ரமளான் சிந்தனை-2 : ஏ.ஹெச்.ஹத்தீப்

தமிழ் முஸ்லிம் சமுதாயத்தின் இன்றைய முக்கியத் தேடல்: இறைவனுக்கு உருவம் உண்டா இல்லையா? குதர்க்கவாத மாமேதை இப்னு தைமிய்யா காலத்தில் விதைக்கப்பட்ட இந்த உருப்படாத சிந்தனை, இப்போது மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது.

இந்தக் கோணத்தில்கூட நாம் சிலவற்றை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது; ஏனெனில் திருமறையின் பற்பல இடங்களில் இலக்கியத்தின் வாசனை நம்மை வசீகத்திருக்கிறது. இந்த இலக்கியத்தன்மையை நுகராத மார்க்க அறிஞர்கள்தான் ‘முரண்பாடு’ எனப்படும் மாயையில் சிக்குண்டுத் தவிக்கிறார்கள் எனலாம்.

“மனிதன் என்னை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால், நான் அவனை நோக்கிப் பத்தடி எடுத்து வைக்கிறேன்”என்ற இறை வசனத்துக்கு, ‘இறைவன் கால்களால் விரைகிறான்’என்ற விளக்கம் பொருட்செறிவற்றது. ‘கால்கள் இல்லாமல் எப்படி அடியெடுத்து வைப்பது?’என்ற கேள்வி சிறுபிள்ளைத்தனமானது.

“எனது இரு விரல்களுக்கிடையே உங்கள் உள்ளம் இருக்கிறது. நான் எப்படி விரும்புகிறேனோ அப்படி இயக்குகிறேன்”என்ற இன்னொரு வசனம் இறைவனது விரல்களைக் குறிக்கிறது. ‘விரல்களின் இயக்கம்’என்பது இங்கே இறைவனது விருப்பதை மட்டுமே குறிக்கும். வெறுமனே விரல்களைப் பிடித்துக்கொண்டுத் தொங்க வேண்டியதில்லை. ‘அப்படித் தொங்கித்தான் தீருவேன்’என்பது வீண் பிடிவாதம்.அவர்களைத் திருத்த முயற்சிப்பதற்குப் பதிலாக அவர்களுக்காகப் பிரார்த்திக்க வேண்டும்.

மற்றுமோர் இறைக்கருத்து இப்படி: “எங்கு திரும்பினும் என் முகம் இருக்கிறது.” –இது அங்கிங்கெணாதபடி இறைவன் எங்கும் வியாபித்திருக்கிறான் என்பதற்குச் சான்றாகும். ‘முகம் என்று குறிப்பிடப்படுவதால் முகத்திற்குரிய அடையாளங்களான கண்கள்,கன்னங்கள்,தலை,மூக்கு,நெற்றி என்றெல்லாம் இருக்கத்தானே வேண்டும்’ என்று அடம் பிடிப்பது அறிவாளிகளின் செயலன்று.

மேலே குறிப்பிட்ட இறைக்கருத்துக்கள் அனைத்தும் அபாரமான இலக்கியத்தன்மை கொண்டவை. இவற்றை ஆதாரமாகக்கொண்டு, இறைவனுக்கு ‘உருவம் உண்டு’என்று வாதிடுவது, இலக்கியத்தில் நிபுணத்துவம் பெறாத மார்க்க அறிஞர்களின் அறியாமை. அவர்களுடைய கண்டுபிடிப்புக்களை ஆமோதித்தால்,இறைவனின் உருவ அமைப்பு எப்படிப்பட்டது என்ற கேள்வி எழும். மனிதனா அல்லது டைனோஸர் போன்ற பிரம்மாண்டமான வடிவமா என்று கூறியாக வேண்டும். ஏனெனில் எல்லா உருவத்திற்கும் கால்கள்,கைகள், முகம், வயிறு ஆகியவை உண்டு. இதில் ஏதாவதொன்று என்று வைத்துக்கொண்டால்கூட அது ஆண்பாலா பெண்பாலா என்ற வினா வெடிக்கும். இவற்றில் ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அது நபிமொழியுடன் முரண்படும் அபாயங்கள் உண்டு. அப்படியொரு போராட்டத்திற்கு உட்படுகிற சமயத்தில் “இந்த இரண்டில் எது ஏது தேவை? இறைவனா, நபிமொழியா?”என்று நமது இளைஞர்களிடம் கேட்கப்படும். “நீங்கள் எதை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறீர்களோ அதையே அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். ஏனெனில் நீங்களே எங்களது நேரிய வழிகாட்டி”என்று நமது சமுதாய இளைஞர்கள் கூறுவார்கள். நமது மதப் பண்டிதர்கள் இப்போதைக்கு இறைவனை இழக்கத் தயாரில்லை. ஆதலால், பெருமானார் அவர்களை இஸ்லாத்திலிருந்து சமூகப் பகிஷ்காரம் செய்து விடலாம் என்று அக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். இந்த நேரத்தில் நாம் ஒரு முக்கியப் பிரார்த்தனை செய்ய வேண்டியுள்ளது. அரபிக் கல்லூரிகளில் பாடம் துவங்குவதற்குமுன் சொல்லித் தந்தார்களே, அதே இறை வேண்டல்: “இறைவா,ஷைத்தான்களிடமிருந்து என்னைப் பாதுகாப்பாயாக!”

