தினமலர் குசும்பும் சிங்கப்பூர் தைலமும்

நண்பர் மஜீத் அனுப்பிய மெயிலைப் பதிகிறேன். அதற்கு முன் கொஞ்சம்… மஜீதின் தகப்பனார் புகழ்பெற்ற ஹோமியோபதி மருத்துவர்.  நம்ம மஜீதும் பாதி டாக்டர்தான். முந்தாநாள் அவரை ஷார்ஜா – ஃபைஜல் பள்ளியில் சந்தித்தபோது என் இடதுகால் மூட்டுவலிக்கு சுலபமான மருந்து சொன்னார் (தொழுது கொண்டிருக்கும்போது 😉 ) .  ‘கண்ட மருந்தையும் போடாதீங்க. இப்படி எக்சர்ஸைஸ் செய்யுங்க’ என்று விளக்கினார். காலையில் எழுந்திருக்கும்போது, படுத்தபடி காலை நீட்டி இலேசாக மடக்க வேண்டும், பத்துமுறை. அவ்வளவுதான். வலி போயே விட்டது. என்ன ஒரு அதிசயம்! ஆனால் மஜீது, வலது கால் மூட்டுவலி ஆரம்பித்துவிட்டது!

வியாதியில்லாமல் வாழ்க்கையேது?

***

தினமலர் குசும்பும் சிங்கப்பூர் தைலமும்

மஜீத்

ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை வெகு சில்லறைத்தனமான சப்பைக்கட்டுகளால் இங்கே  (மறக்காம ‘க்ளிக்’ செய்ங்கப்பா) நியாயப்படுத்தும் தினமலர்,  அப்ஜெக்டிவ் டைப் பரீட்சை முறையையே எதிர்க்க முனைகிறது,  அதுவும் சில்லறைத்தனமாகவே!
 
நான் எழுதிய கீழ்க்கண்ட பின்னூட்டத்தையும் பதிவேற்ற மறுக்கிறது.
 
““ஐயா அதிபுத்திசாலி அந்துமணி, அபத்தமா உளறுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா? அப்ஜெக்டிவ் டைப் கேள்வித்தாள்களில் உள்ள கேள்விகளின் வரிசைக் கிரமம் மாறி மாறி இருக்கும். இந்த அடிப்படை அறிவுகூட இல்லாத உனக்கு டாக்டர் பட்டம் குடுத்துருவாங்க போல உனது வாசகர்கள். ந‌ல்ல‌ கூத்து. ராஜாஜி திட்டம் பற்றி எழுதுனதிலயும் ஒரே அபத்தம். சிறுபிள்ளை கூட மறுத்து எழுத அதில் ஏகப்பட்ட ஓட்டைகள். ம்ம்ம். உனக்கென்ன, உனக்கு சிங்ச்சா போட உன் வாசகர்கள் உண்டு. நடத்து!””
 
இந்த மாதிரி கட்டுரைகள், எனக்கு எப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும் ஒரு ‘மருந்து’ விளம்பரத்தை ஞாபகப்படுத்துகின்றன‌.
 
வளைகுடாவின் “சிங்கப்பூர்” கடைகளில் கிடைக்கும், மலேசியா சிங்கப்பூர் தயாரிப்புகளான‌, தமிழர்களுக்கேயான, பல மருந்துகளில் ஒன்று, “கர்ண புறா” தைலம். (அது என்ன “கர்ணபுறா”? எனக்குத் தெரியவில்லை; என் தம்பி அதற்கு ஊகித்த அர்த்தம்: கர்ண கொடூரமாக சிங்கம் கர்ஜித்தது என்பார்கள்; ஒருவேளை காட்டுப்புறாவாக இருக்கலாம்)இரண்டு நிறங்களில் வரும் இந்த தைலத்திற்கும் மற்ற ‘மருந்து’களைப் போலவே தமிழ்நாட்டு அடிமைகள் உண்டு.
 
இந்த மருந்துகளில் பெருவாரி பணத்தை இழக்கும் நானறிந்த கீழ்மட்ட/நடுத்தர தமிழ்மக்களிடம் அந்த மருந்துகள் பற்றிய‌ உண்மைகளை ‘தலைகீழாக நின்று’ சொன்னாலும் நம்ப மாட்டார்கள். அல்லது அவர்களுக்கு வேறு வழியிருக்காது. ஒன்றிரண்டு வருடங்கழித்து ஊர் செல்லும்போது இவையில்லாமல் சென்றால் வரும் சண்டையில் மனைவியிடம் அவர்களது ஆண்மைகூட கேள்விக்குள்ளாக்கப்படும்!!
 
