சின்னப்புள்ளைங்கள்ளாம் அந்தப்பக்கம் போங்க. பொய்ட்டு இந்தப்பக்கம் வாங்க! சொன்னா கேக்க மாட்டிங்களே.. சரி, இந்த மஜீதின் தொல்லை தாங்க முடியலேங்க… நல்லிணக்கம் எழுதியவர் இப்ப ரொம்ப கெட்டுப்பொய்ட்டார். அவரு அனுப்புன இந்த பயங்கரத்த போடனுமா வாணாமான்னு ரொம்ப யோசிச்சேன். அந்த மனுசனும் தன்னோட பிளாக்குல இத போட மாட்டேங்குறாரு. சரி, நம்ம ஜனங்கள கொஞ்சம் நெளியவைப்போம்னு இப்ப போடுறேன். ஒண்ணு நிச்சயம், சிரிப்பீங்களோ இல்லையோ , படிச்சதுக்கப்புறம் ‘அத’ கேக்கவே முடியாது ஒங்களால!
***
வெள்ளிக்கிழமை தொழுகைக்கு மட்டும் கொஞ்சம் கூட்டமா தெரியிற கிராமம்; ‘அசரத்’ கிட்ட வந்தான் ஒரு பொடியன்.
சொந்தபந்தமில்லாதவன். அசரத்து எனக்கு உடனே நிக்கா பண்ணி வைங்கன்னான்.
கேட்டார்: பொண்ணு?
சொன்னான்: பாத்துட்டேன்.
சரிடா படவா, அவுக வீட்ல பேசி பாக்குறேன்.
இல்ல அசரத்து, நான் பேசிட்டேன். அதுக்கு சம்மதம், அதுக்கும் யாரும் இல்லைல?
டேய்…………….! யார்ரா அது?
விளக்கினான்.
கொஞ்சம் அதிர்ந்தார். (காரணம் வயசு, சைசு, ‘அனுபவம்’ எல்லாம் இவனை விட அதிகம்)
டேய் வேண்டாண்டா, விட்ருன்னார்.
போய்ட்டான்.
ஆனா, வாரா வாரம் அவன் அனத்துன அனத்துல, எப்படியோ ஒழின்னு ஒருநாள் நிக்கா பண்ணி வச்சார்.
அடுத்த வார கொத்பால, அசரத்து நான் தலாக் குடுக்கபோறேன்னான்.
அடிக்காத குறையா விரட்டி விட்டார்.
ஆனா, வாரா வாரம் அவன் அனத்துன அனத்துல, காரணத்தை சொல்லு, யோசிக்கலாம்னார்.
ரெண்டு உள்ளங்கையையும் சேத்து காட்டி, இத்தப்பெருசு இருக்கு, பயமா இருக்குன்னான்.
நொந்துட்டார்.
அடுத்த நாளே முறைப்படி பிரிச்சுவுட்டுட்டார்.
அடுத்த வெள்ளிக்கிழமை கொத்பா, துவா முடிஞ்ச கையோட முத ஆளா வெளில வந்து அவனுக்காக காத்திருந்தார்.
வந்தான்.
விட்ட்ட்டட்ட்டார் பாருங்க ஒரு அறை.
பார்த்தேயிராத அம்மாவை நீநீநீளமா கூப்டுட்டு, ஏன் அசரத்து இப்படி அடிக்கிரீங்கன்னான்;
ச மவனே, உன்னால இப்ப என்னால ஒரு துவாக்கூட ஒழுங்கா கேக்கமுடியலடா; ரெண்டு கையையும் ஏந்துனவுடனே, ‘அது’ தான்டா நினைப்பு வருது.
நன்றி : மஜீத் | கொல்ல : amjeed6167@yahoo.com
சென்ஷி said,
05/02/2011 இல் 12:19
கடவுளே.. கடவுளே.. கடவுளே.. கடவுளே..ன்னு அண்ணாமலையில ரஜினி அனத்துனது ஞாபகத்துக்கு வந்திடுச்சு… :))
கார்த்திக் said,
05/02/2011 இல் 16:33
:-))))))
ஹமீது ஜாஃபர் said,
05/02/2011 இல் 18:17
வயசுக்கு மீறினா அப்படித்தானிருக்கும். veச மவன் படுத்து தூங்குறதெ வுட்டுட்டு அசரத்தெ நெனக்கவச்சுட்டானே….!
இனிமே நான் கையெ விரிச்செல்லாம் துஆ கேட்கமாட்டேன். இது சத்தியம் மஜீது காக்கா..!
எம் அப்துல் காதர் said,
05/02/2011 இல் 21:27
இப்படியெல்லாமா கதை சொல்வாங்க!! சேச்சே… அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன். இன்னும் ரெண்டு சேர்த்து போட்டிருந்தா ஹி..ஹி..!!(யாருங்க அந்த அசரத்து!!)
maleek said,
06/02/2011 இல் 03:23
terrible majeed.
Jawahar said,
07/02/2011 இல் 11:39
அருமை
http://kgjawarlal.wordpress.com
A ABDUL RAHIM said,
07/02/2011 இல் 14:20
sirichi sirichi vairu punnagivitadhu
மஜீத் said,
07/02/2011 இல் 15:16
சென்ஷி, ஜாஃபர் நானா, கார்த்திக்,மாலீக், அப்துல் ரஹிம் அனைவருக்கும் நன்றி.
ஜவஹர் அண்ணே,, உங்க 2 வீலர், கண்டய்னர் லாரி ரேஞ்சுக்கு, U-Turn அடிச்சத நினச்சு இன்னமும் சிரிச்சுக்கிட்டுருக்கேன். பகிர்வுக்கு நன்றி.
எம். அப்துல் காதர் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் thanks.
(என் மாமனார் பெயரை வேற இன்ஷியலோட வச்சுருக்குறீங்க)
நீங்களும் சோமன் சாரும்தான் (பின்னூட்டங்கள்) நான் ஆபிதீன் பக்கத்துக்குள், ஊடுருவ முக்கியக் காரணம்.
Musthaq Ahmed said,
21/05/2016 இல் 16:02
எல்லாத்தையும் மறைச்சே சொல்றீங்கண்ணே….!?!?