அறை எண் : 1 (ஒரு கவிதையோடு) – மஜீத்

தா-வரம்
 
வேர்கள் மண்பெயர்ந்து
பாலையில் நீர் தேடும்
 
தண்டு, கிளை, இலை, பூ
காய், கனியெல்லாம்
மண் அணைத்து
வெறுமையில்
வேர் தேடும்

***

அறை எண் : 1
 
எப்பவாவது நீங்க உங்ககிட்ட இருந்தே ஒரு அறை வாங்கி இருக்கீங்களா? வாங்கி பாருங்க தெரியும், எப்படி வலிக்கும்னு.
 
சகதியில பலவகை இருக்கு. எருமைக்கு எல்லா சகதியும் சுகம்தான். சபராளிக்கு மட்டும் என்ன வாழுது? சவூதி சகதில இருந்து தப்பிச்சு துபாய் சகதியில வந்து விழுந்த புதுசுல ‘முதலாளி’ கூட (பாவம் அவர் சீமைல இருந்து வந்து விழுந்த புதுசு)  ‘எல்லா’ இடத்துக்கும் போவேன். எதுக்கு நான் கூட போறேன்னு ரெண்டு பேருக்கும் தெரியும். நானும் கூப்டா போயிருவேன். ஆனா கவுரத்த கருதி அவர் வெளில சொல்லமாட்டார்.
 
15 வருஷத்துக்கு அப்புறம் நேத்து சொன்னார். அதுதான் உண்மையான்னு எனக்கு இன்னும் தெரியல. அவர் வீடு மாத்தினவுடனே புது தொலைபேசி இணைப்பு வாங்க போயிருந்தார்(தோம்). ரெண்டு பேர் எதிரில் இருந்தாத்தான் ‘லோக்கல்’ க்கு புடிக்காதே? கேட்டான். என்னைப்பாத்து உனக்கு என்ன வேணும்னு. நான் உடனே ‘இவர் கூட வந்துருக்கேன்’னு சொன்னேன். ரெண்டு பேரையும் மாத்தி மாத்தி பாத்தான். For  moral support னு முதலாளி சேத்துக்கிட்டவுடனே, இறுக்கம் போயிருச்சு. மூணு பேரும் சிரிச்சுகிட்டோம்.
 
விசயத்துக்கு வருவோம். ஒருநாள் ராத்திரி நம்ம தேரா சேவல் பண்ணைக்கு பக்கத்துல கடற்கரை ஓரமா இருக்குற ஆடம்பர ஓட்டல்ல, தொழில்ரீதி விருந்தாளிகளுக்கு டின்னர் கொடுத்து முடிஞ்சவுடனே, மாப்பிள்ளைக்கு மூடு வந்துருச்சு. ஏற்கனவே கொஞ்சம் உள்ள போயிருச்சில்ல? நேரா அங்க இருந்த க்ஷேத்ராட ஸ்தலத்துக்கு போனார். சரி சரி போனோம். கொஞ்ச நேரம் ஆச்சு. சில்லறை சமாசாரம்லாம் முடிஞ்சுது. சரி கிளம்பிருவார்னு நம்மம்ம்பி எந்திருச்சேன்.
 
அடுத்த எபிஸோடு ஆரம்பமாயிருச்சு. இதுவரைக்கும் போட்ட மார்க் அடிப்படையில ரென்ட செலக்ட் பண்ணி, உற்பத்தி இடம், தேதி, விலை, இத்தியாதிகல்லாம் விசாரிச்சுட்டு, போலாமான்னாரு.(எங்கிட்ட) எங்கேன்னு கேட்டேன். உக்காந்துட்டார். இந்த மாதிரி சமயத்துல ஒன்னு அவர் வீட்டுக்கே  போவார்,பொண்டாட்டி ஊர்ல இல்லாட்டி. அங்கங்க அப்பப்ப ரூம் போடறதும் உண்டு. இன்னிக்கு ரெண்டும் இல்லாம புதுசா, அவர் தோஸ்த்க்கு போன் அடிச்சார். நாங்க அங்க வரலாமான்னு.  அவர் அதிர்ச்சியோட ‘நாங்க’ன்னா? என்பேரை சொல்லி ரெண்டு பேரும் ரெண்டு பேரோட வர்றோம்னு அவுக பாஷைல சொன்னார். அது யார்னு கேட்டதுக்கு,( என்னையத்தான்) அவன் என்னோட, என்னோட “எல்லாம்தான்னு வச்சுக்கவே” ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டோம். சரி சரி வந்து தொலைங்கன்னு தோஸ்த் சொல்லிருக்கணும். போய் சேந்தோம்.
 