1. “ஒடிக்கலன்” (Eau de Cologne)அதுவும் ‘ஐஸ்’ பிராண்டுதான். ‍ இது ஒரு கக்கூஸ் சமாச்சாரம், வாசனைப்பொருள், கழுவுன கைல, கால்ல தடவிக்கிற கிருமநாசினி ஐட்டம்யான்னா, யார் கேக்குறது?
சாராய‌ம் கிடைக்காத‌ அர‌பு நாடுக‌ள்ல‌ இதை போதைக்காக‌ இளைஞ‌ர்க‌ள் உப‌யோகிப்ப‌தால் அந்நாடுக‌ளில் த‌டை செய்த‌தாக‌க்கூட‌ வ‌த‌ந்தி உண்டு.

ஐயோ அது புள்ள மருந்தும்பாங்க; (அதை லேசாக் காச்சிட்டு, உச்சந்தலைல லேசா தடவுனா கைப்புள்ளக்கி காய்ச்சலும் சளியும் போயிரும்)
 
2. “மீசைக்காரத்தைலம்”:  ஐயா இது வேற ஒண்ணும் இல்லய்யா, நம்ம ஊர்ல அவுன்ஸ் ஒரு ரூபாய்க்குக் கிடைக்கிற “டர்பன்டாயில்” தான்யா (turpentine liniment படுற பாட்டைப் பாருங்க). அந்த டர்பண்டாயிலும் வேற ஒண்ணும் இல்லய்யா, மண்ணெண்ணெயும் சூடமும்தான்யா. நம்ம கிராமங்கள்ள எதாவது அடிபட்டா ம.எண்ணெய சூடு பறக்கத் தேய்ப்பாங்கய்யா.  என்னதான் கதறுங்க, ம்ம்ஹூம். கேக்க மாட்டாங்க‌.
 
3. “கோடாலிச்சாப்பு” வகையறா: அய்யா இது நம்ம ஊர்ல சீசீன்னு கிடக்குற ‘ஆர்.எஸ்.பதி மருந்து’ தான்யா, இப்ப அம்ருதாஞ்சன் ஆயில் போட்றான்யா, ஊர்ல விலை 10 மடங்கு குறைவுய்யான்னு, தரையில உருண்டு சத்தியம் பண்ணுங்க, பலன் இருக்காது. நம்ம கர்ணபுறா தைலத்துல யாருக்கும் தெரியாத சித்த, ஆயுர்வேத, யுனானி இதுமாதிரி ஏதோ ஒரு வகையைச்சேர்ந்த பத்து இருபது மருந்து இருக்கிறதா, பாக்கெட்டுக்குள்ள இருக்கிற ‘லிட்ரேச்சர்’ சொல்லும். இது ஒரு சர்வரோக நிவாரணி. அந்த லிட்ரேச்சரோ,  1950ல அச்சடிச்சமாதிரி ஒரு ஃபாண்ட் (font),  படிக்கும்போதே தலையைச் சுத்தவைக்கும் அச்சுத்தெளிவு. பேப்பரோ 1850ல தயாரிச்சமாதிரி ஒரு தரம்.
 
அதுல தினத்தந்தி கன்னித்தீவு ஸ்டைல்ல படங்களோடு ஒரு கதை. ராஜுவுக்கு அடிபட்டு விட்டது, ரத்தம் வருகிறது, நல்லவேளை பக்கத்து வீட்டில் கர்ணபுறாத் தைலம் இருந்த்தால், காயம் முற்றாக ஆறிவிட்டது என்பதுபோல ஒரு கதை 4 படங்களுடன்; 

நல்லாருக்கில்ல?
 
தினமலர் கட்டுரைகளும் இதற்கு எந்த விதத்திலும் சளைத்தவையல்ல‌.
 
அப்ஜெக்டிவ் டைப் தேர்வுக‌ளில் கேள்விக‌ளின் வ‌ரிசைக்கிர‌ம‌ம் மாறும் என்ப‌து 1978 லேயே என‌க்குத் தெரியும். அப்போதைய‌ ஜிப்ம‌ர்  மருத்துவக் கல்வி நுழைவுத்தேர்வில் மாண‌வ‌ர்க‌ள் மிகவும் அருக‌ருகே அம‌ர‌வைக்க‌ப்ப‌ட‌ என‌து ஐய‌த்தை ஒரு தேர்வுக் க‌ண்காணிப்பாள‌ரிட‌ம் கேட்டே விட்டேன். அவ‌ர்தான் விள‌க்கினார்.
 
