பற்று வேறு, வெறி வேறு

‘இஸ்லாத்துக்கு சம்பந்தமில்லாததை போடுறான்’ என்ற குற்றம் சாட்டுகிறார்களாம் சவுதி சகோதரர்கள். ஆதலால் , பிற மதங்களை ‘மாற்றுச் சமயங்கள்’ என்று குறிப்பிடாமல் ‘சகோதர சமயங்கள்’ என்று குறிப்பிடும் பண்பாளர் மணவை முஸ்தாபாவின் நூல் ஒன்றிலிருந்து கொஞ்சம் பதிவிடுகிறேன். இதில் ரசூல் (ஸல்) இருக்கிறார்கள், சஹாபி (நபித்தோழர்) இருக்கிறார், முக்கியமாக… ஒட்டகம் இருக்கிறது 🙂 .

***

ஒரு நபித்தோழராகிய சஹாபி நாயகத் திருமேனியை நோக்கி, ‘நம் இனத்தின் மீது பற்றுக் கொள்வது, அதிலும் தீவிரமான பற்றுக் கொள்வது தவறா?’ என வினாத் தொடுத்தார். இவ்வினாவுக்கு விடை கூற வந்த அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் ‘ஒருவர் தன் இனத்தின்மீது பற்றுக்கொள்வது இயற்கை. அது பற்றாக மட்டுமே வளர்ந்து வளமடைய வேண்டுமேயல்லாது, வெறியாக மாறிவிடக் கூடாது’ என்றார்கள்.

இப்பதிலில் திருப்தியடையாத சஹாபி மேலும் தெளிவு பெறும் பொருட்டு, தொடர்ந்து கேள்வி எழுப்புகிறார்.

‘பற்று கொள்ள வேண்டும் என்று சொல்கிறீர்கள். இனத்தின்மீது தீவிரமாகப் பற்றுக் கொண்டால் அதனை மற்றவர்கள் வெறியாகக் கருதுகிறார்கள். அந்தப் பற்றுக்கும் வெறிக்கும் என்ன வேறுபாடு?’ என்று கேட்டார்.

இவ்வினாவுக்கு விடைகூற முனைந்த பெருமானார் ‘எந்த ஒரு குறிப்பிட்ட இன, மொழிகளைப் பற்றிக் கூறாமல், ஒரு இனத்தைச் சார்ந்தவன் மற்றொரு இனத்தைச் சார்ந்தவன் மீதோ அல்லது இனத்தின் மீதோ தீவிரமான, கெடுதலான, தீங்கு தரக்கூடிய, அந்த இனத்திற்கு மாபெரும் பாதகத்தை அளிக்கக்கூடிய ஒரு தீய காரியத்தை செய்யத் துணிந்து விட்டான் என்றால் , நம் சமுதாயத்தைச் சார்ந்தவன்தானே இதைத் தொடங்கியிருக்கிறான், அந்த இனத்தின் அடிப்படையில் அவனுக்குத் துணையிருப்பதுதானே முக்கியக் கடமை; நீ என்ன தீங்கு செய்தாலும்  உனக்கு நான் துணையாயிருக்கிறேன் செய்! என்று அவன் துணை போனால் அது அந்த இனத்தைச் சார்ந்தவன் மீது நீ கொண்டிருக்கும் பற்றல்ல; அது அந்த இனத்தின் மீது கொண்டிருக்கும் வெறி. அந்த வெறியோடு நீ செயல்பட்டால் நிச்சயமாக நீ அழிவாய். உன்னை நம்பி உன் துணையை எதிர்பார்த்து, அந்த செயலில் முனைப்பாக ஈடுபடக் கூடியவனும் அழிவான் ‘ என்றார்கள். இதனை, இவ்வாறு கூறும் அறிவுரைகளைச் செம்மையாக புரிந்து கொள்வார்களோ மாட்டார்களோ என்ற ஐயம் அண்ணலாருக்குத் தலை தூக்கவே மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள உடனே ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கலானார். ‘ கிணற்றுக்குள் விழுந்துவிட்ட ஒரு ஒட்டகத்தை, ஒரு தனி மனிதன், வாலைப்பிடித்து நான் மேட்டுக்கு இழுத்து விடுவேன், கிணற்றிலிருந்து தூக்கி விடுவேன், அதனைக்  காப்பாற்றி விடுவேன் என்று முனைந்து நின்றால், ஒட்டகத்தை அவனால் தூக்க முடியாதது மட்டுமல்ல; வாலைப்பிடித்த இவனும் அந்தக் கிணற்றுக்குள் விழுந்து விடுவான். விழுந்த அந்த ஒட்டகத்தோடு இவனும் அழிவான்’ என்று விளக்கினார்கள்.