அது ஒரு சிங்கள் பெட்ரூம் அப்பார்ட்மென்ட். கதவ தொறந்து மிகச்சிறிய ஹலோவோட அவர் ஓடிப்போய் பெட்ரூம சாத்திகிட்டார். நாங்க அத புடிச்சுகிருவோம்னு பயம்தான். ஒன்னும் புரியல எங்களுக்கு. இடம் தேட ஆரம்பிச்சோம். இருக்கிறது ஒரு ஹால், ஒரு கிச்சன், ஒரு பாத்ரூம். ப‌ல‌ யோச‌னைக்கு பிற‌கு, ஹால் என‌க்குத்தான்னார். அப்ப‌ நான் என்ன‌ ப‌ண்றது? கிச்ச‌ன்ல‌ ஒரு ர‌வுண்டு விட்டேன். ம்ஹூம். ச‌ரியா வ‌ராது. வேன்னா, போய்ட்டு அப்ப‌ற‌ம் வ‌ர‌லாமானு யோசிச்சேன். அப்ப‌த்தான் ஒரு க‌த‌வு மாதிரி தெரிஞ்ச‌து, வெளி வாச‌லுக்கு ப‌க்க‌த்துல‌யே. லாண்ட்ரி ரூமாம். ந‌ம்ம‌ தோஸ்த் த‌னிக்க‌ட்டை போல‌.வாஷிங்மெஷின்லாம் இல்ல. ப‌ர‌ம‌ திருப்தி.
 
முத‌லாளி என்ன‌ ப‌ண்ணார் தெரியுமா? தோஸ்த் க‌த‌வைப்போய் த‌ட்டி, எக்ஸ்ட்ரா பெட் இருக்கான்னு கேக்க‌, அவர் க‌த‌வைத் திற‌க்கிர மாதிரி ப‌ண்ணிட்டு ஒரு மெத்தையையும் த‌லைய‌ணையையும் ‘வீசிட்டு’ சாத்திக்கிட்டார். உள்ள‌, என்ன‌ இருக்கோ? மொத‌லாளி சொன்ன‌ பேச்சு மாற‌லை. ரெண்ட‌யும் எங்கிட்ட‌ த‌ந்துட்டார். நானும், ச‌ரி விட்ருங்க‌, நாங்க‌ளும் உள்ளே போனோம். போய்ட்டு, ந‌ம்ம முத‌லாளியோட‌ பெருந்த‌ன்மை, “உதவி” செய்ற‌ ம‌ன‌சு எல்லாத்த‌யும் நின‌ச்சு புள‌காங்கித‌ம் அடைஞ்சு, ம்ம்ம்ம்ம்ம்ம்.
 
5 நிமிஷ‌ம்தான் இருக்கும். கதவைத்த‌ட்டுன‌து வேற‌ யாரா இருக்க‌ முடியும். அவ்வ‌ளவுதான். போன‌ பாராகிராஃப் முழுசும் ம‌ற‌ந்து, வாயால‌ 10 நிமிஷ‌ம் திட்டுற‌தை 10 செக‌ன்டுல‌ ம‌ன‌சால‌ திட்டிட்டு,இதுல சுய திட்டு வேற, இதுக்குதான் முதலாளிமாரோட எங்கெங்க போகனுமோ அங்கதான் போகனுங்கிறதுங்கிற‌து.
 
