செல்ல மகனே, சௌக்யமா?

இன்று 18 வயது நிறைவடையும் என் செல்லமகன் நதீமை வாழ்த்துகிறேன். 1996-ல் எடுத்த ஒரு வீடியோவில் (அப்போதும் நான் அங்கே இல்லை!) குட்டிப்பையனாக அவர் சண்டை போடுவதை ஒரு நொடி பார்த்துவிட்டு , அதற்கும் கீழே இருக்கிற அவரது இப்போதைய உருவங்களையும் பார்த்துவிட்டு வாழ்த்துங்கள். மகிழ்வார். ஏடாகூடமாக எதையும் சொல்லிவிட வேண்டாம். எகிறுவார். தனக்கு வேண்டியவைகளை சாமர்த்தியமாகப் பெற்றுக்கொண்டு நாம் சொல்வதை மட்டும் கேட்காமல் அவர் அலட்சியம் செய்வதால் வந்த கடுப்பில்,  நண்பன் பாஸ்கரிடம் கேட்டேன், ’என்னடா இப்படி கோவக்காரனா இரிக்கிறான்?’ என்று . பாஸ்கரன் எனது ’வாடா போடா’ கூட்டாளி – சின்ன வயசிலிருந்தே . ‘நம்ம கிரிஷும் அப்டித்தான் இருக்காண்டா.. எதுவும் சொல்ல முடியலே’ என்று அலுத்துக்கொண்டு அருமையாக அட்வைஸ் செய்தான் : ‘ஒண்ணும் சொல்லிடாதே மாப்ளே..  பசங்க ஜிம்முக்குலாம் போயி இப்ப நல்லா ஒடம்ப தேத்தி வச்சிருக்கானுவ!’

***

***

புகைப்படங்கள் :

’ஜமால்’  நதீம்   | ’நாகூரான்’ நதீம்

11 பின்னூட்டங்கள்

 1. 20/02/2011 இல் 17:14

  :))

  இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்..

 2. 20/02/2011 இல் 18:06

  ஹும்… வாப்பா சொன்னதை நாம் கேட்டோம் அப்போ, இப்போ புள்ளை சொல்றதை நாம கேட்கணும்.. இதான் நம்ம லைஃப்…

  நல் வாழ்த்துக்கள்….! உங்களுக்கும் சேர்த்துதான்.

 3. ரியாஸ் said,

  20/02/2011 இல் 19:39

  உங்கள் செல்ல மகனாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். புள்ளைய பெத்த வாப்பாக்கும் சேர்த்து.

 4. நாகூர் ரூமி said,

  20/02/2011 இல் 22:21

  அன்பு நதீமுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 5. maleek said,

  21/02/2011 இல் 02:47

  வாழ்த்துக்கள் (.அருமையாக அட்வைஸ் செய்த பாஸ்கரன் என்கிற பாஸ்க்கும்!)

 6. 21/02/2011 இல் 09:48

  இத்தனை பேர் என் பிள்ளைக்கு இருக்கும்போது எனக்கென்ன கவலை? சென்ஷி, ஜாஃபர் நானா, ரஃபி, ரியாஸ், மாலிக் மற்றும் ஃபோனில் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. நன்றி.

 7. 21/02/2011 இல் 12:58

  // இத்தனை பேர் என் பிள்ளைக்கு இருக்கும்போது எனக்கென்ன கவலை? //

  அதுசரி… வாப்பா (முன்பு போலவே) கவலை இல்லாத மனிதராக (இன்னும்..ஹூம்..!!) வாழ்ந்து கொண்டிருக்கிறீர்!! வாழ்த்துகள் மகன்களுக்கு மட்டும்…!!

 8. தாஜ் said,

  21/02/2011 இல் 16:04

  அன்பு
  நதீமுக்கு என் வாழ்த்துக்கள்.
  -தாஜ்

 9. 21/02/2011 இல் 21:48

  நதீமுக்கு எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  லேட்டா சொன்னதுக்கு ‘எகிற’ மாட்டார்.

  //தனக்கு வேண்டியவைகளை சாமர்த்தியமாகப் பெற்றுக்கொண்டு நாம் சொல்வதை மட்டும் கேட்காமல் அவர் அலட்சியம் செய்வதால்//

  இதெல்லாம் இருக்கட்டும் நானா, இதுவரைக்கும் யாராவது நதீம் பற்றி குறை சொன்னார்களா? இல்லைல? அதான், அதான், அதானே நமக்கு வேணும்!!

 10. அக்பர் பொதக்குடி said,

  26/02/2011 இல் 13:38

  இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!!!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s