அறை எண் 2 – மஜீத்

சென்றவாரம் இங்கே பதிவிலேறிய ‘இப்னு சினாவின் உளவியல்’  வைத்தியம் (நன்றி : இத்ரீஸ்) படித்தவுடன் என் நினைவில் வந்த சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு இது:

பள்ளி விடுமுறை நாட்களில் – விளையாடும் நேரம் தவிர – எனது தந்தையாரின் கிளினிக்கில்தான் என்னைக் காணலாம்.  அப்போது அவருக்கு உதவி, உபத்திரவம் எல்லாம் நான்தான்.  அப்போதெல்லாம் பென்ஸில்லின் என்ற எதிர் நுண்ணுயிரி (anti-biotic) மிகப் பரவலாக உபயோகத்திலிருந்தது. OD முதல் VD வரை (அதாவது ordinary disease முதல்J) அதுதான் சர்வரோக நிவாரணி. அதேநேரம் அதன் ஒவ்வாமை (reaction) சமயத்தில் கொன்றும் விடும்.

அப்போது தஞ்சை மருத்துவக் கல்லூரியின் ‘டீன்’ மகளின் உயிரையும் சகல வசதிகளும் உள்ள கல்லூரி மருத்துவமனையிலேயே அந்த ஒவ்வாமை பறித்துவிட்டதாக ஒரு செய்தி உலாவியது. உண்மையாகத்தான் இருக்க வேண்டும்.

என் முன்னால்கூட ஒருமுறை ஒருவருக்கு அதுபோல ஏற்பட்டு, உடனடியாக இரண்டு மூன்று மாற்று ஊசிகள் போட்டு மிகுந்த பிரயாசைக்குப் பின் அவர் உயிர் தப்பினார். (இந்தக் களேபாரத்தில் அவருக்கு இருந்த 104 டிகிரி காய்ச்சல் 5 நிமிடத்தில் காணாமல் போனது வேறு விஷயம்).  அதனால் மருத்துவர்கள் பென்சில்லினை முடிந்தவரை தவிர்த்தார்கள். அந்த வயதில் எனக்கு அது ஒரு மிகப்பெரிய பயங்கரமாகப் பட்டது.

ஒருமுறை ஒருவருக்கு எனது தந்தை ஒரு ஊசி போட்டுவிட்டு சிரிஞ்சை எடுக்கக் கூட இல்லை. அந்த நபர் சரேலென தலையைத் தொங்கப்போட்டார். எனது தந்தை அவரைக் கவனித்துக் கொண்டே சிரிஞ்சை வைத்துவிட்டு, காதர், காதர் என்று இருமுறை அழைத்தார். பதிலில்லை. மாறாக கொர்கொர் என்று மூச்சு இழுக்கும் சத்தம். கண்கள் சொருகிக்கொண்டு விட்டன.
எனக்கு பயத்தில் (பென்சில்லின் ரியாக்சன்!!) உடல் ஆடிவிட்டது. என் தந்தையார் முகத்தில் சிறிதும் பதட்டமில்லை. தம்பி ஒரு டம்ளரில் தண்ணி எடுடா என்றார். நான் தண்ணி எடுக்கத் திரும்பினேன். பளார் என்று சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தபடி தண்ணி அள்ளினேன். சத்தம் வேறு ஒன்றுமில்லை, என் தந்தை காதருக்கு விட்ட அறை. அவ்வளவுதான்.

உடனேயே என்னண்ணே? என்று கேட்டது வேறு யாருமல்ல; காதர்தான்.

இதற்கிடையில் நான் தண்ணீரோடு வந்து ‘அத்தா தண்ணி’ என்றேன். அநேகமா அது தேவையில்லைனு நினக்கிறேன் என்றவர், காதர் தண்ணியா வேணும்? னார். நடந்தது எதுவும் அறியாத காதர் ‘இல்லண்ணே  வேணாம்’னார். அப்புறம், சிரித்துக்கொண்டே ஏண்டா உனக்கு இவ்வளவு பயம்னு? கேட்டு மாத்திரைகளைக் கொடுத்து அனுப்பியவுடன் நான் பயம் மாறாமல், ஏன்த்தா, அந்த ஆளுக்கு ரியாக்சன் தானே ஏன் மாற்று மருந்து தராமல், அறைவிட்டீங்கன்னு கேட்டதுக்கு, ‘அது ரியாக்சனுமில்ல ஒண்ணுமில்ல. நான் பென்சில்லினும் போடலை. அவனுக்கு அந்த ஊசி இன்னிக்கு நாலாவது நாளா போடுறேன். திடீர்னு எப்டி ரியாக்சன் வரும்? அவனுக்குப் பயம். இஞ்செக்சன் ஷாக். அதான் விட்டேன் ஒரு அறை’ என்றார்.

இன்னும் எனக்குப் பயம் போகவில்லை. ஒருவேளை கவனிக்காமல் விட்டிருந்தால் என்னாயிருக்குமென்றேன். போய்ச் சேர்ந்திருப்பான்னார்.

தொட்டால் சுகம், தூக்கினால் சுகம் மாதிரி அறைந்தாலும் சுகமே!

அது என்ன “அறை எண் 2”?  ஆம் இது அறை எண் இரண்டுதான்;
அப்போ அறை எண் 1? அது  இங்கே!

***

நன்றி : மஜீத்

E-Mail : amjeed6167@yahoo.com

4 பின்னூட்டங்கள்

 1. 21/12/2010 இல் 20:04

  தொட்டால் சுகமும் வரும் சொரிச்சலும் வரும்-காஞ்சூர் இலையைத் தொட்டால்…! உங்க பாஷைக்கே வாரேன். தொட்டால் சுகம் சரி அது என்ன தூக்கினால்….? தூக்கினால் சுகமா? இல்லை தூங்கினால் சுகமா? அறை-யும் சுகமே…!

 2. 20/08/2013 இல் 12:31

  உங்க அத்தா அறைஞ்சதும் பத்தாம பையன்களையும் தயார் பண்ணி விட்டுட்டீங்களா….

 3. 20/08/2013 இல் 12:51

  🙂

  • Jeevasundari Balan said,

   20/08/2013 இல் 14:07

   பயங்கரமான அறையா இருக்கே….. பென்சிலின் பயங்கரத்தை விட விட்ட அறைதான் பயமா இருக்கு….


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s