க‌த‌வைத்தொறந்தா, நின்னாரு. என‌க்கு வில்ல‌ன் மாதிரி தெரிஞ்சார். பின்ன‌ எப்டி தெரியுமாம்?       
கேட்டார்: ஹெல்மெட் வச்சிருக்கியா?
என‌க்குள்: போச்சு; எல்லாம் போச்சு. இருக்கிற‌தே ஒன்னுதான். அத‌ கேக்க‌ப்போறார். இல்லைன்னா சொல்ல‌ முடியும்? இவ்வ‌ள‌வுக்கும் மெய்ன் ஸ்பான்ஸ‌ரே அவ‌ர்தான். இதுதான் க‌டைசி. இனிமேல் இவ‌ர் கூட‌ ‘இதுக்கெல்லாம்’ வ‌ர‌வே கூடாது. அப்பெல்ல்லாம் ஏப்பு நோய் (இது தமிழ் கு_டிதாங்கிகள் எய்ட்ஸ்க்கு வச்ச பேரு) பயம் அதிகம். 

ம‌றுப‌டி கேட்டார்: எத்த‌னை இருக்கு? (ம்ம். வெந்த‌ புண்ணில‌‍‍‍ வேல்)
எங்கிட்ட‌ ஒன்னுதான் இருக்கு (அது என‌க்கு, கேக்காதேன்னு சொல்ல‌ முடிய‌லை)

சொன்னார்: இந்தா, இத‌யும் வ‌ச்சுக்க‌, ட‌புளா யூஸ் பண்ணு, அப்ப‌த்தான் சேஃப்டின்னு சொன்ன‌வ‌ர் கைல‌ இன்னோரு ஹெல்மெட்.
 
அன்னைக்கு நான் என்னைய‌ அறைஞ்ச‌ அறை இப்ப‌வும் வ‌லிக்கிற‌ மாதிரியே இருக்கு.
 
*

நன்றி : மஜீத் | E-Mail : amjeed6167@yahoo.com

5 பின்னூட்டங்கள்

 1. 05/08/2010 இல் 07:29

  அருமை…. மஜீத் யாருங்க பெரிய பி.ந. ஆளா இருப்பார் போலிருக்கு. ஏப்பு நோய் எல்மெட்டையும் ஏமாத்துதாம்.. பாத்து பதனமா போகச் சொல்லுங்க. ஏப்பு மதம் மற்ற எல்லா மதத்திற்கும் ஆப்பு வச்சிடுச்சில்ல…

  • 05/08/2010 இல் 08:04

   பெரிய பி.ந. ஆளா? புதிதாக எழுத வந்ததாகச் சொல்லும் ஒண்ணாம் நம்பர் ஹராமி அது. மஜீதின் மற்ற ஜோக்குகளைப் பதிந்தால் மவுத்துதான்.

 2. 05/08/2010 இல் 13:51

  மஜீது எடுத்துலெ ஆபிதீனை வச்சுப் பார்த்தேன். உஹூம்.. சரியா வரமாட்டேங்குது, ஆபிதீனுக்கு இருட்டுன்னா பயம். அது இருட்டுக்கு இருட்டு, மையிருட்டு கொளை நடுங்கிப்போய்டாது. அப்புறம் எங்கே சுருட்டு சுத்தறது?

 3. schristy said,

  06/08/2010 இல் 05:55

  I AM NOT UNDERSTAND UR STORY. BECAUSE ONNUME PURILA PA. HOW R U GILL THANNI?

 4. தாஜ் said,

  22/09/2010 இல் 09:17

  அறை எண் -ஒண்ணு…
  மஜீதின் சாதனைகளை கணக்கில் கொண்டால்…
  ஒன்றுமே இல்லை.

  இதைவிட
  பெரிய விசங்களை
  அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
  எழுத்து என்கிற வகையில் பார்த்தால்…
  திடு திப்பொன
  அவர் செய்கிற சாதனை
  வியக்கவே வைக்கிறது.
  பாராட்டுகள்.
  – தாஜ்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s