அபாய அறிவிப்பு எண்: 1001

பயப்பட வேண்டாம்! ஆபிதீனின் புதிய சிறுகதை நாளை அல்லது நாளை மறுநாள் திண்ணையில் வெளியாகும். வழக்கம்போல ஒரே சோகம்! ஆமாம், உங்கள் கதைதானே, ஏன் ‘ஆபிதீன் கதை’ என்று சொல்கிறீர்கள்? என்று கேட்டால் அதற்கும் ஒரு கதை இருக்கிறது! ஆமாம், இந்த பழக்கம் என் செல்ல மகள் அனீகாவுடையது. சின்னப்பிள்ளையில் அவள் அப்படித்தான் செய்வாள். எதாவது ஒரு பிஸ்கட்டோ, சாக்லெட்டோ கொடுத்துவிட்டு , வீட்டிலுள்ள எல்லோருக்கும் கொடுக்கனும் என்று சொன்னால், எல்லோருக்கும் கொடுப்பாள் ; ‘இது வாப்பாவுக்கு, இது உம்மாவுக்கு, இது ஆச்சியாவுக்கு..’ என்று சொல்லி – எல்லோருக்கும் கொடுத்துவிட்டு – ‘இது அனீகாவுக்கு’ என்று தன் வாயில் போட்டுக்கொள்வாள்! தன்னைத் தனியே விலக்கி உற்றுப் பார்க்கும் ‘தரீக்கா’ (ஞானப்பாதை) அப்போதே அவளுக்கு விளங்கி விட்டது போல! சரி, வெளியாகப்போகும் கதையிலிருந்து சில பத்திகளை மட்டும் இங்கே பதிவிடுகிறேன். எனக்குப்பிடித்த எழுத்தாளர்கள், வலைப்பதிவர்கள் பலரும் பங்குகொள்ளும் கதை!

*

‘நகைச்சுவைக் கதை எழுதுவதெப்படி?’ என்ற கேள்வியுடன் வந்தவர் – கொஞ்சநேரம் என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு – ‘சரிதான்’ என்பதுபோல தலையை ஆட்டிக்கொண்டார்.

‘என்ன?’

‘இல்லே சார்.. உங்க கதையில நீங்க உங்களை குரங்கு மாதிரி இருக்குறதா சொல்லியிருக்கீங்க’

‘அ..ஆமாம், நம்மை நாமளே பொய்யா கிண்டல் செஞ்சிக்கனும். படிக்கிறவங்களுக்கு அது ரொம்ப சிரிப்பா இருக்கும்’ – சமாளித்தேன்.

‘உண்மையைத்தானே சொல்லியிருக்கீங்க’

விடமாட்டான் போலிருக்கே…! இப்போதெல்லாம் வாசகன் உஷாராக இருக்கிறான். படிக்காமல் விமர்சனம் செய்யும் தன் பண்பைப் போக்கிவிட்டான். கவனமாகத்தான் இனி எழுதித், தொலைய வேண்டும்.

வீட்டிற்குள் கூட்டிப்போனேன். காப்பாற்ற மனைவி இருக்க கவலை எதற்கு? ‘அஸ்மா.. ரெண்டு தேத்தணி தா’. ஒருமணி நேரத்திற்குள் ஒரு தேத்தணி எடுத்து வந்தவளிடம் அவர் சொன்னதைச் சொன்னேன், அட்டகாசமாக சிரித்துகொண்டே.

‘ரொம்ப நாளைக்கிபொறவு இன்னக்கி குளிச்சி , பவுடர்லாம் பூசியிருக்காஹா’ என்றாள்.

போய்விட்டாள் – புர்க்காவுடன்.

*

‘நீங்கள் வந்து சென்ற மேலேயுள்ள பகுதியை படித்துப் பாருங்கள். இதுதான் உத்தி.  கதையில் வரும் பாத்திரம் அந்தக் கதையைப் படிப்பது புதுமையும் அல்ல’ என்றேன். லத்தி அமெரிக்கா, புத்தி ஆப்ரிக்காவெல்லாம் போகவேண்டாமென்று உதாரணமும் சொன்னேன். சீதையை காட்டுக்குக் கூட்டிப்போக மறுக்கும் ராமனைப் பார்த்து – அத்தியாத்ய ராமாயணம் போன்றவைகளில் –  சீதை சொல்கிறாள் : ‘ஏற்கனவே நடந்து முடிந்த ராமாயணங்களில் என்னைக் காட்டுக்கு கூட்டிக்கொண்டு போயிருக்கிறீர்கள் ராமா!’. ‘முன்னூறு ராமாயணங்களின் ஐந்து உதாரணங்கள்’ கட்டுரையில் படித்த ஞாபகம். ஏ.கே.ராமானுஜத்தின் உரை அது. ‘எப்படி?’ என்றேன். ஆள் உஷார். ‘நகைச்சுவையாக எழுதுவது எப்படின்னு மட்டும் சொல்லுங்க சார், போதும். அனாவசியமா உங்க தெறமை பொலமையெல்லாம் காட்டாதீங்க’ என்றார்.

