உள்ளங் கையில் கஞ்சாவைத்து…

நம் ஹனிபாக்கா கொடுத்த ‘கஞ்சா’வை இப்போது கசக்குகிறேன். இந்தவயதிலும் இளமையும் குறும்பும் துள்ளுகிறது மனுசனுக்கு!

***

என் அருமை ஆப்தீனுக்கு 

அஸ்ஸலாமு அலைக்கும் .

நீண்ட நாட்களாக மெயில் அனுப்பவில்லை வாழ்வு இவ்வளவு அவசரமாகப் போனது. நாம் எல்லோரும் எங்கே போகிறோம்? எதுவுமே பிடிபடமாட்டேன்கிறது.     

சின்னவயசிலிருந்தே  சங்கீதத்திலும் பெரும் ஈடுபாடுதான்.  சுன்னத் கல்யாண வீடுகள்தான் என் அரங்கேற்றம். உள்ளுர்காரர்கள்தான் குருநாதர்கள்.

டப்லா ஹார்மோனியம் சதங்கை பளிங்கு கோப்பை  போன்றவைகள்தான். எங்களின்  ஆனானப்பட்ட கருவிகள் . கூடவே கஞ்சா ரொப்பிய சிலிம்பியும். எனதுமைத்துனர்  சிலிம்பி சுற்றுவதில்  கைதேர்ந்த கலைஞர்  அவரிடமிருந்து தான் நான் அந்தக்கலையை கற்றுக்கொண்டேன்.

பின்னாளில்  சென்னையில் நான் ஜெயகாந்தனைச் சந்தித்த போது  அவர் கையிலிருந்த சிலிம்பியின் கோலம் எனக்குப் பிடிக்கவில்லை. 

நான் எனது சிலிம்பி பற்றிய அனுபவங்களைச் சொன்னதும்  உடனே அவரின் உதவியாளரை கோல்டன் பீச்சுக்கு அனுப்பிதென்னை ஓலை வரவழைத்தார்.  எனதுகை வண்ணத்தில் சிலிம்பி சிரித்தது கொஞ்ச நேரத்திற்கெல்லாம் தண்ணீர் நிரப்பிய கிளாசுக்குள் கஞ்சா நிரப்பிய சிலிம்பியை லாவகமாக வைத்து அனாயாசகமாக கஞ்சாவை இழுத்து விட்டேன்.

இருவரும் நாலு ரவுண்ட் வந்தோம்.

உடனே ஜெயகாந்தன் அவர்கள்  ஒருகவிதையே பாடிவிட்டார்.  எங்கும்பிரசுரமாகாத அந்தக்கவிதையை  ஆபிதீன் பக்கஙகளில் இறக்கி விடுகிறேன்.

உள்ளங் கையில் கஞ்சாவைத்து

உருட்டி உருட்டி கசக்கு – அங்கே

ஓடுது பார் உன்னுடைய உள்ளத்தோட அழுக்கு

கள்ளப்புலனை  நாராகச்சுருட்டி –  அந்தக்
 
காலனையும் ஓடஓட விரட்டு.

 இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்.

சங்கீத விமர்சகர் சுப்புடு பற்றித்தான் எழுத வந்தேன். அது ஜெயகாந்தன் தலையில் முடிந்துவிட்டது!

அன்புடன் 

அனிபாக்கா  / 29.11.2010

***

கஞ்சாவில் ஒரு திருத்தம் (பிற்சேர்க்கை (30/11/2010) :

ஹனிஃபாக்கா :

ஆபிதீன்.. (நேற்று) காலையில் அனுப்பிய ஜெயகாந்தனின் கவிதை எனது ஞாபத்திலிருந்து நான் எழுதிய கவிதை. இடையில் இருபது வருடங்கள். இன்று மத்தியானம் அவர் சொல்ல சொல்ல நானெழுதிய அவரின் கவிதை இதோ.

கஞ்சா மகிமை

உள்ளங்கையிலே மருந்தை வைச்சி உருட்டி உருட்டி கசக்கு – அங்கே
ஓடுது பார் நீ இருக்கிற உலகத்தோட அழுக்கு
கள்ளப்புலனை நாரெடுத்து கயிறாகச் சுருட்டு – அதைக்
காட்டி அந்தக் காலனையும் ஓட ஓட விரட்டு

இத்துடன் வரும் ஜெயகாந்தன் புகைப்படம் 19.01.1990-இல் நான் எனது கெமராவில் பதிவு செய்தது.                 

 *

நன்றி : ஜெயகாந்தன், ஹனீபாக்கா, கஞ்சா!

3 பின்னூட்டங்கள்

 1. 29/11/2010 இல் 18:24

  அனிபாக்கா! நீங்க நமக்கு உஸ்தாதாவுல்ல இருக்கீய. இது தெரிஞ்சா மொதல்லேயே பைஅத் வாங்கிருப்பேன். சின்ன வயசுலெ நான் ஒரு மாதிரி குசும்பு பண்ணியிருந்தா பொல்லாத வயசுலெ தாங்க வேறு மாதிரியான குசும்புல்ல செஞ்சிருக்கீங்க. பேஷ், பேஷ்…!! இன்னுமிருந்தா எடுத்து வுடுங்க.

 2. மஜீத் said,

  10/12/2010 இல் 12:39

  எப்பவாவது யாராவது How old are you? என்று என்னிடம் கேட்டால் 35 years young என்று சொல்வேன். இதைத்தானே 10/15 வருஷத்துக்கு முன் சொன்னாய்? என்று யாராவது மென்னியைப்பிடித்தால், ஆமா அதற்கும் முன்னிருந்தே அப்படித்தான் சொல்லிவருகிறேன் என்று வெறுப்பேற்றுவேன். ஹனிபாக்கா, இனிமே இந்த குசும்பெல்லாம் அவுட். இப்படியே இருங்கள், நாங்களெல்லாம் ஒரு சந்தோஷமான ‘நூற்றாண்டு விழா’ உங்களுக்கு எடுப்போம், இன்ஷா அல்லாஹ்

 3. மஜீத் said,

  10/12/2010 இல் 12:46

  ஹனிபாக்கா, சுப்புடு பற்றி எழுதவேண்டும் நீங்கள். கெஞ்சலான (அதாவது கண்டிப்பான) ஆணை இது!! ப்ளீஸ்…….


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s