சொல்வேந்தர் சங்கம் – சாதிக்

ரியாதில் இருக்கும் தம்பி சாதிக்-இன் (சித்தி ஜுனைதா பேகம், கலைமாமணி நாகூர் சலீம், கதை வசனகர்த்தா தூயவன் ஆகியோர் அடங்கிய பிரபல இலக்கியக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று சொன்னால்தான் ‘நாகூர்மாமி’ பாராட்டும்!) இந்த உரையில் வேடிக்கையான ஒரு கதை இருக்கிறது.  படுவேகமாகப் பறக்கும் ராக்கெட்டைப்  பார்த்து பொறாமை கொண்ட ஒரு விமானம் ,’நீ எப்படி இவ்வளவு வேகமாகச் செல்கிறாய்?’ என்று கேட்டதாம்.  ‘உன் பின்னால் யாராவது நெருப்பு வைத்தால்தான் தெரியும்’ என்று பதில் வந்திருக்கிறது.  மேலே போவதற்காக எதையெல்லாம் வைக்க வேண்டியிருக்கிறது!

“I never could make a good impromptu speech
without several hours to prepare it.” –  Mark Twain

***

Toastmaster International என்றழைக்கப்படும் அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சொல்வேந்தர் சங்கம் (இது ரியாத் தமிழ்ச் சங்கத்தின் மொழிபெயர்ப்பு) 60 ஆண்டுகளுக்கும் மேலாக பல சொற்பொழிவாளர்களையும் ஆற்றல் மிக்க தலைவர்களையும் உருவாக்கியிருக்கிறது. நண்பர் இப்னுஹம்தூனின் வலியுறுத்தலின் பேரில் (அவருக்கும் துணை தேவைப்பட்டது) நானும் அங்கு என்னதான் நடக்கிறது பார்ப்போமே என்று 6 மாதங்களுக்கு முன்பு சேர்ந்து விட்டேன்.

உண்மையில் அதில் சேர்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.  மேடையில் பேசுவது என்பது இவ்வளவு சுலபமானதா என்று நினைக்கும் அளவிற்கு இந்த கிளப் நம்மை மாற்றிவிடுகிறது.

கடந்த திங்களன்று (06/12/2010-ல்) இந்திய பன்னாட்டு பள்ளியில் , Taj Toastmasters Club என்றழைக்கப்படும் இந்தியர்களை அங்கத்தினர்களாகக் கொண்ட ரியாதில் உள்ள (இது போன்ற 60க்கும் மேற்பட்ட பல நாட்டவர்களுக்கான குழுக்கள் ரியாதில் உள்ளன),  எங்கள் சொல்வேந்தர் குழுவின் வாராந்தரக் கூட்டத்தில் நான் எனது 6வது சொற்பொழிவை  , “தோல்விகளும் அவமானங்களும் வெற்றியை நோக்கிய இரு இணைச் சாலைகள்” என்ற தலைப்பில் கொடுத்தேன். அது அனைவராலும் ரசித்து வரவேற்கப்பட்டது.  அதன் மொழிபெயர்ப்பை கீழே தந்துள்ளேன். (ஒரு அடிப்படை பேச்சாளராக ஆவதற்கு டோஸ்ட்மாஸ்டர் கிளப்பின் வரையறையின்படி மொத்தமாக 10 தலைப்புகளில் சொற்பொழிவாற்ற வேண்டும். ஒவ்வொரு தலைப்பிலும் பேச்சாற்றலின் ஒரு அம்சத்தை வற்புறுத்துகிறார்கள்.) இதில் ஆறாவது பேச்சு குரலின் ஏற்ற இறக்கத்தை அடிப்படையாகக் கொண்டது)

என் பேச்சின் தொனியை என்னால் முழுவதுமாக எழுத்தில் விவரிக்க இயலாது. எனவே ஒரிரு இடங்களில் சில கருத்துக்களை எப்படி வெளிப்படுத்தினேன் என்பதை அடைப்புக்குள் அதன் தாக்கத்திற்காக (Effect) சேர்த்துள்ளேன்.

***

தோல்விகளும் அவமானங்களும் வெற்றியை நோக்கிய இரு இணைச் சாலைகள்” – சாதிக்
(கொடுக்கப்பட்ட நேரம் 5 லிருந்து 7 நிமிடங்கள் –  7நிமிடத்திற்கு பிறகு 30 விநாடிகள் சலுகை நேரம்)

தோல்விகளைக் கண்டு நீங்கள் அஞ்சுகிறீர்களா? அவமானங்களைக் கண்டு நீங்கள் பயப்படுகிறீர்களா? (பார்வையாளர்களின் மறுமொழிக்கு காத்திருந்தேன்.   சிலர் ஆம் என்றார்கள்.  சிலர் இல்லையென்றார்கள்).

