இப்படிக்கு உங்கள் மகன் – U.K.G

‘கவிதையாக தேறாது என்றாலும் உணர்விற்காக வாசிக்கலாம்… ‘ என்ற சிபாரிசுடன் நண்பர் ஜமாலன் அனுப்பிவைத்த சுட்டியிலிருந்து ஒரு கவிதை. தம்பி யாசர் அரஃபாத் எழுதியது. ‘அத்தா’ என்றால் ‘வாப்பா’வென்று புரிந்துகொள்க. ‘வாப்பா’ என்றால் யார் என்று கேட்கமாட்டீர்கள்தானே?

***

இப்படிக்கு உங்கள் மகன் – U.K.G

 யாசர் அரஃபாத்

அஸ்ஸலாமு அலைக்கும்,
 
 
தட்டுத் தடுமாறி
சிந்தும் எச்சிலோடு
‘அம்மா’ என்றழைப்பேன்!
 
வரம் தந்த அன்னையோ
விரல் கொண்டுக் கோதி
‘அத்தா என்றழை’ என்பார்!
 
புரியாத எனக்கு
புன்னகையோடு
பூப்பேன் ‘அத்தா’ என்று!
 
என் காதோடு சூடானக்
கைப்பேசியில் அத்தா நீ
முத்தமிடும் சப்தம்!
 
நான் போடும் சப்தத்தில்
சப்தமில்லாமல் உன் முத்தம்
காற்றோடுக் கலக்கும்!
 
புகைப்படம் ஒன்றைக் காட்டி
‘அத்தா’ என்பார் அன்னை;
விளங்காத நானோ
விளக்கம் கேட்பேன் வெகுளியாய்!
 
நண்பர்களின் அத்தா மட்டும்
நடைபோடும் புன்முறுவலுடன்;
எனக்கு மட்டும் அத்தா புகைப்படமா என!
 
கலங்கியக் கண்ணீரை
முந்தாணியால் முத்தமிட்டு
என்னை செல்லமாகத் திட்டிவிட்டு
செல்வார் அன்னை!
 
தினந்தோறும் உங்கள்
குரல் மட்டும் தரிசனமாய்
எங்கள் மீது கரிசனமாய்!
 
அடைக்காக்கும் அன்னையோ
கொஞ்சம் விலகி செல்கிறாள்-என்னைக்
கொஞ்ச மறந்துசெல்கிறாள்!
 
காரணம் வந்துவிட்டீர்களாம்
வளைகுடாவில் இருந்து நீங்கள்;
என்னைத் தவிர்த்து
உங்களிடம் சிரிப்பது;
வெறுப்பானது எனக்கு!
 
எப்போதாவது நீங்கள்
காட்சியளிப்பதற்கு
எப்போதும் போலவே
புகைப்படம் போதும் எங்களுக்கு!
 
இப்படிக்கு உங்கள்
மகன் – U.K.G

***

நன்றி : யாசர் அரஃபாத்

3 பின்னூட்டங்கள்

 1. 13/10/2010 இல் 14:01

  என்ன காக்கா இன்றைய கணக்கு முடிஞ்சதா? இப்பத்தான் நெட் சாட், வீடியோ சாட்டெல்லாம் இருக்கே.

  வாப்பா என்றால் எங்கள் பாக்கம் வாப்பா என்று தான் அர்த்தம். )) அப்பா என்கிற தமிழ் சொல்லிற்க ஏன் இத்தனை பெயர்கள் அத்தா, பாப்பு, வாப்பா, பாவா இப்படி… யாரேனும் இஸ்லாமிய தமிழ் அறிஞர்கள் விளக்கினால் நலம்.

 2. 13/10/2010 இல் 14:28

  ‘அத்தா’ அருமையான தமிழ் ஜமாலன். என் அத்தாவை நான் ‘வாப்பா’ என்று – நாகூர் பாஷையில் – அழைத்ததைக் கேட்டு வாப்பாவின் சொந்தங்களுக்கு (ஒக்கூர், ஏம்பல், அறந்தாங்கி) இன்றுவரை கோபம்! நாகூரில் ‘அத்தா’வென்றால் சோறாக்கும் ‘பண்டாரி’யைக் குறிக்கும். அதென்ன ‘பண்டாரி’ என்கிறீர்களா? நண்பர் கய்யூம்தான் விளக்க வேண்டும்.

  • மஜீத் said,

   13/10/2010 இல் 14:58

   The boy’s name Attila \a-tti-la\ is of Hungarian origin, and the meaning of Attila is “father-like”.

   துருக்கியிலும் அதே அர்த்தம்தான்; அத்தா என்றால் துருக்கியிலும் அத்தாதான் (சரி, வாப்பாதான்)

   துருக்கியர்கள்தானே, துலுக்கர்கள்?
   ராவுத்தன் ஹாஜா அலி அவர்கள் இதைப்படித்திருக்க வேண்டும், நல்ல விளக்கம் தந்திருப்பார். அவர் நினைவு வந்து விட்டது எனக்கு.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s