சுகைனா சாதிக்-ன் ‘சுனாமி’

சுகைனா – நண்பர் நாகூர் ரூமியின் குடும்பத்திலிருந்து இன்னொரு இலக்கியவாதி!  கவிஞர் நாகூர் சலீம்  அவர்களின் மகளார். ‘சுனாமி’ – வைரமுத்து வாழ்த்திய , சுகைனாவின் முதல் கவிதை ( ‘ஏ கடலே…’ என்று அழைத்தால்தான் கவிஞருக்கு மிகவும் பிடிக்குமே! ).  ‘இது மனிதாபிமானத்தில் குரல். மேலும் மேலும் எழுதுக!’ என்று வாழ்த்திருக்கிறார். பெரிதாக்க ‘க்ளிக்’ செய்யவும். கூடவே,  சுகைனாவின் கவிதையை எனக்கு அனுப்பிய அவரது கணவர் சாதிக்-ன் ‘அகந்தை’யையும் பதிந்துள்ளேன். தம்பதிகளுக்கு நன்றி! 

குறிப்பு : சாதிக்கும் நாகூர் ரூமியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். ‘ஒண்ணு வுட்ட’ தம்பி!. இப்படி குடும்பமே இலக்கியக் குத்தகை எடுத்துக்கொண்டால் நாங்கள் எங்கே போவோம் சார்?

***

அகந்தை – சாதிக்

அகந்தை…

நம் அழிவின் உடந்தை           
இல்லாத ஒன்றை இருப்பதாக எண்ணும்
பொல்லாத கற்பனை
வேண்டி விரும்பி தேர்ந்தெடுக்கும்
தான் தோன்றித் தனத்தின் பிரதிபலிப்பு
நம் அழிவுக்கு நாமே இடும் வித்து

படைக்கத் தூண்டும் அழகிய பொருட்கள்
கண்ணருகில் கை வசமிருக்க
இந்த நஞ்சுதான் உன் தனித்தன்மை
நிலை நிறுத்தும் மூலக்கருவா?

ஆக்கச் சிந்தனைகள் உதிர்க்கும்
அற்புதச் செல்கள் எத்தனைக் கோடிகள்!
மூளையின் ஒரு மூலையிலிருக்கும்
இந்த விஷ(ம)த்தை தேடி பிடிப்பதேன்?

மனிதம் அழிக்கும் நவீனம்
எண்ணற்றவைச் சூழ்ந்திருக்க
விடியல் எண்ணங்களை தவிர்த்து
கொடிய ஆயுதம் ஒன்றை உருவாக்க
தூண்டுவதுதான் எதுவோ?
இறந்த கணவனுக்காக
உடன்கட்டை ஏறினர்
அக்கால பெண்கள்

இன்றும் நெருப்பில் கரிகின்றனர்
பிழைக்க வேண்டிய சிலர்

வேண்டுதலின் பேரில்
தீயை மிதிக்கின்றனர்
இன்னும் சிலர்

ஒரு தேவையுமின்றியே
ஆணவத் தீயில் நீ
குதிப்பது அகம்பாவமா? அறியாமையா?

விருப்பின் நிழலில் வாழ்வதும்
வெறுப்பின் தணலில் வீழ்வதும்
இறுமாப்பை பொறுத்ததே

அகந்தையின் வெளிப்பாடு
இரு வேறு துருவங்களில்
அளவுக்கு மீறி பேசுதல்
ஒன்றுமே பேசாதிருத்தல்
இடைபட்ட நிதானமே
உயர்வான சிந்தை
இல்லையேல் அது அகந்தை

நட்புக்கும் உறவுக்கும்
விட்டுக் கொடுப்பதில்
தன்மானம் பட்டுப் போகுமா?
முகம்மலர்வதில்தான் தரம் விட்டுப் போகுமா?
ஆரம்பம் யார் என்பதும் ஓர் முட்டுக்கட்டையா?

வெற்றியின் அளவுகோல்
எதையும் முதலில் செய்வது
முகமன் பரிமாறுவதில்
உறவின் பகிர்வில்
வெற்றியின் நிர்ணயம்
பிந்திக் கொள்வதில்தான்தானோ?

இத்துறையில் என்னை மிஞ்ச யாருமில்லை
அகங்கரிக்கிறான் ஒருவன் 
நான் அடைந்த புகழ் எவரிடமும் இல்லை
கர்ஜிக்கிறான் மற்றொருவன் 
என்வசமுள்ள செல்வம்
யாரிடமும் இல்லை – கர்வமுறுகிறான் இன்னொருவன்

செருக்கின் உள் இரைச்சலில்
“நீயே என் வசமுள்ளாய்” எனும்
ஆத்மாவின் ரகசிய அறைகூவல் ஒன்று
இவர்களுக்கு கேட்பதே இல்லை
அவர்கள் இறக்கும் வரை
மனதில் உரைப்பதும் இல்லை 

கர்வம் கொண்டவனின் ஆத்மா
ஆத்மார்த்தமாக கூறும் யதார்த்தம்
உன் உடமையென்று பிதற்றும் அவகாசம்
நான் உன்னுள் இருக்கும் வரையே!
நான் சென்றபின் நீயும் மண்ணின் உடமையே!
நீ நினைக்க மறுத்தாலும்
மரணம் உன்னை அணைக்க மறக்காது”.

ஆணவம் என்னும் எரிமலை
சில காலம் நடுங்க வைக்கும்
ஒருகாலம் தானே ஒடுங்கிவிடும்
அகந்தை – நம் அழிவின் உடந்தை

ஓடும் பாம்பை
அறியாக் குழந்தை பிடிக்கலாம்
வளர்ந்த பின்னும் பிடிப்பது விந்தையே!

வினை விதைத்தவன் வினையறுப்பான்
செருக்கு கொண்டவன் சறுக்கியே வீழ்வான்.

அகந்தை அகற்றி
நற்சிந்தை பேணுவோம்!
அகந்தை – நம் அழிவின் உடந்தை

***

நன்றி : சுகைனா சாதிக், சாதிக்

1 பின்னூட்டம்

 1. kavingar tamil priyan said,

  29/10/2010 இல் 15:35

  கூட்டாளி ஆபிதீனுக்கு ….நண்பர் சாதிக் மற்றும் திருமதி சாதிக் போன்றவர்கள் நாகூர் ரூமியின் குடும்பத்தைச்சார்ந்தவர்கள் என்று எழுதியிருக்கிறீர்கள் அது முற்றிலும் தவறு …!?
  கதை வசன கர்த்தா தூயவன்,நாகூர் ரூமி,சாதிக்,திருமதி சாதிக் இவர்கள் அனைவரும் தமிழகத்தின் முதல் இஸ்லாமிய பெண் எழுத்தாளர் திருமதி சித்தி ஜுனைதா பேகம்,பெரியவர் கலைமாமணி நாகூர் சலீம் வகையறாக்கள் என்று சொல்வதுதான் சாலப்பொருத்தம்.
  ஆபிதீன் …..உங்க பக்கத்துக்கு கண்ணு பட்டுடுச்சி பொலக்கிது பாட்டியாட்ட சொல்லி மொளஹா சுத்திப்போடசொல்லுங்க .

  …….கவிஞர் தமிழ் ப்ரியன்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s