என்னடா இது, வீடு தேடி வந்து விதி விளையாடுகிறது!

‘ஒன்ணும் செய்யவேணாம். ஜானகிராமன் கதைகளை மட்டும் படியுங்க. சிரிக்கவைக்கிற டேலண்ட் வந்துவிடும். உதாரணம் : ‘ஸாருக்கு காவேரிக் கரைதானே?’ ‘ஆமாண்ணா.. எப்படித் தெரிஞ்சது?’ ‘வெத்தலைக் கறையைப் பாத்தாலே தெரியறதே!’. என் புத்தக அறையில எழுதிவச்சிருக்கிற வாசகம் கூட அந்தாள் சொன்னதுதான். ‘வாழ்க்கையைப் பார்த்து சிரிக்கணும். சந்தோஷமா இருக்கக் கத்துக்கனும். சிரிச்சிண்டே இருப்பேன்னு பிடிவாதம் பிடிக்கனும். கங்கணம் கட்டிக்கணும். எதாயிருந்தாலும் எல்லாரும் முயற்சி பண்ணி சந்தோஷமா இருக்கப் பாடுபடணும். சிரிக்கிறதை நிறுத்த மாட்டேன்னு, சண்டித்தனம் பண்ணனும். பல்லு வலிக்க, மனசு கொள்ள சந்தோஷமா சிரிக்கணும்’ங்குறார். எப்பேர்ப்பட்ட மனசு! விகடன் தீபாவளி மலர்லே ‘துணை’ ண்டு ஒரு கதை. ஹா..ஹா..’

‘புத்தக அறை எங்கே இருக்கு  இங்கே?’

‘இன்னமேதான் கட்டணும், அல்லாஹ் பெரியவன்’

‘அதானே பார்த்தேன்,  ரேஷன் அட்டை கூட வைக்க முடியாது போலிருக்கே இங்கே!’

‘அல்லாஹ் பெரியவண்டு சொன்னேன்ல?’

*

மீதி திண்ணையில் !

21 பின்னூட்டங்கள்

 1. 29/04/2010 இல் 08:29

  சூப்பர். வழக்கமாக உங்கள் கதையின் நகைச்சுவை.. ஒருவகையான அவல-நகைச்சுவை பிளாக் ஹியுமர். சிரித்தபின் மனதை அழுத்தும் சோகம். அவலத்தில் வரும் சிரிப்பு. இதிலும் பட்டைய கிளப்புங்க. “ஆபிதீன் கதை“ என்பது ஒருவகையினமாகக் கூடக் கருதலாம். அந்த வகையினத்தில் ஆபிதின் கதை எழுதுவதாகக்கூட கருதலாம். இரண்டு கூட வருவதால் கூடகூட ஏதொ ஒரு மரைக்கயார் உங்கள் கதையில் வருமே அதைப்போல என்று சொல்லலாம். கதையில் வரும் மகளின் சூஃபி ஞானம் அருமை. அது அவலியாத் தெருவில் கிடைக்குமா? உலகிலேயே அபூர்வமான பூந்தி நாகூரில் குறைந்த விலையில் கிடைப்பதைப்போல.. வாஞ்சியூரில் கிடைக்கும் என்பது எனக்கும் தெரியும்.

  காத்திருக்கிறேன்…

  • abedheen said,

   29/04/2010 இல் 08:57

   நன்றி ஜமாலன், ஞானம் எங்கு கிடைக்குமோ இல்லையோ, வாஞ்சூரில் கண்டிப்பாகக் கிடைக்கும்!

