குஞ்ஞப்துல்லாவின் கூட்டுப் ‘பிரார்த்தனை’

கவனம் : இது வயது வந்தோருக்கான பதிவு. எனவே எல்லோரும் படிக்கலாம்! நன்மை வேண்டி நல்ல பதிவு நாடுபவர்கள் நண்பர் நூருல் அமீனின் ‘நம்பிக்கை நெஞ்சில் வை‘யை படியுங்கள். ‘இறைவன் நம்ம டார்லிங் சீதேவி’ என்று அவர் எழுதிய வரியில் நான் நெகிழ்ந்து போய் விட்டேன். சரி, சீரியஸான பதிவு வேண்டுமா? சகோதரர் இப்னு ஹம்துனின் ‘இந்தியா – இடைவெளிகளின் தேசம்‘ வாசியுங்கள். இரண்டுமே சமீபத்தில் என்னைக் கவர்ந்த பதிவுகள்.

இப்ப…. இந்த வரியைப் பார்க்கிறீர்களா? வாங்க, ரொம்ப நல்லவங்க சார் நீங்க…!

வரிக்கு வரி நகைச்சுவையாக எழுதுவார்கள் எழுத்தாளர்கள் சிலர். அந்த வரிகளை மட்டும் ஒதுக்கிப் படித்துவிட்டு வயிறுவலிக்க சிரிப்பார்கள் வாசகர்கள் பலர். இதனாலோ என்னவோ , சிரிப்பதற்காக தன் நாவலில் ஒரு அத்தியாயத்தையே ஒதுக்கிவிடுகிறார் கேரளத்தின் முன்னணி படைப்பாளிகளுள் ஒருவரான குஞ்ஞப்துல்லா. பல இலக்கிய விருதுகள் வாங்கிய மலையாள ஷைத்தான்! இதுபோல் நாம் தமிழில் எழுத முடியுமோ? கேரள மண்ணின் தைரியமும் கலைகளுக்கு அது கொடுக்கும் முக்கியத்துவமும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. இசை , நடனம் என்று  அமர்க்களப்படுத்துகிற – மதத்தை எங்கே வைக்கவேண்டும் என்று புரிந்திருக்கிற – இஸ்லாமியர்கள் வாழ்க!

காட்டாற்று நதியாய் காமம் சுழித்தோடும் ‘கன்யாவனங்கள்’ நாவலிலிருந்து கொஞ்சம் பதிவிடுகிறேன்.

ஆபிதீன்

*

குஞ்ஞப்துல்லாவின் கூட்டுப் ‘பிரார்த்தனை’

முபீனாவுக்கு இறைவனிடம் லயித்து விட வேண்டும் என்ற ஒரேயொரு சிந்தனை மட்டும்தான்…

… …. …

ஹக்கீம் தயாரித்த ஒரு எண்ணெயுடன் முபீனா  அன்று ஹபீபின் அறைக்குள் வந்தாள். செம்மறியாட்டுத் தோலில் செய்த ஒரு பாயை அவள் தன் அக்குளில் சுருட்டி வைத்திருந்தாள்.

தோல்பாயை தரையில் விரித்தாள் முபீனா.

‘வாருங்கள்.. துணிகளை அவிழ்த்துவிட்டு இதில் படுங்கள்’

ஹபீபு முதலில் தயங்கியபடியே நின்றான்.

‘எதற்காக முழித்துக்கொண்டே நிற்கிறீர்கள்? ஹக்கீம் சொன்னால் கீழ்ப்படிய வேண்டும்’

ஹபீபு உடைகளை ஒவ்வொன்றாகக் களைந்துவிட்டு பாயில் நிர்வாணமாகப் படுத்தான்.

முபீனாவும் தனது மேல்குப்பாயத்தைக் கழற்றி வைத்தாள். இப்போது அவள் உள்ளாடையுடனிருந்தாள்.

முபீனா கால்மூட்டுகளையூன்றியவாறு குனிந்திருந்த ஹபீபின் உடலில் எண்ணெயைப் புரட்டி அமுக்கிவிடத் தொடங்கினாள்.

