காஃபிர் என்று எங்களை
நீங்கள் சொல்கிறீர்களே…
அதன் பொருள்தான் என்ன?
என்றார் ஒரு ஹிந்து நண்பர்.
‘நிராகரிப்பவர்’ என்றேன்
எல்லா மதங்களும்
மற்றவைகளை
நிராகரித்துக்கொண்டுதானே உள்ளன..
ஏன், அறிவுஜீவிகள் என்று
சொல்லிக் கொள்ளும்
நாத்திகர்கள் கூட
இறைவனையே
நிராகரிக்கிறார்களே..
கொஞ்சம் யோசித்தால்
மனிதர்கள் எல்லோருமே
காஃபிர்கள்தான் என்றார்!
***
– இஜட். ஜபருல்லா
0091 9842394119
0091 9442092346
A.Mohamed Ismail said,
11/01/2011 இல் 06:32
எல்லோரும் தான் நம்பும் அல்லது ஏற்கும் கருத்தை தவிர்த்து பிற கருத்தை நிராகரிப்பவர்கள் தான். ஆனால் குரான் ஷரீஃப் கூறுவது சத்தியத்தை நிராகரிப்பவர்களை என்பது எனது 2 பைசா பெருமானமுள்ள கருத்து..
Ahmed Mohideen said,
11/01/2011 இல் 10:46
வ அலைக்கும் சலாம்
தம்பி ரியாஸ் மூலமாக தாங்கள் அனுப்பிய ஆலோசனைக்கு நன்றி.
அன்பன் அஹ்மத்
Ahmed Mohideen said,
11/01/2011 இல் 10:53
காபிர்கள் என்றால் “நிராகரிப்பவர்கள்” என்ற பதம் சரியல்ல. இறை மறுப்பாளர்கள் என்பதே சரி. முஸ்லிம்களுக்கும் காபிர்களுக்கும் உள்ள வித்தியாசம் நான் அறிந்த வரையில், நாம் இறைவனை ஒப்புக்கொண்டவர்கள் அவர்கள் இறைவனை (அல்லாஹ்வை) மறுத்தவர்கள். ஏற்கனவே பல பிரிவுகளால் குழப்பத்தில் இருக்கும் சமுதாயத்தை, ஜபருல்லாஹ் நானா கவிதை மூலமாக மேலும் குழப்ப வேண்டாம் என்பதே என் கருத்து.
அன்பன் அஹ்மத்
ஹமீது ஜாஃபர் said,
11/01/2011 இல் 22:47
இறை மறுப்பாளர்கள் என்றால் எப்படி சரியாகும்? காஃபிர்களிடமும் இறைவன் இருக்கின்றான். அல்லாஹ் என்ற பெயரை நீங்கள் வைத்துக்கொண்டீர்கள். அவர்கள் ஆண்டவன், பகவான் என்று வைத்துக்கொண்டார்கள். பெயரிடப்பட்டப் பொருள் மாறவில்லையே!
அவர்களை விடுங்கள் நம்ம சுன்னத்து ஜமாத்தைப் பொருத்தவரை தௌஹீது ஜமாத் நிராகரிப்பவர்கள்; தௌஹீதுக்கு சுன்னத்து நிராகரிப்பவர்கள் in otherwords kaafir on both sides. இவர்கள்/சுன்னத்துக்கு அல்லாவுக்கு உருவம் இல்லை; அவர்கள்/தௌஹீதுக்கு அல்லாவுக்கு கால் இருக்கிறது. இப்பொ சொல்லுங்க அஹமது மொஹைதீன் அவர்களே யாருக்கு யார் காஃபிர் என்று.
குறிப்பு: ஜஃபருல்லாஹ் நாநா தெளிவாகத்தான் இருக்கிறார்.
Ahmed Mohideen said,
12/01/2011 இல் 16:24
தங்களின் மேலான கருத்துக்கு நன்றி ஹமீது ஜாஃபர் நானா. நான் விதன்டாவாதம் செய்யவில்லை. எனக்கு தெரிந்த விளக்கத்தை பதிகிறேன். அல்லாஹ் என்ற பெயரை நாம் வைத்து கொள்ளவில்லை. நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தகப்பனார் பெயர் அப்துல்லாஹ் என்பதில் இருந்து அல்லாஹ் என்ற பெயர் வழக்கத்தில் உள்ளது என்பது தெரிகிறது (refer Janab. O. Nurul Amin’s blog spot). Rejection is entirely different from denial. இந்த கருத்தில் தான் நான் எழுதியது.
குறிப்பு: தெளிவாக இருந்தால் ஒரு குழப்பமும் இல்லை. எனினும் மோரை குழப்பினால் தான் வெண்ணை வரும்.
ஆபிதீன் said,
13/01/2011 இல் 09:19
அட, விடுங்க மொஹிதீன். நேற்று ஃபோன் செய்த ஜபருல்லாநானா, ‘நெறய பேரு பேசுனாங்க இதுபத்தி.. ‘நான் எங்கே சொன்னேன்? நல்லா படிங்க முதல்லெ. ‘எல்லாரும் காஃபிர்’ண்டு அந்த ஹிந்து நண்பர் சொல்றார்’ண்டேன்.’ என்று மேலும் குழப்பினார். இவரை நிராகரிக்க பயமாக இருக்கிறது!