***

 

– ‘வளர்தமிழ்ச் செல்வர்’ மணவை முஸ்தபா , 6.7.1998 அன்று அபுதாபி ஐமான் சங்க மீலாது விழாவில் பேசியது. ‘இஸ்லாம் ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா ‘ நூலிலிருந்து , பக் 147-148 (வெளியீடு: சௌதா பப்ளிகேஷன்)

12 பின்னூட்டங்கள்

 1. 09/11/2010 இல் 13:34

  யாரு அது சவுதியில.. நம்ம இனமான-மதமான-தன்மான சிங்கம் ஆபிதின் காக்காவை சொன்னது. கோஸ்டர் (2 ரியால் வேனிற்கு பெயர் இங்கு) நிறைய ஆளை கொண்டு இறக்கட்டுமா? உத்தரவிடுங்கள். இது பற்றா? வெறியா? என அப்பறம் அண்ணலாரை படித்து தெரிந்து கொள்ளலாம். இருந்தாலும் ஒட்டகக்கதை அருமை. இப்பவாவது புரிந்தால் சரி. ஒட்டகத்தை தனித்தனியாகத் தூக்க 72 பேர் கிணற்றில் விழுந்துவிடும் நிலைதான் உள்ளது. (ஒன்னு ரெண்டு விட்டுபோயிருக்கலாம் கூட்டத்தை கணக்கிடுவதில்.)

 2. 09/11/2010 இல் 16:36

  //இதில் ரசூல் (ஸல்) இருக்கிறார்கள், சஹாபி (நபித்தோழர்) இருக்கிறார், முக்கியமாக… ஒட்டகம் இருக்கிறது//

  நல்ல நகைச்சுவை… வாய் விட்டுச் (?!) சிரித்தேன். சுஜாதா குறும்பு தொனிக்கிறது.

 3. 09/11/2010 இல் 19:48

  சஹாபி இருக்கிறாஹா சரி, வஹ்ஹாபி இருக்கிறாரா..?

 4. 09/11/2010 இல் 19:49

  அதுமட்டுமல்லாம இதுக்கு ஆதாரம் என்னா..?

 5. 09/11/2010 இல் 20:15

  குதிரைக்குப் பட்டை கட்டுவார்கள் ஏன் தெரியுமா? அதன் பார்வை அங்குமிங்கும் போய்விடக்கூடாது என்பதற்காக. அதுபோல இந்த வஹாபிகளுக்கு பட்டை கட்டப்பட்டுள்ளது. வேறு வார்த்தையில் நாகரீகமாக சொன்னால் “Saturated Mind” அப்படியேதான் இருக்கும். இதையெல்லாம் பெரிசு படுத்தக்கூடாது.

 6. 09/11/2010 இல் 22:06

  மணவை முஸ்தபா நமது பொக்கிஷம்.

 7. maleek said,

  10/11/2010 இல் 04:21

  ஆளாளுக்கு ஒரு பிரச்னை எனக்கு இது :ஆபிதீன் காக்காவா,நானாவா?

  • மஜீத் said,

   10/11/2010 இல் 11:11

   ‘அண்ணன்’னு சொல்லவே கூடாதா???

