கடித இலக்கியம்: அப்ரஹாம் லிங்கன்

அப்ரஹாம் லிங்கன் தனது மகனின் தலைமை ஆசிரியருக்கு எழுதிய மடல்

எனது மகன் நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது, எனக்குத் தெரியும் எல்லோரும் நியாயமானவர்கள் அல்ல. எல்லோரும் உண்மையானவர்களும் அல்ல. ஆனால் மேலும் அவனுக்கு கற்றுக்கொடுங்கள் ஒவ்வொரு போக்கிரி உள்ள இடத்தில் ஒரு வீரனும் உண்டு.; ஒவ்வொரு சுயநல அரசியல்வாதி உள்ள இடத்தில் ஒரு தன்னலம் கருதாத தலைவரும் உண்டு. ஒவ்வொரு பகைவன் உள்ள இடத்தில் ஒரு நண்பனும் உண்டு என்று அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.

இதற்கு காலம் எடுத்துக்கொள்ளும் என்று எனக்குத் தெரியும். இருப்பினும் உங்களால் முடியுமானால் அவனுக்கு கற்றுக்கொடுக்கவும். அது ஈட்டியது ஒரு டாலர் எனினும் கண்டெடுத்த ஐந்து டாலர்களைக் காட்டிலும் மிகவும் மதிப்புமிக்கதாகும்.

தோல்வியை ஏற்றுக்கொள்ளவும் வெற்றியை கொண்டாடவும் அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

உங்களால் முடியுமானால், அவனை பொறாமையிலிருந்து அப்பால் இருக்கச் சொல்லவும்.

மனம்விட்டு சிரிப்பதன் இரகசியத்தை அவனுக்கு கற்றுக் கொடுங்கள். நயவஞ்சகர்களை எளிதில் அடையாளம் காண ஆரம்பத்திலேயே அவன் கற்றுக்கொள்ளட்டும்.

உங்களால் முடியுமானால், நூல்களின் அற்புதத்தை அவனுக்கு கற்றுக் கொடுங்கள், மேலும் வானத்தில் பறக்கும் பறவைகள், சுதந்திரமாய் ரீங்காரமிடும் தேனீக்கள், பசுமைக் குன்றுகள் மீது பூத்துக் குலுங்கும் மலர்கள் பற்றி ஆய்ந்தறியவும் அவனுக்கு நேரமளியுங்கள்.

ஏமாற்றுவதைக்காட்டிலும் தோற்றுப் போவது மரியாதைக்குரியது என்று அவனுக்கு பள்ளியில் கற்றுக்கொடுக்கவும்.

அவனுடைய சொந்த கருத்துக்கள் மீது நம்பிக்கை வைக்க கற்றுக் கொடுங்கள், எல்லோரும் அவை தவறானது என்று சொன்னாலும் கூட.

மெலியவர்களிடம் மென்மையாகவும், வலியவர்களிடம் வன்மையாகவும் நடந்துக்கொள்ள அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.

வெற்றிபெறும் கட்சி பக்கமாக நிற்க எல்லோரும் முயற்சிக்கும் போது கூட்டத்தைப் பின்பற்றிச் செல்லாதிருக்க மன உறுதியை எனது மகனுக்கு அளிக்கவும்.

எல்லோரையும் கேட்க அவனுக்கு கற்றுக்கொடுங்கள், ஆனால் கேட்டதை எல்லாம் வடிகட்டி உண்மையை ஆய்ந்தறியவும் நல்லதை மட்டுமே தேர்ந்தெடுக்கவும் கற்றுக்கொடுங்கள்.

முடியுமானால் இடுக்கண் வருங்கால் எப்படி நகுவது என்று கற்றுக்கொடுங்கள். கண்ணீர் சிந்துவதில் தவறில்லை என்பதை கற்றுக்கொடுங்கள். ஓயாது குற்றம் காண்போரை ஏளனம் செய்யவும், மிகவும் வாய் இனிக்கப் பேசுவோரிடம் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

உடல் வலிமையையும் புத்திசாலித்தனத்தையும் விற்பதில் தவறில்லை ஆனால், அது தனது மனசாட்சியையும் ஆன்மாவையும் பணயம் வைப்பதாக இருந்துவிடக்கூடாது என்று அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

கூப்பாடு போடும் கூட்டத்தில் அவன் செவிகளை அடைத்துக் கொள்ளவும்…. அவனுக்கு சரி எனப் பட்டதற்காக நின்று போராடவும், அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

அவனை மென்மையாக நடத்துங்கள்; ஆனால், அரவனைக்க வேண்டாம். ஏனெனில் நெருப்பில் புடம் போட்டால்தான் நேர்த்தியான எஃகு கிடைக்கும்.