பொதுவாக அனைவரும் இவைகளைக் கண்டு பயப்படுகிறவர்களாகவே இருக்கிறோம். 

ஆனால், இதற்கு மாறாக தோல்விகளும் அவமானங்களும் வெற்றிக்கான இரு இணைச்சாலைகள் போல் அமைந்து நம் வாழ்வை சீரமைக்கின்றன என்பதே உண்மை.  வெற்றிக்கான எளிதான வழி பெரும்பாலும் தோல்விகளின் மூலமே சாத்தியம். அதுதான் வெற்றிபெற்றவர்களின் சரித்திரம் கூட.

Dear Fellow Toastmasters and distinguished guests, Good Evening!  (இதை தமிழில் மொழிபெயர்த்தால் செயற்கையாக இருக்கும். அதனால் அதை அப்படியே விட்டு விடுகிறேன்)

ஒவ்வொரு வெற்றியின் சரித்திரமும் ஒரு தோல்வியின் பின்னணியைக் கொண்டுள்ளது. பொதுவாக நாம் எந்த சரித்திரத்திலும் வெற்றியின் பகுதியை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு தோல்வியின் பகுதியை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம். ஆப்ரஹாம் லிங்கன் தன் வாழ்வின் ஆரம்பக் காலத்தில் வியாபார முயற்சியில் இரு முறை தோல்வியடைந்தார்; சட்டசபை தேர்தல்களில் மூன்று முறை தோற்றார். இன்னும் பல தோல்விகளையும் இன்னல்களையும் கண்டார். எனினும் எதற்கும் சளைக்காமல் தன் விடா முயற்சிகளால் 52வது வயதில் அமெரிக்காவின் அதிபரானார்.

ஒரு வேடிக்கையான உவமானக் கதை ஒன்று உண்டு.  ஒரு விமானம் வேகமாக பறந்து கொண்டிருந்தது. ஒரு ராக்கெட் அதை விட வேகமாக அதைத் தாண்டிச் சென்றது.  அதைப் பார்த்து பொறாமை கொண்ட விமானம் அந்த ராக்கெட்டை பார்த்து கேட்டது “நீ எப்படி இவ்வளவு வேகமாகச் செல்கிறாய்?”.  அதற்கு ராக்கெட் “உன் பின்னால் யாராவது நெருப்பு வைத்தால், நீயும் அப்படிச் செய்வாய்” என்று சொன்னதாம். “நீங்கள் அவமானங்களைச் சந்திக்க நேர்ந்தால் எப்பேர்பட்ட சவால்களையும் சந்திக்கத் துணிவீர்கள் என்பதே இந்த வேடிக்கையான கதை சொல்லும் அர்த்தமுள்ள செய்தி”.

மஹாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவிற்கு சென்றபோது அவருக்கு நேர்ந்த அவமானத்தை ஒவ்வொரு இந்தியனும் அறிவர். முதல் வகுப்பில் பயணம் செய்த காரணத்திற்காகவே இரயில் பெட்டியிலிருந்து அவர் தூக்கி எறியப்பட்டார். அந்தக் காலத்தில், இனவெறி கொண்ட தென் ஆப்பிரிக்க அரசாங்கம் வெள்ளையர்களைத் தவிர மற்ற எந்த இனத்தவரையும் முதல் வகுப்பில் பயணம் செய்ய தடை விதித்திருந்தது.  இந்த அவமானம் காந்தியின் மனத்தில் ஏற்படுத்திய சிறு தீப்பொறி பிற்காலத்தில் பெரும் ஜுவாலையாக மாறி ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்தது.
 
