பல்லும் சொல்லும் – yours toothfully!

வரும் 26-ம் தேதி , நம்ம ‘சிரிப்பு டாக்டர்’ நாகூர் ரூமிக்கு ஒரு விருது கிடைக்கிறது – அவர் படித்த திருச்சி ஜமால் முஹம்மது காலேஜில். சிரிப்புக்காக அல்ல, Distinguished Alumnus Award in appreciation of his excellent contribution in the field of Higher Education! பாராட்டாவிடில் கொன்றே விடுவார் அவரது தம்பி தீன் என்பதால் பாராட்டுகிறேன். அழைப்பு இவிடே. அநேகமாக மகனார் நதீம் அந்த நிகழ்ச்சியில் ‘சிம்புடான்ஸ்’ ஆடக்கூடும். ரஃபிமாமா ஆயிற்றே! அது போகட்டும், இப்போது முனைவர் M.M. ஷாஹுல் ஹமீது Ph.D., (Controller of Examination, Jamal Mohamed College) அவர்களின் ‘பல்’சுவைப் பதிவை இடுகிறேன். அனுப்பிவைத்த தம்பி தீனுக்கு நன்றி.

தீன், பேராசிரியர்களுக்கு நகைச்சுவை நன்றாக வரும் என்று இப்போதுதான் தெரிகிறது. ஜமாலில் படிக்கிற காலத்தில் தெரிந்திருந்தால் விழுந்தடித்துக்கொண்டு திருப்பத்தூர் ஓடியிருக்க மாட்டேன் – எழவெடுத்த ‘பிஸ்னஸ்’ படிக்க.  இந்த ஷாஹுல்சார்  அந்தகால பியுசி ‘ஜுவாலஜி’யில் எனக்கு வகுப்பெடுத்த ஞாபகமில்லை. வகுப்புத்தோழன் கவிஞன் புஹாரியைத்தான் கேட்க வேண்டும். ஹாஸ்டலில் ‘பிராக்டர்’ஆகவும் இருந்த ராஜகிரி அல்லது அய்யம்பேட்டை புரொஃபஸர் ஷாஹுல் ஹமீதுசாரா இவர்? ஒல்லியாய்.. வெள்ளையாய்.. மீசை இல்லாமல்…  குழப்பம். அதல்ல முக்கியம் , அரபியை ஏமாற்றிவிட்டு எழுத்துப்பணி செய்தே ஆகவேண்டும்!  செய்கிறேன். ‘யோவ்.. எழுதறதை தவிர்த்து எல்லா வேலையும் நீர் பாத்தா அப்புறம் திட்டுவேன்’ என்று நண்பர் சோமன் கண்டித்தாலும் சரி. இன்னல் நீங்கிய இஸ்லாமியப் பல் இன்றியமையாததாக்கும்!

பி.கு : இந்த நாலுவரி எழுதுவதற்குள் ஜபருல்லா நானாவிடமிருந்து (இவரும் ஜமால் முஹம்மது கல்லூரியின் பழைய மாணவர்தான்) நானூறு எஸ்.எம்.எஸ்கள்! பிறகு பதிகிறேன். சரியா? ரியாஸ், என்னை எழுதவே விடமாட்டேன்கிறார்கள்…!

**

பல்லும் சொல்லும் (pdf) – முனைவர் ஷாஹுல் ஹமீது

படிச்சாச்சா? பின்னியெடுக்கும் ‘Mr. Bean’-ஐயும் பாருங்க.

*

நன்றி : 

Dr. M.M. Shahul Hameed Ph.D.,
Controller of Examinations
Jamal Mohamed College
Tiruchirappalli – 620 020
mmsjmc@yahoo.co.in

7 பின்னூட்டங்கள்

 1. 12/01/2011 இல் 13:11

  நானும் ஜமால்முஹமது காலேஜ்தான். எனக்கு எதாவது அவார்ட் உண்டா என்று கேட்டு சொல்லுங்கள்… ஹா ஹா.. (சைத்தான்களுக்கு நாமே கொடுத்துக்காண்டால்தான் உண்டு.)