பொறுமையின்றி இருக்க தைரியம் பெறட்டும். தைரியத்துடன் இருக்க பொறுமையுடன் இருக்கட்டும். எப்போதும் தன்னுள் விழுமிய நம்பிக்கையுடையவனாய் விளங்கட்டும். அப்போதுதான் அவன் மனிதைனத்தின் மீது விழுமிய நம்பிக்கையுடையவனாய் இருப்பான்.

இது ஒரு பெரும் கட்டளைதான்; ஆனால், உங்களால் என்ன செய்ய இயலும் என்று பாருங்கள். அவன் சின்னஞ் சிறுவன், என் மகன்.

***

Source : http://vnicholas.wordpress.com/2006/12/28/lincolns-letter-to-his-sons-teacher/

***

நன்றி : தாஜ் | satajdeen@gmail.com
11:17 PM 13/11/2010

4 பின்னூட்டங்கள்

 1. 14/11/2010 இல் 20:33

  தாஜ், ஒவ்வொரு தந்தையும் தெரிந்துக்கொள்ளவேண்டிய செய்தி. தெரியாதவர்கள் இனியாவது தெரிந்துக்கொள்ளட்டும்.

  வாழ்த்துக்கள் தாஜ். தொடருட்டும் தொண்டு.

 2. 14/11/2010 இல் 21:22

  தாஜ்,

  இது எனக்காக நீங்கள் செய்த பதிவு என என் உள்மனம் சொல்கிறது.
  தாஜ் எனும் ஆப்ரஹாம் லிங்கனே தன்யனானேன் ஸ்வாமி!

 3. மஜீத் said,

  15/11/2010 இல் 12:46

  ஹமீது ஜாஃபர் நானாவும் சகோ. நூருல் அமீனும் ரொம்பச் சரியா சொல்லிருக்கீங்க. புதையல் மாதிரி ஒரு சமாச்சாரத்தை, தாஜ் தோண்டியெடுத்துத் தந்திருக்கிறார். இதை ஒவ்வொரு தகப்பனும் உணர்ந்தால் ‍உணர்ந்தால் மட்டுமே போதும். தன்னாலேயே குழ‌ந்தைக‌ள் தெளிவு பெறுவார்க‌ள்.

  குழ‌ந்தை வ‌ள‌ர்ப்பில் பெற்றோர்களின் முத‌ல் க‌ட‌மையே அட‌க்கி வாசிப்ப‌துதான் குழ‌ந்தையை அல்ல‌ த‌ம்மை. இக்க‌டித‌த்தை ஆழ்ந்து ப‌டித்தால் அது புரிய‌வ‌ரும். நாம் குழ‌ந்தைக‌ளை வ‌ள‌ர்த்தால் ம‌ட்டும் போதாது. வ‌ள‌ர‌விட‌வும் நாம் க‌ற்றுக்கொள்ள‌ வேண்டும்

  அதை விடுங்க‌ள்; இக்க‌டித‌ம் உல‌வும் இணைய‌த‌ள‌ங்க‌ளில் க‌டித‌த்தின் க‌ருத்துக்க‌ளை விவாதிக்கும்போது, சில‌ர் இது ஆப்ர‌ஹாம் லிங்க‌ன் க‌டித‌ம‌ல்ல, வேறு யாரோ ஒருவ‌ரின் எழுத்து; விளம்பத்துக்காக லிங்கன் பெயர் பயன்படுத்தப்படுவதாக‌ நிறுவ‌ முய‌லும் மேட்டிமைத்த‌ன‌த்தை என்ன‌ சொல்ல‌?

  சொல்லமுடியாது, இங்கும் ஒரு மேதாவி வரலாம், இது இஸ்லாத்துக்கு சம்பந்தமில்லாத விஷயம் என்று ஆபிதீனை அட்டாக் பண்ண!!

  • 18/11/2010 இல் 12:12

   அன்பு மஜீத்,

   அப்ரஹாம் லிங்கன் எழுதினால் என்ன, நம்மூரு லிங்கம் எழுதினால் என்ன, நல்ல விசயங்களை ஏற்றுக்கொள்வோமே. இப்படித்தான் Marquezன் ‘Farewell Letter’ என்று சில வருடங்களுக்கு முன் ஒன்று வலம் வந்தது. நண்பர் நாகார்ஜுனன் கூட அதை வைத்து – தமாஷாக – ஒரு பதிவும் போட்டார். சரி, எனக்கும் இந்தக் ‘கடிதம்’ லிங்கன் எழுதியதுபோலத் தெரியவில்லை. ஏதோ ஒரு போஸ்டரைப் பார்த்து இதை தட்டச்சி அனுப்பிய தாஜிடம் கேட்டேன். லிங்கன் தமிழில்தான் எழுதினார் என்று உறுதியாகச் சொன்னார்!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s