கோழிகளே என்னை மன்னித்து விடுங்கள்

கவிஞர் சமயவேலின் சீரியஸான கவிதைக்கு முன் ஒரு கார்ட்டூன். ஓவியர் யாரென்று தெரியவில்லை. அலுவலகத்தில் உள்ளது. ஆங்காரமாய் வரும் அரபி சற்றே சிரிப்பதற்காக சுவரில் ஒட்டியிருக்கிறேன் இதை.  அந்தக் கோழியின் கிறக்கத்தைப் பாருங்களேன் (இதற்கும் வருவார் இஸ்மாயில் – ‘நானா , அந்த சேவல் செய்றது கொஞ்சம்கூட சரியா இல்லே; மார்க்கத்துக்கு விரோதம்’ என்று!).

***

புரியாமையின் சாலையில் விழுந்து கிடக்கும் கவிதை
சமயவேல் (உயிர் எழுத்து – நவம்பர் 2008 இதழ்)

என்ன ஆயிற்று
காந்தும் காலை வெயிலா
பக்கத்தில் நிற்பவனின் சிகரட் புகையா
சதக் சதக் என பாய் வெட்டுகிற
கோழிகளின் சதை நிண நாற்றமா
ரோமம் நீக்கக் கரகரவென்று சுற்றுகிற
கிரைண்டரின் சப்தமா
கொஞ்சம் கொஞ்சமாக ஏறும் கிறுகிறுப்பு
வெடித்து விடுமோ என் தலை?
அடிவயிற்றிலிருந்து ஏதோ கிளம்பி
நெஞ்சைப் பிசைந்து தலைக்கேறுகிறதே
ஓ, அதுதான்; தலை கோணி கண்கள் சுழன்று
மேலேறி மேலேறி
அது அல்லா கோயிலின் கோபுரமல்லவா?
அல்லாவே எனக்கு மட்டும் ஏன்
இப்படி நிகழ்கிறது?

*

வலிப்பு வந்தவரின் விரல்களை விலக்கி
இரும்பு படிக்கல்லை திணித்து அமுக்குகிறார்
சிகரட் புகைத்தவர்;
வலித்து வலித்து வெட்டி வெட்டி
எதனிடம் போராடுகிறது இவரது உடல்?
1 1/2கிலோ கறி கேட்டவர் கால்களைப் பிடிக்கிறார்
லெக் பீஸ் கேட்டவர் கைலியைச் சரி செய்கிறார்
கால்களில் சாய்ந்த தலையை கைகளில் ஏந்தி நிமிர்ந்தி
நீவி விடுகிறார் பக்கத்து டீக்கடைக்காரர்
வாயிலிருந்து வழிந்த கோளையை அவரது
கைலி கொண்டே துடைத்து விடுகிறார் ரோஜா நிற
கூடைக்காரர்
ஒருவித முனகலுடன் அடங்குகிறது வலிப்பு.

*

விழித்துப் பார்க்கிறேன்
சாலையில் கிடக்கிறேன், இல்லை
என்னைச் சுற்றி நிற்கிற
கருணை முகங்களின் பின் தெரிகிற
அல்லா கோயிலின் ஒரு கோபுரமல்ல
இந்த உலகின் ஆயிரமாயிரம் கோபுரங்களும்
ஏந்திப் பிடித்திருக்கிற
நூலூஞ்சலில் அல்லவா படுத்திருக்கிறேன்.

*

கோழிகளே கோழிகளே
என்னை மன்னித்து விடுங்கள்
உங்களைப் பற்றிக் கூற
என்னிடம் ஏதுமில்லை.

*

நன்றி : சமயவேல், உயிர் எழுத்து

3 பின்னூட்டங்கள்

 1. 18/01/2011 இல் 12:44

  சரியும் தவறும் முறையே நம்மிடமும் மற்றவர்களிடமும் தானே எப்போதும் உள்ளது? ஆச்சரியம் ஒன்றுமில்லை.

  அது சரி, கார்ட்டூன்ல ஏதும் ‘உள்குத்து’ இருக்கா?
  சொல்லிட்டீங்கன்னா மத்தவங்க நிம்மதியா இருக்கலாம்.

  (எதுக்கு சொல்றேன்னா, பலபேருக்கு சந்தேகம் இருக்கும், நம்மள சொல்றாரோன்னு)

 2. 18/01/2011 இல் 20:10

  பாவம் ஆபிதீன், இந்த அவதியிலும் கூவுறார்னா மஜீத் காக்காவுக்கு உள் குத்து கேக்குது! காக்கா ஏற்கனவே போஸ்ட் ஆபிஸில் வேலை செஞ்சார்களோ? அங்கேதான் உள் குத்தும் வெளி குத்தும் குத்துவாங்க (தபால்லெதான்)

 3. 19/01/2011 இல் 09:32

  கோழிகளே என்னை மன்னித்து விடுங்கள்.. நான் உங்களை ஒன்றும் சொல்ல போவதில்லை… ஆபிதீன் நானா..? கோழி உங்களுக்கு பிடிக்குமா? – தேரே பின் லேடன் என்று ஒரு படம் வந்ததே? பார்த்தீர்களா? நல்ல படம்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s