல்லாஹ் ..!!

 2. Syed said,

  21/02/2011 இல் 19:41

  ” No Comments ” is my Comment.

 3. 21/02/2011 இல் 19:50

  “உள்ளெழுத்தை ஓதறியா மூடரே – ஊமைகண்ட
  வெள்ளெழுத்தை விளம்புகிறீர்
  உள்ள எழுத்தை மாற்றிப்பிடிக்க
  வகையறியா மாந்தர் செயல்
  ஆற்றில் கரைத்த புளிபோலாம்”
  என்று மகானந்த பாவா என்ற செய்யிது அப்துல் காதிர்(ரஹ்) அவர்கள் அப்போதே சொல்லிவிட்டார்கள் எங்களைப் பற்றி. நீங்க இப்ப வந்த கத்துக்குட்டி. எங்களுக்கு வேண்டியது “மின்னல் ஹபீபு” (துட்டு) அதுக்காக இதுவும் செய்வோம் இன்னமும் செய்வோம்.

  • ரமீஜா said,

   22/02/2011 இல் 06:20

   “மின்னல் ஹபீபு” (துட்டு) அதுக்காக இதுவும் செய்வோம் இன்னமும் செய்வோம்.”ஹமீது ஜாஃபர்

   “துட்டு”க்காக எதையும் செய்வோம்…..இப்படியும் ஓரு பொழைப்பா ?!

 4. 22/02/2011 இல் 12:28

  இப்னு ஹம்துனின் கவிதை அருமை.

 5. 23/02/2011 இல் 13:05

  //பொதிசுமப்பர் போலத்தான் பொருளறியார் தன்சுமப்பை
  பொல்லாங்காய் புறம்பேசி பொய்யுரைக்கும் இவர்பற்றி//யார் என்பதை இரகசியமாக வைத்திருக்கிறீர்களே? சொன்னால் நல்லா இருக்கும் தானே?

 6. 27/02/2011 இல் 21:07

  Dear Mr. Fakrudeen, (IBN Hamdun)

  “Assalamu Alaikum.”

  Masha Allah. GONGRATULATIONS.

  Nice to read and enjoyed myself.

  I would like to wish you Best of Luck!!!

  Regards,

  SUPER IBRAHIM S.H.

 7. Jafar Sadiq said,

  04/04/2019 இல் 17:56

  Such meaningful verses can be written only by those who are humanistic.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s