 2. 29/04/2010 இல் 16:04

  நான் எப்போதுமே லேட்டுத்தான். என்ன செய்யிறது ஏன் வேலெ அப்படி. எல்லாம் முடிச்சுட்டு வந்து ராத்திரி ஏழு மணிக்கு மேலே ஹார்மோனியப் பெட்டியெ திறந்து பாக்கும்போது ஆறுன கஞ்சி பழங்கஞ்சியாயிடுது.

  சரி, சரி! விஷயத்துக்கு வாரேன். அவுலியாக்கள் ஊர்லெ இருக்கிற அவுலியா குஞ்சுகளுக்கும் ஞானம் வரத்தானே செய்யும். இன்னும் வாஞ்சூர் காத்து வீசினா கொஞ்சம் ஜாஸ்தியாத்தான் இருக்கும்.

 3. soman said,

  30/04/2010 இல் 06:06

  நண்பர் வந்திருந்தார்,

  க்களி, ஒரு நா குளிக்காட்டி என்னவோ போல இருக்கு மாப்ள!!
  பாரு.. நேத்துக்குளிக்கல, என்னவோ போல இருந்திச்சு,
  முந்தா நேத்து குளிக்கல, என்னவோ போல இருந்திச்சு,
  இந்த ஒரு மாசமாவே என்னவோ மாதிரி இருந்திச்சின்னா பாத்துக்க.

 4. soman said,

  30/04/2010 இல் 06:15

  சில சமயம் உழப்பிர்றீங்க, தாஜ், மரக்காயர், சாஹிப்பு…
  ஒரு தடவை உமக்கு அனுப்பவேண்டிய ஒரு குண்டியூட்டத்தை தாஜூக்கு அனுப்பிட்டு வெறுத்துட்டேன்.

  படிக்கறவன், எழுதறவன், உள்ள உலாத்தறவன்,
  வேடிக்கை பாக்கறவன் யாருக்கும் வித்தியாசம் இல்ல.
  என்னவோ போங்க. நல்லாத்தான் இருக்கு.

  அந்த எழவெடுத்த ராஷோமான் படத்த இன்னும் பாத்துகிட்டே திர்றேன்…..புதுசு புதுசா தோணுது.

 5. 01/05/2010 இல் 08:43

  சோமன் எழுதிய **((( “க்களி, ஒரு நா குளிக்காட்டி என்னவோ போல இருக்கு மாப்ள!!”)))** என்பதே அருமையான நகைச்சுவையாக இருக்கே சார். அந்த ஒன் லைன் ஸ்டோரியை டெவலப் பண்ண சொல்லுங்க அருமையா வரும்.

  அனீகாவின் சூஃபி ஞானம் அருமை. வாப்பாவுக்கு வராத ஞானம் மகளுக்காவது வந்ததே!!! ஒரு வேளை அது தாய் வழி வந்ததாக இருக்கலாமோ? ))))) எல்லாத்துக்கும் அல்லாஹ் பெரியவண்டு சொன்னேன்ல….!!!

 6. tAJ said,

  02/05/2010 இல் 13:08

  ‘வாழ்க்கையைப் பார்த்து சிரிக்கணும். சந்தோஷமா இருக்கக் கத்துக்கனும். சிரிச்சிண்டே இருப்பேன்னு பிடிவாதம் பிடிக்கனும். கங்கணம் கட்டிக்கணும். எதாயிருந்தாலும் எல்லாரும் முயற்சி பண்ணி சந்தோஷமா இருக்கப் பாடுபடணும். சிரிக்கிறதை நிறுத்த மாட்டேன்னு, சண்டித்தனம் பண்ணனும். பல்லு வலிக்க, மனசு கொள்ள சந்தோஷமா சிரிக்கணும்’ங்குறார்.
  ஜானகிராமன்! எப்பேர்ப்பட்ட மனசு! விகடன் தீபாவளி மலர்லே ‘துணை’ ண்டு ஒரு கதை. ஹா..ஹா..’

  ‘புத்தக அறை எங்கே இருக்கு இங்கே?’

  ‘இன்னமேதான் கட்டணும், அல்லாஹ் பெரியவன்’

  sABAAS aBEDEEN!!
  – tAJ

 7. 03/05/2010 இல் 06:37

  சோமன், குளிச்சிட்டு பதில் போடலாம் என்றிருந்தேன். தாமதமாகும்போலத் தெரிகிறது. எனவே சுருக்கமாக: //சில சமயம் உழப்பிர்றீங்க, தாஜ், மரக்காயர், சாஹிப்பு…// இது புரியவில்லை.