நானும் என் இளமைப்பருவத்தில் ஒரு பேச்சாளனாகவும் பாடகனாகவும் ஆக வேண்டுமென ஒரு பேராவல் கொண்டிருந்தேன். ஒரு பேச்சாளனாக என் முதல் முயற்சியை நான் பத்தாம் வகுப்பு படிக்கும் காலத்தில் ஒரு பெரும் கூட்டத்திற்கு முன்னால் ஆரம்பித்தேன். பேச்சை துவங்குவதற்கு முன் என் வயிற்றை கலக்கியது. நான் என்னவோ ஆவேசத்துடன்தான் ஆரம்பித்தேன்.  ஆனால் நான் உச்சஸ்தாயியில் “அன்புள்ளம் கொண்ட பெரியோர்களே தாய்மார்களே” என்று துவங்கிய என் குரல் பரிதாபகரமாக கீச்சென்று மாறிவிட்டது. எனது பேச்சு தடுமாறியது. கால்கள் நடுங்கின. பார்வையாளர்கள் தொடர்ந்து நக்கலடித்துக் கொண்டிருந்தனர்.  (அழுகுரலில்) அன்று முதல் பேச்சாளனாக வேண்டுமென்ற என் வாழ்வின் ஒரே இலட்சியத்தையும் தொலைத்து விட்டேன்.

ஆனாலும், (நிறுத்தம். பிறகு உணர்ச்சி பூர்வமான குரலில் வேகத்தை அதிகப்படுத்தி) என் குடும்பம் ஒரு குறிப்பிடத்தக்க இலக்கிய பிண்ணனியைக் கொண்டிருப்பதால், என்னையும் அறியாமல் என்னுள் ஒளிந்திருந்த ஒரு ஆவல் (நிறுத்தம்), (கொஞ்சம் குரலை உயர்த்தி) கட்டுங்கடங்காத கலையார்வம் கலந்த ஒரு ஆவல், என்னுள்ளிருந்து வெளிப்பட என் ஆத்மாவுடன் போராடிக்கொண்டிருந்திருக்கிறது.
அதன் விளைவாக, 2009-ல் ரியாதில் நடந்த சில விழாக்களில் நான் எழுதி வாசித்தக் கவிதைகள் மிகுந்த வரவேற்பை பெற்றது. (சிறிய குரலில்) 2010ல் (கொஞ்சம் குரலை உயர்த்தி), எனது 49வது வயதில், நான் ஒரு பாடகனாக முயற்சி எடுத்தேன். (புன்சிரிப்புடன் நக்கலான முகபாவனையுடன்) அதிர்ஷ்டவசமாக நானும் ஒரு பாடகனாக பார்வையாளர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டேன்.  ஒரு காலத்தில் என் சொந்தக்குரலையே வெளிக்கொண்டு வர முடியாமல் திணறிய நான், இன்று பல ஹிந்தி மற்றும் தமிழ் பாடகர்களின் குரல்களை பாவித்து (Voice Modulation) மேடைகளில் துணிச்சலாக பாடுகிறேன். அதை கேட்பதற்கு உங்களுக்குத்தான் துணிச்சல் வேண்டும்.  என் குரல் முழுமையாக அந்த பாடகர்களின் குரலுடன் ஒத்து போகாது என்றாலும், அவர்கள் தொனியில் என்னால் நிச்சயமாக பாட இயலும்.

இவன் பேச்சுக்குத்தான் இப்படி கயிறு விடுகிறான் என நினைக்கிறீர்களா? நீங்களெல்லாம் என் குரலை சோதிக்க விரும்புகிறீர்களா?.  (பதிலுக்கு காத்திருந்தேன் – எதிர்பார்த்ததுபோல் அனைவரும் “Surely” “of course” “certainly” “with pleasure” என்று பலவிதமாக குரல்கொடுத்தனர்).

எங்கள் சொல்வேந்தர் மன்றத்தில் தமிழர்களல்லாமல் பல மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருப்பதால் நான் ஹிந்தி பாடல்களையே சில வரிகள் பாடினேன்.

கிஷோர்:  “டூட் ன ஜாயே சப்னே மே டர்தா ஹூம் நித் தின் சப்னோமே தேகா கர்த்தா ஹூம்”.

ரஃபி: “ஏ பர்தா ஹட்டாதோ! (Z)சரா முக்(H)டா திகா(H)தோ.  ஹம் ப்யார் கர்னே வாலே ஹேன் கோயி கேர் நஹீன்.  அரே ஹம் தும்பே மர்னே வாலே ஹேன் கோயி கேர் நஹீன்”.

இதோ மூக்கால் பாடும் முகேஷ்:  “ஆவாரா ஹூம்.  ஆவாரா ஹூன்.  யா க(G)ர்டிஷ் மே ஹூன் ஆஸ்மான்கா தாரா ஹூன்.  ஆவாரா ஹூன்”

இளையகுரல் வேண்டுமா? இந்தாருங்கள் சோனு நிகாம்:
“தும் கோ பாயா ஹே தோ ஜேசே கோயா ஹூன்.  கெஹ்ன சாஹுன் பீ(H) தோ தும் சே க்யா கஹூன்.

