தெரு விளக்கு

குறிப்பு : ஜிப்பா அணிந்தவருக்கு பக்கத்தில் நிற்பவர் வைரமுத்து 🙂

தெரு விளக்கு

நாகூர் தீன்

எரிந்து கொண்டிருக்கிறாய்
எரிச்சல் இல்லை உனக்கு

மனிதர்கள்
வாழ்வை தொலைத்துவிட்டு
தெருவுக்கு வருவார்கள்
நீ
வாழ்வை துவங்கவே
தெருவுக்கு வருகிறாய்

இரவோடு மட்டும்
உறவாடும் உன்னிடம்
திருட்டு போனது இருட்டு

ராப்பிச்சைக்காரனின்
பாரம்பரியத்தை
பாதுகாக்கும் பொறுப்பு உனக்கு

கற்றுக் கொண்டேன் உன்னிடம்
தனிமையும் மௌனமும்
பிரகாசம் தரும் என்று

என் காலடி என்ன
கழிவறையா என்று
தெரு நாய்களிடம்
ஒரு முறையாவது கேள்

இரவோடு இரவாக
எடுத்துச் செல்வார்கள்
நீயோ
கொடுத்துச் செல்கிறாய்
நீ
தலைக்குனிந்து நிற்பதால்தான்
நாங்கள்
தலைநிமிர்ந்து நடக்கிறோம்

எதற்காக இப்படி
ஒடுங்கிப் போனாய்?
மனிதர்கள் உன்னை
ஓரத்தில் ஒதுக்கிய கவலையா?

நன்றி கெட்ட உலகம் இது
ஒற்றைக் காலில் நின்று
தவம் இருந்தாலும்
கிழக்கு வெளுக்காது உனக்கு

விதியை நினைத்து
வீதியில் நில்
பொழுது விடியட்டும்
பேசிக் கொள்ளலாம்

**

நன்றி : நாகூர் தீன் | dnh@pacific.net.sg

10 பின்னூட்டங்கள்

 1. மஜீத் said,

  04/10/2010 இல் 13:15

  //ஜிப்பா அணிந்தவருக்கு பக்கத்தில் நிற்பவர் வைரமுத்து//

  இதுவும் சரிதான்: ஜிப்பா அணிந்தவருக்குப் பக்கத்தில் நிற்பவர்தான், வைரமுத்துக்குப் பக்கத்தில் நிற்பவர்.

 2. 04/10/2010 இல் 13:50

  இப்படியெல்லாமா யோசிப்பாங்க.. ஆனாலும் நல்லா இருக்கு

 3. நாகூர் ரூமி said,

  04/10/2010 இல் 19:22

  அன்புள்ள தீன், இந்தக் கவிதை மிக நன்றாக வந்துள்ளது. வாழ்வியல் முரண்களை அழகாகச் சொல்லுகிறது கவிதை. வைரமுத்துவோடு நீ இருக்கும் நிழல்படத்துக்கு ’இருளும் வெளிச்சமும்’ என்று தலைப்புக் கொடுத்துவிடலாம்!

 4. 04/10/2010 இல் 21:04

  /கற்றுக் கொண்டேன் உன்னிடம்
  தனிமையும் மௌனமும்
  பிரகாசம் தரும் என்று/
  அற்புதமான வரிகள்.

  • Deen said,

   05/10/2010 இல் 12:58

   Thank you Brother. The credit goes to Abedheen Nana who has come forward to publish my poems.

 5. 05/10/2010 இல் 11:58

  //இரவோடு இரவாக
  எடுத்துச் செல்வார்கள்
  நீயோ
  கொடுத்துச் செல்கிறாய்//

  மிகவும் எளிமையான எதார்த்தமான வரிகளால், நிலையில்லா இவ்வுலகின் நிதர்சனங்களை சித்தரித்திருக்கும் பாங்கு மிளிர்கிறது; நன்றி, சகோ தீன் அவர்களே!

 6. Jafar Sadiq said,

  05/10/2010 இல் 12:40

  Deen, Your kavidhai is truly very nice. Keep it up. Anbudan, Sella Nana


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s