2010ன் மிக முக்கியமான பதிவு

ஜாஃபர் நானா, இங்கே ‘க்ளிக்’ செய்யவும். நன்றி.

17 பின்னூட்டங்கள்

 1. 05/01/2011 இல் 16:03

  வாழ்த்துக்கள் ஜாஃபர் நானா!

  எனக்கும் ஆசைதான், கேட்கவும் செஞ்சேன், புள்ளை கேக்குற வயசைப் பாருன்னு (அடிக்காத குறைதான்) விரட்டிவிட்டுட்டா, மனைவி!

  எதுக்கும் ஒரு குடுப்பினை வேணும்லா?

 2. 05/01/2011 இல் 18:18

  ஆபிதீன், நல்ல பயனுள்ள தகவல் – வாழ்த்துக்கள்.

  என்னை மாதிரி குறுக்கு புத்தி உள்ளவனுக்கு இந்த டெக்னிக் தெரியும். இருந்தாலும் இது எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி. அதுக்குத்தான் பிறந்தவுடனேயே சுன்னத் பண்ணிடனும்னு சொல்றது. அதெ இங்கெ செய்றாங்க, நம்மூர்லெ…?

 3. maleek said,

  05/01/2011 இல் 18:42

  பாத்து நிதானமா செய்றதில்லியா …..என்னா சின்னப்பிள்ளத்தனமா இருக்கு !

 4. 05/01/2011 இல் 19:53

  இவ்வளவு சிரமம்லாம் தேவையில்லை.

  ஜிப் வைக்காம பட்டன் வச்ச டவுசர் போட்டுவிடவேண்டியதுதானே?

  • abedheen said,

   06/01/2011 இல் 09:54

   டவுசரும்தான் எதுக்கு?

   • soman said,

    07/01/2011 இல் 01:49

    ஓய், நல்லா தான் இருக்கு, குஞ்சும் குஞ்சு சார்ந்த பதிவுகளும்.

    அது சரி, அங்கன ஒண்ணு இங்கன ஒண்ணு எழுதினா ஆச்சா? தொங்க போட்டுக்கிட்டு எவளோ நாள் அலையறது, நாக்கை.

    எதாச்சும் வெடுக்குன்னு புத்தகம் கித்தகம் இந்த வருஷம் பண்ணி இருக்கலாமே, விசேஷம் எதாச்சும் உண்டா?
    முழுகாம இருக்கீரான்னு தெரியலை, ஊட்டுப்பக்கம் வந்துட்டுப்போம்! சரியா!

    அன்புடன் சோமன். எப்போவாச்சும்.!

 5. 08/01/2011 இல் 09:35

  சோமன் சார், உங்கள் மேல் கோபமாக இருக்கிறேன். ஒரு மாதத்திற்கு முன்பு – உங்களின் soman2y@gmail.com மெயிலுக்கு – நாகூர் தர்ஹா சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ காதர் அவர்களின் ஒரு பாடலை (mp3) அனுப்பி வைத்தேன் – சிறிய ஒரு விமர்சனம் எழுதச்சொல்லி (இயன்றால் நண்பர் சஞ்சய்சுப்ரமண்யத்தின் அபிப்ராயத்தையும் இணைக்கச் சொல்லி). இப்போது soman3y@gmail.comல் வந்திருக்கிறீர்கள், குஞ்சோடு!. உங்கள் வூட்டை தினமும் பார்க்கிற எனக்கு நீங்கள் செய்வது சரியாகப் படவில்லை. என்னமோ போங்க..

  எழுதறேன் சார் சீக்கிரம். (பல விஷயங்களால் காயப்பட்டு) மனசு பிறாண்டுகிற பிறாண்டலில் மாரடைப்பு வருகிறது. என்ன செய்வேன்? துஆ செய்யுங்கள்.

  • soman said,

   08/01/2011 இல் 14:32

   அட ராமா! மன்னிக்கணும் என் இனிய ஆபிதீன்!!

   நானே ரெண்டாவதை தொறக்கப்பாத்து முடியாமல்தான் மூணாவது கட்டிட்டு வந்திருக்கேன்.

   அட, சந்தேகத்துல பொண்டாட்டி சாமானுக்கு பூட்டு போட்டு சாவியையும் தொலைச்ச கதையாய் ஆகிப்போச்சு.

   படிக்கும்போதே அழுவாச்சி வரமாதிரி பதில் மட்டும் போட தெரியுது, கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத்தூக்கி மணையில் வை’ ன்ன கதையாய் ஒரு ஈட்டுக்கு பத்து புத்தகமாச்சும் எழுதி இருக்க வேணாமா, என்ன ஸ்வாமி நீர். ?

   தெருவில போறவன்லாம் உழப்பறான். கண்காட்சியில் எனி இந்தியன் பதிப்பகத்து காரனை போய் அசிங்கமா திட்டி வச்சேன். முக்க வேண்டியது நீர் தானே, அவன் என்ன பண்ணுவாங்கறது கூட மறந்து போச்சு! என்னயா உளைச்சல் உமக்கு?

