இனாமாக ஒரு பாக்கியம்! – ‘இஜட்’

பாக்கியம் – இஜட். ஜபருல்லாஹ்

யா ரசூலுல்லாஹ்…!
அன்று
உங்களை
ஏசினார்கள்

பைத்தியம்
என்றார்கள்

குப்பையைத்
தலையில்
கொட்டினார்கள்

கல்லால்
அடித்தார்கள்

அவர்கள்
எல்லோரும்
பாக்கியம்
பெற்றவர்கள்!

ஆம்..
அவர்களுக்கு
இறைமன்னிப்பை
இனாமாக
இறைத்தூதர் அல்லவா
வாங்கிக்கொடுத்து
இருக்கிறீர்கள்!

*

நன்றி : இஜட். ஜபருல்லாஹ்
தொலைபேசி : 0091 9842394119
முகவரி:
கவிஞர் இஜட். ஜபருல்லா
14, புதுமனைத் தெரு
நாகூர் – 611002

*

பார்க்க : இஜட். ஜபருல்லாவின் ‘இறைவா’ கவிதைகள்  – நாகூர் ரூமி

2 பின்னூட்டங்கள்

 1. 22/07/2010 இல் 14:50

  நானா நலமா?

  சூடான விவாதம் – இறைவனுக்கு உருவம் உண்டா பார்த்தீங்களா? –

  கொடுமை –

  அடுத்த விவாதம் என்னா?

  ஷைத்தானுக்கு உருவம் உண்டா என்றா?

  ——————–
  (இஜட். நானா பல இடங்களில் சில பேசியவை கீழே:
  ————————-

  ஒருவர்: எங்களை நீங்க ஏன் ஹஜ்ரத் செட்ல சேத்து வுடவே மாட்டேங்குறீங்க..?

  இஜட். நானா: அதான் அங்க பெரிய ஷைத்தான்வோ நாங்க இருக்கிறோம்ல நாங்க பாத்துக்குறோம்.. சின்ன ஷைத்தான்லாம் தேவையில்ல…

  ——-

  டாக்டர்: உங்களுக்கு இனிப்பு இருக்கா?

  இஜட். நானா: சின்ன வயசுலேந்தே நா கொஞ்சம் இனிப்பான ஆளு தாங்க..

  ———–

  • 24/07/2010 இல் 11:32

   நலம். நீங்கள் சொன்னதும்தான் அந்த ‘விவாதத்தை’ப் பார்த்தேன். காமெடி பண்னுவதில் நம்மவர்களை மிஞ்சவே முடியாது!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s