காசிம்பீ பாய்முடைஞ்சா கண்டசனம் வாய்பிளக்கும்

போவதற்கு முன் (அட, ஊர்போவதற்கு முன்!) உருப்படியான பதிவு ஒன்று போடனும் என்று நினைத்தேன். எனவே நான் எழுதலாகாது. என் தேர்வாக , அற்புதமாக எழுதும் தம்பி முபாரக்கின் ‘சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்‘ கட்டுரை, பிரபஞ்சன் சிபாரிசு செய்த பின்னி மோசஸின் ‘வழக்கம்போல் நாளையும்‘ சிறுகதை, அப்புறம் எங்கள் செல்ல உமா மகேஸ்வரியின் கவிதை ஆகியவற்றை வைத்திருந்தேன் (சமத்துவத்தைக் கவனிக்கவும்!). சீட்டுக் குலுக்கிப் பார்த்தால் ஜெயித்தது பெண்கள்தான். அவர்கள் எப்போதுமே அப்படித்தான். இங்கே இருபெண்கள். காசீம்பீயும் உமா மகேஸ்வரியும். காசீம்பீ என்கிற பாய்முடையும் பெண் பற்றிய அந்தப் பாட்டை யார் எழுதியது என்று தெரியவில்லை. (அஸ்மாபீ?!), ‘மௌவ்வல்’ எனும் ஒலிநாடாவில் அது இருக்கிறதாம். நண்பர் மரபின்மைந்தன் முத்தையா சொன்னார். பேச்சாளர் பர்வீன் சுல்தானா அவருக்குத் தந்தாராம். முத்தையாவுக்கும், எனக்கும் பிடித்த வரிகளை கீழே தந்திருக்கிறேன். அத்தோடு , இன்னும் இங்கே வராத அந்த உமா குருவியின் கவிதையும் . ஊர் சென்றால் முதல்வேலை அந்த ‘மௌவ்வல்’ வாங்குவதுதான். ‘மௌவ்வல்’ என்றால் என்ன என்று முதலில் தெரிந்தபிறகு (வவ்வாலின் வாப்பாவோ?) முழுப்பாடலையும் இங்கே முடைவேன்.

அப்புறம் பாக்கலாம், ‘ஹயாத்’ பாக்கி இருந்தா!

***

காசிம்பீ பாய்முடைஞ்சா கண்டசனம் வாய்பிளக்கும்
வாசமுள்ள தாழம்பாயாம் வண்ண வண்ண தாழம்பாயாம்
மடிசீலை வெத்திலை பாக்கும் மனசறிஞ்ச சத்திய வாக்கும்
குடித்தனத்து நீக்கும் போக்கும் கொண்டவளாம் காசீம்பீவி

*

உமா மகேஸ்வரி

எடுப்பாரற்ற தொலைபேசியொலி

உமா மகேஸ்வரி

நீயில்லாத அறைக்குள்
நிறையும் தொலைபேசியொலி
சொல்கிறது என்னிடம்

எதையெதையோ.

உன் இப்போதையை இன்மை
முற்போதைய இருப்பு
மற்றும் நீ வந்ததும்
வார்க்கக் கூடிய
கொஞ்சல், கோபம்
அதட்டல். அன்பு
எல்லாவற்றினுள்ளும் அது
மெல்லூசி முனை போல் நுழைந்து
கோர்த்தெடுத்துத் தருகிறது எனக்காக.
உன் சுவடுகளின்
ஒலி ரூபத்தை ஒப்படைக்கிறது என்னிடம்.
மௌனத்தின் மரணத்தை,
விவாதத்தின் சூட்டை
பகிர்வின் இதத்தை
ஒருவேளை நீ ஒற்றப்போகும் முத்தத்தை
ஒத்திப் போடும் அதன் வெற்றித் தேடல்
தருகிறது எப்படியோ ஒரு
அழகிய ஆசுவாசத்தை

*

நன்றி : கணையாழி, உமா மகேஸ்வரி, மரபின் மைந்தன் முத்தையா, ‘எழுத்தும் எண்ணமும்’ குழுமம்

10 பின்னூட்டங்கள்

 1. 09/05/2010 இல் 07:38

  ஊருக்கா எப்ப போறீங்க… சொல்லிட்டுப் போங்கண்ணா.. கூட கூடு நானும்… வர்ரேன். முடிஞ்சா ஊரிச் சந்திக்கலாம்.

  அப்புறம் உங்கள் இட ஒதுக்கீட்டை ரசித்தேன். கடைசியில் கிளி எடுத்த சீட்டு கவிதையா? இருக்கட்டும்.