‘நான் ஒரு ஆண்மகனை முதலில் இப்போது தொடுகிறேன்… இப்பணியின் மூலம் நீங்கள் குணமடைந்தால் எனக்கு இறைவனின் அனுக்கிரகம் கிடைக்கும்,’ முபீனா சொன்னாள்.

மனதின் எல்லா உணர்வு மண்டலங்களையும் அடைத்துமூடி கண்களை இறுக அடைத்தபடி கிடந்தான் ஹபீபு.

‘கண்களை மூடக்கூடாது. சிகிச்சை செய்யும்போது மனதும் திறந்தே இருக்க வேண்டும்’

ஹபீபின் கண்கள் அகலத் திறந்தன.

கால் மூட்டுகளைத் தரையில் பதித்தமர்ந்தபடி எண்ணெய்த் தேய்த்துக்கொண்டிருந்த முபீனாவின் மார்பகங்கள் ஹபீபின் கண்களில் நிறைந்து நின்றன. தசைப்பிடிப்புள்ள அவளது மென்மையான கரங்களும், சுவாசச் சூடும் ஹபீபின் உடம்பைக் குளிரச் செய்தன. உடலில் பூசிக்கொண்டிருக்கும் என்ணெயில் காமப்பூக்களின் வாசமிருந்தது. எழுச்சியடைந்து விடக்கூடாதே என்று நினைத்தபோதே உறுப்பு எழுச்சியடையத் தொடங்கியது.

இடுப்புக்குக் கீழே, எண்ணெய்த் தேய்க்கத் தொடங்கிய முபீனா திடுக்கிட்டெழுந்து அதைச் சுட்டிக் காட்டியபடிக் கேட்டாள்: ‘இது ஏன் இப்படி?’

‘நான் இறைவனை தியானித்துக்கொண்டிருக்கிறேன். தியானத்தின்போது எனக்கு இப்படியேற்படுவதுண்டு’

‘அப்படியென்றால்.. எனக்கு இதுபோல் ஏற்படுவதில்லையே?’ முபீனா சொன்னாள். ‘அதிலும் நான் இறைவனை நினைக்காத நேரமில்லையே?’

ஹபீபிடமிருந்த கடிவாளம் கை நழுவியது. அவன் சொன்னான்:’ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே நேரத்தில் தெய்வ சிந்தனை ஏற்படும்போது கூட்டுப்பிரார்த்தனைதான் செய்ய வேண்டும். அப்போதுதான் தெய்வத்தின் பிரீதியை இரண்டு மடங்காக அடைய முடியும்’

ஹபீபின் இடுப்பைச் சுற்றி எண்ணெய்ப் புரட்டும்போது முபீனா சொன்னாள்:’அப்படியென்றால் நாம் ஒரு கூட்டுப் பிரார்த்தனை நடத்துவோம்… தெய்வ பிரீதி இரட்டிப்பாகக் கிடைக்கும்’

‘அது இப்போது வேண்டாம்….இது அதற்கான நேரமல்ல’ ஹபீபு சொன்னான்.

‘ஏன் வேண்டாம்?’ ஹபீபின் நாடியைப் பிடித்து முகத்தை தன்பக்கம் திருப்பிய முபீனா கேட்டாள்.

ஹபீபு அதை விவரிக்கத் தொடங்கினான்.’ கூட்டுப் பிரார்த்தனை செய்யும்போது அதை யாரும் பார்க்கக் கூடாது. பிரார்த்தனையைப் பற்றி வெளியே அறியவும் கூடாது. அதனால்தான் இப்போது வேண்டாம் என்றேன்’

‘அதற்கென்ன? நான் வேண்டுமானால் வாசல் கதவை அடைத்து விடுகிறேன்.  இதைப்பற்றி யாரிடமும் சொல்லவும் மாட்டேன்’

முபீனா எழுந்துபோய் வாசல் கதவை மூடினாள். ஹபீபு முபீனாவை பிரார்த்தனைக்குத் தயார்படுத்தினான்.

கூட்டுப் பிரார்த்தனையின்போது முபீனா சொன்னாள்: ‘வலிக்கிறதே’

ஹபீபு மூச்சு வாங்கச் சொன்னான்: ‘ஆமாம். முதலில் இரண்டு மூன்று பிரார்த்தனைகளின்போது கொஞ்சம் வலிக்கத்தான் செய்யும். படிப்படியாகக் குறைந்துவிடும்.’

