நாகூர் ரூமி எழுதிய ‘The Interpretation of Dreams’ – தமிழாக்கம் : சிக்மன்ட் ஃப்ராய்ட்! இப்போது திருப்தியா? பாவிகளா, முதல் பகுதியைப் பற்றி எதாவது சொல்வீர்கள், நாமும் கொஞ்சம் கற்றுக்கொள்ளலாம் என்று கனவு கண்டால் ரூமியின் முகம் சரியில்லை, அவர் கையை பிசைந்து கொண்டிருக்கிறார் என்றெல்லாம் கமெண்ட் கொடுக்கிறீர்களே.. நியாயமா? அவர் எதைப் பிசைந்தால் நமக்கென்ன?
நாகூர் அழகனின் புகைப்படத்தின் கீழே அவருடைய நீளமான…. கட்டுரையின் மீதி இரு பகுதிகளை pdf வடிவில் தந்திருக்கிறேன். படியுங்கள். வேர்ட்பிரஸ்-ல் ஒட்டவைப்பதற்குள் உயிர் போய்விடுகிறது. பிறிதொரு சமயம் போடுகிறேன். நன்றி.
பாவம் ஃப்ராய்ட்!
மஜீத் said,
25/10/2010 இல் 14:57
ஒரு வழியாக மீண்டு(ம்)வந்ததற்கு வாழ்த்துக்கள்!!
நன்குபடித்துவிட்டு கருத்தை எழுதலாமெனவிருந்தேன்.
“பாவிகள்” பாய்ந்துவிட்டார்கள், இடையே.
வெவரமாக, ஃபோட்டோ மாற்றுவதுபோல் மாற்றி, ரூமி அவர்களின் முகராசி கமெண்ட்டை ப்ரூஃப் பண்ணியாச்சு!
Apart from Jokes,
ஃப்ராய்ட், ஒரு மாமேதைதான். முதல் அத்தியாயத்திலேயே, கனவுகளின் முழுத்தன்மைகளையும் தொட்டுவிட்டார்ப்போன்ற உணர்வு. அருமையான எளிதான மொழிபெயர்ப்பும் இந்த உணர்வு மேலிட ஒரு முக்கிய காரணம். நன்றி
நாகூர் ரூமி said,
25/10/2010 இல் 15:55
http://www.tamilpaper.net/?p=816 — இந்தக் கட்டுரையைப் படிக்கவும் (இதற்கும் என் ஃப்ராய்டுக்கும் தொடர்பில்லை. பாபர் மசூதி விவகாரம் பற்றி தமிழ் பேப்பரில் ஒரு சகோதரர் எழுதியுள்ள அருமையான எதிர்வினைக் கட்டுரை. நாகூர் தர்கா அனுமனின் வால் பட்ட இடம் என்ற ஒரு மறுமொழிக்கு நான் கொடுத்த பதில் பல பேரைக் கடுப்பாக்கியுள்ளது. அதையும் பார்க்கவும்.
மஜீத் said,
25/10/2010 இல் 18:27
அனுமனின் ‘முன்’வாலை எடிட் செய்துவிட்டார்கள்!!.
அவாள்ள ஒருத்தரோட கமெண்ட் மூலமாத்தான் உங்கள் கமெண்ட்டிலிருந்த அனுமனின் முன்வாலை நான் கண்டு’பிடித்தேன்’. அக்காகி- ஆப்பு வை இதுவரை யாரும் ஒன்றும் சொல்லவில்லை