 2. 09/05/2010 இல் 07:38

  ஊருக்கா எப்ப போறீங்க… சொல்லிட்டுப் போங்கண்ணா.. கூட கூடு நானும்… வர்ரேன். முடிஞ்சா ஊரிச் சந்திக்கலாம்.

  அப்புறம் உங்கள் இட ஒதுக்கீட்டை ரசித்தேன். கடைசியில் கிளி எடுத்த சீட்டு கவிதையா? இருக்கட்டும்.

  • 09/05/2010 இல் 07:40

   ஆழமா அழுத்திட்டேன் (பின்னூட்ட குமிழைத்தான்..) அதான் இரண்டு தடவ…. போகட்டும் விடுங்க..

 3. 09/05/2010 இல் 07:44

  “மௌளல்“ என்றால் சங்கத் தமிழில் (உங்கத் தமிழில் இல்லை) மல்லிகையாம். அவரது உ.பு. பெற்ற பாடலில் (அதான் செரயையா (சொரையயா இல்லை) இடுப்பை ஆட்டி ஆட்டி அடப்பை மூட்டும் பாட்டுதான்.. ) அதை பயன்படுத்தியதை நினைத்து அடித்தொண்டையில் பேசிக்கொண்டிருந்தார் “கவி-உளி“ வைரமுத்து.

  இது ஒரு தகவலுக்காக…

  • 09/05/2010 இல் 07:54

   அட, மல்லிகையா? மின்னல் பதிலுக்கு நன்றி ஜமாலன். நீங்கள் இரண்டுதரம் பட்டனை ‘அழுத்தியது’ம் சரிதான். அரபுநாட்டு சபராளிகள் அதைத்தான் செய்ய முடியும்!

   இந்தவாரத்திற்குள் ஊர் செல்வேன், இன்ஷா அல்லாஹ்.

 4. 09/05/2010 இல் 18:02

  ஊருக்கு போரியுமா போரும் போரும். சந்தோசமா இருந்து விட்டு வாரும் வாரும்.

  **// அப்புறம் பாக்கலாம், ‘ஹயாத்’ பாக்கி இருந்தா!//**

  – யாருக்கு சீதேவி?

 5. 10/05/2010 இல் 06:55

  நானா,
  ஹந்திரிக்கு ஊருக்கு போறீங்க?…
  கொடியேத்தத்த பத்தி படத்தோட ஒரு பதிவு போடுங்க..
  லாத்தா, அனிகா, நதீமுக்கு சலாம்..

 6. THUCKALAY HALEEMA said,

  20/06/2010 இல் 16:45

  THE SONG “‘KAASIMBI PAAI…”‘ IS FROM THE AUDIO CASETTE ”AWWAL”‘.IT IS NOT ”MOWWAL”.AWWAL IS AN ARABIC WORD MEANS ”BEGIN OR START OR FIRST”‘.IT IS AN MUSIC ALBUM ABOUT THE CULTURE AND THE LIFE OF MIDDLE CLASS PEOPLE OF SOUTH DISTRICTS.THE “‘PAAI” MENTIONED THE POEM IS THE ONE USED DURING MARRIAGES.

 7. MUNEERA said,

  20/06/2010 இல் 16:52

  THE SONG “KAASIMBI PAAI MUDANCHA..”‘ IS WRITTEN BY POET “”THUCKALAY HALEEMA”‘ AND THE SONG IS FOUND IN HIS MUSIC ALBUM “‘AWWAL”‘ IN WHICH ALL THE SONGS ARE WRITTN BY HIM.YOU CAN FIND 6 SONGS IN THIS WHICH SAYS THE LIFESTYLE AND CULTURE OF ISLAMIC PEOPLE OF SOUTH.

  THE SEPARATION OF HUSBAND AND WIFE DUE TO GULF EARNING AND THE LOSS OF VALUES OF LIFE ARE RECORDED IS SOMETHING NOTEWORTHY.

 8. FathimaFarook said,

  10/07/2010 இல் 18:19

  Kavignar Thuckalay Haleema,is one of the greatest contemporary poets of kanyakumari district, his writings are highly imaginative and touching. His powerful feelings and thoughts are reflected in some of his famous poems like “Oru Thoppin Kathai””Zam Zam”, “Kaalaveenai”,”Kanneeril Nanaitha Kavithai”( which brought Gold Medal for him). He is not only a poet but also a revolutionary speaker. His music Album “Awwal”,is a great feast for our mind and soul, it gives a vivid picture of the life of the ordinary muslim people in our district.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s