நெஞ்சடைக்கும் ரூ. 2,00,000,00,00,000 ஊழலைக் கிழிக்க நம்மால் இயலாது; இசை கேட்போம்! 2007-ம் வருடம் ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றது நஜீம் அர்ஷாத். ஆனால் ‘தோல்வியுற்ற’ பலருள் டாக்டர் பினீதா பாடி உருக்கியதுதான் இன்றும் மனதில் நிற்கிறது. எப்போதும் மொபைலில் கேட்பது. அப்போது ரிகார்ட் செய்ததை யுட்யூபில் இட்டேன் – உங்களுக்காக. ‘போடா புண்ணாக்கு’ என்று புறம் தள்ளிவிட்டது. ஏதோ ‘malformed video’வாம். ஒரு எழவும் புரியவில்லை. பிறகு முயற்சிக்கிறேன், இன்ஷா அல்லாஹ். இப்போதைக்கு இந்த 3gp கோப்பை கேட்டுப் பாருங்கள். பிரபலமான பாம்பே ஜெயஸ்ரீ இப்படி துல்லியமாகக் கூவுவதை விட பினீதா கூவியதுதான் ஏனோ பிடிக்கிறது. கந்தர் அனுபூதியின் காப்பு வரிகளை கொஞ்சம் – கொஞ்சம்தான் – மாற்றுகிறார். கீழேயுள்ள மீதி வரிகள் ஜெயஸ்ரீ பாடியதிலிருந்து. எழுதிய கவிஞரை நான் அறியேன். நம்ம சோமனும் சொல்ல மாட்டார்! முருகன் பாட்டை கிருஸ்துவரான Amrutha Bineetha Marks பாடுவதும் அதை இந்த முஸ்லிம் வலையேற்றுவதும்கூட ஒருவகை நல்லிணக்கம்தான். என்னா சொல்றீங்க மஜீது சார்? ஒண்ணு சொல்றேன்… முழுப்பாடலும் கேட்கும் முஸ்லிம்களுக்கு கண்ணெதிரில் தெரிவான் ‘அவன்’…! கேட்பார்களா, ‘காஃபிர்’ என்று என்னை மீண்டும் உதைப்பார்களா?
ஓ, ‘ட்யூப்’ வேலை செய்கிறது இப்போது..!
***
கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்
கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் (குமரன்) – பரம்
குன்றம் ஏறி நின்ற குமரா என்று
(கூவி)
பூவிதழ் மலர்ந்தருள் புன்னகை புரிவான்
புண்ணியம் செய்தோர்க்கு கண்ணெதிரில் தெரிவான்
(கூவி)
தேவியர் இருவர் மேவிய குகனே
திங்களை அணிந்த சங்கரன் மகனே
பாவையர் யாவரும் பாடிய வேந்தனே
பொன்மயிலேறிடும் ஷண்முக நாதனே
(கூவி)
**
**
updated on 06.08.2019
மஜீத் said,
08/02/2011 இல் 16:44
தலிவா, வாலி
ஆமா, கூவிக்கூவி அழைத்தது வாலிதானாம்
Serial killer said,
09/02/2011 இல் 05:47
Very nice!
Keep up the good work, people need quality web content to read and see 🙂
மஜீத் said,
10/02/2011 இல் 18:25
பெயரை மத்திக்குங்க ஸ்வாமி!
உதறுது!!
Maharajapuram Balakrishnan said,
09/02/2011 இல் 20:02
நன்றி. அப்படியே ஓ.ஸ். அருண் கூவுவதை இங்கே கேட்டு விடுங்கள்:
abedheen said,
10/02/2011 இல் 09:51
கூவவில்லை , குமுறுகிறார்!
மஜீத் said,
10/02/2011 இல் 18:24
ஆமா, ஹிந்துஸ்நாடக சங்கீதம்!
facebook said,
18/02/2011 இல் 08:01
i love it
வை.விவேகானந்தன் said,
07/04/2020 இல் 21:26
இயற்றியவர் கவிஞர் வாலி
அனாமதேய said,
07/04/2020 இல் 21:23
இயற்றியவர் கவிஞர் வாலி