   ச்சே.!

   சரி சரி அழுவதையாச்சும் கவிதையாய் அழுது தீரும் ..! கடன் கேட்ட பாரதிக்கு எவனோ சொன்ன மாதிரி உம்ம கற்பனை ஊத்து வத்தாம இருக்க அல்லா கஷ்டப்படுத்தறான்னு நினைச்சுக்கும். நான் எதாச்சும் பண்ணனுமா சொல்லும்!

   • 08/01/2011 இல் 15:33

    //நான் எதாச்சும் பண்ணனுமா சொல்லும்! // ஒண்ணும் பண்ணவேணாம் சார், அப்பப்ப என்னய திட்டுங்க; போதும்! இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க புது பொண்டாட்டிக்கு அந்த mp3 கோப்பை அனுப்புவேன். கேட்டுவிட்டு ஒரு சின்ன விமர்சனம் அனுப்பிவைங்க. அவ்ளோதான்.

   • 09/01/2011 இல் 23:44

    சோமன் சார், இப்டி திடீர்னு காணாப்போய்ட்டா ஆபிதீன் என்னதான் பண்ணுவார்? அட நாங்கதான் என்ன பண்றது? தேடித்தேடி வீங்கிப் போச்சு (விரல் நுனிங்க)

    எங்களைமாதிரி ஆளுங்களை உள்ளே விட்டுட்டு நீங்க எங்கதான் போனீங்க?

 6. soman said,

  11/01/2011 இல் 19:07

  ஆபிதீனுக்கு, தங்கள் மடல் கண்டேன் மனமிக மகிழ்ந்தேன்.

  விவாதிக்கவும், விமர்சனம் சொல்லவும் கூடாத ஒரு வித்வத். அந்த பாடல் மனசின் ஆழத்தில் இருந்து வருவது, கீராவின், விளாத்தி குளம் சுவாமிகள் பகுதியை புரட்டி பாரும். கால காலமாக
  எங்களுக்கு ஒட்டாத லயமும், சுருதி சுத்தமும், அதீத ஸ்தாயியும் இந்த குரல்களில் வசப்பட்டு இருக்கும். ‘இசைத்தமிழ் நீ செய்த அரும்சாதனை’ கேட்டு இரங்காத காதேது? அந்த ஈச்சை மரத்து
  இன்பச்சோலையும், தக்குபீர் முழக்கமும், தீன்குலப் பெண்ணும் கொள்ளையடித்த காதுகள் எத்தனை?

  எல்லாரும் அந்த உச்சஸ்தாயி ப்ருஹாக்களின் காதலர்கள் தான், சஞ்சய் உள்பட. ஒரு வில் பவர் தான் அடி நாதம். உங்க ‘பாங்கு’ சொல்லும்போது கட்டையை நீட்டிய ஆசாமி மாதிரி தான்.
  அனாயசங்களின் எல்லை எது என்று முயற்சிக்கும் வெறி அதில் இருக்கும். எல்லா கலைகளிளுமே.

  மற்றபடி ராக இலக்கணம், ஸ்வர பிரஸ்தார வேலைப்பாடுகள் எல்லாம் வெறும் கேள்வி ஞானம் மட்டும் தான். பிரமிக்க வைக்க வேண்டும் என்ற விருப்பின் உச்சம். ஜான் ஹிக்கின்ஸ் கேட்டு
  இருக்கிறீர்களா? கேளுங்கள். மற்றபடி உங்க காது விசேஷம், ரசனை எல்லாம் நாங்க விவாதித்து ஓய்ந்த விஷயம் தான். எழுதறதை தவிர்த்து எல்லா வேலையும் நீர் பாத்தா அப்புறம் திட்டுறதையும் விட்டுடுவேன். ஒரு நல்ல திலீப் படம் வந்திருக்கு. போய் பாரும். எழுதும். இதுக்கு மேல எழுதினா கேட்ட வார்த்தை கலக்காம ஒரு பின்னூட்டம் போட்டாச்சுன்னு ஒரு திருப்தி கேட்டுப்போகும்.

  முத்தம் எச்சியோட வச்சிருங்க! வேற எப்போவாச்சும் வாங்கிக்கறோம். ஓடியா போப்போகுது!?

  • 12/01/2011 இல் 15:08

   நன்றி சோமன். ஹிக்கின்ஸ் பாகவதரை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி. இன்றிரவு கேட்பேன். ஆமா, உங்க வூட்டுல புதுசா ஒரு ஃபோட்டோ இருக்கே. உங்க மகனா?

   • soman said,

    12/01/2011 இல் 20:41

    இந்த கேள்விக்கே கேஸ் போடலாம். ஏகப்பட்ட சார் போட்டப்போவே உஷார் ஆயிட்டேன். நான் தான் ஸ்வாமி அது. சரி சரி, எவ்ளோ எழுதிருக்கேன், இப்பிடி வெறும் ‘உம்’ கொட்டினா தமிழ் எப்டி வாளும் ?