என்னால் தொடர்ந்து பல குரல்களில் பாட இயலும்.  ஆனால் எனக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்துவிடும்”.  மேலும் உங்களை பார்த்தாலும் பரிதாபமாக உள்ளது.

என்னாலும் பொது மேடைகளில் பேச, பாட இயலும் என்பதை நான் அறிந்துகொள்ளவே எனக்கு கிட்டதிட்ட 35 ஆண்டுகளாகி விட்டன. ஏனெனில் தோல்வி மற்றும் அவமானங்களின் பயம் என் திறமைகளை என்னுள் நீண்ட காலமாக அமுக்கி வைத்து விட்டது.  நீங்களெல்லாம் எப்படி சொல்வேந்தர்களே!  விழித்துக் கொள்ளுங்கள்! உங்கள் பயத்தை எறிந்துவிட்டு உங்கள் திறமைகளை தோண்டி எடுங்கள்! நம்பவே இயலாத உயரங்களை அடைவீர்கள்.

நினைவில் கொள்ளுங்கள்!  தோல்வி என்பது நாம் செய்யத் தவறிய ஒரு காரியத்தை இன்னும் சிறப்பாகவும் இன்னும் கவனத்துடனும் செய்யக் கிடைத்த ஒரு சந்தர்ப்பம் மட்டுமே! Over to Toastmaster! (இப்படிச் சொல்லி பிறகு நிகழ்ச்சியை நடத்தும் சொல்வேந்தரிடம் அவர் மேடைக்கு வரும் வரை காத்திருந்து மேடையை திருப்பி அவரிடம் கொடுத்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்).

***

நன்றி : தனது ஆங்கில உரையை உடன் மொழிபெயர்த்து அனுப்பிய ஜாஃபர் சாதிக்  | sadikjafar@gmail.com

11 பின்னூட்டங்கள்

 1. Hyder said,

  12/12/2010 இல் 13:46

  Very much Interesting and encouraging. Keep it up.

  Regards

  Hyder

 2. JAFAR SADIQ said,

  12/12/2010 இல் 14:11

  Thank you very much dear Hyder Bhai for your excellent comments

 3. 13/12/2010 இல் 20:49

  பத்து நாட்கள் ஊருக்கு சென்று விட்டதால் ஆ.ப.வின் பக்கம் வர முடியவில்லை. வந்த திறந்தால் உற்சாக டானிக்காய் நெஞ்சில் இனித்தது உங்கள் கட்டுரை. நன்றி சாதிக் பாய்.

 4. JAFAR SADIQ said,

  14/12/2010 இல் 10:20

  மிக்க நன்றி.

 5. SYED ALI said,

  17/12/2010 இல் 23:40

  congradulations…

 6. ஷாஜஹான் said,

  20/12/2010 இல் 11:56

  அருமையான கட்டுரை சாதிக் அண்ணா,

  ஆழத்தில் கிடந்த கருங்கல் நீங்கள்.. மென்மையாய் தன்மையாய்
  கூழாங்கல்லாய் மாறிய விதத்தை கூலாய் சொல்லியிருக்கிறீர்கள்..

  அருகிலேயே இருந்து பார்த்ததனால் உங்களின் ஒவ்வொரு வளர்ச்சியையும் ( மேடைப் பேச்சு, பாடல் ) கவனித்தவன் நான்..
  பிரமிக்கவும் செய்திருக்கிறேன்..

  வாழ்த்துகள் அண்ணா, உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்..

  • JAFAR SADIQ said,

   20/12/2010 இல் 13:03

   Anbuth thambi Shajahan, Thaangalum thanalaipondra sila Riyadh Tamil Sanga nanbargalum en inspiration-aaga amaindahadhu en baakkiyam. (mudhalil naan pathiviya badhilil oru vaakkiyam mattume padhivaanadhu).

 7. JAFAR SADIQ said,

  20/12/2010 இல் 13:01

  Thank you dear Shajahan

  • JAFAR SADIQ said,

   20/12/2010 இல் 16:45

   Dear Shaji Thambi,

   I made a long post under Abideen site about you. But only one sentence was posted. I don’t know why

   Thanks for the hearty comments on Abideen site under my article which shows your innate love on me. I should not thank you for this which alienates our intimacy of course. But I cannot help it.

   Anbudan,
   Sadiq Anna

 8. 12/12/2012 இல் 09:06

  உள்ளத்தில் உள்ளதை
  உதட்டில் உரைத்துள்ளீர்கள்

  மு.கா.செரிப்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s