பீர்முஹம்மது பாகவதர்

‘பிரியங்கா சோப்ராவை போடுங்க நானா’ என்ற ஷைத்தான், என் கண்ணில் தெரியும் அதீத ஆர்வத்தைப் பார்த்து சுதாரித்துக்கொண்டு, ‘அட, பிரியங்கா சோப்ராவுக்கு புடிச்ச பாட்ட போடுங்க நானா’ என்றது. சொல்வதை ஒழுங்காகச் சொல்லவேண்டுமா, இல்லையா? நேற்று பேசிய ஹமீது ஜாஃபர்நானா கூட , ‘என்னட இது படுத்துடிச்சி’ என்றார். ‘வயசானா அப்படித்தான்’ என்றேன். ‘அடச்சே, என் லேப்டாப்பை சொல்றேங்க!’  என்கிறார். ஆபாசம், ஆபாசம்! தமாஷ் நிற்கட்டும், ‘அஞ்ஜானா அஞ்ஜானி’யில் ராஹத் ஃபதே அலி கான் படிக்கிற அலம்பல் பாட்டான  ‘ஆஸ் பாஸ் குதா… ‘ வைத்தான் போடனுமாம். ‘ஜீ-டிவி’யின் ‘சரிகமப’வை கலக்கிக்கொண்டிருக்கிற கமல்கானை – உன் குரலுக்கு எடுபடும் என்று – ‘ஆஸ் பாஸ் குதா’வைத்தான் பாடச் சொன்னாள்/ர்  பிரியங்கா அன்று.  அந்த ‘பாட்டியாலா’ பொடியன் கமல்கான் பாடும் அழகை – இது வேறொரு பாட்டு – இங்கே பாருங்களேன்.  எப்படி இருக்கிறது? ஜாது கா ஜப்பி! சங்கீதக் கணக்குகள் தெரிந்த ஃபரீத் ஹஸனை விட இந்த சாமான்யனைத்தான் எனக்கு அதிகம் பிடிக்கும்.  பரமனோடு ஜீவன் கலக்க உதவும் இசைக்கு ‘ஜீவன்’ தேவை என்பார்கள். அது கமால்கானிடம் நிறையவே இருக்கிறது. சுக்வீந்தரும் ராஹத்தும் இணைந்த சுகமான குரல். கமல்கான் நீடூழி வாழ்க!

பத்து தடவை ‘ராஹத்’தாக கேட்டபிறகு பீர்முஹம்மது நினைவுக்கு வந்துவிட்டது ஷைத்தானுக்கு. அதையும் போடச்சொன்னது. போட்டேன். ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு ‘பொதிகை’யில் நான் ரிகார்ட் செய்த பாட்டு.  பீர்முஹம்மதுதான் அவருடைய அசல் பெயர். ஆனால் ஏனோ ‘முகேஷ்’ என்று அழைக்கப்பட்டார். ‘பீர்முஹம்மது’ என்ற பெயருக்கு என்ன குறைச்சலாம்? அந்தப் பெயரைக் கேட்டாலே தக்கலை அப்பாவின் ஞானப்பாடல்கள் ஞாபகத்திற்கு வந்து நெகிழ்ந்து விடுவேன் நான். ஹூம்ம்.. ஊடகங்களின் ‘திறமை’ போலும்.

எல்லார் குரலிலும் பாடும் முகேஷ் (எ) பீர்முஹம்மதின் சொந்தக்குரலைக் கேட்க ஆவலாக இருக்கிறேன். ரஹ்மானின் சில பாடல்களில் கோரஸுக்கு இருக்கிறார் என்று கேள்வி. கேசட்டுகள் , ‘சிடி’க்கள் வெளியாகியிருக்கலாம். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

தீன கருணாகருனே நடராஜா…

9 பின்னூட்டங்கள்

 1. 10/10/2010 இல் 12:10

  பாடல் அருமை சார். பகிரந்தமைக்கு வாழ்த்துகளுடன் நன்றிகள். ஈசனின் பாடலை மிகவும் வித்தியாசமான இசையில் ரசித்தேன்.

 2. 10/10/2010 இல் 12:12

  கட்டுரைய படிக்க சிரமாக இருக்கிறது. தமிழில்தான் எழுதப்பட்டிருக்கிறதா என்று சிந்திக்க தூண்டியது. ஒருவேளை தமிழ் அல்லாத பெயர்கள் காரணமாக இருக்கலாம்.