  காதர், சோமன் இங்கே விரைவில் எழுதுவார். //ஒரு வேளை அது தாய் வழி வந்ததாக இருக்கலாமோ?// ஆமாம், என் தாய் வழி.

  தாஜ் பாய், தேங்க்ஸ்.

 8. 03/05/2010 இல் 18:18

  //’புத்தக அறை எங்கே இருக்கு இங்கே?’

  ‘இன்னமேதான் கட்டணும், அல்லாஹ் பெரியவன்’ //

  //’ரொம்ப நாளைக்கிபொறவு இன்னக்கி குளிச்சி , பவுடர்லாம் பூசியிருக்காஹா’ என்றாள். //

  //நான் அரபு நாட்டில் இருப்பதாலோ என்னவோ – ‘கையை வுட்டாக்கூட இவருக்கு தெரியாது டாக்டர்’ //

  முடில சார்…ஹாஸ்யம் உங்க கிட்ட கைகட்டி சலாம் போடுது போங்க..ரொம்ப ரசிச்சு வாசிச்சேன்.பகிர்ந்து கொண்ட ஜமாலன் சாருக்கும் நன்றி.

  • 04/05/2010 இல் 05:50

   நன்றி ரௌத்ரன். கதையில் பங்குகொண்ட எழுத்தாளர்கள் அ.முத்துலிங்கம், ஜெயமோகன், பி.ஏ.கிருஷ்ணன், இரா.முருகன், எழில்வரதன், சோபாசக்தி, நாகூர் ரூமி, மற்றும் வலைப்பதிவர்கள் ஜவர்லால், சுரேஷ்கண்ணன், நண்பர் கய்யூம் ஆகியோருக்கும் நன்றி.

 9. 04/05/2010 இல் 05:58

  ஞானம் வாஞ்சூரில் கிடைக்கும் என்பது எவ்ளோ பெரிய ஞானம் 🙂

  //’சரியான பேயனா இக்கிறியுமே. ஒழுங்கா புடிக்கிறதில்லே? //

  ரொம்பவே ரசிச்சேன் 🙂

  சரியாத்தான் சொல்லியிக்கிறீங்க

  • 04/05/2010 இல் 08:27

   அப்போ வெறும் பேயனாத்தான் இருந்தேன். முபாரக் தொடர்பு வந்தபிறகு முழுப்பேயனா மாறிட்டேன்!

 10. 04/05/2010 இல் 13:44

  **// அஸ்மா.. ரெண்டு தேத்தணி தா’. ஒருமணி நேரத்திற்குள் ஒரு தேத்தணி எடுத்து வந்தவளிடம்—//**

  — இன்னமும் மதிப்பும் மரியாதையும் அப்படியே தானிருக்கா.. ஹும்..கொடுத்து வச்ச ஆள் தாங்கனி நீம்பரு!!!

  • abedheen said,

   05/05/2010 இல் 11:07

   நான் சொல்றேன், நீம்பரு சொல்லலே; அவ்ளோதான் வித்யாஸம்.

 11. soman said,

  06/05/2010 இல் 05:52

  அரங்கு நெறைய கூட்டம். நாடகம் ‘ஒசி’ ன்னவுடன் அடிச்சு
  புடிச்சு உள்ள வந்துட்டாங்களாம். அப்புறம் டிராமா ஒரே திராபை’ வெளியபோலாம்னு போனா,

  வெளிய போறதுக்கு டிக்கெட்
  வெச்சுருக்காங்களாம்னதும் ஒரே அடிதடி.
  ———————————————
  பாங்குக்கதை அத்தனை பாங்கு. அப்பப்ப முக்கிட்டே இரும்.
  புள்ள பெறுவது போல எழுத்துன்னு கங்கணம் கட்டிக்கிட்டு
  கிடந்தாலும் புளுக்கையாவது போடுவம்னு தான் ஊட்டுக்கு
  கூட போகாம உமக்கு பின்னூட்டம்.

 12. 06/05/2010 இல் 06:50

  (((நான் சொல்றேன், நீம்பரு சொல்லலே; அவ்ளோதான் வித்யாஸம்.)))

  -இதன் மூலம் நாட்டு மக்களுக்கு நீர் சொல்ல வரும் உட்கருத்து?!!!