  வாழ்த்துக்கள் நாகூர் ரூமிக்கு. பிரம்மராஜனின் மீட்சிக் காலத்தில்.. நாகூர் ரூமிக் கவிதைகள் மிகவும் சிக்கலான மொழிநடையில் இருந்ததாக நினைவு.. அப்போ நம்ம அறிவு அவ்வளவுதான். இப்போ மீண்டும் அவரது கவிதைகளை வாசித்துப் பார்க்கவேண்டும்.

 2. 12/01/2011 இல் 13:55

  கேட்டேன்; இல்லையாம். கவலைவேண்டாம் ஜமாலன். நானோ அல்லது தாஜோ கல்லூரி கட்டினால் கண்டிப்பாக முதல் விருது உங்களுக்குத்தான். ‘செந்தமிழ் ஷைத்தான்!’. நல்லாருக்கா?

 3. 12/01/2011 இல் 15:36

  நானே ஒரு காலேஜ் கட்டி, எனக்கு “கௌரவ” டாக்டர் விருது………(கொடுக்கிறதா? வாங்குறதா?) கொடுத்து வாங்கிக்கிற வேண்டியதுதான். வேற வழி?

  என் நானா, ஆபீஸ் நேரத்துல இந்த வீடியோ பாக்கவேணாம்னு ஒரு அடிக்குறிப்பு வைக்கக்கூடாது?
  சத்தம் போட்டு சிரிச்சு நல்லா மாட்டியாச்சு!
  அதனால என்ன, சூப்பர் வீடியோ.

 4. நாகூர் ரூமி said,

  13/01/2011 இல் 00:55

  விருது விருது-ன்னு ஆபிதீன் எழுதுனதும் எனக்கு என் கல்லூரியில் — ஜமாலில் அல்ல — நடந்த ஒரு நிகழ்ச்சி ஞாபகம் வருகிறது. ஃபசுலு மொஹிதீன் என்று ஒரு தமிழ்ப் பேராசிரியர் இருந்தார். ரொம்ப குசும்புப் பேர்வழி. தமிழ்த்துறைத் தலைவர். என் பிஎச்டி-க்கு அவர்தான் வழிகாட்டி. எம்ஜிஆருக்கு posthumous -ஆக பாரத ரத்னா விருது கொடுத்தபோது அதை ஃபசுலு மொஹிதீனிடம் உர்து பேராசிரியர் ஒருவர் வந்து, “என்ன உங்க எம்ஜிஆருக்கு விருந்து கொடுத்திருக்காங்களே” என்றார்! அதற்கு உடனே ஃபசுலு சார், “விருந்தா? செத்துப் போவவனுக்கா?’ என்றார்! உருது பேராசிரியருக்கு ஒன்றும் புரியவில்லை. எனக்கும் அப்படி ஒரு விரு(ந்)துதான் போலிருக்கிறது!

  • 13/01/2011 இல் 12:57

   Jokes apart, படித்த கல்லூரியில் இப்படி ஒரு விருது வாங்குவது சாதாரணமானதல்ல; சாதனைதான்.

   வாழ்த்துக்கள் ரஃபி சார்!!
   உங்களை அறிந்த அனைவருக்கும் இது பெருமையே.

 5. நாகூர் ரூமி said,

  13/01/2011 இல் 00:56

  போவவனுக்கா-வை போனவனுக்கா என்று படிக்கவும்

 6. ரியாஸ் said,

  14/01/2011 இல் 14:13

  நாலு வரியில் நானூறு எஸ்.எம்.எஸ் அடுத்த பதிவிற்கு தலைப்பு வைக்கலாம். ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

  ரஃபி நானாவுக்கு வாழ்த்துக்கள்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s