கண்ணோட்டம்
ஓடிக்கொண்டே இருந்தேன்
ஓட்டம் எதற்கென்று தெரியாமல்
தேடிக்கொண்டே பறந்தேன்
தேடலின் சூத்திரம் புரியாமல்
சேர்த்துக் கொண்டே இருந்தேன்
சேரப் போவதை மறந்து
பயணித்த பாதையில்
வாழ்ந்தது தெரியவில்லை
இருந்தது தெரிந்தது
எடை போட்டு விடை கேட்டால்
பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்!
நண்பனே!
கண்களை திற
கால இயந்திரத்தில் காலடி வை
பேச்சுக்கு மூச்சு விடாமல்
நிஜமாக சுவாசி
அவகாசம் அதிகமில்லை
இதிகாசம் இயற்று
இரை தேடியது போதும்
இறையை தேடு
உன் பாதச் சாலைகளில்
பாடச் சாலைகள் பிறக்கட்டும்
*
நன்றி : நாகூர் தீன் | dnh@pacific.net.sg
*
மேலும் பார்க்க : மூன்று கவிதைகள் – நாகூர் ரூமி
ஒ.நூருல் அமீன் said,
15/08/2010 இல் 17:14
அருமையான கவிதை.
இரையும் கூட இறையின் அத்தாட்சிகள் தானே!.
வெளிரங்கமானவனை தேடுவதும்.
சமீபமானவனை நோக்கி பயணிப்பதும் கூட விந்தை தானே!
இறைவன் தான் நம் இதயத்தில் விழுந்திருக்கும் அறியாமை
திரையை விலக்க வேண்டும்.