மர்மத்தை உதிர்த்தபடி மெளனமாக…

வெளியேறும் கவிதைகள்
இப்னு ஹம்துன்

உங்களின் பூமியில்
உங்களின் பார்வையில்
ஒரு கவிதை வருகிறது.

முதலில் நீங்கள்
மகிழ்ச்சி அடைகிறீர்கள்.
கவிதைகளின் வானத்தில்
ஓரிடம்
கிடைக்கப்பெற்றதற்காக.

அதன்பின்
உங்களின் மேதமை அழுத்த
அதில் ஒரு எழுத்தையேனும்
சேர்க்க நினைக்கிறீர்கள்.
அர்த்தம்  அனர்த்தமாகலாம்
என்பதை அறியாமலே!

அல்லது
கண்ணாடி அணிந்த உங்களுக்கு
காட்சிப்படுகின்றன
எழுத்துப் பிழைகள் என்று சில.
உங்கள் ‘இலக்கணத்திற்கு’
அதை மாற்ற நினைக்கிறீர்கள்.

மெல்ல… கவிதையில்
உங்களைக் குடியமர்த்துகிறீர்கள்
மர்மத்தை உதிர்த்தபடி
மெளனமாக வெளியேறுகிறது கவிதை.

எஞ்சியிருக்கும் சக்கைகளை
எடுத்துக் கொஞ்சுகிறீர்கள்.
ஞாபகார்த்தமாக
நாலு மரச்’சட்டங்’களுக்குள் சிறைப்படுத்துகிறீர்கள்.
உங்கள் அறையை
அலங்கரித்துக்கொள்ள
அது உதவுகிறது.

தீரா தொலைவுக்குச் சென்ற
வெளியேறிய கவிதையோ
ஒருபோதும் திரும்புவதாயில்லை.

*

நன்றி : பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)

1 பின்னூட்டம்

  1. 19/09/2010 இல் 11:16

    சர்வாதிகாரத்திற்கு எதிராக வெளிநடப்பு செய்வது கவிதையின் ஜனநாயகம். தடுக்க விரும்புபவர்கள் தங்கள் சர்வாதிகாரத்தை வாலறுக்கட்டும். தடுக்க விரும்பாதவர்கள் வெற்று சொற்களுடன் சபை நடத்தட்டும் என்பதை வலியுறுத்துகிறது இந்த அருமையான கவிதை.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s