‘அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல’ ஆபிதீனைத் தாங்கும் ,சாதாரண அர்த்தம்தான், ‘அஸ்மா’வுக்கு இன்று பிறந்த நாள். ஆதலால் ஒரு ஆபிதீன்காக்கா பாட்டு – 1960இல் வெளியான ‘அழகின் முன் அறிவு’ நூலிலிருந்து. எப்படியெல்லாம் தாங்க வேண்டியிருக்கிறது! என்ன, வயசா? அதெல்லாம் சொல்ல முடியாது. வாங்கிய அடிகள் போதும்.
***
தாய்க்குலம் வாழ்க!
புலவர் ஆபிதீன்
தாலாட்டும் பெண்கள் தீர்ப்புகள் தந்து
தரணியை யாள்வதும் என்றோ?
பாலூட்டும் தாய்மார் பண்போ டுழைக்கும்
போருக்கு எழுவது என்றோ?
வளையல்கள் சூடும் வனிதையர் கைகள்
வாளேந்தி ஓங்குதல் என்றோ?
தளைபோன்ற காப்பு நகையா மெல்லாம்
தூரவே வீசிடல் என்றோ?
பேனூரும் கைம்பென் கூந்தல் மணக்கப்
பூவைத்து மகிழ்வது என்றோ?
தேனூறப் பாடித் தொட்டிலை யாட்டுந்
தையலர் முன்னேறல் என்றோ?
சேய்களை ஈனும் பொறியாக நம்பும்
சிந்தனை சாவதும் என்றோ?
தாய்க்குலம் வாழச் செங்கோல் சுமந்து
தேசத்தைக் காப்பதும் என்றோ?
பல்கலைக் கழகத் தாசிரி யையாய்ப்
பாவையர் வந்திடல் என்றோ?
அல்லோடு பகலும் அடுப்பூத நாடும்
அறியாமை மாய்வதும் என்றோ?
துடைப்பமே தூக்கும் தங்கையர் இங்கே
துப்பாக்கி தாங்குதல் என்றோ?
கடைப்பொரு ளன்று காதலென் றோதிக்
கற்பிக்கும் காலமும் என்றோ?
***
நன்றி : யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
ஜமாலன் said,
17/10/2010 இல் 10:18
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல தம்மை இகழ்வாரைப் பொறுத்துக் கொள்ளும் “ஆபிதினை“ப் பொறுத்துக்கொண்ட சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்லாதான் பேலன்ஸ்பன்றிய… ம் நடக்கட்டும். எழுத்தாளர்கள் மனைவிகளை வசீகரிப்பது எப்படி என்று ஆபிதீன் அவர்கள் ஒரு நூலே எழுதலாம். எங்களைப் போன்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். (வீட்டிலே இணையம் உண்டா.. பம்முறதப் பாத்தா அப்படித்தான் தோனுது.)
ஆபிதீன் said,
17/10/2010 இல் 10:40
நன்றி ஜமாலன். நூலெல்லாம் தேவையில்லை, நொந்து நூலாவதைத் தவிர்க்க ஒரே ஒரு வழிதான். காலுலெ வுளுந்துடனும்!
மஜீத் said,
17/10/2010 இல் 12:55
100% correct.
நாகூர் ரூமி said,
17/10/2010 இல் 16:52
காலுல உளுவுறது எதுக்கு? காலுலேறுந்து தொடங்கவா?
தாஜ் said,
17/10/2010 இல் 17:44
தங்கை அஸ்மாவுக்கு வாழ்த்துக்கள்.
ஆபிதீனும் ரூமியும்
ஏதோ ஓர் உண்மையைச் சொல்வதாக…
நாடு நடப்பைதான் சொல்லி இருக்கிறார்கள்.
– தாஜ்
ஒ.நூருல் அமீன் said,
17/10/2010 இல் 22:39
உங்கள் வலைத்தள ரசிகர்கள் சார்பில் உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் ஈமானின் ஒளியால் அமைதியும், இன்பமும் தவழ பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகின்றோம்.
ஆபிதீன் said,
18/10/2010 இல் 09:36
நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றி. இந்த நாகூர்ரூமியின் தொல்லைதான் தாங்கமுடியவில்லை. அவர் சொல்றதும் 100% கரெக்ட்தான் என்றார் நேற்று சந்தித்த மஜீத், சிரிக்காமல். ரூமி இதுவரை தொடாத சப்ஜெக்ட்… அதற்கும் ஒரு புத்தகம் எழுதி வெளியிடவேண்டுமென ‘காலுலெ வுளுந்து’ கேட்டுக்கொள்கி
றேன்.
ஒ.நூருல் அமீன் said,
18/10/2010 இல் 23:13
ஆபிதீன் காக்கா!, சூஃபி வழியில் செல்லும் ரூமி நானா சின்ன சின்ன காமெடிக்காக எழுதுவதை வைத்து அவ்ரை நன்கு அறிந்த நீங்களே இப்படி சூடேத்தலாமா?
இன்னும் பல சூஃபி நூல்கள் அவர் முலம் வெளி வர ஆசைப்படுகின்றோம்.
எம் அப்துல் காதர் said,
19/10/2010 இல் 12:03
ஓய் பிறந்த நாள் வாழ்த்து சொன்னியுமே, ஃகிப்ட் ஏதும் வாங்கி கொடுத்தியுமா?? சும்மா வாழ்த்த சொல்லிட்டு இந்த கால்ல உளுறது, அந்த கைய பிடிக்கிறது .. ச்சே ச்சே என்ன இதெல்லாம் நான் கேள்வி பட்டதே இல்லையே. ஹி.. ஹி.. (மறந்தாவுல)
ஆபிதீன் said,
20/10/2010 இல் 09:57
வாங்க காதர்பாய், எங்கேயிருந்தீங்க இத்தன நாளா? கிஃப்ட்லாம் கிடையாது. சோப்புதான். எல்லாம் நீங்க சொல்லிக்கொடுத்த ‘டெக்னிக்’தான்.