    நல்லா இரும்.

 7. soman said,

  11/01/2011 இல் 19:20

  மறந்தே போச்சு, மஜீத்துக்கு ரொம்ப நன்றி.
  ரொம்ம்பவே.

  பின்னூட்டங்களை பதிப்பிக்க மாட்டேன்.
  பொம்பளை பிள்ளைக படிக்கற சமாசாரம்லா,
  ஏகப்பட்ட பின்னூட்டம் இருக்கு, தனியா
  ஒரு பதிவில் போட்டுக்கறேன் சரியா,
  கோச்சுக்காதீங்க, பதிவிலேயே சொல்லிடுவேன்.
  அப்பப்போ.

  எங்க சுத்தினாலும் எடத்துக்கு வரதுன்னு சொல்லுவாக, பாட்டில்.
  அது மாதிரி இந்த ஆபிதீனுக்கு எழுதறது கெட்ட வார்த்தை வந்துடுமோன்னு இருக்கு. உங்களையும் ஆட்டத்துல சேத்துகிட்டாச்சு.

  • 12/01/2011 இல் 23:46

   ஆட்டத்துல சேத்துக்கிட்டதுக்கு நன்றி.

   இனி நீங்க தப்பிக்க முடியாது.
   போட்டோ இருக்குல்ல?
   நம்ம பேட்டை பசங்ககிட்ட குடுத்து “தூக்க” சொல்லிட்டா, இட்டாந்துருவானுங்க!

 8. soman said,

  12/01/2011 இல் 02:17

  சரியா குண்டி களுவினமான்னு சந்தேகத்தில என் பதிலை பதிவிலயும் போட்டுட்டேன். பழைய பதில்களில் படிப்பீரானு தெரியலை அதான் சொந்த பதிவிலயும் போட்டுட்டேன். சரியா?
  (பானாவுக்கு பானா) .
  இந்த எழவெடுத்த பிழை சரி பண்றதுக்கு இன்னும் ரெண்டு பதிவு போட்டுடலாம்.

  ‘நல்லா தான் இருக்கு…ஆனா’ என்று இழுப்பான் என் நண்பன் ஒருத்தன். எதுக்கெடுத்தாலும்.நம்ம ‘யளனகபக ட்மதாத’ மாதிரி வராது. டைப் அடிக்கற டைப்பே ஒரு டைப்பா இருக்கு.

  நம்மாளுக்கு சாட் பண்ணி பண்ணி டிரான்ஸ்லிட்டரேஷன் தமிழ் கூட வசப்பட்டு போச்சு.
  அப்படியும் ஒரு தப்பு வந்திருச்சு மன்னிக்கணும் ஆபிதீன்.
  ‘கெட்டுப்போச்சு’ ங்கறது கேட்டு போச்சுன்னு வந்திருச்சு. பெண்டாட்டி அடிக்கும்போது ‘ பேண்டா’ட்டி ன்னே வருது.

  நீர் (ரொம்ப) பெரிய ஆளானதுக்கப்புறம் ஆபிதீனுக்கு அடியேனின் கடிதங்கள்னு புத்தகம்போட்டுக்கலாம். இப்போவும் ஒண்ணும் கேட்டுப் போகலை தான். (அடச்சே, திரும்பவும் ‘கேட்டு’. ) கெட்டுப்போகலை தான் சரி.

  வரட்டா!

 9. 13/01/2011 இல் 09:49

  ‘துடித்தெழும்’ இளமை கொண்ட சோமன் சார்..
  உங்கள் வீட்டுக்குப் போய் – பல முயற்சிகளுக்குப் பின் – கமெண்ட் கொடுத்துவிட்டு வந்தேன். வெளியாகுமா இல்லையா என்று தெரியாது. அதனால் இங்கேயும் :

  சோமன் பாய்,

  மறுமொழியிட இது இரண்டாவது முயற்சி.

  முதலில் உங்கள் பதிவின் urlஐ கண்டுபிடிப்பதற்குள் விடிந்துவிடுகிறது (இதை வேறு மாதிரி சொல்லனும், இங்கே வேண்டாம்!). அப்புறம் கடினமான டெம்ப்ளேட். cobol programmerஆக இருந்தால் இப்படியா சாமி? நல்லா இருங்க. எல்லாத்துக்கும் நன்றி. குளிக்காமல் என்னைப் பார்க்க வரும் நண்பர் மஜீத், ‘நீங்கள்லாம் என்ன ஜோக் எழுதுறீங்க? சோமன் சாரை பார்த்து கத்துங்குங்க’ என்பார். வெளியேறுவதற்கு டிக்கெட் போடுவதை நினைத்து நானும் விழுந்து விழுந்து சிரிக்கிறேன்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s