குலாம் முஸ்தஃபா கானும் நாகூர் தீனும்

உம்ராஜான்‘-ல் (Urdu: امراؤ جان ) உஸ்தாத் குலாம் முஸ்தஃபா கான் பாடிய அற்புதமான இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. முந்தாநாள் கேட்டுக்கொண்டிருக்கும்போது , தம்பி தீனிடமிருந்து ‘இசை‘ என்ற கவிதையோடு ஒரு மின்னஞ்சல்!  இந்த ‘கவிக்கோ’வும்  மேத்தாவும்  ரொம்ப பேரை கெடுத்திருக்கிறார்கள்! சரி, எங்கள் தீனுக்கு ஜக்ஜித்சிங்தான் பிடிக்கும் என்று நினைக்கிறேன். உஸ்தாதையும் அவர் கேட்கலாம் – உங்களோடு.  நிஜாமுதீன் அவுலியா வருகிறார்களே..! கேட்டுவிட்டு – கொஞ்சம் உயரே பறக்க விரும்புபவர்கள் மட்டும் – உஸ்தாதின் Sur Dhwani  முழு ஆல்பத்தையும் (MP3) இந்த தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து மகிழுங்கள். நன்றி

*

Thanks to : Hamheen

*

last updated on 01.08.2019

*

தீன் :

ராகத்தின் தாகம் நீ
தாளத்தின் மூலம் நீ
சாந்தியின் ஆத்மாவுக்கும்
ஆத்மாவின் சாந்திக்கும்
ஆருயிர் நண்பன் நீ!

சுமைகளை ஓட வைப்பாய்
இமைகளை மூட வைப்பாய்
குரல்களை கூட வைப்பாய்
விரல்களை ஆட வைப்பாய்

மொழியின் மொழியே!
செவியின் விழியே!
நீ இசையாவிட்டால்
வாத்தியக் கருவிகள்
வாழ்க்கை இழந்திருக்கும்

புல்லாங்குழலில்
ஓட்டை போட்டது உனக்காக
எல்லா மொழியிலும்
பாட்டை போட்டதும் உனக்காக

நீ விருந்தும் தருகிறாய்
மருந்தும் தருகிறாய்

உனக்கு எத்தனை முகங்கள்
தொட்டிலுக்கு தாலாட்டு
கட்டிலுக்கு கெட்டிமேளம்
வீட்டுக்கு திரைப்பாடல்
நாட்டுக்கு தேசியகீதம்
நடனத்தில் சலங்கை ஒலி
மரணத்தில் ஒப்பாரி

தொட்டில் முதல் சுடுகாடு வரை
தொடர்ந்து வரும் தோழன் நீ
உன் நீண்ட ஆயுளுக்கு
பிரார்த்தனை தேவையில்லை
தொடரட்டும் உன் தொண்டு…

*

நன்றி : நாகூர் தீன் | dnh@pacific.net.sg

2 பின்னூட்டங்கள்

  1. மஜீத் said,

    25/08/2010 இல் 23:19

    ம்ம். உஸ்தாத் குலாம் முஸ்தஃபா கான்தான் நம்மள,அசைய முடியாம கட்டிப்போட்டுட்டார்னா, இந்த‌ தாவூத் “கான்” ஸாஹிப் ஏதோ எதிரில் ஓக்காந்து பாடுற மாதிரியே இருக்கு (முகம் தெரியாட்டியும்). மேதாவிகள் என்னென்னவோ சொல்றாங்க, பாட்டுல பாவம் இருக்கணும்ன்னு. இவர் பாட்டுல உயிர் இருக்கு. என்ன ஒரு ஈடுபாடு.!!!..நன்றி ஆபிதீன்(என்ன, இந்த எழவு பாஷை புரியல;முழுசா)

  2. அனாமதேய said,

    08/04/2018 இல் 02:33

    Thank you for all the info and your blog. My friend showed me your blog and I have been reading it ever since Tamil Books


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s