 8. 10/11/2010 இல் 09:25

  நண்பர்களுக்கு நன்றி. ஆள்விட்டு துபாயில் அடிப்பார்கள் என்று தெரிந்தும் சவுதியில் தொண்டர்களைத் திரட்டுகிற தலைவர் ஜமாலனுக்கு ஸ்பெஷல் நன்றி. ‘தன்மான சிங்கம்’ என்ற வார்த்தைதான் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறது! அர்த்தமென்ன அஸ்மா, அடிக்காமல் சொல்வாயா?

  அன்பு மாலிக், ஆபிதீன் நானாதான் சரி. பிரச்சனையும் வராது. ஆபிதீன் காக்கா என்றால் அது புலவர் ஆபிதீனை மட்டுமே குறிக்கும் (நாகூரில்).

 9. 10/11/2010 இல் 10:03

  நண்பர் மஜீத் (amjeed6167@yahoo.com ) அனுப்பிய மெயில் :

  இன்னொரு சவூதி, கிணறு, ‘காட்டரபி’ கதை
  ————————————–
  கோஸ்டர் இன்னும் 2 ரியால்தானா? அப்ப சவூதியில விலைவாசி பரவால்ல. இங்க எல்லை வச்சுக் காசு புடுங்குறாங்க. முதல் செக்டார், ரெண்டாவது செக்டார்னு. சரியா ஆபிதீன் காக்கா?

  சவூதி, கிணறு என்றதும் ஒரு கதை ஞாபகம் வருகிறது. எனது ஊர்க்காரப்பையன் ரியாத்தில் ஒரு ஸ்டேஷனரிக் கடையில் வேலை செய்தான். ஊரில் எலெக்ட்ரீஷியன். எப்படி இங்கு வந்து சேர்ந்தாய்னு கேட்டேன். அந்தக்கதையைச் சொன்னான்:

  எலெக்ட்ரீஷியன் விசான்னு சொல்லி ஏமாத்திட்டு (வழக்கம்போலத்தான்) ரியாத்-மக்கா ரோட்டுல ஒரு குக்கிராமத்தில உள்ள ஒரு ‘மஸ்Zரா’ (விவசாயப்பண்ணை)வில விட்டுட்டானுங்களாம்.
  கஃபில் (ஸ்பான்ஸர்) ஒரு “காட்டரபி” யாம். ஆ..ஊ..ன்னா ‘அடி’தானாம்.
  குச்சியோ, தலை வட்டுல உள்ள கயிறோ கையில எது கிடைச்சாலும் சாத்திருவானாம்.

  ஒருநாள் அங்க‌ உள்ள‌ ஒரு கிணற்றிலிருந்த‌ ப‌ம்ப்செட் வேலை செய்யாம‌ இருக்க‌, அதைச் சில‌ர் ‘ஒக்குட்டுக்கிட்டு’ (ரிப்பேர் செய்தல்) இருக்கும்போது, ரொம்ப லேட்டாகுதுன்னு காட்டரபி பொறுமையிழந்து, கோபப்பட்டு கீழே என்ன நடக்குதுன்னு பாக்குறதுக்கு ஒரு கயிறை இடுப்புல கட்டிக்கிட்டு இறங்கிட்டான். கயிறுபுடிச்சு இறக்கிவிட்டவன் நம்மாள். பேரு அப்துல்காதர். இவன் நின்று கயிறு பிடித்த இடத்திலிருந்து கிணற்றுக்குள்ளே பார்க்க முடியாது. கிணறு பக்கத்துல இருந்து எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் விடுற சவுண்டுல இருந்துதான் இவன் ‘கயிறுவிட்டான்’.