கூட்டுப் பிரார்த்தனை முடிந்தபிறகு திரும்பவும் முபீனா எண்ணெய்ப் புரட்டி அமுக்கிவிடத் தொடங்கினாள். அப்போது ‘நான் மட்டும் தனித்து பிரார்த்தனை செய்யும்போதென்றும் இப்படியானப் பரவச நிலையை இதுவரையிலும் அடைந்ததில்லை’ என்று மகிழ்ச்சியுடன் சொன்னாள். காலி என்ணெய்க்குப்பியுடன் வாசலைத்திறந்து வெளியே போகுமுன் முபீனா கேட்டாள். ‘அடுத்தது, நாம் எப்போது பிரார்த்தனை செய்ய வேண்டும்?’

‘வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்’ ஹபீபு சொன்னான்.

இப்படியானக் கூட்டுப் பிரார்த்தனைகள் மூலம் முபீனாவை வசப்படுத்தினான் ஹபீபு.

*

முக்கியக் குறிப்பு : இறுதியில் ஹபீபு தப்பிச் செல்லும்போது அவன் காதில் முபீனா சொல்கிறாள் : ‘நாம் அடிக்கடி நடத்திய கூட்டுப் பிரார்த்தனையில் மற்றொரு நன்மையும் கிடைத்திருக்கிறது. மாதந்தோறும் வந்துகொண்டிருந்த அந்த வயிற்றுவலியும் தொந்தரவுகளும் இப்போது வருவதில்லை. நன்றி..ஹபீபு…நன்றி’.

*

புனத்தில் குஞ்ஞப்துல்லாவுக்கும் , தமிழில் தந்த சேக் முகம்மது ஹஸன் முகைதீனுக்கும், உயிர்மை பதிப்பகத்திற்கும் நன்றி!

7 பின்னூட்டங்கள்

 1. 14/11/2010 இல் 12:54

  நல்ல ரசமான கூட்டுப் பிரார்த்தனையாக உள்ளதே? எதற்கும் கொஞ்சநாள் தலைமறைவாக இருங்கள். ))

 2. மஜீத் said,

  14/11/2010 இல் 13:06

  ஆஆஹாஆஆ, அடுத்து ஒண்ணா?
  ம்ம்ம், என்னாகுதுன்னு பாப்போம்…

 3. 14/11/2010 இல் 13:07

  ஆஹா, இதுவன்றோ கூட்டுப் பிரார்த்தனை! எவ்வளவு பொருத்தமான பெயர்: குஞ்ஞப்துல்லா! இந்த மாதிரி பிரார்த்தனை செய்ய ஒவ்வொரு நாளும் நான் தயார்.முபீனாக்களைத்தான் தேட வேண்டும்.

  • 18/11/2010 இல் 01:47

   ரூமி சார் நீங்களுமா? இதென்ன இந்த பிரார்த்தனைக்கு இத்தன மவுசா?

   ஆபீதீன் அண்ணா ஏன் இந்த கூட்டுப்பிரார்த்தனை நினைவு திடிரென…?

 4. 14/11/2010 இல் 20:28

  அடா…..டாஆஆஆ……. ஆபிதீன், தெரியாம போயிடுச்சே! கேரளா போயிருந்தப்ப அங்கே ஒரு கூட்டுப் பிரார்த்தனை பண்ணிருபேனே! பெரிய தப்பு பண்ணிட்டேன்; பெரிய தப்பு பண்ணிட்டேன். ச்சே.. மனசுக்கு சங்கடமா இருக்கு……….!

  • மஜீத் said,

   15/11/2010 இல் 16:02

   தப்புப் பண்ணல நானா, தப்பிச்சுட்டீங்க!
   விசாரிச்சுப்பாத்தேன்; (நான் ட்ரை ப‌ண்ற‌துக்காக‌ இல்ல‌)
   நீங்க போன ‘தவா க்ஹானா’வுல‌
   ‘முபீனா’க்கள் இல்லயாம்; வெறும் ‘முபீன்’களாத்தான் அலையுறாங்களாம்!!

 5. maleek said,

  15/11/2010 இல் 10:09

  நல்லதொரு “பிரா”ர்த்தன கதா.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s