மேலே கூறப்பட்ட இறைக்கருத்துக்கள் அனைத்தும் அபாரமான இலக்கியத்தன்மை பொருந்தியவை. ‘கண்கள் குளமாயின’ என்ற சொற்கள் அழுகையைக் குறிக்கும். அழுவோரின் கண்களுக்குள் குளங்களும் அதனுள் இருபடி ஆழத்தில் தண்ணீரும் கிடக்கிறதா எனத் தேடக்கூடாது. ‘தலைக்குனிவு’என்றால் அவமானத்தை விளக்கும் வார்த்தை. அவமானமடைந்தோரைப் பார்க்கும்போதெல்லாம் அவர்களது தலை குனிந்து கிடக்கிறதா என்று ஆராய்வது, அசல் பைத்தியக்காரத்தனம். ‘அவனுக்குக் கை நீளம்’என்றால், குறிப்பிடப்பட்டவனுக்கு திருட்டுப் பழக்கமுள்ளது எனப் பொருள். அதை விடுத்துவிட்டு, அவனது கையை அளந்துகொண்டிருப்பவர்கள், உலகத்தின் முதல்தர மடையர்கள். ‘பேரீச்சம்பழத்தின் சுவையைப்பற்றிக் கழுதைக்குத் தெரியாது’என்ற பழமொழி இத்தகையோர்களுக்காகச் சொல்லப்பட்டதுதான்.

***

சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய ‘ 150 கோடி முஸ்லிம்களின் பார்வையில் இஸ்லாம்’ என்ற நூலில் இடம் பெற்றிருந்த ஒரு சில பகுதி மேலே குறிப்பிட்டப்பட்டிருக்கின்றன. ‘இறைவனுக்கு உருவம் உண்டா, இல்லையா என்ற மகா உன்னதமான வினா சமுதாயத்தைப் புயலெனக் கவிழ்ந்து கிடக்கிற இந்த வேளையில், மேலே குறிப்பிடப்பட்டவை உரிய விடையாக அமையுமென நம்புகிறேன்.
இறைவனை அறிதலுக்கு நடுவீதி விவாதங்கள் தேவையில்லை; உணர்வுப்பூர்வமான தேடலே அவசியம்.

***

நன்றி : ஏ.ஹெச்.ஹத்தீப் |E-Mail :  hatheeb@gmail.com

Advertisements

5 பின்னூட்டங்கள்

  1. nagoorumi said,

    16/08/2010 இல் 07:26

    பிரம்மாதம். தக்க காலத்தில் கொடுக்கப்பட்ட தக்க பதிலடி. இனியாவது யோசிப்பார்களா?

  2. 16/08/2010 இல் 07:40

    “இறைவா,ஷைத்தான்களிடமிருந்து என்னைப் பாதுகாப்பாயாக!” 🙂 🙂 🙂

  3. Hassan Ali said,

    16/08/2010 இல் 11:15

    Pesama hateeb Sb avarhalai pinpatralam pola irukke 🙂

    Nalla vilakkam. Thodarungal Sb

  4. மஜீத் said,

    16/08/2010 இல் 18:11

    இருப்பைக் காட்டிக்கொள்ளவும் பிழைப்பை ஓட்டவும் நடக்கும் கூத்து இது.
    ஹத்தீப் சாஹிப் அவர்கள் 7 ஆண்டுகளுக்கு முன் எழுதிய ‘பதிலுக்கு’ இவர்கள் இப்போதுதான் ‘கேள்வியே’ எழுப்புகிறார்கள். ஹத்தீப் சாஹிப் மட்டுமல்ல, இன்னும் பல அறிஞர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே இக்கருத்துக்களை அறிவுறுத்தியதையும் அவர்கள் அறிவார்கள். முன்னால் சென்றுகொண்டிருக்கும் கூட்டம், ஒரு ஊளைச்சத்தம் கேட்டால் திரும்பிப்பார்க்கும்; பிறகு நம்மைத் தொடரும் (எதிர் திசையில்)என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இது அவர்கள் தவறல்ல, சுய சிந்தனை மறந்த‌, மறக்கடிக்கப்பட்ட, நம் சகோதரர்கள் தவறு

  5. 20/08/2010 இல் 21:21

    குழப்பவாதிகள் காலம் காலமாய் கையிலெடுக்கும் ஒரு விசயத்துக்கு – விஷத்துக்கு எந்த காலத்துக்கும் பொருந்த்தும் ஏற்றமான மருந்து உங்கள் பதில்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s