சுமார் 32 ஆண்டுக‌ளுக்க‌ப்புற‌மும் இதை இன்னமும் அறியாத‌துபோல் வேட‌மிடும் தின‌ம‌ல‌ருக்கு இருக்கும் வாச‌க‌ர்கள், புட‌ம்போட்டு வார்க்க‌ப்ப‌ட்ட‌ வார்ப்புக‌ளாக‌ இருப்ப‌தையும், அவர்களை அப்படியே த‌க்க‌வைத்துக்கொள்ள‌ இன்னும் இதே ரீதியில் க‌ட்டுரைக‌ள் வெளியிட்டுக்கொண்டிருப்ப‌து குசும்பு ம‌ட்டும‌ல்ல‌, க‌டைந்தெடுத்த‌ அயோக்கிய‌த்த‌ன‌முமாகும்.
 
அப்படியே எங்கேணும் ஒரே வரிசையாகக் கேள்விகள் கேட்கப்பட்டால் அதை எதிர்த்துப் போராடும் பத்திரிகைத் தர்மத்தை தினமலர் காண்பிப்பதற்குப் பதிலாக தனது வர்ணாசிரம தர்மத்தை நிறுவ முயலுவது அதே அந்துமணியின் அடுத்த கட்டுரையில் தெளிவாகத் தெரிகிறது
இப்படி பரீட்சை பாஸ் பண்ணிட்டு வர்றவங்ககிட்ட இருந்து என்ன, “குவாலிட்டி’ எதிர்பார்க்க முடியும்? “ என்று வினவுவதின் உள்ளர்த்தம் குழந்தைக்கும் தெரியும்       
 
ஒரு சிறு வியாபாரியின் பையன் படிக்கும்போது ஒரு தொழில் கற்றுக்கொள்ள ராஜாஜி திட்டத்தில் வாய்ப்பிருந்தாலும், கையில் காசு புழங்கியவுடன் அவனது கவனம் படிப்பிலிருந்து சிறிதளவோ அல்லது முற்றாகவோ விலக வாய்ப்பிருக்கும்.
 
அதைவிட அபாயகரமானது, பின் தங்கிய குடும்பங்களில் இத்தகைய அதிகப்படி வருமான ருசி, அவனது கல்விக்கு உலை வைத்துவிடும், பெற்றோர்களாலேயே.
 
அதுவுமின்றி, கூலித்தொழிலாளிகளாக பெற்றோர் இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். பையனின் கல்விக்கு அத்திட்டம் நிரந்தர சமாதி எழுப்பியிருந்திருக்கும்.
 
 இந்த சிறுவிஷயம் மேதாவிகள் நிறைந்த‌ தினமலருக்கு ஒன்றும் கம்பசூத்திரம் அல்ல. தவிரவும் ராஜாஜியின் வியாக்கியானமாகிய ‘செருப்பு தைப்பவர்கள் எல்லோரும் படிக்கச் சென்றுவிட்டால் பிறகு யார்தான் செருப்பு தைப்பது?’ என்பதற்கு காமராஜர் வெகுண்டெழுந்ததும் வரலாறு.
 
அனைவருமறிந்த அடிப்படை விஷயங்களை அப்படியே மறைத்து, நாகப்பாம்பாய் விஷமேற்றும் கலையை அரங்கேற்றும் தினமலர் பிதாமகன் சூர்யா ரேஞ்சுக்கு மருந்து வியாபாரம் பார்க்கலாம், சைடு பிஸினசாக. அதன் வாசகர்கள் அனைவரும் வாடிக்கையாளர்களாகி பேராதரவு தருவார்கள். நிச்சயம் “கெலிக்கலாம்”!!

**

நன்றி : மஜீத் | E-Mail : amjeed6167@yahoo.com

4 பின்னூட்டங்கள்

 1. 21/11/2010 இல் 16:11

  சிறந்த பகிர்வு…

  //ஐயோ அது புள்ள மருந்தும்பாங்க; (அதை லேசாக் காச்சிட்டு, உச்சந்தலைல லேசா தடவுனா கைப்புள்ளக்கி காய்ச்சலும் சளியும் போயிரும்)//

  அய்யோ.. அது நெசம்மாவே புள்ள மருந்து இல்லையா…. :((

  • மஜீத் said,

   22/11/2010 இல் 16:28

   நன்றி சென்ஷி!

   இவர் நாகேஷ் மாதிரியே இருக்கார், முஸ்லிம்னு வேற சொல்றாங்க, நெத்தில பட்டை இருக்கு, ஃபோட்டோ சரியில்லையோன்னு, பல குழப்பங்கள்; அப்பறந்தான் தெரியுது அது சாட்சாத் நாகேஷேதான்னு.

 2. 21/11/2010 இல் 20:12

  பார்ப்பான்+பார்ப்பான்=பார்ப்பன புத்தி

 3. 22/11/2010 இல் 08:17

  நல்ல பதிவு… தொடரட்டும் உங்கள் சேவை…


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s