  • மஜீத் said,

   10/10/2010 இல் 17:48

   என்ன செய்வது ஜெகதீஸ்வரன்? தமிழர்கள் தமிழ் எழுதினால் இப்படித்தான் இருக்கிறது!

 3. மஜீத் said,

  10/10/2010 இல் 17:59

  இந்த ‘முகேஷி’ன் குரலையும் திறமையயும் தன்னால மெச்சிக்கொண்டு, ஏதாவது கல்லிடம் முட்டியாவது பகிர்ந்துகொள்ளலாமென்றிருந்தேன். (அதுவும் பயமா இருந்துச்சு, அது யார்னு கல்லு கேட்டா?)

  இப்பத்தான் தெரியுது துபாய்லயே ரெண்டு கல்லு இருக்குன்னு. இப்ப முட்டலாம்.

  பீர்முஹம்மது பொதிகைக்கு வெளியேயும் மிளிர வாழ்த்துக்கள்.

 4. 10/10/2010 இல் 19:33

  இரண்டு முறை கேட்டேன். இன்னும் கேட்கனும் போலிருக்கிறது. ஆகா…! அருமை அருமை!! என்னை எம்.கே. டி யிடம் கொண்டுபோய்விட்டார். வாழ்க பீர் முஹம்மது பாகவதர்.

  72/73 களில் நான் மதுரையில் வேலை செய்துகொண்டிருந்தபோது முஸ்பா என்ற 65 வயது பரமக்குடிக்காரர், இதே பாட்டைப் பாடி என்னை அசத்திவிட்டார். அதே குரல், அதே லயம், ஆகா அந்த குரலை இப்போது கேட்கிறேன்.

 5. Rashid said,

  11/10/2010 இல் 21:28

  அருமையாக பாடியுள்ளார் பாகவதர்!பாடலை திரும்ப திரும்ப கேட்க வைத்தது குரல்!

 6. 12/10/2010 இல் 12:23

  நண்பர் மஜீத் அனுப்பிய மெயில்:

  Subject: நாகூர் மஸ்தானும் ‘நம்ம’ சைத்தானும்

  நம்ம நாகூர் நானா சைத்தான் சொன்னதை எழுதுறாரே தவிர சைத்தானைப்பத்தி எழுத மாட்டேங்குறார்னு எனக்கு ஒரு குறை இருக்கு.

  பீர்முஹம்மது பாகவதர் படிக்கும்போது அவரைமாதிரியே பாடுற இன்னொருத்தர் ஞாபகத்துக்கு வந்தார். அவர் பேரும் ரொம்ப வித்தியாசம்: சோலார் சாய். சொக்குதே மனம் நிகழ்ச்சியில், ஆறரை அடி உயரத்தில் அகலக்காலிலேயே நின்று பாடும் அசாத்திய திறமைசாலி. சீர்காழியும், MKTயும் சர்வசாதாரணமாக உலவுவார்கள் இவரிடம். தீனகருணாகரனே நடராஜாவும், கிருஷ்ணா முகுந்தாவும், தேவன் கோவில் மணியோசையும் பிரமாதமாக வெளிப்படும். இவை கிடைக்கவில்லை. ஆனால் சைத்தான்தான் கிடைத்தது.

  http://www.thiraipaadal.com/tpplayer.asp? sngs=’SNGIMM0031′,’SNGIMM0030′,’SNGHJR0107′,’SNGIMM0100′,’SNGIMM0064′,’SNGHJR0144’&lang=undefined

  (மஸ்தான்தான் வலையில் போடவேண்டும்)

  பீர்முஹம்மது சினிமாப்பாடல்கள் லிஸ்ட் :

  http://www.musicindiaonline.com/list_albums/i/29-Tamil_Movie_Songs/175-Mukesh/#/list_albums/i/29-Tamil_Movie_Songs/175-Mukesh/

  http://cinefolks.com/tamil/AudioSongs/singers/Mukesh/

  **

 7. 12/10/2010 இல் 14:50

  கர்னாடக இசையில் அமைந்த கடினமான பாடலை வெகு இலகுவாக பாடியிருக்கிறார் பீர் முகமது. அருமை. முறையான, கடினமான மற்றும் நெடிய பயிற்சி இல்லாமல் இது சாத்தியமில்லை.

 8. 30/07/2019 இல் 12:39

  Boomiyil Manida by Mukesh
  Thanks : Gopal Sapthaswaram


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s