  காட்டரபி கீழேயும் பொறுமையிழந்து, கத்திவிட்டு மேல தூக்கச்சொல்லிவிட சொல்லிருக்கான், இடுப்புல சுருக்கைப் போட்டுக்கொண்டே. மேலே நிக்கிறவங்க ‘இன்ஸ்ட்ரக்ஷன் ஸ்டார்ட்’ ஆயிருச்சு (கிட்டத்தட்ட ‘பிரபு-வடிவேலு-கிங்காங்’ போட்றா, ஆஃப்பண்றா கதைதான்)

  அஞ்சடி மேல வந்ததும் விசயம் ஏடாகூடாமா போச்சு. இடுப்புச்சுருக்கு நழுவி மேல வந்து, அரபிக்கும் கயிற்றுப்புடி வழுக்கிவிட்டு, கழுத்துல மாட்டிகிருச்சாம். கைப்பலத்தைக் கொண்டு சமாளிச்சு, மரண ஓலமிட்டுருக்கான். மேல நின்ன எல்லாரும் குய்யோ முறையோன்னு, அரபிலயும் ஹிந்திலயும் கத்தி, நம்ம காதர்ட்ட கயிற்றை விட்டுவிடச் சொல்லிருக்கிறார்கள். இவ‌னுக்கு ஹிந்தியாவ‌து அர‌பியாவ‌து. வேக‌மாக‌ இழுக்கச்சொல்கிறாங்க‌ன்னு நினைச்சு, இழுத்திருக்கான். நிலைமை புரிந்த‌ ஒரு ஹிந்திக்கார‌ன் ஓடிவ‌ந்து இவ‌னைத் த‌ள்ளிவிட்டு, காட்ட‌ர‌பியைக் காப்பாத்திருக்கான்.

  இவ‌னுக்கு ஒண்ணும் புரியல; வெளில‌ வ‌ந்த‌ அர‌பி கையில‌ கிடைச்ச‌ ஒரு க‌ட்டையை எடுத்து ‘வெளுவெளு’ ன்னு வெளுத்துருக்கான். அன்னிக்கு அந்த ‘ஸ்பாட்ல’ இருந்து ஓடிவ‌ந்த‌வ‌ன்தான். இந்த‌ க‌டையில‌ ‘க‌ல்லிவ‌ல்லி’யா (சட்டபூர்வமில்லாது)வேலைக்குச் சேர்ந்து, ரெண்டு மூணு மாச‌ம் க‌ழிச்சு, இந்தக்கடை கஃபில் மூல‌மா, பாஸ்போர்ட்டை வாங்கி விசா மாத்துனானாம்.

  நான் கேட்டேன்: ஏண்டா மூதேவி, அவ்வள‌வு பேரு க‌த்தியும் ஏண்டா இழுத்தே?
  அவ‌ன்: நான் என்ன‌டா ப‌ண்ற‌து? ‘காத‌ர்,காதர்’னு க‌த்துனாங்க‌ நான் இழுத்தேன்.
  அடி வாங்கிக்கிட்டே, ஓடி வ‌ந்து இன்னோரு தமிழ் ஆள்ட்ட கேட்டேன்; அவர் ப‌ழைய‌ ஆள்;
  அவ‌ர் சொன்னார், காத‌ர்னா அபாய‌ம்னு அர்த்த‌மாம்ல‌?

  அட லூஸு, அது காதர் இல்லடா, ‘க்ஹ‌த்தர்’ அரபில டேஞ்சர்னு அர்த்தம்னேன்.
  அதுக்கு அவன் சொன்னான் : “அட‌ போடா, என‌க்குக் காத‌ர்னுதான் கேட்டுச்சு”

  • 11/11/2010 இல் 12:27

   கதை அருமையாக உள்ளது. தெய்வம் நின்னு கயிறுகடடி கொன்னடுச்சி.. )))

 10. 26/02/2012 இல் 06:23

  சொல்பவர்கள் சொல்லட்டும் தொடர்ந்து செயல்படுங்கள் உங்கள் இஸ்லாமிய சேவையை .
  JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
  “Allâh will reward you [with] goodness.”


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s