 13. 09/06/2010 இல் 18:36

  அன்பு ஆபிதீன், இன்று தான் படித்தேன் உம் கதையை…’படுத்த வினாடி’ படித்து விழுந்து விழுந்து — படுத்துக் கொண்டேதான் — சிரித்தேன். ஹாஸ்யம் உம் ரத்தத்தில் ஓடுகிறது (கெட்ட ரத்தம்தான் என்றாலும்)…

  நகையுடன்

  ஆம்பூர் தோல் போர்த்திய உரூமி

 14. சோமன் said,

  14/06/2010 இல் 05:39

  ஓய். இதென்ன அக்கிரமம். மனுஷன்னா ஒரு இது வேணும்…..
  ஊருக்கு போனீரா? இல்ல ஊருக்கே போனீரான்னு தெரியலை..

  (உம்ம ஸ்டைலில் சொன்னா!)
  அவனவன் வந்து தொறந்து பாத்துட்டு காணோமேன்னுட்டு போறான்.

  நான் வேற ரொம்ப பீத்தி வச்சிருக்கேன் நெறைய போடுவீருனுட்டு .
  பதிவைத்தான். வேற எதுக்காச்சும் பெருசா அடிப்போடத்தான் இப்படி பம்மிக்கிட்டு திரியறீர்னு நினைக்கிறேன். சீக்கிரமே வந்து எதாச்சும் எழுதி ஒழியும்.

  பழச பூராவும் படிச்சாச்சு.. நீர் எழுதறது ஆடிக்கொரு தடவன்னா
  இந்த ரூமி அமாவாசைக்கு ஒருதடவை தான் படிக்கறதே போல. இப்படி இருந்தா எப்பிடியா தமிள வளக்கறது?

  ஒரு கோபத்தில திட்டிட்டேன்… துடுக்கா ஏதாச்சும் பதில் போட்டுடதேயும். பொட்ட புள்ளைங்க கிட்ட காட்டறது….
  சரியா!

  பீ.கு:
  —–
  யோவ்.! அந்த கதையில கடைசீல -” நன்றி: ” அப்படின்னு போட்டு ஒரு கவிதை எழுதி இருக்கீர்… அதுக்கு ஒம்ம திசை நோக்கி ஒரு கௌதமி.
  சஞ்சய் கேட்டாரு உங்களுக்கு எதுக்கு நன்றின்னு….
  அதான்பா தெரியலன்னுட்டேன்.

 15. 03/07/2010 இல் 20:22

  நான் உங்களுடைய கதையை ,அதாவது சீசன் ரெகார்டிங் நிலையத்தை மையமாக கொண்டு எழுதிய உங்கள் கதையை முதன் முதலில் ரூமியின் இல்லத்தில் ஆம்பூரில் படித்தேன்.உங்களுடைய எழுத்து நடை எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது.அதற்கு பின் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.நான் வெளிநாடு வந்து விட்டேன்.

 16. மஜீத் துபாயிலிருந்து said,

  01/08/2010 இல் 07:09

  தாமஸ் ஆல்வா எடிசன் இன்னோன்னும் கண்டுபுட்சாராம்; தமிழ் சினிமா எப்ப ஜெயிக்கும்னா, அதுல வர்ற பாத்திரங்களை பாத்து படம் பாக்குறவங்க, அட நம்மலமாதிரியே இருக்கேன்னு நினைக்கும்போதாம். இப்ப நான் என்ன செய்ய? இந்த கதை நாயகன் (குளிச்சு பவுடர் போட்டவர் அல்ல) பத்தி படிச்சவுடனே ஒரு கல்லூரி நண்பன் மண்டைக்குள்ள வந்துட்டு போவேனாங்குறான். என்னத்தையும் எழுதி கிளுதி யாரையும் கொல்ல கிள்ள போறேனோ?

 17. மஜீத் துபாயிலிருந்து said,

  01/08/2010 இல் 08:42

  அறிஞர் அப்துற் றஹீம் எழுதிய இஸ்லாமிய கலைக்களஞ்சியம் , முதல்பாகத்தில் வருகிற அந்தக் கதையைக் கேட்ட எந்த முஸ்லிமும் இன்றுவரை கோபம் கொள்ளவில்லை.
  அந்த எளவெடுத்த கோவம் இப்பவாச்சும் வர்தான்னு பாப்போம்: ஆபிதீன்கா, கதை தனியா வருது ஈமெயில்ல. எங்கயாச்சும் போடுங்க (போட்டுட்டு சொல்ல மறந்துறாம; சோமனும் காதரும் கோச்சுக்குவாங்க)


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s